வவுனியா முகாம்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு போதியளவுக்கு மலசலகூட வசதிகளை வழங்காததற்கான பொறுப்பை ஐ.நா.வே ஏற்கவேண்டும் என்று மீள்குடியேற்ற விவகார அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறியுள்ளார்.
முகாம்களிலுள்ளோரின் அரைவாசிப் பகுதியினருக்கே மலசலகூட வசதிகள் உள்ளதாகவும் குளிக்கும் வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே இருப்பதாகவும் ஐ.நா.தெரிவித்திருந்தது.ஆனால், ஐ.நா.வுக்கு அரசாங்கத்தின் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக வசதிகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நிதியுதவி ஐ.நா.வுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பி.பி.சி.யின் சிங்கள சேவையான “சந்தேசிய’விற்கு கூறியுள்ளார். தாமதம் அவர்கள் தரப்பிலேயே(ஐ.நா.) உள்ளது. அதற்கு அரசாங்கம் பொறுப்பு அல்ல என்று ரிசாட் கூறியுள்ளார்.
இதேவேளை, முகாம்களில் உள்ள முதியவர்கள் இறப்பது அசாதாரணமானதல்ல என்று அரசாங்கம் கூறியுள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் முதியவர்களும் சிறுவர்களுமே என்று சமூகசேவைகள் பிரதியமைச்சர் லயனல் பிரேம சிறி பி.பி.சி.க்கு கூறியுள்ளார். “அதனால் முகாம்களில் உள்ள முதியவர்கள் இறப்பது இயற்கையானதே’ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
முதியவர்களை மீளக்குடியமர்த்தும் பொறுப்பை இராணுவத்திடமிருந்து பொலிஸார் பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.அதேசமயம், முகாம்களின் நிலைமை சிறப்பாக இல்லையென்பதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
சொந்த வீடுகள்,தோட்டங்கள் போன்று நிலைமை இல்லை. ஆயினும் நாம் அவர்களுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
வயது முதிர்ந்தவர்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் விடயத்தில் அரசாங்கம் மிகக் கவனத்துடன் இருப்பதாகவும் ஏனெனில் உறவினர்களால் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முகாம்களிலுள்ள கணிசமான அளவு மக்களுக்குப் பிராந்தியத்தில் உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களை வெளியேற அனுமதித்தால் அவர்கள் உறவினர்களுடன் தங்கியிருக்க முடியும் என்று கடந்த வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி 10-60 வயதுக்கு இடைப்பட்டவர்களை முகாம்களுக்கு வெளியே செல்ல அனுமதிப்பதை அரசு தடைசெய்துள்ளது.60 வயதுக்கு மேற்பட்டோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் முதலில் அறிவித்திருந்தது.
rony
தற்சமயம் அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு மலசலகூட வசதிகளில்லையெனக்கூற ஐ.நா.வுக்கு என்ன அருகதையுண்டு.1988லிருந்து இலங்கையில் யு.என்.எச்.சி.ஆரின் பாதுகாப்பில் இயங்கிவந்த அகதிமுகாம்களின் வசதிகளை ஒருமுறை சிந்தித்துப் பார்த்தால் தெரியும் இவர்களின் வண்டவாளங்கள். ஆடு நனைகிறதென்று ஓனாய் அழுவது போலல்லவா, “ஐயோ அகதிகள் என்று ஐ.நா.அழுகின்றது”. அகதிகள் பெயரைக்கூறி சர்வதேசத்திடம் பெரும்தொகைப் பணம் பெற்று இறுதியில் அவர்களை அம்போவென்று கைவிட்டுச் சென்ற ஐ.நாவுக்கு,தற்போது மகிந்த வைத்த ஆப்பு சரியானதே. அதைத்தாங்கிக் கொள்ள முடியாமல் பிதற்றுகின்றது ஐ.நா. எத்தனை காலம் தான் தொடர்ந்து ஏமாற்றமுடியும் நம்ம நாட்டிலே….நம்ம நாட்டிலே.
rony
1990 ல் வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் கல்பிட்டி, புத்தளம் போன்ற பகுதிகளில் அகதிகளாகக் குடியேறியபோது அவர்களை எட்டியும் பார்க்காத ஐ.நாவுக்கு, இன்றுமட்டுமென்ன அகதிகள் மட்டில் புதியதொரு அக்கறை. ஏன் அந்த மக்கள் மனிதர்களில்லையா, அல்லது அகதிகளேயில்லையா? ஐ.நாவின் இம்மாபெரும் தவறை முஸ்லிம் மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். மறக்கவும் கூடாது.
மாயா
பல சர்வதேச உதவி நிறுவனங்கள் உதவித் தொகைகளில் வாழும் நிறுவனங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் பணத்தில் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை விட தமது ஆடம்பர செலவுகளுக்கே உபயோகிக்கின்றன. இதை என்னால் சுனாமி காலத்தில் உணர முடிந்தது.
பல மிலியன்களை பெற்ற உதவி நிறுவனங்கள் இலங்கையில் உல்லாசமாக பொழுதைக் கழித்தனர். தற்காலீகமாக சிலதை ஒப்புக்கு செய்தனர். சிறுய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களைவிட அதிகம் செய்ததை பார்க்க முடிந்தது. வாகனங்களில் உதவி நிறுவனங்கள் எனும் பெயரில் பதாகைகளுடன் போய் சில லட்சங்கள் உதவி செய்து பல மிலியன் பணத்தை பெற்றதை காண முடிந்தது.
பார்த்திபன்
மாயா
நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மை. உதவி செய்கின்றோம் என்ற போர்வையில் இவர்கள் செய்யும் அட்டகாசங்கள் தான் அதிகம்.
palli.
இதுதாண்டா வல்லரசு; சர்வதேசமோ அல்லது ஜநா சபையோ எது சொன்னாலும் கேக்காத குடும்பம் கழிவறைகளை மட்டும் அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது………… அதுதான் எல்லா நாட்டிடமும் தாராளமாய் பிச்சை எடுக்கிறியள்; அப்புறம் என்ன சாபகேடு; அல்லது சர்வதேசத்திடம் வன்னியை கொடுத்துட்டு நீங்கள் கதிர்காமத்தி போய் காவடி எடுங்கோ; உன்மையில் வைக்கல் பட்டடை நாய்க்கு அர்த்தம் இப்போதுதான் புரிகிறது; செய்யுங்கள் அல்லது செய்பவர்களை விடுங்கள்; புலிமாதிரி கெடுதல் மட்டுமே மூலதனமாய் வியாபாரம் செய்யதையுங்கோ;
அரசு பாரபட்ச்சம் இல்லாமல் நடக்குமாயின் உதவி அமைப்புகளோ அல்லது உஸார் அமைப்புகளோ அங்கு தேவையில்லை; தவறை எம்மீது வைத்து கொண்டு விருந்துக்கு வந்தவன் மீது பழி போடுவது அனாகரிகம்,;
Kusumbo
அன்று எம் படிப்புக்கு உலைவைத்தார் இவர் கொப்பன். இவர் மலவாயிலுக்கே உலை வைப்பார் போல் இருக்கிறது.
rohan
பல்லிக்கு முன்னால் வந்திருக்கும் கருத்துக்கள் வாந்தி எடுக்க் வைக்கின்றன.
யு.என்.எச்.சி.ஆரின் பழைய தவறுகள் அரசு இப்போது செய்வனவற்றை அல்லது செய்யாதனவற்றை நியாயப்படுத்த போதிய் காரணங்களாகி விட்டன.
மாயா
இல்லை பல்லி. உலக நாடுகள் பல மில்லியன் பணத்தை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐநாவுக்கே கொடுத்துள்ளது. அவர்கள் அதைக் கொண்டு டென்ட் வாங்கிக் கொடுப்பதோடும் , மருந்துகள் கொடுப்பதோடும் சரி. தேவையானதும் நிரந்தரமானவற்றையும் செய்வதில்லை.
இவை நிரந்தர விடிவல்ல. அரசு தமது செலவுகளை நிரந்தர வேலைத் திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. அங்கு தொடர்ந்தும் பிரச்சனை இருந்தால்தான் இந்த உதவி நிறுவனங்களுக்கு உலக நாடுகளிடமிருந்து பணம் வரும். இவர்கள் பேசுவது அதிகம். செய்வது மிகக் குறைவு. போகும் நாடுகளில் பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே இவர்களுக்கு வேலையிருக்கும்.
நான் சுனாமி காலத்தில் ஐரோப்பிய உதவி நிறுவனங்கள் சிலவற்றுடன் வேலை செய்தேன். அப்போது பார்த்த விடயங்களின் போது இவர்களது உண்மையான முகங்கள் புரிந்தன. ஐரோப்பாவிலிருந்து (சுவிஸ்-ஜெர்மன்-டென்மார்க் )சென்ற ஒரு நிறுவனம் செய்த பணியில் 5 சதவீதம் கூட செஞ்சிலுவைச் சங்கம் செய்யவில்லை. அவை வாகனத்தில் கொடியோடு சென்று மதிப்பீடு செய்து கொண்டிருந்தது. சில நிறுவனங்கள் தமக்கு வசதியான இடங்களில் பணிபுரிய அடிபட்டார்கள். சிலர் ஒரேயிடத்தில் ஒன்றுமே செய்யாது விவாதித்துக் கொண்டிருந்தார்கள். கிளின்டன் வரும் போதுதான் அனைவரையும் காணமுடிந்தது. அதன் பின்னர் உண்மையான சேவை மனப்பான்மை கொண்டோரை மட்டுமே காண முடிந்தது. பெரும்பாலான உதவி நிறுவனங்கள் பொய்யானவை. அவை ஆசியாவில் செய்வது ஊதியத்துடன் கூடிய பொழுது போக்கு உல்லாசம். நான் இவர்களுடன் வேலை செய்துள்ளேன். எனவே எனக்கு இவர்கள் குறித்து ஓரளவு தெரியும். இலங்கையில் உள்ளவர்களுக்கு வெள்ளைகள் என்றால் தெய்வங்கள். கடவுள் எப்படியோ அப்படித்தான் இவர்களும். அடுத்தவன் அல்லல்படுவதை கேட்பதில் அலாதிப் பிரியம். கேட்பார்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஒருசிலர் மட்டும் மிக மிக நேர்மையானவர்கள்.
என்னால் மறக்க முடியாத நிகழ்வுகள் சில:
1. சுனாமி காலத்தில் வந்த அமெரிக்க இராணுவம் உதவிப்பணிகள் செய்து கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களோ அவர்கள் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு மப்பில் இருந்தனர். ஒரு அமெரிக்க இராணுவ வீரன் கேட்டான் ” நண்பா ,இது அவங்க நாடா இல்லை எங்கட நாடா என்று சொல்” என்றான். ஏன்? என்றேன். ” இல்லை, நாங்கள் குப்பை அள்ளிக் கொண்டும், அவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொண்டும் இருக்கிறோம். அவங்களைப் பாரு, நாங்க வேலை செய்யிறதை பார்த்துக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருக்கிறார்களே? ” என்றான். என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
2. ஜேர்மனியிலிருந்து ஒரு மெடிக்கல்கெல்ப் எனும் பெயரில் ஒரு குழு வந்திருந்தது. மோட்டார் சைக்கிள்களில் மருத்துவ உதவி என கொடிகளோடு ஓடித் திரிந்தார்கள். என்னோடு இருந்த ஜெர்மன் டொக்டர் ஒருவன் சொன்னான். ” இவங்களைப் பார்த்தால் மருத்துவ குழுவாக தெரியவில்லை. எதுக்கும் கதைச்சுப் பார்ப்போம்” என்றான். கதைத்ததில் அவர்கள் அனைவரும் ஜெர்மனியின் ஒரு பகுதியில் உள்ள அம்பியுலன்ஸ் டிரைவர்கள் என்று தெரிய வந்தது. நல்ல விடுதிகளில் தங்கி கொடியோடு மோட்டார்சைக்கிள்களில் பவனி வந்தார்களே தவிர ஒரு உதவியும் அவர்கள் செய்யவில்லை.
3. இத்தாலிக்கும் சுவிஸுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ரெஸ்ரோரன்ட் ஒன்றுக்கு எதிர்பாராமல் போகக் கிடைத்த போது அங்கே சுனாமி காலத்தில் நாங்கள் பணிபுரிந்த புகைப்படங்கள் வரவேற்பு அறையில் இருந்தது. “எங்கிருந்து இப்படங்கள் கிடைத்தது?” என அதன் முகாமையாளரிடம் கேட்ட போது அவர் சொன்னவை என்னை திகைக்கவைத்தது. “நாங்கள் இங்கு சேர்த்த பணத்தில் அங்கு செய்த சேவை” என்றாரே பார்க்கலாம். நான் ” நீங்கள் நல்லா ஏமாற்றிப் பிழைக்கிறீர்கள். அங்கே நாங்கள்தான் பணி செய்தோம். படத்தில் நானும் இருக்கிறேன். கவனித்தீர்களா?” என்றேன். அவர் பேசவேயில்லை. நான் வெறுத்துப் போய் வெளியேறினேன்.
தமிழர்கள் மட்டும் கிரிமினல்கள் இல்லை. வெள்ளைகளும்தான். அவர்களை நம்பி பலர் வீதிகளில் இறங்கியிருப்பது வேதனையானது. இப்படியான போலிகளை மகிந்த அரசு நல்லாவே நாறடிக்குது. அவர்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியுமோ?
santhanam
மாயா றீல்விடுகிறார் இப்படிதான் ரி.ஆ.ஒ வும் சுனாமிகாத்தில் றீல்விட்டவர்கள்
மாயா
சந்தானம் , நீங்கள் சுனாமி காலத்தில் அங்கு வேலை செய்திருந்தால் உண்மை தெரியும். புலிகளது பகுதிகளுக்கு நானும் போனேன். சில பகுதிகளுக்கு உதவி நிறுவனங்கள் போவதற்கு தடை விதித்திருந்தார்கள். அது அவர்களது பாதுகாப்பு கருதியதாக நாமும் உணர்ந்தோம். அப்போது அது சரியாகப்பட்டது.
ஆனால் , உதவிகளை அவர்கள் பெற்று அவர்களாகவே வழங்க வேண்டும் என இருந்தார்கள். அதற்கு காரணம் புலிகளே அந்த மக்களுக்கு உதவுவதான எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துவதே நோக்கமாக இருந்தது. TRO அப்போது கடுமையாக வேலை செய்தது. அதை நான் பார்த்தேன். ஏன் புலிகளும் இராணுவமும் கூட இணைந்து அம்பாறை மட்டக்களப்பு பகுதிகளில் பணி செய்ததே. அதைப் பார்த்து இனி ஒரு ஒற்றுமை வரும் என எண்ணினோம்.
நான் புலி எதிர்ப்பாளன் அல்ல. அவர்கள் செய்த நல்லதை நாம் போற்ற வேண்டும். தவறுகளை மட்டுமே திட்ட வேண்டும். புலிகள் அழிந்த பின் அவர்களை ஏறி மிதிப்பது போல அவர்கள் செய்தது அனைத்தும் தவறு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
சுனாமி காலத்து உதவி நிறுவனங்கள் மற்றும் அரசு குறித்து என்னிடம் ஒளிப்பதிவில் இருக்கிறது. தேவையெனில் ஒலிவடிவத்தில் பணிபுரிந்த உதவி நிறுவனத்தினர் கதைப்பதை இணைக்கலாம்.
மாயா
சந்தானம் இரு ஜேர்மன் வைத்தியர்களுடைய பேட்டி இதோ:
http://www.zshare.net/audio/615038342c184a47/
சில பேச்சுகளை எடிட் செய்துள்ளேன். மீண்டும் நாங்கள் அங்கு போய் பணி புரிய வேண்டும். இதை கேட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு யார் என்பது புரிந்துவிடும். என்னை இங்கே காட்டிக் கொள்ள விரும்பவில்லை. நாளைய தேவைக்காக பல விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. தேசத்தின் நேசத்தில் இது போன்ற பணிகள் நம்மால் செய்ய முடியுமா என பார்ப்போம். சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனநிலை யதார்த்தத்துக்கு கொண்டு வர பல விடயங்ளை செய்தோம். இப்போது அதைவிட குழந்தைகளுக்காக நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? வேதனையாக இருக்கிறது. இவர்களது செவ்வி பலருக்கு பலதை புரிய வைக்கும்.
palli.
மாயா உங்களுடன் மல்லு கட்ட பல்லிக்கு தற்ப்போது நேரம் இல்லை; இருக்கும் போது விபரமாக எழுதுகிறேன்; ஆனால் தாங்கள் மகிந்தாவையும், கருனாவையும் பாதுகாக்க அல்லது அவர்களுக்காய் வாதம் செய்ய படும் கஸ்ற்றத்தில் எம்மினத்துக்கு சற்றேனும் பாடு படுங்கள்; ஒரே வரியில் இப்போதைக்கு இதை முடிக்கிறேன்; எம் மீது உடம்பு பூரா சேறு வைத்து கொண்டு பக்கத்து வீட்டுகாரன் பல்லில் காவு உள்ளது என்பதுதான் உங்கள் பின்னோட்டம் மட்டுல்மல்ல எண்ணமும் கூட;
மாயா
பல்லி, யதார்த்தத்தை சொன்னேன். முன்னால் குழியிருக்கிறது, பயணிக்காதே என்று பதாகை வைப்பது குழியை காப்பாற்ற அல்ல, பயணிப்பவனைக் காப்பாற்றவே. மகிந்தவானாலும் கருணாவானாலும் பிரபாகரனானாலும் டக்ளஸானாலும் சித்தார்த்தரானாலும் …..ஏனையவர்களும்…. எனக்கு எல்லோருமே ஒன்றுதான்.
நல்லது யார் செய்தாலும் அதை பாராட்டவேணும் , ஊக்கப்படுத்தவேணும். அப்போது அவன் அடுத்து ஏதாவது செய்வான். தீயதை யார் செய்தாலும் அதைச் சுட்டிக் காட்ட வேண்டும். அவன் அதை முடிந்தால் திருத்திக் கொள்வான். இல்லை, அழிந்து போவான்.
தமிழர்கள் அச்சுக்குள் இறுகிப் போனவர்கள். அவர்கள் எண்ணத்தினூடாக மட்டும் அடுத்தவனை பார்ப்பவர்கள். இங்கே தமிழர்கள் அனைவரும் ஒரு விதத்தில் புலிகள்தான். வரிகளில் மாத்திரமே சற்று வித்தியாசம்.
//எம் மீது உடம்பு பூரா சேறு வைத்து கொண்டு பக்கத்து வீட்டுகாரன் பல்லில் காவு உள்ளது என்பதுதான் உங்கள் பின்னோட்டம் மட்டுல்மல்ல எண்ணமும் கூட – பல்லி //
எம் மீது என உங்கள் மீதான உண்மையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.