வடக்கி லிருந்து இடம்பெயர்ந்த தற்போது வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக புளத்சிங்கள பிரதேச சபைப் பிரிவு மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கையளிக்கப்பட்டன.
இந்த உணவுப் பொருட்களை புளத்சிங்கள பிரதேச சபைத் தலைவர் தேசபந்து துசித்த குலரத்ன தலைமையிலான குழுவினர் அண்மையில் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் வைத்து அமைச்சர் றிஷாத்திடம் கையளித்தனர்.
இப்பொருட்களில் அரிசி, தேங்காய், பால்மா, சவர்க்காரம், புதிய உடைகள், குடிநீர், மருந்துப் பொருட்கள் உட்பட பல அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியிருந்ததாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.