இலங் கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், திரிகோணமலையில் சீனா ராணுவ தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, மருத்துவம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். 4 வது ஈழப் போர் முடிந்துள்ளது. விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்றார்.
குரங்கு
விரைவில் 5வது விடுதலைப்போரா?
மந்திரத்தில் மாங்காய் வருமா திருமா? இப்படி மோடிவேலை காட்டலாமா?
அடியும்.. அடியும்… வாங்கிய கூலிக்கு மாரடியும்..!!!
rony
ஐந்தாவது ஈழப்போர் தொடங்குவதற்கு முன்பு திருமாவளவன் கீழ்ப்பாக்கம் பைத்திய வைத்தியசாலையில் சிகிச்சை தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் இந்திய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்தாக வேண்டும். தவறினால் பாவம் திருமாவளவன் விரைவில் தெருமாறனாகிவிடுவதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மதி
ஆரம்பிச்சிட்டாங்ைகயா… ஆரம்பிச்சிட்டாங்ைகயா…
பிளான் பண்ணி நம்மள முடிக்கிரங்க …
lavan
செலவுக்கு பணம் இலையா?
palli.
அதெல்லாம் தொடங்கலாம் ;ஆனால் முடிந்த நாலு ஈழ போரும் எப்போது எங்கு நடந்தது என்பதை மணவாளன் பல்லிக்கு சொல்லமுடியுமா??
இந்த கண்ணுக்கு தெரியாத கறையான் அரித்த புத்தகத்தில் படித்த பண்டார வன்னியன்; காக்கை வன்னியன்; ராவணன்; ராமர் அணில்; குரங்கு என சொல்லபடாது; இந்த நாலு போரும் எப்பது நடந்தது? எப்படி நடந்தது? யார்நடத்தியது??
மாயா
தமிழகத்தில் புலிக்குப் பின்னால் நின்றவர்கள் இதுமாதிரி பைத்தியங்கள்தான். இவர்களது கூட்டத்தில் விடுப்பு பார்க்க போன கூட்டம் புலி ஆதரவாளர்களுக்கு ஓட்டுக் கூட போடவில்லை. திருமா திமுக புண்ணியத்தில் தலை தப்பினார். இவர்களுக்கு இதைவிட பேச விடயமே இல்லை. இதையாவது பேசி இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும். விரைவில் சந்திர மண்டலத்தில் தமிழீழம் அமைச்சுட்டோம். போறதுக்கு வண்டி தயார் பண்ணணும் என்று காசு சேர்த்தாலும் சேர்ப்பார்கள்? மடி கவனம் ராசா…
Kusumbo
4 ஆவது போர் முடிந்து 5 ஆவது தொடங்கட்டும். உங்களின் ஈழப்போர் எத்தனையாவதில் முடியும்? நீங்கள் உங்கள் பிரபாவிடம் கேட்டுச் சொன்னால் அதற்கேற்றமாதிரி நாங்களும் எங்களைத் தயார்படுத்தலாம் தானே. உங்களுக்கு பிரபாகரன் அசரீரியில் சொன்னவாரா? இனி அவர் இருந்தால் என்ன செத்தால் என்ன? எம்மக்களைச் சாகடித்தது போதாதா?