‘எனக்கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது’- சிவநாதன் கிஷோர் எம்.பி.

kishore.jpg“எனக் கெதிராக எவரும் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் நான் எந்த கட்சியையும் சாராதவன்” என பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். அதேவேளை, எனது மாவட்டத்து மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் நான் எனது ஒத்துழைப்பை வழங்குவேன். நாளை வவுனியாவிலும் அடுத்து மன்னாரிலும் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வதும் உறுதியென அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் மீதான பிரேரணையின் போது நடுநிலை வகித்ததால் கிஷோர் எம்.பி.க்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளதாக சில பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையடுத்து அதுபற்றி அவரிடம் கேட்ட போதே கிஷோர் எம். பி. இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கஷ்டப்பட்ட மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே தாம் அவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்த அவர்; அவ்வாறு தமக்கெதிராக எவரும் விசாரணை நடத்த முடியாதெனவும் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,இதுவரை காலமும் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அதனால் அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய தேவையொன்றிருந்தது. இப்போது அத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை.

எமது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் அவர்களிற்கான இயல்பு வாழ்க்கை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே நான் செயற்பட்டு வருகிறேன். கொழும்பிலேயோ வெளிநாடுகளிலேயோ இருந்து கொண்டு எமது மக்களுக்கு எம்மால் சேவை செய்ய முடியாது. அதனால் நான் மக்களோடு எனது மாவட்டத்தில் இருக்கிறேன். அவர்கள் இனியும் அல்லல்பட விடமுடியாது. அவர்களுக்கான கெளரவமான எதிர்காலம் அவசியம்.

நான் கட்சி விட்டு விலகப் போவதில்லை, அமைச்சர் பதவி இருந்தால்தான் மக்களுக்குச் சேவை செய்ய முடியுமென்பதில்லை. நான் செஞ்சிலுவைச் சங்கத்தின் இருந்து கொண்டே மக்களுக்குச் சேவை செய்தவன். தேசியம் தேசியம் என பிடிவாதம் செய்து இனியும் எதுவும் சாதிக்க முடியாது.  நமது மக்களின் நலன் நமக்கு மிக முக்கியம். தேசியம் பேசிய எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் போராட்டம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் பூஜ்ஜியமாகவே போனது, பிரபாகரனின் போராட்டமும் பூஜ்ஜியமாகி மக்களை நடுத்தெருவிற்கே கொண்டுவந்துவிட்டது.

அதனால் எமது மக்களின் எதிர்காலத்தை சுபீட்சம யமாக்க எமது மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதென தீர்மானித்துள்ளேன் எனவும் கிஷோர் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to palli. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • rony
    rony

    பாவம் கிஷோர், ஏதேதோ பிதற்றூகிறார். இப்படியும் சந்தர்ப்பவாதிகளா? “பதவிக்காகவா அல்லது மக்களின் உதவிக்காகவா” இவர் நிறம் மாறுகின்றார். இதற்கு மக்கள்தான் பதில் கூறவேண்டும், நீதியானதும் கள்ளவோட்டில்லாத தேர்தலும் நடைபெற்றால் விரைவில் எதிர்பார்க்கலாம்.

    Reply
  • Vanasana
    Vanasana

    //அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,இதுவரை காலமும் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அதனால் அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய தேவையொன்றிருந்தது. இப்போது அத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை.//

    1. If there is no அத்தகைய பிரச்சினைகள் why the government needs the emergency law?
    2. Whe he supports the emergency by retaining his vote?
    3. In this issue there is no neutral stand. Either he supports or oppose. He cann’t simply say he is not being both.

    Reply
  • palli.
    palli.

    ரொனி சிலகாலத்துக்கு முன்பு புலி பிரமுகர்கள் தமிழரின் உன்மையான பிரதநிதிகள் கூட்டமைப்பினரே என சொன்னார்கள்; அப்படியாயின் மக்களால் தெரிவு செய்யபட்ட உத்தமரை அவர் மக்களுக்கு உதவ விடாமல் தடுக்கலாமா? ஊறபோடாத உளுந்தும்; காயபோடாத கருவாடும் எதுக்குமே உதவாது போல்; இதுவரைதான் புலியோடு கூடி குப்பறபடுத்தவர்களில் சிலர் மக்களுக்காக செயல்பட தொடங்கும்போது அபசகுணமாய் பேசலாமா? பல்லி பலநாள்கழுக்கு முன்பு சொன்னேன்; 22ம் பல கோணத்தில் இருக்கு; இதில் சிலது இந்தியாவிடமும்: இன்னும் சிலது இலங்கை அரசிடமும் சரண்டர் ஆகிவிட்டனர்; மிகுதி நாடுநாடாய் திரியுதுகள் எந்த நாட்டு புகலிடம் தமக்கு பாதுகாப்பு என; வால் அறுந்த பட்டம் போல் ஆகிவிட்டது இவர்கள் வாழ்வு;

    Reply
  • மாயா
    மாயா

    இவரது முடிவு சரியானது. ஐக்கிய இலங்கை அல்லது அனைத்து மக்களும் ஐக்கியமாக வாழும் சிறீலங்கா என்பது இனவாத பெயரற்ற அரசியல் கட்சிகள் வழியே சாத்தியம். அதையே ஜனாதிபதி மகிந்த அவர்களும் தமது முன்னெடுப்பாக செய்ய முனைகிறார். தமிழ் கட்சிகள் அனைத்துமே தமிழ் என்பது போல கெலஉருமய போன்றவையும் இனவாதத்தை தமது பெயரிலேயே தலைப்பாக்கியுள்ளது. முஸ்லீம் கட்சிகளும் கூட அதே வழிதான்.

    இவை ஒருபோதும் நாட்டு மக்களிடையே இன ஐக்கியத்தை உருவாக்காது. அடிப்படையிலேயே மாற்றம் தேவை. ஜனாதிபதி சொல்லும் ” நாம் அனைவரும் ஒரு தாயின் மக்கள்” அல்லது அனைவரும் இலங்கையர் அல்லது சிறீலங்கன் என்பதற்கு இனவாத பெயர் கட்சிகள் ஒன்று தமது பெயர்களையாவது மாற்றிக் கொள்ள வேண்டும். முடியாதவிடத்தில் முக்கிய கட்சிகளில் இணைய வேண்டும்.

    இதுவே அனைவரும் அந் நாட்டு மக்கள் என்பதையும், அனைத்து மக்களுக்குமான சம உரிமை கொண்ட சமுதாயம் என்பதையும் இதயத்துள் ஏற்படுத்தும். இது செயலாக்கம் பெறாதவிடத்தில் சிறுபான்மை எனும் கருத்தியலோடு இனவாதம் தொடர்ந்தும் பயணிக்கவே வழி வகுக்கும்.

    இவை இல்லாமல் ஐக்கியம். நல்லிணக்கம் என்பது உருவாகாது. அது பேச்சோடு நின்றுவிடும். கிஷோர் இங்கே முன் மாதிரியாகியுள்ளார். அது சுயநலமாக பலருக்கு தெரிந்தாலும், எதிர்காலத்தில் அவர் வழியை பலர் பின் தொடரும் வாய்ப்புகள் அதிகம். இதையே கருணாவும் பேசி வருகிறார்.

    புலிகளினால் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் கூட தம்மை நிலை நாட்ட எதையாவது கவர்ச்சிகரமாக செய்ய முயல்கிறார்களே ஒழிய , அவர்களிடமும் நேர்மையை காண முடியவில்லை என்பது வருத்தமான உண்மை. அவர்களும் ஆள் கடத்தல் , கொள்ளை , லஞ்சம் ஆகியவற்றினூடாக தவறிழைத்து வருவதை பார்க்க முடிகிறது. அவர்களும் புலிகளின் இன்னொரு பிரதிபோலவே காண முடிகிறது. இது இவர்களது பயணத்தை தொடரவிடாது. நேர்மையற்ற அரசியல்வாதியாலும் பலமற்ற அரசியல்வாதியாலும் யாருக்கும் பிரயோஜனமில்லை.

    முன்னைய இயக்க பிளவுகள் மற்றும் தடைகளின் பின் அவ் இயக்கங்களின் சண்டியர்களே தற்போதுள்ள தலைமைகளைக் காத்தனர். அவர்களோடு இருந்தனர். தற்போது இச் சண்டியர்கள் தலைவர்களாக முயல்கின்றர். இதற்கு உதாரணமாக புளொட்டின் ஆரம்பகால மத்திய கொமிட்டி உறுப்பினர்களை எடுக்கலாம். அங்கே இருந்தவர்கள் உமா மகேஸ்வரனுக்கு நெருங்கிய அல்லது அவரது உயிரை காப்பாற்றியவர்களாகவே இருந்தனர். அங்கே படித்தவர்களை விட தலைவருக்கு விசுவாசமானவர்களது பேச்சும் ஜால்ராவுமே எடுபட்டது. அதுவே அன்றைய புளொட் சிதையக் காரணமாயின. நல்லவர்கள் ஒதுக்கப்பட்டு மோசமானவர்கள் தலைமையோடு இருந்தனர். இதை இப்போது அனைத்து மாற்று தமிழ் இயக்கங்களிலும் அவதானிக்க முடிகிறது. இது ஒரு அபாயமான சமிக்கையாகவே தெரிகிறது.

    ஒன்று நேர்மை தேவை அல்லது நல்ல பலம் தேவை. கிஷோர் பலமும் நடைமுறை சாத்தியமான பகுதிக்குள் நுழைய முனைகிறார். படித்த அல்லது அரசியல் சாணக்கியம் தெரிந்த ஒருவராக அவரது முடிவு சரியானதாகத் தோன்றுகிறது. கடன் காரன் காலில் விழுவதை விட கட்சிக்காரன் காலில் விழலாம் என்பது போன்ற நிலையாக இதை எடுக்கலாம். அவர் கடந்த காலங்களில் செஞ்சிலுவை சங்க பணிகளில் இருந்த போது நேர்மையாக இருந்தார். தமிழருக்காக உதவிகள் செய்தார். அரசியலுக்குள் வந்த பின்னர் ஏனையவர்களால் அவரால் அதை முன்போல் தொடர முடியாமல் போயிருக்கலாம். அதற்கு தான் சேர்ந்த கட்சி தடையாகக் கூட இருந்திருக்கலாம். இனியாவது அவர் நேர்மையாக மக்களுக்கு முன்போல் சேவை செய்ய முயன்றால் அது அவரை விட வன்னி மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

    Reply
  • palli.
    palli.

    மாயா நிதானமான பின்னோட்டத்தில் ஏதோ ஒரு தவறு இருக்குமாபோல் பல்லிக்கு தோன்றுகிறது; இது பல்லியின் கருத்துதான்;
    //இனவாத பெயர் கட்சிகள் ஒன்று தமது பெயர்களையாவது மாற்றிக் கொள்ள வேண்டும். முடியாதவிடத்தில் முக்கிய கட்சிகளில் இணைய வேண்டும்.//
    இதில் பல்லிக்கு உடன்பாடு இல்லை; இது கருனாவை வேண்டுமானால் நியாயபடுத்தலாமே தவிர இனவாத போக்கை தவிர்க்க முடியாது; ஏன் ஜே வி பி எத்தனையோ அடிகள் வாங்கின பல துண்டுகளாக சிதறின இருந்த போதும் எந்த கட்ச்சியுடனும் இனையவில்லை; காரணம் அப்படி இணைந்தால் அவர்கள் எப்போதோ காணாமல் போய் விடுவார்கள், இன்று உலகத்தில் பல நாடுகளில் வலதுசாரி கட்ச்சிகளே வெற்றி பெற்று ஆளும் வர்க்கமாக இருக்கிறார்கள்; இதுக்கு அவர்களது திறமை என்பதை விட இடதுசாரிகளின் நித்திரை தூக்கமான செயல்பாடுகள்தான் காரணம் என்பது பல்லியின் கருத்து; உதாரனத்துக்கு அண்மையில் நடந்த ஜரோப்பா யூனியன் தேர்தல் கூட வலதுசாரிகளுக்குதான் வெற்றியை தேடி கொடுத்தது; ஆக உமது கருத்து போல நிதானமான நிர்வாகம் நம்பிக்கையான செயல்பாடு மக்களுக்கு விசுவாசம் எல்லாதுக்கும் மேலாக மனிதநேயம் இருப்பின் எந்த புடுங்குபாடும் வராது; புலி எப்படி அதிகாரத்தால் தான் மட்டுமே ஆழ பிறந்தவன் மற்றவர்கள் எல்லாம் சாக பிறந்தவர்கள் என்பதுபோல் இருந்தார்களோ அதே போல் மகிந்தா குடும்பம் இன்று வாழை பழத்தில் ஏத்துகிறது ஊஸி; தனியாக இயங்க விடாமல் அடித்தது புலி; தனியாக இருந்தால் பேய் பிடிக்கும் என சொல்லி அதுக்குரிய பின்னகர்வுகளை செய்து தன்னுடன் இனைய வைக்குது மகிந்தஅரசு, ஆக இனவாதம் என்பதுக்கு எடுத்து காட்டே மகிந்த அரசுதான்; சில வேளை பல்லி புரிந்து கொண்டது தவறாயின் தாங்கள் இனைய சொல்லிய அமைப்புகள் எவை.??

    Reply
  • மாயா
    மாயா

    பல்லியின் கருத்தை வரவேற்கிறேன். இது இலங்கையில் சாத்தியப்படாததை உணர முடிகிறது. ஐதேகட்சி இனவாதம் இல்லாதது போல் இருந்தாலும் அது இனவாதக் கட்சியாக இருந்ததை கடந்த காலங்கள் நமக்கு காட்டின. பண்டாரநாயக்காவின் பரம்பரையோடு சிறீலங்கா சுதந்திரக் கட்சி முற்று புள்ளியாகவிட்டது. அது பெயரளவில் இருந்தாலும் மகிந்த சிந்தனை எனும் பெயரில் ஏதோ ஒரு மாற்றத்தை நோக்கி செல்ல முனைகிறது.

    மகிந்தவுக்கு தமிழர் பிரச்சனையை தீர்க்கும் விருப்பமும் – பலமும் – சிங்களவர்களை ஆளும் தகமையும் இருக்கிறது. இதுகாலவரையிலான சிறீலங்கா அரசியலில் மகிந்த அளவு பலமான ஒரு தலைவர் இருந்ததில்லை. அனைத்து படைகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கோட்டாபய மூலம் வைத்திருக்கக் கூடிய ஒரு தலைவர் சிறீலங்காவின் சரித்திரத்திலேயே இருந்ததில்லை. இது ஒரு பெரிய பலம்.

    அடுத்து உலகமெல்லாம் பரவியிருக்கும் சிங்கள புத்தி ஜீவிகளை ஒரு குடைக்குள் கொண்டு வர மகிந்தவால் முடிந்தமை மகிந்தவுக்கு கிடைத்த அடுத்த பலம். உலக அறிமுகமற்ற மகிந்தவுக்கு அந்த புத்தி ஜீவிகளாலேயே அறிமுகங்கள் : உதவிகள் கிடைத்தன. அதனூடாகவே அவரது சர்வதேச காய் நகர்த்தல்கள் மற்றும் ராஜதந்திர உறவுகள் பலமானது. அதே புத்தி ஜீவிகளது கைகொடுப்பே எந்தவொரு நாட்டையும் எதிர்க்கும் துணிவை அவருக்குக் கொடுத்தது. புலம் பெயர்ந்துள்ள சிங்கள புத்தி ஜீவிகள் அவர்கள் வாழும் நாட்டுத் தலைவர்களது பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து அதற்கேற்றாற் போல கருத்துரைகளையும் ஆலோசனைகளையும் மகிந்தவுக்கு தொடர்ந்து வழங்கினர். மகிந்த பேசுவதை விட அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதில் ஆவலாக இருந்தார். இது சிங்கள புத்தி ஜீவிகள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது.

    பாமர சிங்கள மக்கள் மத்தியிலும் அவர் ஓர் ஆண் மகனாக , வீரமகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார். தனது கருத்துகளை ஒரே தொனியில் தொடர்ந்து நகர்த்தியமையால் அவரது இலக்கு சரியென சிங்கள மக்களால் மெதுவாக உணரப்பட்டது. ரணில் போன்றவர்களது கருத்துகள் தளும்பல் கொண்டது. அவர்கள் சிங்களவர்களையா அல்லது புலிகளையா ஆதரிக்கிறார்கள் என்று புரிய முடியாத தினம் ஒரு கோஸமாகி பாமர மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியது. இதனால் ஐதேக கேள்விக்குறியாகியே விட்டது.

    ஜேவீபீ அடிப்படையில் இனவாதக் கட்சியல்ல. ரோகண விஜேவீராவுக்கு பின்னர் அரசியல் கட்சியாக நிலைக்க இனவாதத்தை முன்னிறுத்தியது. பின்னர் அதிலிருந்து மீள முடியவில்லை. அதுவே அவர்களது பிரிவுகளுக்கும் முறிவுகளுக்கும் காரணமாயின. எதிர்காலத்தில் ஜேவீபி மற்றும் சிங்கள இனவாதக் கட்சிகள் முன்னைய சமசமாஜக் கட்சி மற்றும் கொமியூனினிஸ்ட் கட்சி போன்ற நிலைக்கு தள்ளப்படும். இவற்றின் தேவை அனைத்தும் மகிந்தவின் பீஏ கட்சிக்குள் அடக்கம். எனவே அனைத்து சிங்களக் கட்சிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி(PA)க்குள் அமிழ்ந்துவிட்டன.

    ஐதேகட்சியில் இருந்த சிந்தனாவாதிகள் மகிந்த கட்சிக்குள் வந்ததால் ஐதேகட்சியால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை. தற்போது கூட ஒரு தேர்தல் வந்தால் மகிந்த கட்சியே மாபெரும் வெற்றி வாகை சூடும். பசி மற்றும் விலைவாசி உயர்வை விட மக்கள் அச்சமில்லாது வாழும் சூழ்நிலை சிங்களவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இனியொரு தலைவர் வந்தால் அது இந்த அமைதிக்கு பங்கம் விளைவிக்கும். இந்த வெற்றிக்கான விலை அதிகம்.

    தமிழ் இயக்க பின்னணிக் கட்சிகளில் பலரது ஒத்துழைப்பும் மகிந்தவுக்கு கிடைத்தது. ஆனால் அவர்கள் அதை தவறாகப் பயன்படுத்துவார்களானால் அதன் பிரதிபலனையும் சீக்கிரமே அனுபவிப்பார்கள்.

    எனவே மகிந்த சார்ந்தவர்கள் புலிகளோடு எப்படி மோதினார்களோ அதேபோல இனவாத சிங்கள கட்சிகளோடும் நிழல்யுத்தம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறது. 13வது சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் கெலஉருமய அமரசேகரவிற்கும் ஜேவீபீ விமல் வீருவங்சவுக்கும் அமைச்சர் டிலான் பெரேரா ” பாசையும் சுவரும் இருக்கிறதென்று போஸ்ட்டர் ஒட்டுபவர்களால், தேசத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. நாட்டின் சமாதான சக வாழ்வுக்காக சிலரது வாய்களில் பசையொட்டவும் (கம்) பின்னிற்கப் போவதில்லை” என காரசாரமாக பேசியதில் மகிந்தவின் பின்னணியே இருந்ததாக சிங்கள அரசியல்வாதிகளுக்குத் தெரியும்.

    எனவே அவர்களும் அடக்கியே வாசிக்கின்றனர். இவை குறித்து பார்க்கும் போது மகிந்த காலத்தில் தமிழர்கள் தமது உரிமைகளை பெற வேண்டிய வாய்ப்புகள் அதிகம். தமிழருக்கு கிடைப்பதை எதிர்க்கும் பலம் சிங்களவர்களிடம் இல்லை. அப்படி தமிழர் உரிமைகள் மறுக்கப்படும் ஒரு நிலை தொடரக் கூடாது என்பதே சிங்கள புத்திஜீவிகளது கருத்தாக இருக்கிறது. இன்னொரு யுத்தத்தில் நாடு சீரழிவதை அவர்கள் விரும்பவில்லை. தமிழர்களைப் போலவே சிங்களவர்களும் மோதலில் இறந்தேயுள்ளனர்.

    புலிகள் தரப்பில் இறப்பே மகிழ்சி. சிங்களவர்களுக்கு அது மாபெரும் இழப்பு. எனவே மகிந்தவின் கரத்தை வலுப்படத்தாதவிடத்தில் தமிழர்கள் தொடர்ந்தும் உரிமையற்ற நிலையிலே வாழ்ந்து மற்றொரு போருக்கு தள்ளப்பட்டு உள்ளவர்களையும் இழந்துவிட நேரும். அதைவிட பலமானவனோடு இணைந்து தமிழர் சம உரிமைகளைப் பெறுவதே புத்திசாலித்தனம்.

    Reply
  • palli.
    palli.

    நன்றி மாயா இவ்வளவு பெரிய விடயங்களை(ஒரு அரசியல் வாதியிடம் இல்லாத தெளிவு) இருக்கும் நீங்களே சித்திரம் வரைய கண்தானம் தவறில்லை என சொல்லும் போது எமது இனத்தின் எதிர் காலத்தை நினைத்து பயமாக உள்ளது.

    Reply
  • palli.
    palli.

    மாயா தங்கள் எழுத்தில் புளொட் வாசனை தெரிகிறது; தவறாயின் மன்னிக்கவும். நிஜமாயின் அவர்களது கடந்தகால தவறுகளை ஒரு கட்டுரையாக எழுதினால் எம்மை போன்றோரும் தெரிந்து கொள்ள வாய்பாய் இருக்குமே;

    Reply
  • viji
    viji

    மாயா, மகிந்த இன்னொரு பிரபாகரன். மகிந்தவின் போக்குகள் வேறு திசைவழியில் செல்லுகின்றது. தமிழர்களின் பிரச்சனையை அவர்கள் தீர்க்கப் போவதில்லை.

    Reply
  • மாயா
    மாயா

    நன்றி பல்லி. 1976க்குப் பிறகு உண்மையான புளொட் நாட்டில் இல்லை. அவர்கள் பின்தள இறுதிக் கட்ட உடைவோடு சிதறிவிட்டார்கள். எனக்கு அனைத்து இயக்க நண்பர்களும் இருக்கிறார்கள். அதனடிப்படையில் காண்பவற்றை தேவையான போது கொண்டு வருகிறேன். ஒரு இயக்கம் குறித்து நன்றாகத் தெரியும். அது இப்போது அதுவாக இல்லை. அதை காணும் போது வருத்தமே. அவர்களது அடி மட்டத்தவர்களது பேச்சு இதுவும் ஒரு புலிதான் என்பதை உணர்த்தும் போது மக்களுக்கு நெரப் போகும் அவலம் குறித்து அச்சமாக இருக்கிறது.

    அன்று இருந்த இயக்கங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கான விடிவுக்காக களம் இறங்கி துரோகி பட்டம் பெற்றார்கள். இவர்கள் உண்மையில் தியாகிகள். இன்றைய துரோகிகள் தமக்கான விடிவுக்காக தமிழ் மக்களை பகடைக் காயாக்கியுள்ளார்கள்.

    இவர்களுக்கும் புலிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். பாவம் அப்பாவி ஏழைத் தமிழர். அவர்களுக்கு மகிந்த மாத்தையாவது நல்லது செய்தால்தான் உண்டு. இல்லையென்றால் தொடர்ந்தும் தமிழ்நாட்டுத் தமிழர் பாணியில் ஊடகங்களில் உன்னதமாகவும் , உள்ளுக்குள் ஊத்தைகளாகவும் இருப்பார்கள்.

    கடந்த காலத்தை எழுதிப் பயனில்லை. நாளைய எமது சமுதாயத்துக்கு நீ செய்யப் போவது என்ன? அழிவையா அல்லது ஆக்கபூர்வமான? ஒன்றையா என்பதே மனதை வருடுவதாகவாக இருக்கிறது.

    வெளிநாடு போனவனும் , பணமுள்ள தமிழனும் எப்படியும் பிழைத்துக் கொளள்வார்கள். தேவைப்பட்டால் இணையத்தில் எழுதி , வீதியில் கோஸம் போட்டு , வானத்தில் தமிழீழம் அமைத்து , மக்களைக் கொள்ளை அடித்து வாழ்வார்கள்.

    வடக்கு – கிழக்கு அப்பாவி மக்கள் மலைநாட்டுத் தமிழர் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்களோ என நினைக்கும் போது கண்கள் பனிக்கின்றன. அதிலும் குறிப்பாக பிரபாகரன் பிச்சைக்காரர்களாக்கி கொண்டு வந்து முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் அப்பாவிகள். இவர்களுக்காக பேசாது , செயலாற்றாது வறுகும் எவனும் பிரபாகரன் போன்று ஒரு நாள் அழிவார்கள். அவன் தமிழனாகவோ – சிங்களவனாகவோ – முஸ்லீமாகவோ எவனாகவோ இருக்கலாம். நாம் இவர்களை இப்போதே கண்டிக்கத் தொடங்க வேண்டும். இல்லையென்றால் இலங்கையில் தமிழரே இல்லாமல் போகும் அபாயம் தமிழராலேயே உருவாகும்.

    Reply