இலங் கையின் வட பகுதியில் இருந்து விடுதலைப்புலிகள் படையினரால் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் குமரன் பத்மநாதன் மேற்கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது. இவரைக் கைது செய்வதற்காக சர்வதேசத்தின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
கடந்த ஜனவரி 30 ஆந் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரன், குமரன் பத்மநாதனுக்கு புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கே பத்மநாதனை கைது செய்வதற்காக அவர் தொடர்பான பல தகவல்களை சர்வதேச நாடுகளுக்குத் தாம் அனுப்பி வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நண்பன்
பிடித்தால் புலத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அதுவரை காயப்பட்ட புண் சொறிந்து கொண்டேயிருக்கும்.
பார்த்திபன்
உருத்திரகுமார் போன்றவர்களை முதலில் கைது செய்து நன்கு கவனித்தால் பத்மநாதன் இருக்குமிடம் தானாக தெரிந்து விடும். இந்த விடயத்தில் புலிகளோடு ஒட்டி உறவாடிய பல ஐரோப்பிய நாடுகளின் சாயங்களும் வெளிக்கும் என்பதால், இவர்கள் எப்படியும் பத்மநாதனை காப்பாற்ற முயல்வார்கள், முடியாது போனால் ………………..
palli.
பார்த்திபன் எனக்கு இந்த கட்டுரையை படித்தால் அன்று எமது தெருக்களில் பளய ஓட்டை ஒடிசல் பாத்திரத்துக்கு பேரிச்சம்ழம் என அந்த மனிதன் கூவியதுதான் எனது காதில் கேக்கிறது; என்ன பேரிச்சம் பழத்துக்கு பதிலாய் பேரின்பம் அடையகூடியதாய் மகிந்தா செய்தால் பளய பாத்திரம் போல் K P யாரோ ஒருவரால் தூக்கி கொடுக்கபடுவார்;
msri
ஐக்கிய நாடுகள் சபை விளம்பரப் பலகைகளில் இதை ஒட்டலாமே! கையோடு பலன் கிடைக்கும்!
குரங்கு
கெளம்பிட்டாய்ங்கடா..!
ஏம்ப்பா.. யாராவது புடிச்சுக்கொடுக்கணுமா?
உங்களுக்கா ஒன்னூம் செய்யத் தெரியாதா?
palli.
ஜயா குரங்கு எங்களுக்கு பெரியமனசு; அதனால் யாருக்கும் விட்டு கொடுப்போம்; ஏன் புலிகளிடம் தமிழரை ஒப்படைக்கவில்லையா, இதெல்லாம் அந்த தேசத்தில் நடப்பதும் அதை இந்த தேசத்தில் எழுதுவதும் புதிசா என்ன?,