வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கென விசேட வகுப்புக்களை நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.வவுனியாவில் உள்ள ஐந்து நிவாரணக் கிராமங்களிலும் உள்ள மாணவர்களுக்கான விசேட வகுப்புகள் மீள்குடியேற்றம் மற்றம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் வவுனியா கதிர்காமர் நிவாரண கிராமத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உடபட மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய இடங்களிலிருந்து விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அழைத்து வந்து இந்த விசேட வகுப்புகளை தெடர்ந்து நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.