யாழ்ப் பாண ரயில் நிலையத்திலும் ரயில் நிலைய விடுதிகளிலும் தங்கியுள்ளவர்கள் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டுமென யாழ்.அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்குமிடையே மீண்டும் ரயில் சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்குப் பிரதேசம் 1990ஆம் ஆண்டு உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு வசித்துவந்த பல குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து ரயில் திணைக்களத்துக்குச் சொந்தமான இடங்களில் குடியிருந்ததுடன் அங்கு தற்காலிகக் கொட்டகைகளையும் குடியிருப்புக்களையும் அமைத்திருந்தனர்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் பணிகளை போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பார்த்திபன்
முன்பு குறிப்பிட்ட பகுதிகளை பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்டதையடுத்து தங்கள் வாழ்விடங்களை இழந்தவர்கள், அங்கு குடியிருக்கின்றார்கள் என்பதால், அரசு உடனடியாக அவர்களின் சொந்த இடங்களிலோ அல்லது தற்காலிக மாற்றிடங்களிலோ அவர்களை முறையாக குடியமர்த்த முன் வர வேண்டும். அதை விடுத்து குறிப்பிட்ட திகதிக்குள் அவர்கள் வெளியேற வேண்டுமென உத்தரவிட்டால் அம்மக்களால் என்ன செய்ய முடியும்??