அன்பும் பாசமும் வளமும் வசதியும் நிறைந்த டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு! : ஈழமாறன்

Moorthy N S Drஅன்பும் பாசமும் வளமும் வசதியும் நிறைந்த டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு!
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற படுமோசமான பாசிச அமைப்பின் போர்வையின் பின் மறைந்திருந்து கொண்டு நீங்கள் செய்த திருகு தாளங்கள் நிறைய என்பதை நான் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை என்று எனக்குத் தெரியும்.

மு.நித்தியானந்தன் உடன் மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பிய சிறைக் கைதிகளுக்கு உதவியதன் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது சிறை நிருவாகத்துக்கு நீங்கள் சக கைதிகளைக் காட்டிக்கொடுத்த உங்கள் நடவடிக்கையிலிருந்தே நீங்கள் புலிகளுடன் மட்டுமே உறவு கொள்ள முடியும் என்பது தெட்டத் தெளிவாக தெரிந்திருந்தது.

ஈழமாறனுக்கு பண்பாக எழுதத் தெரியவில்லை என்று பலரும் குறைபட்டதாக கேள்விப்பட்டதாலேயே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். கிளிநொச்சி மக்கள் 20000 பேர் ஒரு நாளில் கொல்லப்பட்ட அவலத்தைப் பார்த்த பின்னும் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாத ஆனந்த சங்கரிஜயா போலவே நானும் வெறும் கடிதம் எழுதுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வருத்தம் தான்.

ஆனால் இது புலம் பெயர் சூழலில் இருக்கும் புலி வால்களுக்கும் அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் பணக்காரர்களாக்கி விட்டு மௌனமாகவே இருந்துவிடும் தமிழ் உணர்வின் நிமித்தம் கேட்ட உடனேயே பணம் கொடுத்து விடும் அப்பாவி மக்களை விழித்தெழ வைப்பதும் உங்களைப் போன்ற புல்லுருவிகள் இனியும் பிரபாகரன் சாகவில்லை.. உயிரோடுதான் இருக்கிறார். மதியோடுதான் இருக்கிறார். சார்ள்ஸ்சோடுதான் இருகக்கிறார் என்று கதை அளந்து கொண்டு காலத்தை போக்குவதும் தமிழ் மக்கள் காலப் போக்கில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மறந்து போனது போலவே இந்த முறையும் உங்கள் சுருட்டல்களையும் சுத்துமாத்துக்களையும்;… மறந்து விடுவார்கள் என்று கணக்குப் போடுவதை உடைப்பதற்காக என்றாலும் இந்தக் கடிதம் உதவலாம் என்றே எழுதுகிறேன்.

மூத்தி ஜயா  நீங்கள் இங்கிருக்கும் விசுவாசிகளை ஓரம் கட்டியதும் வசதி வருகிறபோதெல்லாம் (உங்கள் பணவசதி அல்ல வெண்புறா வசதியைச் சொல்கிறேன்) வன்னிக்குச் சென்று போட்டோ எடுத்ததும் அதைக் கொண்டுவந்து ஊரெல்லாம் காட்டியதும் பெருமைப்பட்டுக் கொண்டதும் மறைமுகமாக நீங்கள் தான் லண்டன் பிரதி நிதி என்று நிறுவிக் கொண்டதும் கூட எல்லாருக்கும் தெரியும்.

இந்த வரிசையில் தான் புலிகளின் புனர்வாழ்வுக்கழகமும் இன்ன பிற அமைப்புக்களும் அம்பலப் பட்டதும் பல மில்லியன் டொலர்கள் முடக்கப் பட்டதும் வேறு வழியில்லாமல் அண்ணைக்கு அனுப்புவதற்கு வெண்பறா கட்டினீர்கள். இன்று வரையில் எவ்வளவு பணம் சேர்த்தீர்கள் என்ன செய்தீர்கள். என்று யாருக்காவது கணக்கு காட்டினீகளா? கடைக்கு கடை உண்டியல் வைத்து சேர்த்த பணம் எல்லாம் மூட்டை கட்டிச் சென்ற நீங்கள் இந்த கடைகளுக்கு எவ்வளவு பணம் சேர்ந்தது என்ற கணக்கு காட்ட வேண்டும் என்ற குறைந்த பட்ச பொறுப்பும் உங்களுக்கு வரவில்லையே ஏன்?

மூத்தி ஜயா. இது ஒன்றும் அக்குபஞ்சர் ஊசி போடும் விவகாரம் அல்ல. போட்ட ஊசிக்கு நீட்டின காசு செரியாப் போச்சு என்று சொல்வதற்கு. வெண்பறா கட்டி நாலு பிள்ளைகளுக்கு அதுவும் உங்கட தேசியத் தலைவர் துரத்திப் பிடித்து போர்முனையில் விட்டு நாசமாக்கிய சிறுவர்களுக்கு காலும் கையும் போட்டுவிட்டு மற்றதெல்லாம் என்ன செய்தீர்கள்?

தேசியத் தலைவருக்கு தெரிந்திருந்தால் புலிக்கு வால் பிடித்தால் நீங்கள் நேர்மையானவர்கள் என்ற மாயையை உருவாக்கி நாளுக்கு 15 மணி நேரங்கள் வேலை செய்து வீட்டுச் சுமை அடைத்து வாழும் வீட்டுக் கடனடைத்து மீதியை தன் தங்கைக்கு பிள்ளைக்கு என்று குருவி போல சேர்த்த பணம் முழுவதையும் அப்பாவி புலம் பெயர்ந்த மக்களை உசுப்பேத்தி வீர வசனம் பேசி வரலாறு கதைத்து உணர்ச்சி வசப் படவைத்து சேர்த்த பணமெல்லாவற்றையும் வறுகி உங்கள் வங்கியில் போட்டு விட்டு பெரும் தொண்டர்கள் போல நீங்கள் இனியும் வலம் வரலாம் என்ற தப்புக் கணக்கு போட வேண்டாம் என்று செல்லமாக எச்சரிக்கவே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.

பிரபாகரன் என்ற ஒரு தனிமனிதனைக் காப்பாற்ற 20000 தமிழ் மக்களின் (வன்னி மக்கள் என்று சொல்லும் போது சிலருக்கு கோபம் கோவணம் வரையில் செல்வதாக அறிந்தேன்) உயிரை காவு கொண்டு கடைசியில் நந்திக் கடலில் நீந்தக் கூட முடியாமல் விளைந்த காரணத்தால் அத்தனை தளபதிகளையும் கொன்று குவிப்பதற்கு முன்னர் தீபம் தொலைகாட்சியிலும் ஜிரிவி தொலைக் காட்சியிலும் நாளுக்கு நாலு தடைவ வந்து வணங்கா மண் கப்பல் கட்டிறம் தமிழர்கள் வீரம் கொட்டிறம். என்று வாய் கிழியக் கத்தியவர் நீங்கள். வணங்கா மண்ணுக்கு கொட்டிக் கொடுத்த பணத்தின் தொகை என்ன என்று நீங்கள் இந்த இரண்டு தொலைக் காட்சிகளில் ஒன்னிறல் வந்து சொல்லியே ஆகவேண்டும். கப்டன் அலி தான் வணங்கா மண். சேர்த்த பணம் எல்லாம் அதிலேயே போய் விட்டது என்று பூ சுத்தும் வேலை இனி வேண்டாம். எனக்கு ஊசிபோடுற விளையாட்டை விட்டுவிட்டு பதில் தாருங்கள்.  அடுத்த முறை எழுத்து இந்த மாதிரி வராது என்பதை மட்டும் துப்பாக்கி இல்லாமல் மிரட்டுகிறேன் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தீபம் போன்ற பொறுப்றற்ற தொலைக்காட்சிகள் அளவுக்கு அதிக விளம்பரம் கொடுத்து உங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள் என்பதால் அதே தொலைகாட்சியில் தேசம்நெற் ஒரு விளம்பரம் செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறேன். வணங்கா மண்ணுக்குச் சேர்த்த பணம் பொருட்கள் கப்டன் அலியில் சென்ற பொருட்களின் பட்டியல்  போன்ற விபரங்களைக் கோரும் விளம்பரம் ஒன்றை தீபத்தில் போட வேண்டும். மறுக்கும் சந்தர்ப்பத்தில் தீபமும் இதற்கான பொறுப்பை ஏற்றக வேண்டும் என்று பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஜயா மூத்தி அவர்களே எல்லோரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க கௌரவமாக இந்தக் கடித்ததை எழுதியுள்ளேன். இக் கடிதம் வெளியாகும் நாளில் இருந்து 14 தினங்களுக்குள் உரிய பதிலைத் தரவில்லை என்றால்…. (தொடக்கமே மவனே… என்றுதான் ஆரம்பிக்கும்) மிகவும் மோசமான மொழியில் உங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் நீங்கள் வசூலித்த தொகை எவ்வளவு எங்கு போனது என்ற விபரங்கள் தெரியும் வரையில் என் பேனாமுனை யுத்தம் தொடரும் எனபதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாறனின் தாகம் மூத்தியின் விபரம்

இங்கனம்
யாராய் இருந்தாத் தான் என்ன.

Show More
Leave a Reply to DEMOCRACY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

51 Comments

  • rony
    rony

    இந்த டாக்டர் மூர்த்திக்கு ………………. என்றாவது கடவுள் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கமாட்டாரா என்று பல தடவைகள் ஏங்கியதுண்டு. ஏனென்று இந்த உலகமே அறியும். எத்தனை அப்பாவிகளுக்கு பொய்க்கால் போடுவதாக பொய் கூறி பெரும் தொகை பணத்தை கொள்ளையடித்திருக்கிறார் இந்த ஏமாற்றுக்காரர். புலிகளுக்கே பணம் கொடுக்காத என்னையே ஏமாற்றி விட்டாரே இந்த “பிறாடு”
    -For every action there is reaction Dr.Moorthy,dont forget.

    Reply
  • Udumpu
    Udumpu

    This letter makes the usual noise usually make by the anti-LTTE camp. This letter or the latter threten to be written in 14 days will never bring to the light any alleged finance scandal.

    If anyone really intend to expose the finance scandal this is not the productive way. The writer intends to make some noise with his asumptions for which the concerned persons need not to react.

    Finance scandal is often used in politics to discredit the political oponent, very seldom it wotks. Even if it works it is for a short period. If this letter is a political attack against the LTTE it fails miserably. This letter repeats the politics of LTTE which is already known by millions. What will be the alternative?. Not a single word.

    If the writer really intends to expose any suspected finance misuse of individuals he has to be more serious. He has to find out the official registration of the groups (Venpura, Vanakkamann etc). Find out the responsible persons. Find out the people who donated money. Start a signature campagin, collecting as many as signatures from people who donanted maoney demanding for the whereabouts of the collected money. Further more he can also take legal measures. He can get advice from a lawyer what he has to do to clarify his suspicions. He need not to do this alone, he can form a commitee.

    This letter fails to indicate any seriousness in really exposing the finance scandal. The writer seems to be enjoying the mud and likes to play a sort mud throwing to enjoy the bad smell.

    Reply
  • Udumpu
    Udumpu

    [[[rony on June 12, 2009 6:01 am இந்த ஏமாற்றுக்காரர். புலிகளுக்கே பணம் கொடுக்காத என்னையே ஏமாற்றி விட்டாரே இந்த “பிறாடு”]]]

    There will be more people who thinks like rony. The duty of the author of this letter is to mobilise them and take concrete actions to get the money back.
    It is easy to make big noises and mot to take any actions which is very common among the anti-LTTE camp.
    People those who steal the public money have thick skins, they are not bothered with your cynical primitive Jaffna Tamil even though it creates some entertainment. But this is not a drama a serious issue.
    Being angry from heart to such serious issues and wondering how bad they are and how good you are is also a political perspective that is to support them indirectly.
    Now it is your turn to show whether you really want to clear the mud or you like to keep it, so that you can play whenever you like to create some bad smell.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /தீபம் போன்ற பொறுப்றற்ற தொலைக்காட்சிகள் அளவுக்கு அதிக விளம்பரம் கொடுத்து உங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்/
    –உங்கள் எழுத்திலிருந்து நீங்கள் வன்னி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிகிறது. ஒரு தொண்டர் பாணியில் எழுதியிருக்கிறது. நானும் ஒரு அரசியல் தொண்டன்தான், தற்போதைய பெரும் தலைகளுக்கு நேரடியான தொண்டனாக இருந்திருக்கிறேன். இந்த “தேசம் இணயதளம்” கூட பணமில்லாமல் நடத்தமுடியாது, நாமெல்லாம் எழுதுகிறோம், ஏன்?. ஏதொ ஒன்றை சொல்ல நினைக்கிறோம், என்னவென்று தெரியவில்லை, ஆனால் அது இலங்கைப் பிரச்சனையுடன் சம்பந்தப்பட்டதுதான், நீங்கள் கூறும் ஊடகங்கள் போல் “பழம் தின்று கொட்டை போட்டவர்கள்” களுக்கு அருகிலிருந்திருக்கிறோம், அவர்களுக்கு இலாபம் வருவது சரி! ஆனால்,போகிற போக்கு வெற்றியை நோக்கியல்ல என்பதை சொல்லமுடியாமல், மெல்லமுடியாமல், இடம் கொடுத்த இடத்தில் கிறுக்கினோம், விளங்கினால், தீர்வுகளை முன் வைத்தால், சமூகத்தொண்டு! இல்லாவிட்டால், “வேலையற்றதுகளின் விபரீத எண்ணங்கள்” என்ற அவப் பெயர். விஷயம் என்னவென்றால் நீங்கள் கோபப்பட்டு மிரட்டுவதால் பணம் கைமாறுதல் மட்டுமே நடக்கும்? (என்று), “இதில் தெரியும் உண்மையான உங்கள் உண்ர்வுகள்” மலினப்படுத்தப்படும். “ஒரு பெரும் போக்கு” தோல்வி அடைந்திருக்கிறது, இதற்கான காரணத்தை யாருமே ஒத்துக் கொள்ள தயாராக இல்லை!. இதில் உண்மையிலேயே “ஒரு சமுதாயப் பணி” தொக்கி நிற்கிறது!. உங்களைப் போன்ற பாதிக்கப் பட்டவர்கள் இந்த திசையில் முன்வந்திருப்பது, ஆரோக்கியமானதாகப்படுகிறது…..

    Reply
  • மாயா
    மாயா

    இவர்கள் நேர்மையுள்ளவர்கள் என்றால் வணங்காமண் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும். இது ஆயுத கொள்வனவு இல்லையே? மக்கள் கொடுத்த உதவிதானே? இதைக் கூட வெளியிட முடியாதவர்களானால் இவர்களைப் போன்றவர்கள் அனைவரும் சுருட்டல் மன்னர்கள்தான் என்பதாகவே கருதப்பட முடியும்.

    தமிழீழம் மீட்க வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்தவர்கள் , பாவம். , இனி அது வட்டி குட்டிதான் போடுமே தவிர, திரும்பி வராதாம்? புத்திசாலித் தமிழரை முட்டாள்கள் ஆக்கிய பெரும் பங்கு புலிகளையே சாரும்.

    Reply
  • lavan
    lavan

    முத்தி அவர்கனே உடனடியாக கணக்கை காட்டவும் இல்லையேல் ஒரு கவணயீர்ப்பு போராட்டம் லண்டனில் மிக விரைவில் நடைபெரும் எங்கட தாகம் முத்தி அடிச்ச காசின் விபரம்.

    Reply
  • Udumpu
    Udumpu

    Lavan and Maya I defend your right to tell your opinion but I retain my right to be critical. Stealing public money is part of LTTE politics but to belive to defeat the LTTE by exposing their theft is very naive. And divert the real political issues.
    No where in the world a political programm is deafeted through exposing finacial scandals.
    If donot agree it is your decesion. If you prefer to expose them then do it seriously. The following comments are in my opinion not serious.

    ////lavan on June 12, 2009 8:10 am/// முத்தி அவர்கனே உடனடியாக கணக்கை காட்டவும் இல்லையேல் ஒரு கவணயீர்ப்பு போராட்டம் லண்டனில் மிக விரைவில் நடைபெரும்////
    Hope this is not a usual threat from the anti-LTTE camp. It sounds like an advertisment for a blockbuster Tamil film. If anyone is serious he will sit and collect concreate information making some plan for action. First of all you need a action commitee. I suspect the specialists in the anti-LTTE camp will come to an agreement.

    ////மாயா on June 12, 2009 7:44 am///இவர்கள் நேர்மையுள்ளவர்கள் என்றால் வணங்காமண் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும். இது ஆயுத கொள்வனவு இல்லையே? மக்கள் கொடுத்த உதவிதானே? இதைக் கூட வெளியிட முடியாதவர்களானால் இவர்களைப் போன்றவர்கள் அனைவரும் சுருட்டல் மன்னர்கள்தான் என்பதாகவே கருதப்பட முடியும்///
    What you asume [கருதப்பட] won’t make any changes. Anyone can asume anything, you have to be more concrete. It sounds very pathetic apealing to the LTTE to be reasonable. Do you want to change anything or continue to complain? The decesion is lrft with you.

    Reply
  • RTS
    RTS

    //நீங்கள் வசூலித்த தொகை எவ்வளவு எங்கு போனது என்ற விபரங்கள் தெரியும் வரையில் என் பேனாமுனை யுத்தம் தொடரும் எனபதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.// Rather than writing, why don’t you organize a protest in front of White Pigeon office. In order to do this you must get atleast 50 people who contributed to the Vanagamann and Inventry list of the Captain Ali – You can get it from Srilankan Govt.

    Reply
  • lio
    lio

    ஈழப்போராட்டத்தில் குளிர்காய்ந்த அத்தனைபேரையும் வெளிக் கொண்டுவர வேண்டும் போராட்டம் மக்களுக்காக நடக்கவில்லை இப்படியானவர்களுக்காகவே நடந்தது. அவர்கள் தாம் பணம்சேர்த்துக் கொண்டும் சொத்து சேர்த்துக் கொண்டும் இன்று அம் மக்களை நடுத்தெருவில் நாதியாய் விட்டுள்ளனர்.

    புலிகளும் புலிப்பினாமிகளும் முழுப் பொறுப்பும் ஆனால் இன்று மட்டும் துரோகிகள் என்ற வாய் குறைந்தபாடில்லை (சில புலிகள் இன்று தமது தலைவர் பிரபாகரனே துரோகி என்று சொல்கிறார்கள்) இந்த தமிழ் மக்களுக்கான துரோகத்தை செய்த பலர் தற்போது ஒளிந்து கொண்டுளளனர் .இவர்களையும் இனம்காண வேண்டிய தேவையுள்ளது ஏற்கனவே பல புலிப்பினாமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதும் உண்மையிலேயே புலிகளை நம்பி ஏமாந்தவர்கள் தற்போது இந்த பினாமிகளிடம் சண்டை போடுவதும் கூட அம்பலப்படுத்தபட வேண்டும்.

    சுவிஸ்ல் நடைபெறும் பல சண்டைகளை நாம் பின்னர் எழுதுவோம்.

    Reply
  • Udumpu
    Udumpu

    ///RTS on June 12, 2009 8:57 am ///Rather than writing, why don’t you organize a protest in front of White Pigeon office. In order to do this you must get atleast 50 people who contributed to the Vanagamann and Inventry list of the Captain Ali – You can get it from Srilankan Govt.///

    RTS, It is true many in the anti-LTTE camp work with the Sri Lankan Government. This doesn’t mean people oposing the LTTE automatically become the supporters or agents of the Govt. You did this business in the past, in the future this will not be posible. The idology “either you are with us or you are with them” won’t work, people are not always political idiots, but some groups like LTTE do.

    One need not to ask the Govt. Times have changed. For a list of people who donated, if the author of the article is serious he can collect not 50 but 500 by just printing his Email in this site or elsewhere asking people to give information. I doubt that he will do because his language in this article itself hot air to make some sensations which is typyical for ant-LTTE experts.
    By the way who deceides that a minimum number of 50 for a protest. Friend times have changed.

    Reply
  • visuvan
    visuvan

    அன்புடன் மாறா!
    உமக்கேன் மூர்தியுடன் மட்டும் அவ்வளவு கோவம்? போட்ட ஊசி வேலைசெய்யவில்லையா? சரி ஒரு பழமொழி எல்லாருக்கும் தெரிந்தது! உலக்கை போற இடம் பாக்கமாட்டினமாம் ஊசிபேற இடத்தை மட்டும் உன்னியப்பாக பார்பினமாம்! மூர்த்தி டாக்குத்தர் அடிச்சிது மன்னிக்கவேணும் குலுக்கி சேர்த்தது ஆயிரக்கணக்கில் வந்தால் லட்சகணக்கிலை ஊலர்வலத்திலை கொடி செத்தவீட்டிலை பூ இறுதியுத்தத்திலை பாவிக்க நீயூக்கிளியர் பொம் வாங்க காசு சேர்த்து கட்டு கட்டாக சேர்த்த புலம் பெயர் புலி பிரமுகர்களை மட்டும் ஏன் விட்னீங்கள்? பயமோ? டாக்குத்தர் ஊசிபோடுவார் என்ட பயமோ?
    1. லண்டன் புலி நிதி சேகரிப்பாளர் பாலா மாஸ்ரர் மற்றும் தனம் ரீஆர்ஓ ரெஜி வன்னிபுலிகளின் எஞ்சிய ஐரோப்பிய தளபதி நெடியவன் இளங்கோ இன்னும் பல பல பினாமி பேர்களில் இன்னமும் இறுதி யுத்தத்திற்கு? பணம் சேர்க்கும்; மற்றைய பிரமுகர்களை எப்ப கேள்விகேட்க போகிறீர்கள்?

    Reply
  • thevi
    thevi

    இது எழுதும் நேரமல்ல. செயலில் இறங்க வேண்டிய தருணம். இப்படியானவர்களை எழுத்தினால் மாத்திரம் அம்பலப்படுத்த முடியாது. புலம் பெயர் ரசிகப் பெருமக்களுக்கு செயல்முறை விளக்கம் மூலமே உண்மைகளை உணல வைக்க முடியும். இனி யாருக்கு பயப்பட வேண்டும்? மூர்த்தியின் வீடு நோக்கி வீறு நடை போடுவோம். பதாகைகள் தயாராகட்டும். நாங்க ரெடி. ஈழமாறன் நீங்க ரெடியா?

    Reply
  • RTS
    RTS

    Udumpu,
    What I meant to say about get info from SL Govt is only about the inventory list of Capatain Ali. I’ve heard, when the ship in Sri-Lanka, SL Govt checked the ship. So they must have the list of what items in was in the ship and other details. So If someone got the list, they can check with the Vanakamann organisers. Otherwise no one know excatly what itmes had been sent.

    Reply
  • Udumpu
    Udumpu

    ////thevi on June 12, 2009 10:41 am இது எழுதும் நேரமல்ல. செயலில் இறங்க வேண்டிய தருணம். இப்படியானவர்களை எழுத்தினால் மாத்திரம் அம்பலப்படுத்த முடியாது. புலம் பெயர் ரசிகப் பெருமக்களுக்கு செயல்முறை விளக்கம் மூலமே உண்மைகளை உணல வைக்க முடியும். இனி யாருக்கு பயப்பட வேண்டும்? மூர்த்தியின் வீடு நோக்கி வீறு நடை போடுவோம். பதாகைகள் தயாராகட்டும். நாங்க ரெடி. ஈழமாறன் நீங்க ரெடியா?///
    Thevi keep cool and get ready first. It is good that you somewhat estimate that ஈழமாறன் won’t go so far.The ant-LTTE experts do have their limits.

    regarding the comments of///RTS on June 12, 2009 10:47 am///
    I am sorry that I misunderstood you.
    You don’t need exact accounts to the cent. No one will come to know the exact billions of public money already spent by the LTTE in the last 30 years. Even if you prove that they have stolen money you can’t prevent people from donating money to the LTTE in the future. Millions have already know that the LTTE and its methods of making money.
    Anyway what are you going to acheive by comparing the inventory and EXACTLY proving their fraud. Absoultly nothing except one or other prominent figure may retire. You have to find a way to politically defeat the LTTE. I suspect the experts who shout loudly against the LTTE prevent people from doing so.

    ///visuvan on June 12, 2009 10:05 am அன்புடன் மாறா!
    உமக்கேன் மூர்தியுடன் மட்டும் அவ்வளவு கோவம்?……///
    Visuvan I fully agree with you. ஈழமாறன் is obliged to answer.

    Reply
  • Gee, UK
    Gee, UK

    இது ஓர் ஆரம்ப முயற்சி மட்டுமே. இதனைப் பிரதியெடுத்து வைத்தியர் மூர்த்தியின் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாமெனெ நினைக்கிறேன்.

    Dr NS Moorthy
    Tooting
    London

    வைத்தியர் மூர்த்தி அவர்கட்கு

    பிரித்தானியா வாழ் தமிழ் மக்களில் கணிசமானோரும் மற்றும் ஏனைய நாடுகளில் வசிப்போரும் வணங்காமண்ணிற்காக பொருள் மற்றும் பண உதவி செய்துவிட்டு அது வன்னியில் வாடும் உறவுகளைச் சென்றடையவில்லையே என வருந்திக்கொண்டிருக்கும் சூழலில் இந்த வணங்காமண் குறித்து ஊடகங்களில் நீங்கள் இன்னும் வாய்திறவாதது பெரும் கவலையளிக்கிறது.

    தாங்கள் அங்கு அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க மேலும் பல திட்டங்களை வகுப்பதிலும் அவற்றை முறைப்படி அம்மக்களுக்கு அனுப்புவதிலும் உழைப்பதால் தங்களுக்கு நேரமின்மை ஒரு தடங்கல் என அறிவேன்.

    ஆயினும் தங்கள் பொன்னான நேரத்தில் ஒரு சில மணித்துளிகளை இந்த வணங்காமண் தொடர்பான விளக்கத்துக்கு ஒதுக்கி குழம்பியுள்ள மக்களுக்கு ஓர் தெளிவையும் முறையான கணக்கையும் வெளிப்படுத்துமாறு நயமாகக் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் வெண்புறா சுனாமி நிதி போன்றவற்றுக்கான கணக்குகளை வெளியிடும் கடப்பாடும் உங்களுக்குண்டு என்பதை நீங்கள் மறுக்க முடியாது!

    இவ்வாறு முறையான கணக்குகளை வெளியிடுவதன் மூலம் தொடர்ந்து நீங்கள் கொண்டுவர இருக்கும் புதியதிட்டங்களுக்கான ஐரோப்பா வாழ் அப்பாவி மக்களின் ஆதரவு பல்கிப்பெருகும் என்பதில் ஐயமில்லை.

    வாழ்க தங்கள் சேவை!

    இங்ஙனம்
    பொதுமக்களிடம் சேகரித்த நிதிகளுக்கு முறையான கணக்கை எதிர்பார்க்கும்
    …….

    Reply
  • lavan
    lavan

    பதாகைகள் ரெடி நானும் ரெடி தேசமும் ரெடியா? கவணயீர்ப்பு நடத்த வேண்டிய பொறுப்பு தேசத்துக்கும் உண்டு இனிமேல் யாரும் தப்பமுடியாது மக்களின் பணம் மக்களுக்குத்தான்

    Reply
  • eelamaran
    eelamaran

    இது மூர்த்தியுடனான தனிப்பட்ட விவகாரமாப் பார்க்கப் பட வேணடிய விடயமல்ல. புலிகளின் பெயரில் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என்று பல வடிவங்களில் காலம் காலமாக பணம் சேர்ப்பதும் அதற்கான செலவீனங்களை இரகசியம் என்ற போர்வையில் மறைப்பதும் நடந்து முடிந்த வரலாறு. மூர்த்தி ஒரு பொது ஸ்தாபனத்தின் முத்திரையின் கீழ் வெளிப்படையாகவே ஒரு பொது நலனுக்காக என்று கூறிச் சேர்த்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை தட்டிக் கழிக்க இரகசியம் என்ற காரணங்கள் பொருந்தாது.

    அது மட்டுமல்ல மமூர்த்தியின் பதிலில் நாம் இங்கு அடிப்படையில் ஏற்றுக்கnhள்கிற புலிகளை தோற்கடிப்பதற்கான காரணிகளும் வெளிப்படுவதற்கான சாத்தியப் பாடுகளை உருவாக்குவதே மூத்தி போன்றவர்களின் தோலுரிப்புக்கான காரணமாகும். அடிப்படையில் பொதுமக்கள் கேள்வி கேட்டல் என்ற பண்பியல் தன்மையே அற்ற ஒரு சமூகத்தில் இனிவரும் காலங்களில் சிறிதளவேனும் கேள்வி கேட்கும் தன்மை ஏற்படுகிற போது தற்போதும் கூட புலிகளின் பேரில் பணம் சேர்க்கும் முதலைகளின் வியாபாரம் கறைகிறபோது பலயீனப் படுகிறபோது புலிகளை எதிர்கொண்டு மாற்று வழி பற்றி சிந்திக்கக் கூடிய களத்தை உருவாக்கலாம் எ;னபதே ஆக்கத்தின் நோக்கம்.

    Reply
  • Gee, UK
    Gee, UK

    எனது பிரதியை நகலெடுத்து தபாலில் சேர்த்தாயிற்று!

    அன்புடன்
    ஜீவன்

    Reply
  • மாயா
    மாயா

    உடும்புவும் சேர்ந்து அடிச்சவர் போல இருக்கு அவரது ஆதங்கத்தைப் பார்த்தால்…அவருக்கு என்ன நடக்கும் என்று இவருக்குள்ள தேடல். என்ன இருந்தாலும் ஒரு நாளைக்கு பச்சை மட்டை அடி நடக்குதோ இல்லையோ, கவுத்து அடிப்பாங்கள். இருந்து பாருங்கோ.

    ஜெர்மனியில சாந்தி வவுனியன் செருப்புக்கு காசு சேர்க்கிறாவாம். முகாமில உள்ள உள்ள மக்களுக்கு செருப்பு அனுப்பப் போறாவாம். அடி செருப்பால… இன்னமும் கறக்கிறதென்டே திரியுதுகள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //அன்புடன் மாறா! உமக்கேன் மூர்தியுடன் மட்டும் அவ்வளவு கோவம்? போட்ட ஊசி வேலைசெய்யவில்லையா?- visuvan //

    விசுவன்
    தாங்கள் ஏன் மூர்த்திக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள். மூர்த்தி பல வருடங்களாக, பல அமைப்புகளின் பெயரை வைத்து பணம் சேகரித்தவர். அதனால் அவரது விடயத்தையே முதலில் கையாள வேண்டும். அதன் பின் அடுத்தவர்கள் விடயத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்.

    மூர்த்தியின் வணங்காமண் விடயத்தோடு, அதற்கு முன் கண்ணீர்த் துளிகள் என்று சுருட்டியவர்களான புவி, நித்தியானந்தன் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்களின் முகமூடிகளையும் கிளித்து, சுருட்டிய பணத்தை அகதிகளாக உள்ள அந்த மக்களுக்கு சென்றடைய வழி வகுக்க வேண்டும். முன்பே நான் சொன்னது போல் இவர்களை பிரித்தானிய தமிழர்கள் ஒன்று சேர்ந்து அணுகி ஆவன செய்யுமாறு கேட்கலாம். அவர்கள் அதற்கு ஒத்து வராதபோது, முதற்கட்டமாக பிரித்தானிய கவுன்சிலர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பபினர்களுக்கும் இவர்கள் மக்களை ஏமாற்றிச் சேகரித்த பணத்தை மீட்க உதவுமாறு பிட்டிசனை ஒவ்வொருவருக்கும் அனுப்பி வைக்கலாம். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களையும் நடத்தலாம். ஆர்ப்பாட்டஙங்களில் இவர்களின் படங்களின் கீழ் “தேடப்படும் கொள்ளைக்காரர்கள்” என்ற வாக்கியங்களைச் சேர்ப்பது முக்கியம். இந்த ஆர்ப்பாடங்கள் இவர்கள் சுருட்டிய பணங்களை அகதிகளாக உள்ள அந்த மக்களுக்காக திருப்பிக் கொடுக்கும் வரை நடாத்தப்பட வேண்டும். அதே நேரம் இவர்களள் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் வந்து பணம் சேர்த்த விபரங்களையும், பணம் கொடுத்தவர்களின் ஆதாரங்களையும் மற்றும் பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கின் விபரத்தையும் வைத்து இவர்கள் மீது கையாடல் செய்ததற்கான வழக்கினை நீதிமன்றத்தில் பதிவு செய்து வழக்கையும் தொடங்க வேண்டும். இந்த விடயத்தில் மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இணைந்து செயலாற்றி இப்படியான சுருட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, இனி இப்படிச் சுருட்ட முனைவோருக்கும் இது ஒரு பாடமாக அமைய வழி செய்ய வேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஜெர்மனியில சாந்தி வவுனியன் செருப்புக்கு காசு சேர்க்கிறாவாம். முகாமில உள்ள உள்ள மக்களுக்கு செருப்பு அனுப்பப் போறாவாம். அடி செருப்பால… இன்னமும் கறக்கிறதென்டே திரியுதுகள்.- மாயா //

    யாழ் இணையத்தில் ஒரு கூட்டம் இந்த சாந்தி வவுனியன் தலைமையில் தொடர்ந்து சுருட்டிக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே தாம் சேர்த்த காசை வன்னியிலுள்ள ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கு கொடுத்ததாகவும் அவர்களின் கடிதமென்றும் ஒரு கடிதத்தை பல மாதங்கள் முன்பு இணைத்தும் இருந்தனர். ஆனால் இராணுவ நடவடிக்கையின் பின்பு, விடுவிக்கப்பபட்ட தற்போதைய வன்னியில் விசாரித்த போது அப்படியொரு அமைப்பே இல்லையென வன்னி மக்கள் அங்கலாய்க்கின்றனர். இனிச் செருப்பிற்காக இன்னொரு Letter-Head அமைப்பை சாந்தி வவுனியன் உண்டாக்கப் போகின்றாவோ?? எப்படியெல்லாம் கிளப்புறாங்கப்பா……

    Reply
  • Udumpu
    Udumpu

    //// மாயா on June 12, 2009 2:10 pm உடும்புவும் சேர்ந்து அடிச்சவர் போல இருக்கு அவரது ஆதங்கத்தைப் பார்த்தால்…அவருக்கு என்ன நடக்கும் என்று இவருக்குள்ள தேடல். என்ன இருந்தாலும் ஒரு நாளைக்கு பச்சை மட்டை அடி நடக்குதோ இல்லையோ, கவுத்து அடிப்பாங்கள். இருந்து பாருங்கோ ////

    You suspect[அடிச்சவர் போல இருக்கு]me, your perfect right. Fact is I never had any political or financial connection to LTTE or any other parties,not only in London but worldwide. May be you are infected with LTTE paranoia and every where see the shadow of Prabaharan.
    It would be very good if you write what and why you suspect. My view to this article is the writer is not serious enough and even if you suceed in exposing a few individual the politics of the LTTE could not be defeated. Financial scandal is part of LTTE politics. One can’t use any tricks in politics, first we expose the theft then we forward a perspective is a naive stand. I hold this view like a Udumpu even if you threaten me- என்ன இருந்தாலும் ஒரு நாளைக்கு பச்சை மட்டை அடி நடக்குதோ இல்லையோ, கவுத்து அடிப்பாங்கள். இருந்து பாருங்கோ-.
    I am new to this site usually don’t believe in hot air.To my surprise the archive of this site is full with not only hot air but even with anti-LTTE Sunamies.
    If one stripe the big words in the articles only primitive anti-LTTE politics remains.

    Reply
  • Mohamed
    Mohamed

    Well done Eelamaran. You’ve initiated this “campaign for accoutability” with or without knowledge. Don’t worry. The letter is sort of “Letter before Action”, though in informal way, which is a must for any legal challange. Let Dr. Morthy read it and put his case acorss via the media, which he used for this. If he fails to do so within the time limit given then you with Udumpu or any intrested parties’ help can contemplate the next move, but strickly a leagl one. I’m ready. I’m one of the many who have been cheated.

    The above isn’t anti anything or in support of anything else. Forget about the criticism of your letter. Please concentrate only on this. One thing at a time.

    By seeing this other things which have been deeply rooted in the Tamil society may start to vanish. After all that is what we want. Therefore give a room for others to correct themselves before they step into a situation like one Dr. Morthy is already in.

    Reply
  • kumar
    kumar

    மிகவும் பண்பாகவும் நிதானமாகவும் எழுதப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை நான் வரவேற்கிறேன். இனி வரும் காலங்களில் கணக்கு வழக்கு காட்டாமல் எந்த இயக்கமும் இயங்கமுடியாது என்ற நிலையை உருவாக்கும் முதற்படி இது.இந்த ஆரம்பம் நிச்சயம் உலகம் பூராவும் சுழன்றடிக்கும். கட்டுரையாளர் எறிந்துள்ள இந்த பொறி நிச்சயம் பெரும் காட்டுத் தீயை உருவாக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கட்டுரையாளர் குறிப்பிட்டது போல் நியாயம் கிடைக்கும் வரை உறுதியுடன் போரடவேண்டும். …..சில வாரங்களுக்கு முன்னர் ஈஸ்ற்காம் பகுதியில் புலிகளின் சொத்து ஒன்று இரகசியமாக மாறப்பட்டுள்ளது….

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அன்புள்ள ஈழமாறன்,
    பலர், முக்கியமாக உடும்பு கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. மூர்த்தியை தாக்கு தாக்கென்று தாக்கிவிட்டு, கேள்விகள் வரும்போது ‘இது மூர்த்தியுடனான தனிப்பட்ட விவகாரமாப் பார்க்கப்பட வேணடிய விடயமல்ல’ என்று வழமைபோல எழுத்துத் ’திறமையை’ காட்டியிருக்கிறீர்கள். இதிலிருந்து விளங்குகிறது நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்று! பலர் இங்கே தயாராக இருக்கிறார்கள் போராட. ஆனால் நீங்களோ ‘தோலுரிப்பு’, ‘வெளிப்படுத்தல்’ போன்ற வழமையான சொல்லாடல்களின் பின்னால் ஒழிகிறீர்கள். ஆம் வெறும் ‘பேனாமுனை’ யுத்தம் தொடரும் என வசனம் பேசுகிறீர்கள். உண்மைதான் அதை ஸ்ரீலங்கா அமைச்சரே சொல்லிவிட்டாரே, 5 செப்புக்காசு அனுப்பவில்லை இவர்கள் என்று…..

    Reply
  • நண்பன்
    நண்பன்

    அசைலம் அடிச்சுட்டு வேலையில்லை என்று கவலைப்படாதேங்கோ. மூர்த்தியார் போல யாரோ ஒருவருக்கு பின்னால 3 மாசம் திரியுங்கோ. அதுக்கு பிறகு நீங்களே தனியா ஒரு கட்டமைப்பு தொடங்கி காசு சேர்த்து பணக்காரர் ஆகலாம். புலிகளுக்கு காசு சேர்க்கிற ஆக்கள்ல பலர் வேலையே செய்ததில்லை. ஆனால் காரும் வீடும் மட்டுமில்ல பிஸ்னசும் செய்யினம். தமது உறவுகள் எல்லாத்தையும் புலத்துக்கு கொண்டு வந்து கரையும் சேர்த்துப் போட்டினம். எல்லாம் அந்த சூரியத்தேவனின் அனுக்கிரகம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…பலர் வேலையே செய்ததில்லை. ஆனால் காரும் வீடும் மட்டுமில்ல பிஸ்னசும் செய்யினம்…//

    பிஸ்னஸ் செய்தால் வேலை செய்யவேண்டியதில்லை! காரும் வீடும் வாங்கலாம் கூட!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    // சாந்தன் on June 13, 2009 1:37 am //…பலர் வேலையே செய்ததில்லை. ஆனால் காரும் வீடும் மட்டுமில்ல பிஸ்னசும் செய்யினம்…//
    பிஸ்னஸ் செய்தால் வேலை செய்யவேண்டியதில்லை! காரும் வீடும் வாங்கலாம் கூட!//

    சாந்தன் , அந்த பிஸ்னஸுக்கு முதலீட்டுக்காக எடுத்த பணம் மக்கள் கொடுத்த பணமல்லவா? அதை உணரவில்லையா? எனக்குத் தெரிந்த ஒரு இடத்தில் புலிகள் கடை திறந்தார்கள். பின்னர் கடையில் வேலை செய்தவரது சம்பளத்துக்கு கடையையே கொடுத்தார்கள்.

    இன்னொருவர் , புலிகளுக்காக சேகரித்த பணத்தில் சீட்டுப் போட்டு , ஊரில் இருந்த உறவுகளை ஏஜன்சி வழி அழைத்தார். 4 சீட்டு எப்படி போடுறீங்க என்று கேட்ட போது சொன்னார் ” இந்த லாபம் கூட அந்த மக்களுக்கு பெரிசு. அதுதான் இயக்க காசுல சீட்டை போடுறன்” என்றார்.

    புனர் வாழ்வுக் கழக பணம் இலங்கையில் அரசுடமையாக்கப்பட்ட போது, சுவிஸ் புணர்வாழ்வுக் கழக பொறுப்பாளர், தமது குடும்பத்தினர் பேரில் பாதுகாப்புக்கென்று பிரித்து வங்கியில் வைப்பிலிட்டதாக ஒரு முறை சொன்னார். அது அவர்களது உறவினர் புனர்வாழ்வுக்கு உறுதுணையானதாக பின்னர் அறிந்தேன்.

    கிராமம் முதல் சர்வதேசம் வரை கடைசி சேகரிப்பு பணமும் அவரவர் சேவை ஊதியமாம் என்று சிரித்தார் ஒருவர். அவரை தலைவர் இறந்தாக அறிவித்த அடுத்த நாள் மதுபான சாலையொன்றில் பார்த்தேன். மனசு கேட்குதில்லை. அதுதான்………… என்று இழுத்தார். அதுக்காக பாட்டியா போட வேணும்?

    Reply
  • palli
    palli

    இதோட சாந்தன் அறிவு பூர்வமாய் விவாதிக்கிறார்; அதுசரி வேலை இல்லாமல் வியாபாரம் செய்ய எப்படி பணம் வந்தது;
    ஓஒ பரம்பரை சொத்தோ?? இல்லை அதுக்கு வாய்ப்பில்லை; கார் வேண்டுவதோ அல்லது வீடு வாங்குவதோ தப்பில்லை; அவசியமும் கூட
    ஆனால் அவர்கள் வியாபாரமோ அல்லது வேலையோ அல்லது திருடியோ வேண்டட்டும்; ஆனால் அந்த வாழ வழிதெரியாத மக்களை பயன்படுத்த வேண்டாம் என்பதுதான் பிரச்சனை; கப்பல் போகமுடியாது என்பது எம்மை விட டாக்குத்தருக்குதான் தெரிந்திருக்கும்; அப்படி இல்லையெனில் அவர் தொழிலான மருத்துவமும் போலியாகி விடும்; காரணம் இந்த பல்லிக்கு தெரியும் விடயம் டாக்குத்தருக்கு எப்படி தெரியாமல் இருக்க முடியும்;
    ஆகவே எதிர்பாட்டை விட்டு அவர்(டாக்குத்தர்)பாட்டை கேளுங்கள்,

    Reply
  • Thevan
    Thevan

    வெறுமனே பேசிக் கொண்டிராது தேசம்நெற் ஏன் ஒரு வழக்குத் தொடர்வதற்கான ஏபாடுகளைச் செய்யக் கூடாது. வணங்கா மண்ணுக்கு பணம் கொடுத்தவன் என்ற முறையில் அதற்கான சான்றுகளை தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பார்த்திபன், பல்லி
    இதைப்போல ‘கழுவேற்றப்பட்ட’ பல நண்பர்கள் எனக்கு உண்டு. மிக அண்மையில் ஒருவர் ‘பிஸினஸ்’ ஆரம்பித்தார். உடனே ‘சுனாமி’ காசில் கடைவிரிக்கிறார் என கதை வந்தது. யார் இந்தக்கதையை கிளப்பியவர் என்று தேடினால் கடைசியில் வந்து நின்றது சுனாமிக்கு 5 சதம் கூட (ஸ்ரீலங்கா அமைச்சர் ஸ்ரைல்) கொடுக்காதவர் எனத் தெரிய வந்தது. சுனாமி ‘கொடை’ பாவத்தை ‘கழுவலாம்’ எண்டு தான் கதை விட்டார் என தெரிய வந்தது. உங்களிடம் ப்ரூஃப் இருந்தால் ஏன் அவர் பெயரை இங்கு சொல்லக்கூடாது. சீட்டுக்காரர், ஏஜன்சிக்காரா, பெருங்குடிமகன் எல்லோர் பெயரும் இருக்கெல்லோ இழுத்து விடுங்கோ. மூர்த்திக்கு கட்டுரையாளர் நெற்றிக்கண் திறக்கும் வரை எங்கிருந்தீர்கள், ………. ஊரை ஏமாத்தினவனை எமக்கு தெரிய வேண்டாமோ ? இப்படியான குற்ரச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி களைத்துப்போய்விட்டேன். நீங்கள் இருக்குமிடத்தில் சம்பாதிக்காத பணத்துக்கு அரசு கணக்கு கேட்கமாட்டார்களா? ஒருவர் சரியான கணக்கு படிப்பு லோன் கூட வாங்க முடியாது.

    எல்லாக்கதையளும் வரும் புரூஃப் கேட்டால் ஆளைகாணோம். . மேலே நான் குறிப்பிட்ட ‘சுனாமி கொடை வள்ளலை’ நாங்களே எல்லோர்க்கும் தெரியப்படுத்தினோம்! சுனாமி லிஸ்ற்ரை தேவை எனில் காட்டவும் தயார் என கொடுத்தவர்களுக்கு நேரிலும் தொலைபேசியிலும் கூறினோம். இதுவரை யாரும் கேட்கவில்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    palli//…கப்பல் போகமுடியாது என்பது எம்மை விட டாக்குத்தருக்குதான் தெரிந்திருக்கும்;..//
    இதற்குத்தான் சொன்னேன் ஜெயபாலன் இது சம்பந்தமாக ( புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ ) ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். தயவு செய்து அதைப் படியுங்கள். இக்கப்பல் பயணம் பல்வேறு நோக்கங்களையும் கொண்டது என்பதை ஏன் நீங்கள் கண்டுகொள்ள மறுக்கிறீர்கள் என விளங்கவில்லை.

    //..ஆகவே எதிர்பாட்டை விட்டு அவர்(டாக்குத்தர்)பாட்டை கேளுங்கள்,…//
    உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் = எதிர்ப்பாட்டு !

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    தேவன்,
    தேசம் நெற் வழக்கு தொடர முடியுமோ தெரியவில்லை. தேசம் ஒரு பத்திரிகை. அது செய்திகளை, சீர்கேடுகளை வெளிக்கொணரலாம் ஆனால் வழக்கு போடலாம் என நினைக்கவில்லை. ஒரு வேளை இது பொது நல, அரசியல் உரிமை மீறல் சம்பந்தமாக இருக்கும் பட்சத்தில் செய்யலாம் என நினைக்கிறேன். Watergate வழக்கில் New york times தம்மையும் வழக்கில் சேர்த்துக்கொண்டது போல. தேசம் நிர்வாகம் தான் பதில் சொல்ல வேண்டும்.
    எனவே உங்கள் பிரதேசத்தில் உள்ள பொலிஸில் முறையிட்டால் உங்களுக்கு ஆலோசனை சொல்வார்கள்.

    Reply
  • palli.
    palli.

    சாந்தன் உமது பின்னோட்டத்துக்கு திடமான அதேநேரம் அது யாதார்த்தமான ஒரு பின்னோட்டம் விட எண்ணிதான் கணனியில் கை வைத்தேன்; ஆனால் உமது பின்னோட்டத்தில் ஏதோ ஒரு மாற்றம் அத்துடன் ஒரு ஏக்கம் தெரிவதால் சிலவேளை பல்லியை வட தரமான தேவையான தகவல்கள் ஒருமைபடுகள் எழுத போவதாக தெரிவதால் அதை இடையூறு செய்ய விருப்பம் இல்லாமல் பல்லி யார் சொன்னாலும் அது எமது மக்களுகு நல்லதாகவோ தேவையாகவோ அமையுமானால் வழிவிட்டு ஒதுங்கி விடுவேன் பல்லியின் நம்பிகை வீண்போகாது என் நினைக்கிறேன்; நாம் அனைவரும் எதிரிகள் அல்ல; கருத்து முரன்பட்டவர்களே; அனைவரும் யதார்த்தத்தை நினைத்தாலோ அல்லது அதன்படி செயல்பட்டாலோ அனைவருமே சகோதரங்கள்தான்; ஆகவே தற்காலிகமாக சாந்தனின் கருத்துக்கு பல்லி இடம்கொடுத்து வேறு பாதையில் என் எழுத்தை தொடர்கிறேன்.

    Reply
  • palli.
    palli.

    சாந்தன் பார்த்திபனுக்கும் எனக்கும் எழுதிய பின்னோட்டம் சரியோ பிழையோ ஏதோ எம் இருவரிடமும் இருந்து இந்த சமுதாயத்துக்கு தாங்கள் எதிர்பார்ப்பது இந்த பாழாய்போன பல்லிக்கு புரிகிறது; இதில் விவாதம் செய்தால் அது நான் முதல் விட்ட பின்னோட்டத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்; ஆகவே தங்கள் கேள்விக்கு மட்டும் பதில் தாழ்மையுடன் எழுதுகிறேன்:

    //சுனாமிக்கு 5 சதம் கூட (ஸ்ரீலங்கா அமைச்சர் ஸ்ரைல்) கொடுக்காதவர் //
    புலியிடமோ அல்லது அது சார்ந்த அமைப்பிடமோ பணம் பற்று வாடசெய்திருந்தால் நான் பல்லியாக இருந்திருக்க முடியாது; பார்த்திபனும் மனிதனாக இருந்திருக்க முடியாது; ஒரு சாந்தனாகவோ அல்லது ஒரு புலி புண்ணாக்கவே இருந்திருக்க முடியும்; புலியிடம் கொடுதால் தான் சுனாமி பணமா? உன்மையில் புலியிடம் கொடுக்காமல் பலரது உதவி பாதிக்கபட்ட மக்களை போய் சேர்ந்தது என்பதை சாந்தன் புரிய வாய்ப்பில்லை;

    / சீட்டுக்காரர், ஏஜன்சிக்காரா, பெருங்குடிமகன் எல்லோர் பெயரும் இருக்கெல்லோ இழுத்து விடுங்கோ//
    இடம் போதாகுறையால் சிலபெயர்களை மட்டும் எழுதுகிறேன்
    லண்டன்; சாந்தன்(நீங்கல் அல்ல)
    இடை காட்டார்:
    மூர்த்தி;
    திரு;
    சிவா;
    பாரிஸ்;
    பாலசந்திரன்;
    மணித்;
    இளங்கோ;
    மனோ;
    சுக்கிளா.
    சசி;
    அருமை;
    கனடா;
    பாஸ்கரன்;
    ரவி;
    தயா;
    முரளி;
    சுவிஸ்;
    எனக்கு தெரியாது;
    சுவிடன்;
    சின்னவன்;
    தம்பி;
    நோர்வே;
    சேது;
    சேகர்;
    டென்மார்க்;
    கிளீ
    செல்வம்;
    வேறு நாட்டு நோட்டு விபரங்களை தேசம் நண்பர்களிடம் விடுவோமே; இறுதியாக ஒரு தகவல் சுனாமி வந்தபோது றஜிநேரடி நிகழ்ச்சி ஒன்று ஒருஊடகத்தில் நடத்தி பணம் சேகரித்தார்; அப்போது ஒரு மயிலிட்டியை பிறப்பிடமாக கொண்டவர் ஒருவர் அலையில் வந்து எனது குடும்பம் நாகர் கோவிலில் இருந்தார்கள் அவர்கள் விபரம் ஏதும் தெரியுமா? என கேட்டதுக்கு றஜியின் பதில் விபரம் எம்கைக்கு வந்துவிட்டது ஆனால் தங்கள் பங்களிப்பு என்ன என முதல் சொல்லுங்கோ என லட்ச்சகண்க்காக மக்கள் கேட்டு கொண்டு இருக்கும் ஊடகத்தில் வாய்கூசாமல் கேட்டார்; பின்பு அவர்கள் எதோ முடிந்த தொகையை அன்பளிப்பு செய்தபின் மனதை தேற்றி கொள்ளுங்கள் நீங்கள் சொன்ன இடத்தில் யாரும் தப்பஇல்லை; என்பதை கவலையுடன் தெரிவித்து கொல்(ள்)வதாக றஜி சொன்னார்; ஆனால் பல்லி சிலமணி நேரத்தில் அவர்கள் உறவு பத்திரமாக வடமராட்ச்சியில் இருப்பதாக மட்டுல்மல்ல நேரடியாக பேசும் சந்தர்ப்பத்தையும் ஒழுங்குசெய்து கொடுத்தேன்; இதை ஏன் இங்கு பல்லி எழுதுகிறேன் எனில் பணத்துக்காக புலி எது எல்லாம் செய்தது என்பதை தயா மோகன்போல் சாந்தனும் புரிந்து கொள்ள வேண்டும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    நல்லது பல்லி. அடுத்து என்ன செய்யலாம். காசு கொடுத்த சான்றுகள் இருக்குமல்லவா உங்களிடம். வழக்குப்போடலாமே!

    எமது இடத்தில் உள்ள அமைப்புக்கு நிதி அளித்தவர்கள் எல்லோருக்கும் பற்றுச் சீட்டு வழங்கினர். அதேவேளை ஈழத்தில் என்ன செய்யப்பட்டது என அறிக்கையும் வழங்கினார்கள்.அறிக்கைகளில் பல இடங்களில் உதவி போய்ச்சேர்ந்ததற்கு அத்தாட்சியாக கைவிரல் அடையாளம் கூட மக்கள் இட்டிருந்தனர்.

    ஆனால் உங்களின் இடங்களில் பலர் சுத்துமாத்து விட்டுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளீர்கள். இன்று சாந்தனுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு அருமையான சந்தர்ப்பம் உங்கள் லிஸ்ரில் இருப்போருக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்ய. அத்துடன் இங்கே பலர் (வேறோர் தலைப்பில்) சாந்தனின் தண்டனை போதாதென ஆதங்கப்பட்டிருந்தனர். எனவே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேலும் அவருக்கு மக்களை ஏமாற்றிய குற்றத்துக்கு தண்டனை பெற்றுக்கொடுங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    தங்களுக்கு பல்லி விளங்கக் கூடிய வகையிலேயே பதிலளித்துள்ளார். இனியும் தங்களுக்கு விளங்கவில்லையா?? அல்லது விளங்க மனமில்லையா?? சுருட்டல்க் காரர்களின் விபரங்களைக் கேட்டீர்ககள். அவரர்களது விளக்கத்தைப் பெற்றுத் தரப்போகின்றீர்களா?? எல்லாவற்றிற்கும் மேலாக ஒரேயொரு கேள்வி தங்களிடம், பிரித்தானியத் தமிழர் பேரவையினர் “கண்ணீர்துளிகள்” என்று பல இலட்சம் சேர்த்தார்களே?? அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது? என்று தாங்கள் பகிரங்கமாகக் கூறுவீர்களா??

    Reply
  • lal athvani
    lal athvani

    / சீட்டுக்காரர், ஏஜன்சிக்காரா, பெருங்குடிமகன் எல்லோர் பெயரும் இருக்கெல்லோ இழுத்து விடுங்கோ//

    பரா
    நவநாயக
    மகேசு
    சித்தா
    சின்னவன்
    முட்டி
    யோகி
    கள்ளு முட்டி
    மாணிக் சோதி
    வாசன்
    ரவி
    செந்தி
    சபேசு
    சர்வி
    நகைக்கடை ராசா
    ரெலோ ராசா
    அன்பு

    Reply
  • thamba
    thamba

    //எமது இடத்தில் உள்ள அமைப்புக்கு நிதி அளித்தவர்கள் எல்லோருக்கும் பற்றுச் சீட்டு வழங்கினர். அதேவேளை ஈழத்தில் என்ன செய்யப்பட்டது என அறிக்கையும் வழங்கினார்கள்.அறிக்கைகளில் பல இடங்களில் உதவி போய்ச்சேர்ந்ததற்கு அத்தாட்சியாக கைவிரல் அடையாளம் கூட மக்கள் இட்டிருந்தனர்//

    நீங்க எல்லாம் வாங்கி எமாத்தின காசக்கு இப்ப இப்படியும் கணக்கு விடுறியளோ ? யார் யாரக்கு எங்க விளக்கம் தந்தது புலிக்கு சகாசு சேர்த்தவங்கள் எல்லாம் புதுக்கார்- வீடு – ஆடம்பர பிள்ளைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம். காசு கொடுத்தவன்கள் பிச்சை எடுக்கிறாங்கள்

    Reply
  • Udumpu
    Udumpu

    I intend to make a few final comments. I don’t know personally or politically the author ஈழமாறன் or anyone who wrote comments.
    There are some comments expressed to go beyond just writing. Majority of the comments are centred in an individualy level. Anyway if ஈழமாறன் or thesamnet really serious about this issue they can develop a campagin. I doubt they have the political courage to do so. I retain my opinion that exposing the financial scandals of the LTTE is secondary. First the politics of the LTTE must be confronted. This article completly fails in this aspect.

    ஈழமாறன் said in his comments this is not a personal attack. But every word of his article is a mixuture of personal attacks and cheap LTTE critic. We asume the person accused in this article and many many other LTTE money collecters are proved to be thieves. Then what? I donnot think the LTTE Paranoia would be cured. There will be someother issue to “expose” and ” தோலுரிப்பு”. This ” தோலுரிப்பு” is going on for the last 20 years by hundreds of experts worldwide. Prople are sick of this தோலுரிப்பு and expecting an alternative. The expers have no alternative because their political existance dependson the LTTE.
    Furthermore the article and some comments indicate a insider discussion of a circle which is specialised in a sort of gossip politics. thesamnet would claim ஈழமாறன் is an independant writer and they have no responsiblity for his politics.

    Reply
  • palli.
    palli.

    அத்வானி உங்கள் கடுப்பு புரிகிறது. என்ன செய்வது இப்படி நாத்தம் பிடித்த காரியங்களை செய்தால் என்றோ ஒருநாள் நாறதான் செய்யும்; இவர்களது தலைமுறைக்கு கூட கெட்ட பெயரை வாங்கி கொடுக்கும்; ஆகவே இம்மட்டு தமாஸ் செய்யும் தாங்களும் அந்த பாட்டியா எனஎண்ண தோன்றுகிறது; எங்களை கிண்டல் கேலி எல்லாம் பல பிரமுகர்கள் செய்துவிட்டு இன்று தலைமறைவு வாழ்வு வாழ்கின்றனர்; ஆனால் நாம் என்றுமே சவாரி செய்த செய்கின்ற செய்ய போகின்ற பயில்வாஙளை விமர்சிப்போம்; எம்மைகூடதான்; பார்த்திபன்.மாயா: தேவி; துரை: ஜெயபாலன்; சேனன்;சோதிலிங்கம்; இப்படி பல தேச நண்பர்களுக்காகவும் பல்லி விமர்சனம் எழுதியுள்ளேன், அதே போல் சந்திரராஜா உட்பட இவர்கள் பலர் பல்லியை விமர்சித்துள்ளனர்: அதுவே தேசத்தின் பலம்: ஆக உங்கள் நேரத்தை எமக்கு நிகம்வெட்ட செலவழிக்காது எமது மக்களுக்கும் அவர்களை ஏமாற்றி தாம் வாழ துடிக்கும் புலம் பெயர் அந்த புலி(பளய) வியாபரிகளையும் திருந்த திருத்த ஏதாவது செய்யபடாதா??

    Reply
  • palli.
    palli.

    சாந்தன் எமக்கு அவர்கள் தண்டனை பெற வேண்டும் என்னும் நப்பாசை கொண்டவர்கள் அல்ல; அது எமது நோக்கமும் அல்ல அவர்கள் இன்று தயா மோகன் சொல்வதுபோல் அவர்கள் விட்ட தவறுகளை உனர்ந்து; மேலும் இப்படியான தவறுகளை விடாது வாழ துடிக்கும் எமது இனத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்; என்ன செய்ய வேண்டும் என பல்லி சொல்லிதான் சாந்தன் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்பது பல்லியின் கருத்து; சாந்தன் திரும்பவும் சொல்கிறேன் நாம் எதிரிகள் அல்ல கருத்து முரன்பட்டவர்களே; அதை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்;நாம் யதார்த்தத்தையும் மக்கள்படும் துன்பத்தையும் அதுக்கு யார் யார் எல்லாம் காரனம் என்பதை மட்டுமே சுட்டி காட்டுகிறோம் அது தவறா?? அது தவறாயின் அந்த தவறை தொடர்ந்து செய்ய வேண்டிய சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம்;ஆகவே விசுவாசத்தை விட்டு இவர்கள் தவறு விட்டார்களா இல்லையா என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //எமது இடத்தில் உள்ள அமைப்புக்கு நிதி அளித்தவர்கள் எல்லோருக்கும் பற்றுச் சீட்டு வழங்கினர். அதேவேளை ஈழத்தில் என்ன செய்யப்பட்டது என அறிக்கையும் வழங்கினார்கள்.அறிக்கைகளில் பல இடங்களில் உதவி போய்ச்சேர்ந்ததற்கு அத்தாட்சியாக கைவிரல் அடையாளம் கூட மக்கள் இட்டிருந்தனர்.- சாந்தன் //

    யார் காதில் பூச் சுற்றுகின்றீர். எந்த நாட்டில் புலிகள் வாங்கிய காசுக்குக் கணக்கு காட்டியுள்ளார்கள். அதிலும் பலர் கைநாட்டுப் போட்டிருந்தனரோ. ஏன் வன்னியில் எல்லோரும் படிக்காத பாமர மக்களோ குடியிருக்கினம். எனியும் தங்களைப் போன்றவர்கள் புலத்துப் பு(எ)லிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக எண்ணிக் கொண்டு மற்றவர்களை முட்டாள்களாக்குவது போல் கருத்தெழுத வேண்டாம்.

    Reply
  • palli.
    palli.

    பார்த்திபன் மன்னிக்கவும்: ஒருவர் கருத்தை மறுக்கும் உரிமை புலிக்கு மட்டுமே சொந்தம்; ஆனால் தேசத்தில் எந்த கருத்தையும் யார் வேண்டுமானாலும் எழுதலாம்; அது ஊடக கட்டுப்பாட்டுக்கு அமைய தணிக்கை செய்ய மட்டுமே தேசத்துக்கும் உரிமை உண்டு; தேசத்துக்கு கூட எழுத வேண்டாம் என சொல்லும் உரிமை கிடையாது பார்த்திபன் அவர்கள் எழுதட்டும் அது மல்லாக்க படுத்து துப்புவது போல்தான்; அதை தான் நாம் உங்கள் மேல் மட்டுமல்ல பக்கத்தில் இருப்பவர்கள்(மக்கள்) மீதும் எச்சில் விழபோகுதென எழுதுகிறோம்; அது புரியாவிடில் புரியும்வரை தொடர்வோம் நட்ப்புடன் பல்லி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி
    நான் சாந்தனை கருத்தெழுத வேண்டாமெனக் கூறவில்லை. ஆனால் அவர் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதற்காக வன்னியிலுள்ள மக்கள் அனைவரும் ஏதோ படிக்காத கைநாட்டுகள் போல் எழுதியதைத் தான் கண்டித்தேன். இதை எமது தாயகத்தைச் சேராத ஏனைய நாட்டுத் தமிழர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள். ஏதோ வன்னியலுள்ள தமிழர்கள் அனைவரும் படிப்பறிவில்லாதவர்கள் என்றல்லவா நினைப்பார்கள்.

    Reply
  • palli.
    palli.

    புரிந்துனர்வுக்கு நன்றி பார்த்திபன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பார்த்திபன்,
    1. “ வன்னியிலுள்ள மக்கள் அனைவரும் ஏதோ படிக்காத கைநாட்டுகள் போல் எழுதியதைத் தான் கண்டித்தேன்” என எழுதி என் கருத்தை திசை திருப்பியுள்ளீர்கள். நானோ அறிக்கைகளில் ‘பல’ இடங்களில் எனத்தான் எழுதினேன். அனைவரும் எனநான் என எழுதவில்லை….. சிலர் தாம் வாங்கிய மாடுகளுடன் படங்கள் கூட எடுத்து அனுப்பி இருந்தனர். இது உண்மை.

    2.”யார் காதில் பூச் சுற்றுகின்றீர். எந்த நாட்டில் புலிகள் வாங்கிய காசுக்குக் கணக்கு காட்டியுள்ளார்கள். ”
    இங்கே விவாத்தத்தலைப்பு ‘வணங்கா மண்”, “மூர்த்தி” போன்றவர்கள். புலிகள் அல்ல. …… மக்களுக்கு உணவு,உடை, உறையுள் என்பன போன்றவற்றுக்காக பல அமைப்புகளால் சேர்த்த பணம் சுருட்டப்பட்டதா என்பது பற்றி இங்கே விவாதிக்கிறோம். ……….

    3. ………….

    4. ”சுருட்டல்க் காரர்களின் விபரங்களைக் கேட்டீர்கள். அவரர்களது விளக்கத்தைப் பெற்றுத் தரப்போகின்றீர்களா??”
    நான் சுருட்டல்காரர்கள் என ‘குற்றம்சாட்டப்படும்’ ஆட்களின் பெயரை இங்கே வெளியிடக் கோரினேன். பல்லி வெளியிட்டுள்ளார். நன்றி. ஆனால் எங்கே நான் விளக்கம் வாங்கித்தருகிறேன் என உறுதி அளித்தேன்? அத்துடன் பல்லி கூறியவர்களில் ஒருவரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன் அவர் தயா இடைக்காடர்.

    5.” எல்லாவற்றிற்கும் மேலாக ஒரேயொரு கேள்வி தங்களிடம், பிரித்தானியத் தமிழர் பேரவையினர் “கண்ணீர்துளிகள்” என்று பல இலட்சம் சேர்த்தார்களே??”

    பார்த்தீபன்..நான் உங்களிடம் வாங்கினேனா? என்னை ‘பகிரங்கமாக’ கூறும்படி சவால் விடுகிறீர்களே. நீங்கள் கேட்கவேண்டியது நீக்கள் காசுகொடுத்தவரிடமல்லவா? இங்கு நான் பகிரங்கமாக எல்லோருக்கும் சொல்வது நான் பிரித்தானியாவிலேயே இல்லை! நான் வாழும் பகுதியில் மக்களுக்காக (புலிக்க்கு அல்ல) கொடுக்கப்பட்ட பணம் அனைத்துக்கும் வரவு/செலவு கணக்கு உண்டு. அதில் எம்மக்களுக்கு (கொடுத்தவர்கள்) நம்பிக்கை உண்டு. அவ்வளவும் எமக்கு போதும்! இன்றுகூட ஒரு பணம் சேகரிக்கும் நிகழ்வுக்கு பார்வையாளனாக சென்றேன். நல்ல பல விடயங்கள் நடந்தன.

    6. புலிகள் வாங்கிய காசுக்கு பல நாடுகளில் ரிசீற் கொடுத்திருக்கிறார்கள், பின் நம்பர் கொடுக்கிறார்கள் என கேள்விப்பட்டேனே, நீங்கள் அறியவில்லை போலும். ஆனால் என்னென்ன ஆயுதங்கள் எங்கே என்ன விலைக்கு வாங்கினர் எனவும் கேட்பீர்கள் போல் இருக்கிறதே?

    தயவு செய்து பிரித்தானியாவில் இருப்பவர்கள் இந்த ‘சுருட்டல்’ காரர்கள் மேல் ஒரு பொது நல வழக்கை (ஆதாரங்களுடன்) போடவும்.

    பல்லி,
    ”அவர்கள் தண்டனை பெற வேண்டும் என்னும் நப்பாசை கொண்டவர்கள் அல்ல; அது எமது நோக்கமும் அல்ல …..விட்ட தவறுகளை உனர்ந்து; மேலும் இப்படியான தவறுகளை விடாது வாழ ”

    இங்கே நான் உங்களுடன் முரண்பட வேண்டியுள்ளது. அவர்கள் போராளிகள் அல்ல விட்ட தவறை மன்னிக்க. போராளிகள் இக்கட்டான சூழலில் போராடுபவர்கள். தவறு நடந்த்திருக்கலாம் நாமும் அதனை மன்னிக்கலாம். எமது கடமையும் கூட.
    ஆனால் நீங்கள் இங்கு குறிப்பிடுபவர்கள் மக்களின் பணத்தை ‘சுருட்டியவர்கள்; என்கிறீர்கள். எனவே அவர்கள் தண்டிக்கப்படவேண்டும், இதில் எனக்கு மாற்ருக்கருத்தில்லை! மன்னிக்கவும்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    மீண்டும் மீண்டும் தவறுகளை நியாயப்படுத்த வேண்டாம். நீங்கள் “பல இடங்களில் உதவி போய்ச் சேர்ந்ததற்கு அத்தாட்சியாக கைவிரல் அடையாளம் கூட மக்கள் இட்டிருந்தனர்” என மட்டுமே எழுதியுள்ளீர்கள். ஆனால் எவராவது கையெழுத்துப் போட்டிருந்தனர் என்று குறிப்பிடவில்லை. பல இடங்களில் என்றாலே பலர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று குறிப்பிட வருகின்றீர்களா?? நீங்கள் எழுதிய கருத்தின் அர்த்தம் கூட தங்களுக்குப் புரியவில்லையா??

    மேலும் “வணங்காமண்” என்று சேர்த்தாலோ அல்லது “கண்ணீர்த்துளிகள்” என்று சேர்த்தாலோ, “வெண்புறா” என்று சேர்த்தாலோ, “புனர்வாழ்வுக்கழக”மென்று சேர்த்தாலோ அவைகள் புலிகளின் அமைப்புகள் தான் என்பது தங்களுக்குத் தெரியாதோ?? ஏதோ மூர்த்திக்கோ, தயா இடைக்காட்டருக்கோ இவர்கள் போல் மற்றவர்களுக்கோ புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லையென்பது போலல்லவா தங்கள் கருத்து உள்ளது. நீங்கள் இவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கருத்து எழுதியதால்த் தான் “கண்ணீர்த்துளி”களென சேர்த்த காசின் விபரத்தைக் கூறுமாறு தங்களைக் கேட்டேன்.

    உங்கள் பகுதியில் எந்த தவறுமில்லையென கதையளப்பதை விட, உங்கள் பகுதியென தாங்கள் குறிப்பிடும் இடத்தைப் பகிரங்கமாக கூறுங்களேன். அப்போது தெரியும் தாங்கள் சொல்வது உண்மையா ?? பொய்யா?? என. தங்களின் உண்மையான பெயரை நாம் கேட்கவில்லையே?? எனவே தாங்கள் கூறுவது உண்மையெனில் தைரியமாக உங்கள் பகுதியைக் குறிப்பிட்டு அதன் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்துங்கள்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல்.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் வணங்காமண் கப்பல். வணங்கா மண்ணால் தமிழினம் காக்கப்படப்போகிறதென்ற நம்பிக்கையையும் உலகத் தமிழர் முதல் தாயகத்தமிழர் வரை நம்பியிருந்தனர். அடங்காமண் நோக்கி வணங்கா மண்ணென்றெல்லாம் வீரம் பேசி மகிழ்ந்தோம்……. mullaimann.blogspot.com/2009/06/blog-post_11.html

    Reply
  • நண்பன்
    நண்பன்

    இது வணங்காமல் இருக்க போன கப்பல் இல்லை. பஞ்சிகாவத்தையில் இரும்புக் கடையில் விற்கக் கொண்டு போன இரும்பு. இப்ப இடம் மாறி கல்கத்தா இரும்பு கடைக்கு போகப் போகுது? அவ்வளவுதான்.

    இலங்கை அரசு தாக்கி அழிந்திருந்தால் காப்புறுதிப் பணத்தோடு, புலிகளின் பரப்புரையும் ஓ…என்று வானம் மட்டும் எழுந்திருக்கும். கப்பலில் போன வெள்ளைக்கார புண்ணாக்குக்கு தானும் சாகப் போறம் என்டதை சொல்லியிருக்க மாட்டினம். கப்பலைப் பிடித்து பின்னர் சாமான்களை இறக்காமல் திருப்பி விட்டதால் அநேகர் காப்பற்றப்பட இலங்கை அரசு உதவியிருக்கிறது. போனவர்களும் தப்பி, இனி உதவிக் கப்பல்களுக்கு காசு கொடுக்காமல் இருக்க புலத்தில் சிலரும் தப்பியுள்ளனர். உணர்ச்சிவசப்பட்டவர்கள் ஓஓஓ….போட்டு அழுகிறார்கள். இப்ப வன்னி முகாமுக்கு உதவ காசு சேர்க்கினம். அதற்கு வானத்திலருந்து உதவிகளை கொட்டப் போறாங்களாம். போட்டோவுக்கும், வீடீயோவுக்கும் போசில்ல குடுத்தவை…

    ஒரு பகிடி தெரியுமா? இப்ப புலிகளது வீர காவியங்களைப் பற்றி புலித்தமிழர் எழுதுறதை குறைச்சிட்டினம். விசயம் – நாடு – நிலமை தெரியும். அதனால எழுத மனசு இடம் கொடுக்குதில்லை. இருந்து நின்று ஒன்றிரண்டு வருது. ஆனால், இப்ப தமிழ்நாட்டு பினாமிகள்தான் கொட்டி எழுதினம். அவங்களுக்கு நாடும் தெரியாது . அங்க உள்ள சூழ்நிலையும் தெரியாது. சும்மா வைக்கோலை (துட்டு கொடுத்தால்) போட்டால் போதும் சப்பி திண்டு இணையத்தில் கோட்டைகளையே உருவாக்கினம். இது இன்னொரு கொடுமை.

    Reply
  • kalai
    kalai

    கொஞ்ச நாளுக்கு தமிழன் உப்பிடித்தான் கணக்குக்காட்டு என்று கத்துவான் நாள் செல்லச் செல்ல மறந்துவிடுவான். (உங்களைபற்றி அவதூறாக எழுதுகிறார்கள் என நிதி வசுலியும் ‘ரூட்டிங் மண்ணின் மைந்தரும்’ டாக்குத்தரைக் கேட்டபோது சொன்ன பதில்)

    ஒன்று மட்டும் உண்மை யாவரும் ஏற்றுக்கொள்ள வேணும்..டாக்குத்தர் புத்திசாலி

    Reply