வணங் காமன் கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது மனித நேயமற்ற கொடிய செயல் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டுத் தமிழர்கள் நிவாரணப் பொருட்களை திரட்டினர். அவற்றை ‘வணங்காமண்’ என்னும் கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது மனித நேயமற்ற கொடிய செயல்.
பார்த்திபன்
அதுசரி வணங்காமண் பாணியில் தமிழகத்தில் இலங்கைக தமிழர்களுக்கு வழங்கவென நெடுமாறன், 2 கோடி இந்திய ரூபா பெறுமதியான பொருட்களைச் சேகரித்தாக அறிவித்தார். அவை பின்னால் அனுப்ப முடியாது போன பின், அவற்றை தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்குக் கூட நெடுமமாறன் வழங்கவில்லை. அவை என்னவாயினவென்று நெடுமாறனும் இன்றுவரை கூறவில்லை. இது மட்டும் மனிதநேயச் செயல் ஆகுமோ?? சிலவேளை திரும்பிவரும் வணங்காமண் பொருட்களையும் என்ன செய்யலாமென நெடுமாறன் ஐடியா சொல்வாரோ??
மாயா
நெடுமாறன் சேர்த்த பொருட்களை தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்காவது கொடுக்கலாம். அது எப்ப நடக்கும்?
msri
இலங்கையில் மனிதநேயமற்ற செயல்கள் எவ்வளவோ நடநதுகொண்டிருக்கின்றன! நெஞ்சை நிமிர்த்திய “வணங்காமண்” கூனிக்குறுகி> தலையை கீழே போட்டவண்ணம் திரும்புவதுதான் உங்கள் பெரும் கவலையோ?
ramesh
நெடுமாறன் சேர்த்த 2கோடியும் இலங்கை அகதிகளுக்காக சேர்த்ததே. அதை எப்படி இப்போது கொடுக்கமுடியும். முதலில் தமிழீழம் அமைய
வேண்டும். நெடுமாறன் ஐயா அங்கு முதலமைச்சராக வேண்டும். அதன் பின்புதான் மற்ற நடவடிக்கைகள். அதுவரை..”மூச்”…கப்ஸிப்.