ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண மலையக ஆசிரியர்கள் எவரும் மீண்டும் பாடசாலைக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் வழமைபோல் தமது இரு வருட உள்ளக பயிற்சியை தொடர முடியுமென்று இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.
சப்ரகமுவ மாகாண பாடசாலைக்கு நியமனம் பெற்ற மலையக ஆசிரியர்களில் சிலர் இரு வருட உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் பயிற்சி நெறிக்கு தெரிவு செய்ய ப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் சிலருக்கு சப்ரகமுவ மாகாண சபை இரு வருட விடுமுறை வழங்க மறுப்புத் தெரிவித்ததுடன் மீண்டும் பாடசாலைக்கு வருகை தந்து தமது கடமையை பொறுப்பேற்க வேண்டும்.
இல்லையேல் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதாக வலயக் கல்விப் பணிமனையினூடாக கடிதம் மூலம் அறிவித்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை நேரில் சந்தித்து அவரது கவனத்தில் கொண்டு வந்தனர்.
உடனடியாக செயற்பட்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடி உரிய பணிப்புரையை விடுத்துள்ளார். இதன்படி ஆசிரியர் கல்லூரிக்கு சென்று பதிவு செய்யப் பட்ட சப்ரகமுவ மாகாண மலையக ஆசிரியர்கள் தொடர் ந்து இருவருட உள்ளக பயிற்சியை தொடர முடியும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழறுபடிகள் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதற்கு இப்பகுதி தமிழ் அதிகாரிகள் தான் பிரதான காரணம். தமிழ் மக்களுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் தமது கடமையை சரிவர செய்தால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரச்சினையுமில்லை என்றும் கூறினார்.
Kusumbo
……..நோர்வேயில் நடைபெற்ற இந்துசமுத்திர அமைதி மகாநாட்டில் கலந்து கொள்ள வந்த இந்த ஆறுமுகன்…. சிங்கள அரசுக்குத் துதிபாடியது மட்டுமல்லாமல் தமிழர் பற்றிய பொய்யான தகவல்களை கொடுத்தார். இதனால் இடைவேளையின் போது ஒரு தமிழர்ரால் தூசனை வார்த்தைகளால் வாங்கிக்கட்டினார். சமூகமளித்திருந்தவர்களுக்கு தமிழ் தெரியாததால் போதுமான அளவு கிடைத்தது கட்டியள்ளிக்கொண்டு இலங்கைக்குப் போனார்.
lio
தம்பி குசும்பு உங்கட எழுத்தைப் பார்த்தால் நோர்வே தமிழர்கள் தூசணம் கதைப்பது அருமை போல் உள்ளது.
இங்கே எங்கட லண்டனில் எந்த அரசியல்வாதிகளுக்கும் எந்தக் கூட்டத்திலும் நல்ல தூசண மழைதான் கிடைக்கும் அவர்கள் போகும் போது கப்பலில் போட்டுவிட்டுத்தான் போவார்கள் அவர்களது லகேஜ்ல கொண்டு போகவும் முடியாது பிளேன் தாங்காது.