9 இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு

fishing.jpgஇரா மேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் திங்கட்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் நேற்று கரை திரும்ப வேண்டும். ஆனால், அவர்களில் 9 பேர் கரை திரும்பவில்லை. அவர்கள் 9 பேரையும் இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றிருப்பதாகவும், அவர்கள் சென்ற 2 படகுகளை பறிமுதல் செய்திருப்பதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாக இணையத்தள செய்திகள் தெரிவித்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *