இலங்கை வந்த கனடா எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பொப் ரே உடன் திருப்பி அனுப்பப்பட்டார் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பீ.பி.அபேகோன் தெரிவித்தார்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த ரே விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கனடா அரசாங்கம் புலிகள் இயக்கத்தை தடை செய்த போதும் இவர் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டார் எனக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
Anonymous
பொப் ரே புலிகளுக்கு எதிராக தனது கருத்துக்களை துணிந்து கூறியவர். யாழப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கு சைக்கிளில் சுற்றுபபயணம் செய்தவர். இலங்கை அரசின் வன்முறைகளையும் கண்டித்தவர்;. தமிழர்கள் அதிகமாக வகிக்கும் ஒன்றாரியோ மாநிலத்தின் முதல்வாரக இருந்தவர். தற்சமயம் லிபரல் கட்சியின் வெளிநாட்டு அலுவல்களுக்கு தலைமை பொறுப்பில் உள்ளார். லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தால் இவர்தான் வெளிநாட்டு அமைச்சர். ரொரண்ரோவின் புலிக் கொடி போராட்டங்களையும் கணடித்துள்ளார். இவரது தடுப்பும் திருப்பி அனுப்புதலும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவே அமையும்.
Shame on Sri Lanka.
msri
மகிந்தப் பாசிசத்தின்> திமிர்த்தனப் போக்கின் வெளிப்பாடே;அப்ப இனிமேல் சீன+இந்தியா போன்ற நாட்டின் கூட்டாளிகளதான் வந்து போகலாம்!
Anonymous
Please read following links from Bob Rae’s web page
http://bobrae.ca/en/sri-lankas-tragedy
http://bobrae.ca/en/sri-lanka-news-personal-perspective
ganesan
என்ன? இந்தியாவின் துணிவோ அல்லது சீனாவின் துணிவோ இலங்கை அரசு எப்படி எல்லாம் நடக்கிறது இதே போல தமிழர்களின் பெடரல் அரசாங்கம் ஒன்றையும் துணிந்து செயற்ப்படுத்துமாயின் அதன் பின்னர் நாம் எல்லோரும் ஒருமித்து இந்த ஜரோப்பிய அமெரிக்கர்களுக்கு பாடம் படிப்பிக்கலாமே!
இலங்கை என்பது ஒரு தீவே!!
அங்கு இருப்பது!!
இரு மொழி ஒரு அரசே!!
பார்த்திபன்
இலங்கை அரசு புலிகளைத் தோற்கடிக்க முடிந்ததற்குக் காரணம் அதன் துணிச்சலான சில நடவடிக்கைகளே. முதலில் ஐரோப்பிய நாடுகளை, இலங்கை விவகாரத்திலிருந்து களட்டி விட்டது. பின்பு அமெரிக்கா, கனடா என ஆசிய நாடுகள் தவிர்ந்த ஏனையவற்றை ஓரம் கட்டியது. இதன் மூலமே இலகுவாக வெற்றியும் கண்டது. அதனையே தொடர்ந்தும் செய்கின்றது. இதே துணிச்சலை தமிழர்கள் தீர்வு விடயத்திலும் மகிந்த அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பபார்ப்பும்.
மாயா
இலங்கை எவருக்கும் அஞ்சாது என்பதை உலகத்துக்கு எடுத்தியம்பியுள்ளது. அடுத்தவனை வீட்டுக்குள் அனுமதித்து விட்டு அவன் சொல்லும் அவதூறுகளுக்கு பதில் அளிக்கும் நேரத்தை அகதிகளாகி இருப்போரை மீள் குடியமர்த்தும் பணிகளுக்கு செலவிடலாம். இவர்களால் இப்போதைக்கு நன்மையொன்றும் ஏற்படாது. பல தமிழர்களுக்கு வெள்ளைகள் என்றால் நம்பிக்கை நட்சத்திரங்கள். சிங்களவர்களைப் பொறுத்தவரை வெள்ளைகளும் சாதாரண மக்களே.
தமிழர்களை விட சிங்களவர்களுக்கு வெள்ளைகளை அதிகம் தெரியும்.