தமது கட்சியிலிருந்து கொள்கை ரீதியாக செயல்பட முடியாதவர்கள் விலகிச் செல்வது கட்சியை எவ்விதத்திலும் பாதிக்காது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.
“ஒருவர் விரும்பிய கட்சியில் அங்கம் வகிப்பதும்,அக் கட்சியிலிருந்து விலகி மற்றுமொரு கட்சியில் இணைந்து கொள்வதும் ஜனநாயக உரிமை” என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே சிவனேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு கூறினார்.
பார்த்திபன்
தமிழகத்தில் சுப்பிரமணியசாமியின் கட்சி மாதிரி, தலைவனும் நானே தொண்டனும் நானே என்ற நிலை தங்களுக்கும் வந்து விடப்போகின்றதோ என்று அச்சமாக உள்ளது.
uthayasuriyan
பார்த்தீபன் நீங்கள் கவலை கொள்ளவேண்டாம் பிள்லையான் சொன்னதில் பிழைகள் இருப்பதாக தெரியவில்லை
பார்த்திபன்
uthayasuriyan,
பிள்ளையான் சொன்னதில் தவறு என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் இப்படி ஒவ்வொருவராக கட்சி மாறினால், பின்பு பிள்ளையானின் முதலமைச்சர் பதவிக்குக் கூட ஆப்பு வரும் என்பதைப் நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா??
msri
மாநகர முதல்வரை> அம்மான் அழைக்கின்றார்! அவ புறப்படுகின்றா! பிள்ளையான் கட்சி கொள்கைக்கும்> கருணா அம்மான கட்சிக் கொள்கைக்கும் எக்கச் சக்கமான வித்தியாசமோ? வெகுவிரைவில் பிள்ளையானும் அம்மான் மடத்திற்கே போவார்!
சாந்தன்
பிள்ளையானின் ‘முதலமைச்சர்’ பதவிக்கு ஆப்பு அவர் பதவி ஏற்ற அன்றே வைக்கப்பட்டுள்ளது. இறுக்குவதற்கு கடப்பாரையும் உள்ளது. அதை அவர் தெரியாததுபோல நடித்து பல ‘ஜனநாயக’ அறிக்கைகள் விட்டும் ‘ஜனநாயக மாற்று’ களும் செய்து பார்த்தார். ஆனால் ஒன்றும் சரிவராது போல் இருக்கிறது! இன்னொரு விடயம் முதமைச்சர் பதவிக்கு ஆபத்து என்பதால் போறவர்களை இளுத்துப்பிடிக்கவா முடியும் என்ற ஆதங்கத்தை ‘ஜனநாயக உரிமை’ என்ற கதை அளப்பில் சொல்லி இருக்கிறார்.
rohan
மதியுரைஞராக ஐரோப்பாவிலிருந்து வந்தவரின் ஆலோசனையிலா எல்லாம் நடக்கிறது பிள்ளையான்?
ஆனானப் பட்ட பிரபாகரனையே கேபியை வைத்துக் கவிழ்த்து விட்டார்கள். அக்கம் பக்கம் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களையும் ஆலோசனை கேளுங்கள்.
indu
வெட்கமா இல்லையா கிழக்கின் விடி வெள்ளிகளே நீங்கள் எல்லோரும் விடதலைப்போராளிகள் உங்களக்கு மக்களின் வாழ்வில் அக்றை என்றெல்லாம் பாடினீர்களே உங்களுக்கு புலிகள் கொலை செய்தபோதும் மிரட்டியபோதும் குரல் கொடுத்தோமே நீங்கள் வெட்கப்பட வேண்டியவர்கள் இராசதுரை வழியில் நீங்கள் எல்லோரும் நன்றாகவே செயற்ப்படுகிறீர்கள்
உங்கள் பணப்பைகளும் உங்கள் குடும்பங்களும் நிறையட்டும் பிரபாகரன் என்ற தமிழினத்துரோகியால் விதவைகளாக்கப்பட்ட பெண்களை தெருவில் விட்டுள்ளீர்கள் அனதரவாக்கப்பட்ட குழந்தைகளை சாபம் உங்களை விடாது……….
ganesan
சிவகீதாவுக்கு அடுத்த மந்திரிப்பதவி தயாராகிவிட்டது. எல்லாம் ஒரு இரு தேர்தல்களுடன் போய்விடும் பின்னர் வந்து சிங்களவன்கள் இப்படித்தான் தமிழரக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்று சத்தம் போட இப்பவே பிளான் இருக்குமோ!
கருணாவின் வஞ்சனையில் வீழ்ந்தீரே! சிவகீதா!