மீள் குடியேற்றம் செய்யப்படுவதில் அடுத்தகட்டமாக மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்திலுள்ள மக்கள் விரைவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். இதற்காக ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மன்னார், முசலி பிரதேச செயலக பிரிவின் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளுக்கென 800 மில்லியன் ரூபாவை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அத்துடன் நானாட்டான், முசலியை இணைக்கும் அருவியாறு பாலத்தின் நிர்மாணப் பணிகளை இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்..
முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஏழு கிராமசேவகர் பிரிவுகளிலும் 561 குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முசலி, அரிப்பு கிராமத்திலுள்ள புனித செங்கோல் அன்னை தேவாலய முன்றலில் நடைபெற்ற வைபவத்தில் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தெற்கையும், வடக்கையும் இணைக்கும் முதலாவது நகரமாக முசலி திகழ்கிறது. புத்தளம் முதல் எழுவன்குளம் வழியாக வரும் பாதையில் முதலாவதாக சந்திக்கும் பிரதான நகரமாக முசலி நகரம் அமைவது. சந்தோசத்தை கொடுக்கிறது.
முசலி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு சற்று தாமதங்கள் ஏற்பட்டன. இதற்காக ஜனாதிபதி உங்கள் அனைவரிடமும் தனது கவலையை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இதற்கு ஈடுசெய்யும் வகையில் மன்னார் அரச அதிபரினால் முன்வைக்கப்பட்ட முசலி பிரதேச செயலக பிரிவு அபிவிருத்தி, உட்கட்ட மைப்புக்காக மதிப்பீடு செய்யப்பட்ட 800 மில்லியன் ரூபாவையும் குறைவின்றி உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கிவிட்டார்.
இடம்பெயர்ந்தாலும், அகதிமுகாம்களில் தங்கியிருப்பதும் இன்று நேற்று நடைபெற்றதல்ல. 20, 30 வருடங்களாக மாறி மாறி மக்கள் அகதி முகாம்களில் இருக்கின்றனர். மலையக மக்களும் கடந்த காலங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் குடிபுகுந்தனர். அவர்களும் அகதிகளாக இடம்பெயர்ந்து வவுனியா பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர். இதனை சில மலையக தலைவர் இன்று மறந்திருந்தாலும் நாம் மறந்துவிடவில்லை என பஸில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தாh
rohan
// மலையக மக்களும் கடந்த காலங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் குடிபுகுந்தனர். அவர்களும் அகதிகளாக இடம்பெயர்ந்து வவுனியா பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர். இதனை சில மலையக தலைவர் இன்று மறந்திருந்தாலும் நாம் மறந்துவிடவில்லை என பஸில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்//
யாரை இங்கு குத்துகிறார் இவர்?
rony
1987 இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் ஐ.நா.வால் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களில் பெரும்பலானோர் தற்போது எங்கே வசிக்கிறார்கள், எத்தனைபேர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்று ஐ.நாவுக்கே தெரியாது. இதைப்பற்றி அவர்களுக்கு கவலையே கிடையாது. இவ்விடயத்தை இலங்கை அரசு ஆராய்ந்து பார்த்தால்,அரசியல் தீர்வை வைக்குமுன்னரே மீள்குடியேற்றம் செய்யத்துடிப்பது சரியான முடிவுதானா என்பது தெளிவாகும். இன்னும் எவ்வளவு தடவைகள்தான் அப்பாவி மக்களால் அலையமுடியும்?? இதற்கு பதில் கூற யாரால்தான் முடியுமோ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.