கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் இலங்கைக்கு நேற்று இரவு வந்திறங்கிய சமயம் விடுதலை புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவரை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது..
Philip R.
என்னையா இது அநியாயமாக இருக்கு. பொப் ரே மனித உரிமை மற்றும் ஈழத்தில் தமிழர் பிரச்சனை பற்றி வெளிப்படையாக கருத்து வெளியிட்டார். அதற்காக அவர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று எப்படி சந்தேகிப்பது. கருணா அம்மான் புலியாக இருந்து இப்ப புதிய பதவியில் இருக்கிறார். எல்லாம் திருவிளையாடல்.
chandran.raja
தமிழர் போராட்டத்தை புலிகள் தமது போராட்டமாக கருதுதினார்கள். இதில் யாரும் சந்தேகிக்கமுடியாது. புலிகள் போராட்டம் உலகத்திலேயே முதல்தரமான பயங்கரவாத பட்டியலில் இணைந்து கொண்டது. தமிழரின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டுமென்றால் புலிகள் தமது போராட்டப் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் அல்லது முற்றுமுழுதாக அழித்தொழிக்க வேண்டும் என்ற நிலை உருவானது. நடந்து முடிந்தது இரண்டாவது நிலையே!
தமிழரின் உரிமைக்காக குரல் கொடுத்தார்களா? புலிகளுக்காக குரல் கொடுத்தார்களா? என்ற நிலையே இன்று இலங்கை அரசுக்கு இக்கட்டாக இந்த நிலை ஏற்படுத்தியிருக்கிறது. நான் புலிகளுக்கு குரல் கொடுக்கவில்லை தமிழ்மக்களுக்காக தான் குரல்கொடுத்தேன் என்று நிரூபிக்க வேண்டியது “பொப் ரே” உடைய கடமை நிரூபிக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்தும்மல்லாமல் நஷ்ரஈட்டையும் கோர முடியும்.
rohan
//நான் புலிகளுக்கு குரல் கொடுக்கவில்லை தமிழ்மக்களுக்காக தான் குரல்கொடுத்தேன் என்று நிரூபிக்க வேண்டியது “பொப் ரே” உடைய கடமை நிரூபிக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்தும்மல்லாமல் நஷ்ரஈட்டையும் கோர முடியும்.//
இதே மாதிரி, நாம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல – புலிகளுக்கு எதிரானது தான் – என்று நிரூபிக்குமாறு ராஜபக்ச சகோதரர்க்ளைக் கேட்க முடியுமா? முடியாமல் இருக்கிறதே … அவர்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா என்று குண்டர்களை வைத்து மிரட்டுகிறார்களே!
rohan
கேள்விப்பட்டீர்களா கதையை?
பொப் ரே புலிகளுக்குத் தலைமையை ஏற்க வந்த இடத்திலேயே தான் பிடிபட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.
அவர் ஒரு வழிப் பாதை பயணச் சீட்டிலேயே தான் இலங்கை வந்ததே மிகுந்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளதாக செய்தி வந்திருக்கிறது.
Anonymous
பொப் ரே புலிகளுக்கு எதிராக தனது கருத்துக்களை துணிந்து கூறியவர். யாழப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கு சைக்கிளில் சுற்றுபபயணம் செய்தவர். இலங்கை அரசின் வன்முறைகளையும் கண்டித்தவர்;. தமிழர்கள் அதிகமாக வகிக்கும் ஒன்றாரியோ மாநிலத்தின் முதல்வாரக இருந்தவர். தற்சமயம் லிபரல் கட்சியின் வெளிநாட்டு அலுவல்களுக்கு தலைமை பொறுப்பில் உள்ளார். லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தால் இவர்தான் வெளிநாட்டு அமைச்சர். ரொரண்ரோவின் புலிக் கொடி போராட்டங்களையும் கணடித்துள்ளார். இவரது தடுப்பும் திருப்பி அனுப்புதலும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவே அமையும்.