ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் சந்திம வீரக்கொடியும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நந்திமித்ர ஏக்கநாயக்கவும் நேற்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொட மற்றும் மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. அலிக் அலுவிஹார ஆகியோரின் மறைவையடுத்து நிலவிய வெற்றிடங்களுக்கே இவ்விருவரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடிய போதே இவ்விருவரும் எம்.பீக்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.