சிவகீதா பிரபாகரன் த.ம.வி.பு. கட்சியிலிருந்து ராஜினாமா

07sivageetha.jpgமட்டக் களப்பு மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மத்திய குழு தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் கூடியது.

அக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியும்,தான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைய எடுத்த முடிவு தொடர்பாகவும் விளக்கிய பின்பு ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

தனது சுய விருப்பத்தின் பேரிலேயே இந்த முடிவை தாம் எடுத்ததாகவும், யாருடைய அழுத்தமும் இம்முடிவுக்குக் காரணமல்ல என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்த சிவகீதா பிரபாகரன், ஜனாதிபதியைச் சந்தித்து அடுத்த சில தினங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணையவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply to uthayasuriyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Vannikumaran
    Vannikumaran

    அரசியலில் முன்னேற தமிழர்கள் எப்படி காக்கா பிடிக்க வேணும் என்ற விடயத்தில சிவகீதா ஆனந்த சங்கரி அண்ணை மற்ற கூட்டணி ஆகளை எல்லாம் அடிச்சுப் பின்னீட்டா அரசியல்ல விரைவா குறுக்கு வழியில பிள்ளையான பின்னுக்கு தள்ளி முனிசிப்பல் கவுன்சிலில நிக்காம முதலமச்சராக திட்டம் போட்டிட்டா சிவகீதா. உம் லீலையால் பிள்ளையான் மண்கவ்வவேணும். வாழ்க கிழக்கு மக்களின் எதிர் காலம் .
    வன்னிக்குமரன்

    Reply
  • palli.
    palli.

    இது மகிந்தாவின் வெற்றியா?? அல்லது கிழக்கின் வீழ்ச்சியா?? ஜயோ இந்த விளையாட்டுக்கு பல்லி வரவில்லை; பின்பு இது வடக்கு காச்சல் என மருத்துவம் சொல்வார்கள்;

    Reply
  • msri
    msri

    கட்சிமாறல்> சசுயவிருப்பு எனலாம்! அம்மானின் அழுத்த்தம் இல்லாமல் சயுவிருப்பு>சுயமாக வந்ததோ? உங்களைப் போன்றவர்களுக்கு சுதந்திரக்கட்சி தங்குமடமாகின்றது!

    Reply
  • uthayasuriyan
    uthayasuriyan

    போய்வாருங்கள் எங்குபோனாலும் நீங்கள் வரவேண்டிய இடம் வந்தேதீர வேண்டும் போய்வாருங்கள்

    Reply
  • rohan
    rohan

    //சுதந்திரக்கட்சி தங்குமடமாகின்றது!//

    சுதந்திரக்கட்சி யாருக்கும் தங்குமடமாகாது.

    தம்மைப் பதவியில் இருத்திய சமரவீரவுக்கும் அலசுக்கும் கதவைக் காட்டியது மட்டுமல்ல, அலசை கூட்டிலும் அடைத்தவர்கள் ராஜபக்ச சகோதரர்கள்.

    ஏணிகளுக்கே அக்கதி என்றால் கறிவேப்பிலைகளுக்கு?

    Reply
  • msri
    msri

    ஏன் இந்த கறிவேப்பிலைகள்> மகிந்தாவின் அன்னசத்திரத்திற்குத்தானே> பிரயோசனப்பட்டுக் கொண்டிருக்கினறன! போறவர்களும் இச்சத்திரத்தில் இருநது அமுது உண்ணவேண்டியதுதானே!

    Reply