இந்திய ஆள்புல எல்லையில் இருந்துகொண்டு இந்திய அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ள இலங்கை பிரஜைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது எனத் தெரிவித்துள்ள ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இவர்களின் வீசாக்களை இந்திய அரசு ரத்துச் செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருப்பதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இவ்வாறு இந்திய அரசுக்கு எதிராகக் கோஷமிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் புலிசார்பு பிரசாரர்களாகும். இந்தியர்கள் வெளிநாட்டவர்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு இந்திய அரசாங்கத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்தால் நாம் அதனை சகித்துக்கொள்ள மாட்டோம். மேலும் எமது நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்குத் திட்டமிடுவதாக வெளிநாட்டு அரசாங்கங்களை சந்தேகப்படுவோம். எனவே இவ்வாறான விடயங்களில் நாம் இரண்டு நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க முடியாது.
ஜனநாயக நாடான இலங்கை, சார்க் அமைப்பின் ஓர் அங்கத்துவ நாடாகவும் காணப்படுகிறது. இலங்கைப் பிரஜைகளுக்கு இலங்கையிலிருந்துகொண்டு எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
msri
தலை வணங்குகின்றோம்> உங்களின் சுதந்திர தேசியப் பற்றிற்கு! அப்போ> தமிழ் உணர்வாளர்களை (நெடுமாறன்+வை.கோ.) என்ன செய்ய உத்தேசம்!