அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் செலுத்தப்பட்டன.
பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது சபையில் இருக்கவில்லை.