மனித உரிமை, பிரதேச அபிவிருத்தி பற்றிய பிரபாவின் கைத்தடி கருணாவின் உபதேசம். : முன்னாள் போராளி.

Karuna(கட்டுரையாளர் தேசம்நெற்றுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். ஆயினும் தன்னை இனம் காட்டுவது இன்றைய சூழலில் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதுவதால் அவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லை. கட்டுரையாளர் மட்டு அம்பாறையைச் சேர்ந்த முன்னாள் ரெலோ போராளி.)

மட்டக்களப்பு சென்றல் கல்லூரியில் பாடசாலையில் படித்த கருணா ஒழுங்காக பாடசாலைக்கு சமூகமளிக்காது தில் சாகசங்களில் விருப்புக் கொண்ட கருணா சிறு வயதிலேயே ஆயுதக் கலாச்சாரத்தில் இணைந்து கொண்டார். இவர் பிரபாகரனின் நன்மதிப்பை பெறுவதற்காக எல்ரிரிஈ க்குள் குள்ளநரி வேலைகளையும்; துதி பாடுதல்களையும் காட்டிக் கொடுப்புக்களையும் ஈவிரக்கமற்ற கொலைகளையும் புரிந்தே பெற்றுக் கொண்டார்.

இவர் மட்டு தளபதியாக உருமாறிய பின் தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நாட்டுவதற்கு மட்டக்களப்பில் இருந்த கல்விமான்களையும் முற்போக்கு சிந்தனையாளர்களையும் சுட்டு பொசுக்கி மட்டக்களப்பு மக்களை ஒரு அடிமைத்தனத்திற்குள் தள்ளினார்.

பாலங்கள் அரச கட்டடங்கள் வருவாய ஏற்படுத்திக் கொடுக்கும் அரிசியாலைகள் முதல் ஏனைய நிறுவனங்களையும் குண்டு வைத்து தகர்த்ததில் தளபதிகளில் முதன்மையானார். அது மட்டுமல்ல எந்த மாவட்டத்திலும் நிகழாத அளவிற்கு ஏழை முதல் பணக்காரர் வரை கடத்தி கப்பம் பெறுவதில் முன்னோடியானார். ஏழை மீன்பிடி தொழிலாளர்களிடம் இருந்து மீனகளைப் பறிக்கும் அளவிற்கே இவரது கொடுங்கோல் ஆட்சி நிலவியது.

முஸ்லிம் தமிழர்களுக்கு இடையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளையும் கலகங்களையும் இவர் காத்தான் குடி பள்ளிவாசல் படு கொலை மூலமும் ஏறாவூர் படுகொலை மூலமும் நிரந்தர இனப்பகையை ஏற்படுத்தினார். இவர் இந்த படுகொலைகளை தானே முன்னின்று உத்தரவிட்டு கொலை செய்ய கட்டளை இட்டதற்கான ஆதாரங்களும் அதை நியாயப்படுத்த சொன்ன கதைகளும் ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்கு இன்றும் சாடசிகள் உள்ளன.

மட்டக்களப்பில் தனக்கென்றே ஒரு படையணியை உருவாக்குவதற்கு பலவந்தமாக பள்ளிச் சிறுவர்களில் இருந்து வறியகுடும்பங்களின் வருமானத்தை ஏற்படுத்தி கொண்டிருந்த உழைப்பாளர்கள் வரை கடத்திச் சென்று ஆயுதப்பயிற்சி கொடுத்தவர் இதை எதிர்த்த பெற்றோர்கள் முதல் கல்வியாளர் வரை அடித்து நையப்புடைத்தார். தாய்மார் என்றும் பாராது அவமானப்படுத்தினார். பாடசாலை முதல் கோயில் திருவிழா வரை சுற்றி வளைத்து சிறுவர் சிறுமியரை கடத்தி சென்றவர். இவரது கட்டாய ஆயுதப் பயிற்சியில் இருந்து தப்பி வந்தவர்களை சுட்டு கொன்று மற்றவர்களை பயமுறுத்தியவர். இந்த பிள்ளை பிடிப்பில் இருந்து தப்பிச் செல்வதற்காக பிறமாவட்டங்களுக்கு செல்ல முயன்றவர்களை வழிமறித்து நடு வீதியிலேயே அவர்களுக்கு சிறுமிகள் என்றும் பார்க்காது தலைமுடியை வெட்டியதை மட்டக்களப்பு மக்கள் மறக்க மாட்டார்கள்.

தன்னை ஒரு ராணுவ திட்டமிடுதலில் திறமையானவர் என தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் கருணா வவுணதீவு ராணுவ முகாமை தான்தோன்றித்தனமாக தாக்கியதில் பல நூறுக்கணக்கான அப்பாவி போராளிகளை பலி கொடுத்ததுடன் முழு தோல்வியை தழுவிக் கொண்ட கருணாவின் ராணுவ அறிவு சம்மந்தமாக  இன்றைய பிதற்றல்களை புரிந்து கொள்ளுங்கள். இவரது முழு பலமும் கல்வியறிவற்ற கிராமப்புற பின்தங்கிய இளைஞர்களையும் யுவதிகளையும் பயிற்சி கொடுத்து விட்டில் பூச்சிகள் போல் ராணுவ முகாங்களுக்கு அனுப்பியதே ஆகும். இதனாலேயே இவர் புலிகளுக்குள் முன்னோடியாகவும் பிரபாகரனிடம் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டார். மொத்தத்தில் இவர் மட்டக்களப்பு சின்னஞசிறுசுகளை அழியவிட்டு மட்டு அம்பாறை மக்களை மடையர்களாக்கி தனது சுய பெயரை பொறித்துக் கொண்டார்.

சமாதான உடனபடிக்கையின் காலத்தில் கூட கட்டாய ஆட்சேர்ப்பை நிறுத்தாது அரசியல் எதிரிகளை சுட்டு கொன்று சமாதான உடன்படிக்கையை முதன்முதலில் மீறியவர் இவரே. இவரது மாமனார் (மனைவியின் தந்தையார்) ஒரு சாதாரண கூலி தொழிலாளியாக இருந்தும் இவர்களது பெயரில் ஏராளமான சொத்துக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதையும் இவரது தனிப்பட்ட ராணுவ கட்டமைப்பின் பெருக்கத்தையும் விசாரிக்க முற்பட்டபோதே முரண்டு பிடித்தார். இவருக்கு எதிராக குற்றம் கூறியவர்ளை தவறு என சொல்லி தான் பிரபாகரனுக்கு நேரடி பார்வையில் இயங்க தயாராக இருப்பதாகவும் பிரபாகனை தனது  கடவுள் போல் மதிக்கின்றேன் எனவும் தனது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறு பத்திரிகை துண்டுப்பிரசுரம் மூலம் மன்றாடி கேட்டார். ஆனால் இவர் எல்ரிரி யில் இருந்து நீக்கப்பட்டவுடன் தனது விசுவாசிகளை கொண்டு ஊர்வலங்களும், கூட்டங்களும் நடத்தி குறிப்பாக மாமாங்க பிள்ளையார் கோவில் முன் ஒரு மாபெரும் கூட்டம் நடத்தி தனது ஆதரவாளர்கள் மூலம் மீண்டும் மட்டு அம்பாறை தளபதியாக நியமிக்குமாறு மன்றாடி கேட்டு கொண்டார். இவை அனைத்தும் சரிவராத பட்சத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுகிறது என பிரதேச அரசியல் செய்யத் தொடங்கினார்.

தான் தப்பி ஓடும் வரை பலாத்காரமாக பிடிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளை ராணுவத்தின் முன்னரங்குகளில் முன்நிறுத்தி வைத்திருந்தார். சில மனிதாபிமானிகள் இவ்வாறான சிறார்களை யுனிசெப் இல் இந்த சந்தர்ப்பத்திலாவது கையளிக்குமாறு மன்றாடி கேட்டனர். அதை மறுத்து தனது சுயநல, சுய பாதுகாப்பிற்காக புலிகளால் கொலை செய்யப்படுவதற்கு காரணமானார்.

உலகத்தின் எந்த நாட்டிற்கு சென்றாலும் வாழ முடியாததை உணர்ந்த கருணா ராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பு வேலை செய்வதற்கு முன் வந்தார். அத்துடன் புலிகளில் இருந்த போது கையாண்ட அதே பாணியில் கையாண்டு 2000ற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கடத்தி தமக்கு என ஒரு படையணியை வெலிகந்தை காட்டுப் பகுதியில் நிறுவினார். ராணுவத்துடன் சேர்ந்து கிழக்கு மாகாண புலியழிப்பில் ஈடுபட்டார். ஆட்கடத்தல் கப்பம் அரசியல் எதிரிகளை கொல்லுதல் போன்றவற்றை செய்து கொண்டு இருக்கும் இவர் இன்று ஓரு அரசியல் கொமடியன் போல பல புதினமான கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றார். கிழக்கின் கல்வி மேம்பாட்டிற்கு உதவி வழங்க போகின்றாராம். போதாக்குறைக்கு இதை வடக்கிற்கும் விஸ்தரிப்பாராம்.

அபிவிருத்தி தந்த வழங்களை அழித்த இவர் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யப் போகின்றாராம்!

பள்ளி வாசல் முதல் முஸ்லிம் கிராமம் வரை நரமாமிச வேட்டையாடிய கருணா தமிழ் முஸ்லிம் உறவு பற்றி பிதற்றுகிறார்.

மட்டு நகர் அபிவிருத்திக்காக உழைத்த முன்னாள் அமைச்சர் தேவநாயகத்துடன் சேர்ந்தியங்கிய காரணத்தால் சித்தாண்டி சிவலிங்கம் ஆசிரியரை மின்கம்ப மரண தண்டனை கொடுத்ததுடன் வாசுதேவாவையும் (புளொட்) அவரது சகாக்களையும் பேச்சு வார்த்தைக்கென அழைத்து கபடமாக கொன்று குவித்ததையும் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்; நிமலன் சவுந்திர நாயகத்தை அழைத்து பேசிய பின் அவர் வீடு சென்று அவரை வழி மறித்து கபடத்தனமாக கொன்றதையும மட்டு மாநகர் முதல்வர் செழியன் பேரின்ப நாயகத்தை கொன்றதையும்  மட்டுநகர் முனன்னாள் அமைச்சர் கணேச மூர்த்தி (சந்திரிகா அரசில்) யின் சகோதரரை கொலை செய்ததையும்  ரெலோ உப தலைவரான மட்டுநகர் ரொபேட்டை (பிரதேச சபை தலைவராக சிறப்புடன் பணியாற்றிய) கொலை செய்ததையும் மறந்து இன்று தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்றும் மட்டு – அம்பாறையில் உள்ள பிரதேசங்கள் பின்தங்கியுள்ளதாக கருணா பிதற்றி திரிகின்றார்.

ஏனைய போராளி அமைப்புக்களையும் போராளிகளையும் கொன்று குவித்ததை எதிர்த்த புலி உறுப்பினர் கல்லாறு கடவுள் (தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கின்றார்) வெளியேறிய போதும் தொடர்ந்து இக்கொலைகளையும் கொலைக் கலாச்சரத்தையும் முன்னின்று எடுத்து நடத்திய எமனுடைய தூதன் கருணா இன்று போதனை புரிகின்றார்.

இந்திய ராணுவத்தின் வருகையின் பின் பலாத்காரமாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தை இந்திய ராணுவம் கைவிட்டு சென்ற பின் அவர்களை கொன்று குவித்தது அன்று இவருக்கு தவறாகப் படவில்லை என இன்று மட்டு – அம்பாறை மக்களின் காதில் இன்று இவர் பூச்சூடுகிறார்.

புத்திஜீவிகள் முதல் சமூக முன்னோடிகள் பாடசாலை ஆசிரியர்கள் வரை சுட்டுக் கொன்ற இவர் நம் சமூகத்தில் (மட்டு -அம்பாறை) கல்விமான்கள் இல்லை என கதறுகிறார்.

புலியால் நீக்கப்பட்ட பின் பிரபாகரனை கடவுள் என கடிதம் கொடுத்து மீண்டும் தன்னை சேர்த்துக் கொள்ளச் சொன்னவர் இன்று பிரபாகரனுக்கு அரசியல் தீர்வுக்கு செல்லுமாறு அறிவுறுத்தயதாகவும் அதை அவர் கேட்காததாலேயே தாம் விடுதலைப் புலிகளிடம் இருந்து விலகியதாக கயிறு விடுகிறார். கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவதாக ஆரம்பத்தில் புரளி கிளப்பிய இவர் தனது முன்சொன்ன கருத்துக்களில் முரண்படுகின்றார். பிரபாகரனின் உதவியுடன் மட்டு – அம்பாறை மக்களையும் அப்பாவி இளைஞர் யுவதிகளையும் அடிமைத்தனத்திற்குள் வைத்திருந்த இவர் இன்று ராஜபக்ஸ சகோதரர்களுடன் இணைந்து அதே நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றார். இவர் மட்டு – அம்பாறை மக்களை மீண்டும் மீண்டும் தனது அதிகார பசிக்காக பலி கொடுக்கிறார். ஆனால் மட்டு-அம்பாறை மக்கள் இதை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். துரதிஸ்டவசமாக புலம்பெயர்ந்த சிலர் இவரின் கடந்த காலத்தை கருத்திற்கெடாது கிழக்கின் விடிவெள்ளியாக உருவாக்க முனைகின்றனர்.

அது மட்டுமல்ல சில இணையத்தளங்கள் இவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தம் நலன்களில் (மட்டு – அம்பாறை மக்கள்) காட்டாது இருப்பதை இட்டு மட்டு – அம்பாறை விசனம் அடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்தி ஏற்படுத்தி தந்த ராஜன் செல்வநாயகம், தேவநாயகம் போன்ற மூத்த அரசியல்வாதிகளையே  அரசியல் உரிமைகளே முக்கியம் என புறந்தள்ளி விட்ட மக்களுக்கு அபிவிருத்தி பற்றி பிதற்றுகிறார். இவர் போன்ற அரசியல் சமூக அறிவற்றவர்கள் போராடச் சென்றதாலேயே எம்மக்களுக்கு இப்பேரழிவு ஏற்பட்டது என்பதை மட்டு அம்பாறை மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். எமது சமூகத்தில் இன முரண்பாட்டால் ஏற்பட்ட ஆயுதகலாச்சாரம் முனைப்பு பெற்றதால் சமூக நற்சிந்தனையாளர்களும் கல்வியாளர்களும், சாதாரண மனிதர்களும், அரசியலுக்கு வருவதை தவிர்த்தனர். சமூகத்தில் நன்மதிப்பை பெறாதவர்களும் சமூக விரோதிகளும், சுயநலவாதிகளும், ஊதுகுழல்களும் அரசியல் அதிகாரம் பெற்று பாராளுமன்றம் சென்றனர். இது பல தமிழ் தேசியகூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.

புலிகளைக் காட்டி சட்டத்தையும ஒழுங்கையும் நிலை நிறுத்துவதற்கு தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் தவறியமையே இதற்கு ஒரு காரணமாகும். புலிகளின் அழிவுடன் மீண்டும் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படும் சந்தர்ப்பத்தில் ஆயுத கலாச்சாரம் இல்லாத சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தமக்கான சரியான அரசியல் தலைமையை தேர்ந்தெடுக்க முன்வருவார்கள். புலம்பெயர் மக்கள் ஆயுத வன்முறைகளற்ற சட்டமும் ஒழுங்கும் நிலவுகின்ற ஒரு நிலையை இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் கொண்டு வருவதே அவர்கள் முன் உள்ள தலையாய கடமையாகும். இதை விடுத்து கொலைக் கலாச்சாரத்திலும், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை போற்றுவதையும் – முன்னிலைப் படுத்துவதையும் நிறுத்த வேண்டும். புலம் பெயர்ந்தவர்கள் எப்படி புலிகளை வளர்த்து மக்களை அழிவுக் உள்ளாக்கினார்களோ அதே போன்ற செயலை சில கிழக்கின் விடிவெள்ளிகளும், பல இணையத்தளங்களும்; சுயநலவாதிகளும் செய்வதை தவிர்ப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும்.

இவரின் பின்னால் அணிசேரும் சிலர் பிரதேச வாதத்தை கூறிக் கொண்டு மட்டக்களப்பு மக்களை ஏமாற்றி சூறையாடியதுடன், பல பெண்களின் கற்பை அதிகாரத்தை பயன்படுத்தி பறித்த சில மௌனமான (ஆ)சாமிகளும் மட்டு நகர் மக்களால் நன்கு அறியப்பட்டுள்ளனர்.

இனத்திற்குள்ளேயான விரிசல்களையும், இயக்கத்திற்குள்ளேயான விரிசல்களையும் பல கொலைகளைப் புரிந்ததன் மூலம் ஏற்படுத்திய கருணா இன்று தேசிய நல்லிணக்க அமைச்சராக உள்ளது நகைப்பிற்கிடமாக உள்ளது!!

பிரபாகரனை அண்ணே அண்ணே என உச்சாடனம் செய்து கொண்டு திரிந்த கருணா இன்று ராஜபக்சவை விநாடிக்கு விநாடி உச்சாடனம் செய்வதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். தலைவர் (கருணாவிற்கு) தமிழ்ஈழம்பெற்றுத் தருவார் என போதித்த கருணா அதை ஏற்க மறுத்தவர்களுக்கு அடியும் உதையும் கொடுத்து பங்கருக்குள் தள்ளி சித்திரவதை செய்தார். இன்று ராஜபக்ச சகோதரர்கள் தமிழ் மக்களுக்கு எல்லாம் பெற்று தருவார்கள் எனறு பிரச்சாரம் செய்கிறார். இந்த போதனைகளை ஏற்க மறுப்பவர்களை அவர் அதே புலிப்பாணியில் கையாள்கிறார்.

இவரது ஆயுத அடாவடித்தனத்தின் மூலம் எந்த மக்களுக்கு அநியாயங்களை புரிந்தாரோ அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்ய இன்றைய அரசு முயல்வதை மக்கள் வெறுத்து நிற்கின்றனர். அது மட்டுமல்ல எதிர் வரும் தேர்தல்களில் ஆயுத வன்முறைகள் மூலம் வாக்குப் பெட்டிகளை நிரப்புவதற்கு கருணாவும் அவரது அடியாட்களும் அரச இயந்திரத்தின் உதவியுடனும் தயாராகி வருவதை உணர்ந்தும் உள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 Comments

  • tax
    tax

    இவர் மட்டு தளபதியாக உருமாறிய பின் தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நாட்டுவதற்கு..
    தன்னை ஒரு ராணுவ திட்டமிடுதலில் திறமையானவர் என தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் கருணா………..இதையும் மீறி கிழக்கில் இவரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனித்து இயங்கிய தமிழேந்தியின்நிதித்துறை, பராவின்நீதித்துறை,நடேசனின் காவல்துறை, எல்லாவற்றுக்கும் மேலாக நீண்டகாலமாக கிழக்கில் தனித்து செயற்பட்ட பொட்டரின் உளவுத்துறை என்பனவும் தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் இயங்க வேண்டுமென்பதே கருணாவின் குறியாக இருந்தது. தன்னை மீறி கிழக்கில் செயற்பட்ட இந்த புலிகளின் தலைமைப்பீடத்துடன் தொடர்புபட்டு இயங்கிய வன்னியிலிருந்தோ அல்லது முன்னர் யாழில் இருந்தோ வந்த போராளிகளுக்கு மறைமுகமாக கருணா எப்போதும் இடைஞ்சல் கொடுத்துக்கொண்டே இருந்தார். இருப்பினும் இதே பிரிவுகள் கருணாவின் கீழும் மாவட்ட மட்டத்தில் இயங்கியது. ஆனால் அந்தந்த ப்ரிவுகளின் கூடுதல் அதிகாரம் இவரிடம் இல்லாதது இவருக்கு அந்த பிரிவினரின் செயற்பாடுகள் பெரும் தடையாக 90களில் இருந்தே நிலவி வந்தது.

    Reply
  • Kulan
    Kulan

    இக்கட்டுரையை தேசமோ அன்றி ஆசிரியரோ சிங்களமொழியிலும் முடிந்தால் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து இலங்கையில் உள்ள பிரபல பத்திரிகைகளில் வெளிக்கொணர்வது அவசியம். காரணம் மழைவிட்டாலும் தூவானம் விடாது என்பார்கள். ஒரு நச்சு விதைபோதும் ஒரு இனத்தையே அழிப்பதற்கு. அது நச்சு விதை மட்டுமல்ல மேலும் மேலும் நஞ்சூட்டப்பட்ட விதையும் கூட. நாம் சிங்களவருடன் சேர்ந்து வாழ்ந்தாலும் இப்படியான நச்சு விதைகளை உடனடியாக அழிப்பதே மேலானதும் ஆரோக்கியமானதுமாகும். இதை சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ உருமாற்றித்தந்தால் அதை இலங்கையில் கொணர்விப்பது என்பொறுப்பு. நாம் கருணாவை இனங்காண்பது முக்கியமல்ல அரசும் மக்களும் இனங்காண்பது முக்கியமானது. செய்வீர்களா?

    Reply
  • Nanpi
    Nanpi

    யாரையாவது திட்டிக்கொண்டே இருங்கள். இப்படியே போனால் தமிழ்ச்சமூகத்தின் விடிவு கேள்விக்குறியே. நீங்களும் செய்யமாட்டீர்கள் செய்பவனையும் விடமாட்டீர்கள்.

    கூறப்பட்ட விடயத்தின் உண்மை-பொய் நிலை பற்றி ஒரு விடயத்தை வைத்தே மட்டிட முடிகின்றது. கருணாவின் மாமனார் ஓர் ஆசிரியர். இந்திய இராணுவ காலத்திலேயே அவர் பெயரில் 2 வீடுகளும் வயல்களும் இவர் கருணாவின் மாமனாராக முன்பே இருந்தது என்பது அவர்களது வீட்டருகே வாடகைக்குக் குடியிருந்த போது எனக்குத் தெரியும்.

    Reply
  • மாயா
    மாயா

    இவரும் ஒரு பிரபாவின் பிரதிதான். கருணா தமது உயிர் பாதுகாப்புக்காகவே படையினரோடு இணைந்து அரசோடு குலவி மக்கள் சேவையாளர் ஆகப் பார்க்கிறார். ஆயுத கலாச்சாரம் கொண்டவர்களை மக்கள் ஒதுக்கி வைக்க வேண்டும். இவர்களால் நன்மைகளை விட கேடுகளே அதிகம்.

    Reply
  • anpu
    anpu

    முன்னாள் ரெலோ போராளி போட்ட பிள்ளையார் சுழியை புலிபோராளிகள் முன்னெடுத்து புலிகள் அமைப்புக்குள் நடந்தனவைளையும் வெளிக்கொணர்தல் இச்சந்தர்ப்பத்தில் அவசியம்.

    Reply
  • palli.
    palli.

    கட்டுரையாளரின் எழுத்தில் பல உன்மைகள் இருந்தாலும் கருனா மாமாவாக (பிரபாவுக்கு) இருந்து தனது வளர்ச்சிக்காக பல சகாசங்களை(கொலைதான்) செய்து அம்மானாகி பின்பு அவமானமாகி இறுதியில் துரோகியாகி விட்டார்: கருனா பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் ஏற்க்கனவே இந்த தேசத்தில் கொடிகட்டி பறந்தது; அதுவும் ஈழத்தி ஸ்ராலின் ஏதோ எடக்கு மடக்காய் எழுதபோய் அது கருனாவின் பிறப்பில் இருந்து வளர்ப்புவரையும் படம்பிடித்து காட்டியது; கருனாவுக்கு பாரிஸ்சில் கூட பினாமிகள் பெயரில் வீடு இருப்பதாக தேசத்தில் படித்ததாக நினைவு வருகிறது;

    கருனா இறுதியாக சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்தபோது பல கிழக்கு மக்களையும் மாற்று கருத்தாளர்களையும் சந்தித்து தனது புலி விலகல் பற்றி பேசிஉள்ளார்; இவருக்கு ஆதரவாக சிவராம் பலருடன் கருனாவுக்கு உதவமுடியுமா என கேட்டது; பலருக்கு தெரியும் என நினைக்கிறேன்; இதில் முக்கியமாக ஈழத்து ஸ்ராலினுடன் என்னும் இருவர்தான் வடகிழக்கு பிரிவை வைத்து அம்மான் வெளியே வர வேண்டும் என அடம்பிடித்தார்கள்; அதனால் மாற்று கருத்தாளர் பலர் கருனாவை ஏற்க்க மறுத்தனர்; அதனால் அன்று கருனா தப்பி ஓடஒரு இடம் தேவைபட்டது; அதுக்கு இந்தியாவை தெரிவு செய்து அதுக்கான உறவை றோமூலம் கேட்டனர்; இதுக்கும் பின்னனியில் சிவராமே உதவினார்; ஆனால் றோவோ எப்போதும் தன்னுடன் வீட்டுபிள்ளையாய் வைத்திருக்கும் ஈஎன்டிஎல்எவ் பக்கத்தை கையை நீட்ட கருனாவுக்கு உதவ ஈஎன்டிஎல்எவ் இடம் லண்டன் இருக்கும் பளய புளொட் ஒருவரிடம் சிவராம் பேச அவருக்கு அரசியலே இல்லாமல் இருந்தநாரத நயினாவுக்கு இது பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது; உடன் செயலில் இறங்கினார்; றோவும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தும்படி வீட்டு பிள்ளைக்கு பச்சை கொடி காட்டதொடங்கியது கிழக்கு புலி; ஆனால் காலபோக்கில் தலமையில் யார் இருப்பது என சங்கடம் வந்தபோது நாரதர் தனது அறிவுக்கு வேலையை கொடுத்து இலங்கை அரசின் நேரடி தொடர்பை எடுத்து கொண்டார்; இடையில் சிவராம் இல்லாதது இவரது காய் நகத்தலுக்கு இலகுவாக இருந்தது;

    கருனா லண்டன் வந்து சிறைவாசம் இருந்தது முதல் இன்று அமைச்சர் பதவி கிடைத்தது வரை நாரதரின் கடமை மிக பெரியது; அதனால் கருனா யாரை நம்பினாரோ அவர்களுக்கு எல்லாம் கருனாவாலேயே மரணதண்டனை கொடுத்தும் கொடுத்துகொண்டும் இருக்கும் நாரதர் இந்த கட்டுரைக்கு பார்த்து தேசம் மீதும் ஏதாவது தனது சில்மிசங்களை காட்டலாம்; ஆகையால் கருனாவுடன் சேர்ந்து பின்னணி குரல் கொடுக்கும் இப்படியான நாரதர்களும் சட்டத்தின்முன் நிறுத்தபட வேண்டும் என்பதாலேயே இதை எழுதுகிறேன்;

    Reply
  • thevi
    thevi

    கருணா விடுதலைப் புலிகளின் முக்கிய பங்காளி. புலித்தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியிருக்கும் நபர். புலிகள் செய்த மனித உரிமை மீறல்களுக்கும் போர்க் குற்றங்களுக்கும் (600 சரணடைந்த பொலிசாரை கொலை செய்ததாக கூறுகின்றனர்) இவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

    இவரது ஆயுத அடாவடித்தனத்தின் மூலம் எந்த மக்களுக்கு அநியாயங்களை புரிந்தாரோ அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்ய இன்றைய அரசு முயல்வது பாலியல் வல்லுறவு செய்தவனையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும் கொடூரத்தை ஒத்தது.

    இனியாவது மக்களுக்கான காலம் வரவேண்டும்.

    Reply
  • viji
    viji

    பல்லியின் பின்னூட்டத்தில் இருந்து கடைசிவரை அவர் குறிப்பிடும் நாரதர் யார் என்பது புரியவேயில்லை.

    Reply
  • palli.
    palli.

    //இவரது ஆயுத அடாவடித்தனத்தின் மூலம் எந்த மக்களுக்கு அநியாயங்களை புரிந்தாரோ அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்ய இன்றைய அரசு முயல்வது பாலியல் வல்லுறவு செய்தவனையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும் கொடூரத்தை ஒத்தது.//

    இதை விட கருனாவுக்கு ஒரு சான்றிதழ் வேண்டுமா??

    Reply
  • kamal
    kamal

    பல்லி யார் அந்த நாரதர் என்று தெரியவில்லையே? கொஞ்சம் கண்டுகொள்ளும்படி ஏதும் சின்ன விளக்கம் தரக்கூடாதா?

    Reply
  • lavan
    lavan

    ராமா அடுத்தது என்ன? அதுதான் நாரதர்

    Reply
  • Raj
    Raj

    மொத்தத்தில் தவறு தவறாகவே அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. முதலில் தமிழன் என பிறந்ததற்கே வருத்தப்படுகின்றேன். காரணம் சமுகத்தில் அரசியலில் எவனையும் ஏற்றுக்கொள்வதற்கோ தூக்கிவிடுவதற்கோ வழிகாட்டுவதற்கோ மனப்பக்குவம் எளிதில் எம்மிடையே காணப்படுவதில்லை. மாறாக வசை பாடுவதும் நாற்றம் தோண்டப்படுவதுமே மலிந்து காணப்படுகிறது. இதன் வெளிப்பாடே தற்போது தென்னிலங்கையில் தோன்றியுள்ள தமிழ்க்கட்சி குத்துவெட்டு. 50 இயக்கப்பெயரை வைத்து வரலாறு சொல்கிறீர்கள் இதில் ஒரு இயக்கமோ தமிழ் கட்சியோ கிழக்கில் ஆரம்பித்து கதிரைபிடிக்க அடிபடவில்லை என்பதை எண்ணி அங்கு பிறந்தவன் என்ற வகையில் பெருமைப்படுகின்றேன். (பிரதேச வாதமில்லை யாரும் ஆய்வு செய்யலாம்)அதற்காக அங்குள்ளவர்க்கு அரசியலோ கல்வியோ வீரமோ தமிழ்உணர்வோ குறைச்சலென்றும் எண்ணிவிடலாகாது! விடயத்திற்கு வருகின்றேன்.

    கருணாவை வைத்து குரோதம் பேசி ஆய்வுசெய்வது ஆரோக்கியமற்றது என்பதுடன் மக்களின் வாழ்வுடன் இன்னும் உரசிவிளையாடுவது போன்றே பார்க்கின்றேன். பிரபாகரனின் வரலாற்றிற்குள்தான் கருணாவை வைத்து பார்க்கவேண்டுமே தவிர இந்தப்பாத்திரம் தோன்றக்காரணமே பிரபாகரன் என்பதுடன் அவரது மேற்பார்வையிலேதான் அனைத்தும் நிகழ்த்தப்பட்டன அல்லது நிர்ப்பந்திக்கப்பட்டன என்றும் கொள்ளலாம். ஒரு கெட்டதுக்கும் நல்லதுக்கும் இடையில் ஒரு கோடுள்ளதாகத்தான் இதனைப்பார்க்க முடியும் என்பதுடன் இது தவிர்க்கமுடியாததும் கூட. அந்த வகையில் பிரபாகரன் வழி நின்ற அனைவரையும் தண்டிக்கவேண்டி வருமே? சொத்துச்சேர்த்தது கருணா மட்டுமல்ல புலன்பெயர் புலிப்பினாமிகள் அனைவருமே. ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் மக்களுக்குத்தெரியும் என்னசெய்யவேண்டும் என்று.அந்த வகையில் தற்போது ஓர் பலமான பின்தளமொன்று கிழக்கில் உருவாகி வருவதனை நான் அறிவேன் அதற்கு முட்டுக்கொடுத்து உயர்த்தி உதவ பல புதுக்கரங்கள் தூய்மையாக சிந்தித்து செயலாற்ற அடியெடுத்து வைத்துள்ளதனை தேசம் வாயிலாக பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. இந்த முயற்சிகூட இங்கிருந்து திணிக்கப்படவில்லை அங்குள்ள கைகட்டப்பட்டுள்ள புத்திஜீவிகளின் கோரிக்கையின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுகின்றது. எனவே கருணாவின் இருப்பைப்பற்றியோ அவரது கடந்தகால வரலாறு பற்றி பட்டிமன்றம் வைத்து அரசியல் நடத்தி குட்டையைக்குழப்ப முனைவது காலவிரயம் என்பதுடன் கீழ்நோக்கிப் பயணிப்பதற்கும் சமம். ஒரேஒரு வேண்டுகோள்! இனியும் தமிழனாகப்பிறந்த நாம் தொடர்ந்தும் இயக்கபதாதைகளின் கீழ் அடையாளம் கண்டு தொடர்ந்தும் நமது பலத்தை கூறு போடாமல் தீர்க்கமாக சிந்தித்து ஒன்றபட்டு விட்டுக்கொடுத்து நிம்மதியான வாழ்வு என்ற ஒன்றிற்காக மட்டும் உழைப்போம்!

    Reply
  • thevi
    thevi

    தமிழ் கட்சிகள் இனி என்ன செய்யப் போகின்றன? அவர்கள் இதுவரை புலிகளை வைத்துத்தான் வியாபாரம் நடத்தினார்கள். இனி ஒற்றுமைபட வேண்டும் தன்னைப் போல் சுதந்திர கடசியுடன் இணைய வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார். கருணா என்ன நினைத்து கொண்டிருக்கிறார்? புலியை விட்டால் பேசவும் செயற்படவும் வேறு விடயங்களே இல்லையா? அல்லது தமிழ் மக்கள் தமது நோக்கங்களை அடைந்து எல்லா உரிமைகளும் பெற்று பாதுகாப்பை அடைந்து விட்டார்களா? தானே தனது கடந்த கால குற்றங்களினின்றும் தப்பிக் கொள்ளும் சுய நலத்திற்காக சுதந்திர கடசியுடன் சேர்ந்துள்ளார். மற்றக் கட்சிகளும் தனது குற்றங்களில் இருந்து தப்பிக்க உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறாரா? கருணா என்ன துரையப்பாவா? மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு!

    கருணாவைப் போன்றவர்கள் அரசியலில் செயற்படுவது மேலும் மனித உரிமை மீறல்களையும் பின்னடைவுகளையும் கொண்டு வருமேயொழிய முன்னேற்றங்களை தராது.

    Reply
  • மேளம்
    மேளம்

    //கருணாவை வைத்து குரோதம் பேசி ஆய்வுசெய்வது ஆரோக்கியமற்றது என்பதுடன் மக்களின் வாழ்வுடன் இன்னும் உரசிவிளையாடுவது போன்றே பார்க்கின்றேன்.// Raj

    உண்மையிலேயே இந்தக்கருத்தோடு ஒத்துப்போயே ஆகவேண்டிய நிலையில்தான் இன்றய தமிழன் இருக்கிறான். இதற்கு மேற்குறித்த கட்டுரை எழுதிய, பெயர் குறிப்பிட விரும்பாத, அந்த நண்பரும் விதிவிலக்கல்ல. கருணா ஆட்டைக் கடித்தான்., மாட்டைக் கடித்தான். கூடவந்த குரங்கைக் கடித்தான்… இதையெல்லாம்…. இதையெல்லாம் தலைவன் உத்தரவுக்கமைய கழுவிக்குடித்தான்… என்போர் ஒருரகமும்… அவனே கடித்தான் அவனே பிடித்தான்….. என்போர் இன்னொரு ரகமும் (இது கட்டுரையாளர் பக்கத்துக் கோஸ்டி) … நாமெல்லாம் கூடி எதைக் கிழிக்கப்போகிறோம் அந்த மக்களுக்கு என்ற என்போன்ற திராணியற்ற கூட்டம் ஒருபக்கம்.. அது போகட்டும் கிழக்கு மாகாணத்தில் புடுங்கிக்கொண்டிருக்கிறோமே ஏன் யாழ்ப்பாணத்தில் மட்டும் என்ன? டக்கிளசாரும் அவர் கூட்டமும்….. கழுதை தேய்ந்து கட்டெறும்பான…. இன்னபிற… இயக்கங்களும் மனுநீதி கண்ட சோழன் ஆட்சியா நடாத்துகிறார்கள்…. அடபோங்கையா என்னதான் சொன்னாலும்…. என்னதான் எழுதினாலும்…. நமது மண்டைக்குள் எங்கோ ஒரு மூலைக்குள்…. நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும்…. இந்த பாழ்பட்டுப்போன யாழ்ப்பாணியம் அப்பப்போ நமக்குத் தெரியாமலே வெளிவருது. பாவம் நாம.

    மேளம்

    Reply
  • நெடியவன்
    நெடியவன்

    இதை விடுவம் பல்லி இப்ப வி.பு முன்று தலைவர்கள் கே.பி அறிவழகன் .செம்மலை என்னும் பலர் புலம்பெயர்தேசத்தில்.

    Reply
  • thevi
    thevi

    ஒருவருடைய அரசியலை விமர்சிக்க வெளிக்கிட்டால் அவர் அது செய்தார் இவர் செய்தா என்னா என்பதும் யாழ்ப்பாணி என பிரதேச கீதம் பாடுவதும் தான் உடனடியாக நடப்பது. கருணாவின் அட்டகாசங்களால் எல்லோரும் பயந்து தான் போயிருக்கிறார்கள். பேய்க்கு படையல் செய்வது மாதிரி எதையாவது கொடுத்து குளிர்விக்க எண்ணுகிறார்கள்.

    Reply
  • Vannikumaran
    Vannikumaran

    பேசாம பிரபாகரனின் குற்றங்களை கூட இருந்த கருணாவுக்கு கொடுத்து கருணாவை தண்டித்து மரணதண்டணை கொடுத்து சர்வதேசத்தின் பிடியில் இருந்து தப்பவே கிருமினல் ராஜபக்ச கருணாவை மாலை போட்டு தன் பக்கம் வைத்திருக்கிறாராம் என்று இலங்கையின் உயர் அரசியல் மட்டத்தில் இருந்து கசிந்த ஒருசெய்தி அடிபடுகிறது. அப்படி நடந்தால் அது ராஜபக்ச தமிழர்களுக்கு செய்யும் முதல் உதவியாகும்
    வன்னிக்குமரன்

    Reply
  • palli.
    palli.

    நெடியவன் வேண்டுகோள் ஏற்று தர்காலிகமாக கருனாவை விடுதலை செய்யலாம்; ஆனால் அவர் என்றாவது ஒரு நாள் தண்டிக்கபட வேண்டியவரே..
    //இதில் ஒரு இயக்கமோ தமிழ் கட்சியோ கிழக்கில் ஆரம்பித்து கதிரைபிடிக்க அடிபடவில்லை என்பதை எண்ணி அங்கு பிறந்தவன் என்ற வகையில் பெருமைப்படுகின்றேன்//
    ராஜ் தாராளமாய் பெருமை கொள்ளலாம்; காரணம் விஸம் கொடுத்து நண்பர்களையே கொன்ற மண்னில் பிறந்ததால் பெருமை கொள்வது தவறில்லை; ஈழ விடுதலை போரில் அழிந்த அழித்தை சில பிரமுகர்களை இங்கு குறிப்பிடுகிறேன், இதுக்கும் வடக்குக்கும் ஏதும் தொடர்பா என ஏதும் தெரிந்தால் எழுதவும்;

    வாசுதேவா பரமதேவா இருவரும் சகோதரங்கள் இவர்கள் இருவரும் எதிரணியில் இயங்க யார் காரணம்? பதில் தெரியாவிட்டால் வாசுதேவாவின் துணைவியார் கனடாவில்தான் இருக்கிறார் ஒரு தடவை வந்து கேட்டு பாருங்கோ; வாசுதேவாவுடன் பல புளொட் அமைப்பினர் (பலர் கிழக்கை சேந்தவர்கள் ) விருந்துக்கென அழைத்து கொன்றதுக்கும் வடக்குக்கும் ஏதும் தொடர்பு உண்டா?? பதில் இல்லாவிட்டால் தொடர்பு கொள்ளவும் பிள்ளயானை..

    ஈழத்து ஸ்ராலின் தங்களை விட கிழக்கை சுவாசித்தவர் அதனால் கருனாவுக்கு பல சில தீவீர அத்துமீறல்களை செய்யும்படி வகுப்பு எடுத்தவர், ஆனால் அவருக்கே கருனாவால் மரண தண்டனை விதிக்க பட்டத்துக்கு யார் வடக்கானா காரணம்?? பதில் தெரிய வாய்ப்பில்லை. ஆகவே தொடர்புகளை ஸ்ராலினுடன் வையுங்கள்; அடுத்து இதே தேசத்தில் சில காலத்துக்கு முன்பு படித்தேன் கிழக்கை சேர்ந்த அசோக்கென்பவரை இதே ஸ்ராலின் உத்தரவின் பேரில் பரிஸ்சில் தாக்கியதாக; விபரம் தேவையாயின் தேசத்துடன் வையுங்கள் தொடர்பை; அடுத்து அகிலன் செலவன் என இரு படித்த வாலிபர்கள் 1983ம் ஆண்டு கொல்லபட்டனர் இயக்க கொடுக்கல் வாங்கல்தான் என அந்த காலத்தில் மித்திரன் எழுதியது;அதுக்கு யார் காரணம் வடக்கானா? இப்படி சொல்லி கொண்டே போகலாம் உன்மையிம் மனித குணம் இல்லாத வடக்கானாலும் சரி கிழக்கானாலும் சரி சமுதாயத்துக்கு பிடித்த புற்றுநோய்; ஆகவே அது அகற்றுபடும் வரை எமது இனம் சுகந்திரமாக அல்ல உயிருடன் வாழ்வதே கேள்வி என்பதால் பலரை விமர்சிக்கிறோம்; இதில் பல்லி திசை பார்ப்பதில்லை;

    Reply
  • palli.
    palli.

    கிழக்கு முதல்வரை சந்திக்கும் ஒருவாய்ப்பு பல்லிக்கும் கிடைத்தது; அவர் பேசியதில் கிழக்கு முன்னேற்றத்தைவிட கிழக்கு எப்படி மகிந்தாவிடம் விலை போகிறது காலபோக்கில் தமிழ் என்ற வார்த்தை கூட தீண்டதகாததாக இருக்கும்; இதை தடுக்க என்னால் மட்டும் முடியாது, ஏன் எனது உயிருக்கு கூட உத்தரவாதம் இல்லை; சிலவேளை நான் கூட மகிந்தாவுடன் இனையவேண்டிய சூழல் வரலாம்; இவை அனைத்துக்கும் ஒருவரின் சுயநலமே காரணம் என கவலைபட்டார்; அந்த ஒர்வர் யாரென தேடிவிட்டு மேளம் உங்கள் மேளத்தை சாவுக்கா அல்லது வாழ்வுக்கா என நிதானமாக அடியுங்கள் அல்லது இடியுங்கள் ;

    Reply
  • palli.
    palli.

    /:/பல்லியின் பின்னூட்டத்தில் இருந்து கடைசிவரை அவர் குறிப்பிடும் நாரதர் யார் என்பது புரியவேயில்லை//
    விஜி கமல் பல்லிக்கும் அந்த நாரதரை நார்நாராய் கிழிக்க ஆசைதான்; ஆனால் ஊடக கட்டுபாடு என ஒன்று தேசத்துக்கு உள்ளதால் பல்லி அவரை அறிமுகம் செய்தாலும் தேசம் தணிக்கை செய்துவிடும்; இருப்பினும் அவர்களுக்கு பல்லி தங்களை அம்பலபடுத்த போகுது என்பது மட்டும் இப்போது புரிந்திருக்கும்; பல நண்பர்கள் அவர்கள் முகம்காட்ட எழுதுவார்கள் அப்போது பல்லியும் தன் பங்கை நிதானமாக செய்யும்;

    Reply
  • Sooriasegaram, Mylvaganam
    Sooriasegaram, Mylvaganam

    Mr Raj
    Your comment is nothing different from any devotee of the LTTE. You have said, “Not a single party had been formed in the East province and fighting for leadership”. I think you are suffering from severe memory loss. TMVP was formed in the Eastern province .What happened during the disputes between Karuna and Pillaiyan ?
    Numerous young boys died during the fight between the two murderous factions. During this two good souls went to help the people of Batticaloa and died (Ragu and Thileepan) Karuna and Pillaiyan were responsible for each of these murders respectively.
    You are trying to down play the atrocities by Karuna and Pillaiyan as trying to help the people of Eastern province.
    Ethnic unrest was started by the Sinhala racists not by the Pirabaharan. Unfortunately some visionless people including TULF leaders and People like Pirabaharan and others used it for their own political fantasy. Karuna did not join the LTTE to protect the Tamil.
    If Karuna’s intention were to protect the Tamil people, He would not have killed so many people in Batticaloa and Amparai regions. If he was fond of people of Eastern province, He would have left the LTTE like Kadavul (He is from Kallar) who left the LTTE following massacre of innocent TELO members by the LTTE.
    I do not know your political background. There are so many intellectuals and decent people in Batticaloa and Amparai regions. They want to see a new era without arm culture. As long as Karuna is in the scene, it will never become a reality in their life. Karuna is a product of Pirabaharan, he has learned to deal with issues only through murders.
    Karuna has proven this even after leaving the LTTE by killing so many people, kidnapping over 2000 innocent poverty stricken children to build his own army and massive extortion in the Eastern province. People in the (Batticaloa and Amparai) Eastern province are living in constant fear for over 2 decades. You are encouraging this to continue your selfish motives.

    You are living in an imaginary world, that the people of Eastern province are building a political leadership with Karuna. Every single person expects Karuna to leave the people and go. If Karuna sincerely thinks that the Eastern province should flourish, he should leave the people rather than try to capture the political leadership through armed culture with the help of the government. In a free and fair election, people of Batticaloa and Amparai will not allow Karuna to even contest the election. You need some basic standards to contest the election.
    Please do not undermine the standard of the Eastern province people by portraying Karuna as a leader for them. You have not lived with the people of Batticaloa and Amparai to understand their values.
    Who are these intellectuals supporting to build this dangerous political leadership?
    Why did these intellectuals not come forward to help the victims of Tsunami? Those who not come forward to give even 5 rupees for people of Batticaloa and Amparai during Tsunami, why are they coming now to help the people. These few so-called intellectuals want to return to Sri Lanka and want to get suitable posts for them. They are not worried about the future of the people. I hope, you will work towards the betterment of the people than for your own benefit. People of Batticaloa and Amparai want to see an arm culture free society. If you help them to achieve this, they will select their leadership.
    I sincerely thank this former member of TELO for writing this good article about Karuna. I hope this member will write more on other murderous including TELO members. This will help to alienate this type of people from the decent society.
    By
    Decent man who wants to see a society free from arm culture.

    Reply
  • rohan
    rohan

    கருணாவை வைத்து குரோதம் பேசி ஆய்வு செய்வது ஆரோக்கியமற்றது என்றும் கருணா ‘தலைவர்’உத்தரவில் செய்ட்க விடயங்களுக்கு கருணா எப்படிப் பொறுப்பாக முடியும் என்றும் காரணங்கள் எழுகின்றன.

    இவை வெறும் சமாதானங்கள் என்பது வெளிப்படை. தன் கருமங்களுக்கு அவரே பொறுப்பு எடுக்க வேண்டும்.

    தலைவர் கடவுள் மாதிரி – அவர் தமிழேந்தி, பொட்டு, நடேசனை நீக்கினால் தான் மீண்டும் வந்து இணைவேன் என்று அப்போது அரற்றிய கருணா, இன்று தாம் பிரபாகரனின் கொளகைகளிலும் பிடிவாதத்தாலுமே பிரியும் தீர்மானத்தை எடுத்ததாக ம்காத்மா வேடம் பூணுகிறார். அவருக்கு முண்டு கொடுக்க முனைபவரகள் கருணாவின் கடந்த நாட்களை ஒருமுறை பார்ப்பது நல்லது.

    ஒரு கடையில் வேலை செய்து வந்த ஒருவன் ஒருநாள் பக்கத்துக் கடையில் போய் வேலை கேட்டானாம். கடை முதலாளி, போய் இது வரை வேலை செய்யும் கடையில் கொஞ்சம் குளறு படி செய்து விட்டெள வந்தால் வேலை தருகிறேன் – செய்வாயா, என்றாராம். அவனும் சரி என்றானாம். உடனே கடை முதலாளி, “இத்த்னை நாளாக உனக்குச் சாப்பாடு போடும் அவருக்கே துரோகம் செய்யச் சம்மதிக்கிறாயே – எனக்கு என்ன எல்லாம் செய்வாய் – ஓடிப் போ” என்று துரத்தி விட்டாராம்.

    ஒரு முறை துரோகம் செய்தவன் – கூட இருந்து குழி பறித்தவன் எப்போதும் செய்வான். பிடிபட்டவுடன் கோத்தபாயா தான் பாஸ்போட் தந்தவர் என்று சொன்ன பெருமகன் கருணா.

    ராஜபக்ச குடும்பம் முட்டாள்கள் அல்ல. கருணா ஒரு கறிவேப்பிலையாகத் தான் பயன்படுத்தப்படுவார். அதுவரை அனுபவிப்பதை அனுபவிக்க வேண்டியது தான். இது கருணாவுக்கும் தெரியும். அவரது கூழைக் கும்பிடுகளைப் பாருங்கள்.

    Reply
  • Jaffna Boi
    Jaffna Boi

    Karuna brave warrior
    killed many IPKF

    Reply
  • rohan
    rohan

    கடைசியில் புதினம் இன்று ஒரு மென்மையான வீரவணக்கம் செய்திருக்கிறது!

    Reply
  • கட்டுரையாளர்
    கட்டுரையாளர்

    நண்பிக்கு ஒரு தகவல்! (ஐயோ நான் ஒரு பேப்பர்காரனில்லை)

    நீங்கள் கருணாவின் எந்த மாமனார் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தீர்கள். நான் கருணாவின் மனைவி வித்தியா(நொச்சிமுனை கல்லடி -உப்போடை)வின் தகப்பனாரையே கூறியிருந்தேன். எனக்கு தெரியாது கருணா மாமனாருக்கு எப்போது வாத்தியார் வேலை எடுத்துக் கொடுத்தார் என.

    ராமர் கிருஸ்ணர் தேவர்கள் இந்த ஆக்கத்தை தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தி இதன் நம்பகத் தன்மைக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என கோட்டு கொள்கிறோம்.

    கட்டுரையாளர்.

    Reply
  • ravi
    ravi

    பிரபாகரனின் கண் எதிரே அவரது மகனையும் இலங்கை ராணுவத்தினர் துன்புறுத்தி சுட்டுக்கொன்றுள்ளனர்:”மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’– Posted by TBC in செய்திகள் on 11-06-2009

    விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கொல்லப்படுவதற்கு முன் இலங்கை ராணுவத்தால் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இலங்கை ராணுவத்தின் உயர்நிலை தகவல்களை மேற்கோள்காட்டி “மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ என்ற அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு தயாரித்துள்ள 48 பக்க அறிக்கை “இந்திய -ஆசிய செய்தி சேவை’ நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

    இலங்கையில் முல்லைத்தீவில் மே 18-ம் தேதி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற கடைசிக் கட்ட சண்டையில் ராணுவத்தின் கொடூரமான தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது முக்கிய சகாக்களும் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தது. ஆனால் பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன் இலங்கை ராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டார் என்று மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரபாகரன் பிடிபட்டபோது, இலங்கை ராணுவத்தினருடன் தமிழ் அரசாங்கத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதி ஒருவரும் (வினாயகமூர்த்தி முரளீதரன் என்கிற கருணா) உடன் இருந்துள்ளார். அவரது முன்னிலையிலேயே பிரபாகரன் துன்புறுத்தப்பட்டுள்ளார். ஆனால் ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் பிரபாகரனும் அவரது மெய்க்காப்பாளர்கள் 18 பேரும் கொலை செய்யப்பட்டுவிட்டதாக “இந்திய -ஆசிய செய்தி சேவைக்கு’ அளித்த பேட்டியின்போது கருணா தெரிவித்துள்ளார். இதில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டதை கருணா மறைத்துள்ளார்.

    பிரபாகரன் பிடிபட்டவுடன், இலங்கை ராணுவத்தின் 53வது பட்டாலியனின் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு வைத்து அவரை துன்புறுத்தியதாகவும் மனித உரிமை அமைப்பு தகவல் தெரிவிக்கிறது. பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன்பாக, அவருடைய 12 வயது இளைய மகன் பாலசந்திரனும் உயிருடன் பிடிபட்டுள்ளார். பிரபாகரனின் கண் எதிரே அவரது மகனையும் இலங்கை ராணுவத்தினர் துன்புறுத்தி சுட்டுக்கொன்றுள்ளனர்.

    இலங்கை ராணுவ மூத்த அதிகாரிகளின் நேரடி பார்வையிலேயே இந்த சம்பவங்கள் நடந்திருந்தாலும் அவர்கள் அதை மறைத்துள்ளனர். மேலும் பிரபாகரன் பிடிபட்ட பிறகு, எஞ்சிய விடுதலைப் புலிகள் அனைவரையும் கைது செய்த ராணுவம், அவர்களை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்துள்ளது.

    மேலும் பிரபாகரனின் மனைவி மதிவதனி, உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதை இலங்கை அரசு மறைத்துவருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.”பிரபாகரன் பிடிபட்டாரா என்பதைதான் உலக மக்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர். அவருடைய மனைவி கொல்லப்பட்டாரா, அவரது சடலம் கிடைத்ததா என்பது குறித்து எங்களுக்கு முக்கியமல்ல’ என்று பிரிகேடியர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பேபி சுப்பிரமணியம், கிழக்கு மாகாண முன்னாள் தலைவர் கரிகாலன், புலிகள் அமைப்பின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் யோகரத்தினம் என்கிற யோகி, புலிகள் அமைப்பின் சர்வதேச தலைமையகத்தின் முன்னாள் தலைவர் லாரன்ஸ் திலகர், அரசியல் ஆலோசகர் வி.பாலகுமார், யாழ்ப்பாணத் தலைவர் இளம்பரிதி மற்றும் திரிகோணமலைத் தலைவர் ஈழன் உள்ளிட்டோர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த பிறகு, தற்போது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள

    Reply
  • நண்பன்
    நண்பன்

    இராணுவத்தை விட அதிக கேள்விகள் கருணாவிடம்தான் இருந்திருக்கும். இனியாவது யாரும் ஆயுதகலாச்சாரத்தை முன்னெடுக்காமல் இருக்க இதுவே முன்னுதாரணமாக அமையட்டும்.

    Reply
  • கிழக்கு தழிழன்
    கிழக்கு தழிழன்

    தேசம்நெற் இணையத்தள ஆசிரியருக்கு,
    நீங்கள் முன்னாள் ரெலோ போராளி கதையை கேட்டு கருணா அம்மானை குற்றம் சாடுகிறேர்களே… இம் மண்னில் பிறந்த அனைவரும் தவறு செய்தவர்கள்தான்… ஏன் நீங்களுந்தான்… அம்மான் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கால கட்டத்தில் அவரைப் பார்த்து பயந்தவர்கள்தான் நீங்களும் உங்களுக்கு ஞான உபதேசம் கூறிய முன்னால் ரெலோவும் … இதை முன்னால் விடுதலைப்புலி உறுப்பினர்களும் கிழக்கு தமிழ் அறிவார்கள்… அம்மான் அவர்கள் எங்கு இருக்குராறோ அங்கு ஒரு பலமான களம் இருக்கும் அதுதான் தமிழ் மக்களின் ஆதரவு பலம்…. வேளிநாட்டில் பிச்சை எடுக்கும் தேசம் நெற் ஆசிரியரும் கட்டுரையாளரயும் விட தனது பிறந்த மண்னில் இருந்து கொண்டு தன் உறவுகளுக்காக வாழும் அம்மான் எவ்வளவோ உயர்ந்தவர்…

    நன்றி கிழக்கு கிழக்கு தமிழன்

    Reply
  • கட்டுரையாளர்
    கட்டுரையாளர்

    சகோதரா கிழக்கு தமிழா! இந்த மண்ணில் பிறந்த அனைவரும் தவறு செய்பவர்கள்தான். ஆனால் தவறுகளில் பல வித்தியாசங்கள் உண்டு. தெரிந்தே செய்யும் கொலைகள் மன்னிக்க முடியாதவை. நீங்கள் அம்மானுக்கு ஆதரவாக எழுதுவதாக நினைத்து கொண்டு சேம்சைட் கோல் போடுகிறீர்கள் போல தெரிகிறது. அம்மானைப் பார்த்து பயந்தவர்கள் என எழுதியுள்ளீர்கள். உண்மைதான். அதையே நானும் சொல்கிறேன். அப்பாவிகளான சிறுவர்களையும் சிறுமிகளையும் வைத்துக் கொண்டு பிரபாகரன் கொடுத்த நவீன துப்பாக்கிகளால் மிரட்டுபவன் வீரனல்ல. வீரனுக்குரிய அழகு என்ன என்பதை விடயமறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அம்மான் அவர்கள் எங்கு இருக்குராறோ அங்கு ஒரு பலமான களம் இருக்கும் என்பது உண்மைதான். அம்மான் இருக்கும் இடம் பலமான (கொலை) களம்தான். அம்மான் எப்போதும் பச்சோந்தி போல வெற்றியடையும் அணிக்கே தாவுகின்றார்.

    வெளிநாட்டில் பிச்சை எடுப்பதாக எழுதியுள்ளீர்கள். அதுவும் உண்மைதான். உமக்கு உடல் உழைப்பு என்றால் என்ன என தெரியுமா? இரவு பகல் பாராது வேலை செய்து பழக்கமுண்டா? உடல் உழைப்பில் உள்ள கஸ்டங்களை புரிந்து கொண்டதால் தான் கருணாவைப் போன்றோர் அங்கு இருக்கிறார்கள். மறந்து விட்டீரோ தெரியாது சகோதரனே! கருணாவும் கள்ளப் பாஸ்போட்டில் இங்கு வந்தவர்தான். அவர் மனைவி மக்கள் இங்கு பிச்சையெடுக்கிறார்கள் போலும்.

    மனித உரிமை வழக்கில் உள்ளே போட்டு விடுவார்கள் என்பதாலும் இரண்டு மூன்று வேலை செய்து பிழைப்பு நடத்த வேண்டி வரும் என்பதாலும் அது கஸ்டம் என்பதாலும் தான் கருணா பிறந்த மண்ணிற்கு சேவை செய்ய(தமிழ் மக்களை கொலை செய்ய) கருணா போய்விட்டார் போலும்.

    சகோதரா, எனக்கும் கருணாவிற்கும் தனிப்பட்ட பிரச்சனை இல்லை. பிரபாகரனின் தலைமையில் அட்டூழியங்களும் படுகொலைகளும் செய்து வந்தவர்கள் அழிந்த பின்னால் திடீரென பிறேக்கைப் போட்டு நிறுத்து, நிறுத்து விமர்சனங்கள் தேவையில்லை என சொல்லுவது மனித நாகரீகம் மாதிரி தெரியவில்லை. ரெலேவோ ஏனைய அமைப்புக்களோ தவறு செய்யவில்லை என சொல்ல வரவில்லை. தயவு செய்து ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்- பிரபாகரனின் கட்டளைக்குதான் 600 பொலிஸார் (சரணடைந்த போர்க் கைதிகளை) உட்பட ஏராளம் கொலைகளை செய்த கருணா சரி என்றால் மனித வேட்டையாடிய பொட்டம்மான் உடபட ஏனைய புலித்தலைவர்களுக்கும் சரி மந்திரி பதவி கொடுக்க வேண்டும். ஏன் இந்த ஓர வஞ்சனை?

    Reply
  • Raj
    Raj

    எவர் என்ன சொன்னாலும் இப்பொழுது மகிந்த அரசியல்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. கருணா மட்டும் இல்லாவிட்டாலும் இன்னுமோர் தயாமோகன் தயாராகவே உள்ளார். அதைப்பற்றி வைற்றெரிச்சல் கொள்ளத்தேவையில்லை. மக்கள் கைக்கு அரசியல் முழுமையாக அகப்படும்போது சரியான தலைமைத்துவத்தை அவர்களே தீர்மானிப்பார்கள். அதுவரை எந்தப்பேயாவது இருந்துவிட்டுப்போகட்டுமே. மனிதனாகிய நாம் இன்னுமொருவனுக்கு தீர்ப்பளிப்பதை விட்டுவிடுவோம். அவனவன் செயலுக்கேற்ப ஆண்டவன் கைமாறு அளிப்பான். எல்லாமே கோணலாகிவிட்டது அதனை நேராக்குவதே நம்பணி!

    Reply
  • Ramasamy thasan
    Ramasamy thasan

    சமுதாயம் எப்படியோ அதனது விளைபொருள்களும் அவ்வழியிலேயே இருக்கும். இதில் வடக்கென்ன, கிழக்கு என்ன. இந்திய அதிகாரவர்க்கத்தின் தத்துவமான பார்ப்பனியத்தைமதமென்ற பேரில் காலில் விழுந்து வணங்கும் ஒரு கூட்டம். கதானாயகன் தூக்க பத்துப் பேர் அடி வாங்கி விழுவதை கலை என்ற பேரில் விசிலடிக்கும் ஒரு கூட்டம். வேரோடும் வேரடி மண்ணோடும் மக்கள் மடியும் போதும், ஆடம்பரமாக திருமணம், பூப்புனிதம் என்று ஒரு கூட்டம். அரசியல் என்ற சொல்லின் கதையே இருக்க கூடாது என்ற இயக்கம். இதில் எங்கிருந்து நல்ல விதை முளைக்கும்?

    Reply
  • msri
    msri

    அப்போ முல்லைத்தீவில் தலைவர் உயிருடன் பிடிபட்டு> கருணா அம்மானின் “ராஐசபையில்” அம்மானால் விசாரணை செய்யப்பட்டு> சித்திரவதை செய்யப்பட்டு> (மண்டை பிளந்து) மரணதணடனையையும் வழங்கியுள்ளார்! வரலாற்று முக்கியத்துவம் வாயந்த இந்நிகழ்வு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்!

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளது சித்திரவதை முறையை படையினருக்கு கற்றுக் கொடுக்க கருணா அம்மான், தலைவர் மற்றும் தளபதிகளையே தேர்ந்தெடுத்தாராம். புலிகள் அளவு எதிரி காலில் விழுகிறவர்கள் அல்லது நேர் எதிராக மாறிக் காட்டிக் கொடுப்பவர்களை வேறு எந்த இயக்கத்திலும் காண முடியாது. ஏனைய இயக்கங்களின் கருத்தியல் அரசியல்.புலிகளது கருத்தியல் அரசியல் கொலை.

    Reply