அகாசி இன்று வருகிறார்

வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுவர் ஒருவரை ஜப்பான் இந்த வாரம் இலங்கைக்கு அனுப்புகிறது.  3 நாள் விஜயம் மேற்கொண்டு ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று திங்கட்கிழமை கொழும்பு வருகிறார். யுத்தத்தால் இடம்பெயர்ந்த பொதுமக்களை மீளக் குடியேற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காகவே அகாசி வருகை தருவதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் தேசிய நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்க மற்றும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளை அகாசி சந்திக்கவிருப்பதாக ஜப்பானிய தூதரகம் கூறியுள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுதல் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் தொடர்பான முன்னேற்றம், தேசிய நல்லிணக்கத்திற்கான அரசியல் நடவடிக்கைகள் என்பன குறித்து அகாசி கலந்துரையாடவுள்ளதாக தூதரக பேச்சாளர் தெரிவித்தார். 2003 ஜூனில் நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான நடவடிக்கைகளுக்கு 4.5 பில்லியன் டொலர் உதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதற்கு அகாசி உதவியிருந்தார். பின்னர் 2008 இல் போர்நிறுத்த உடன்படிக்கை முடிவடைந்ததை அடுத்து அந்த நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்தன.

Show More
Leave a Reply to thevi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • thevi
    thevi

    முல்லைத்தீவு கிளிநொச்சி மன்னார் மாவட்டங்களில் உள்ள சகல தனியார் நிலப்பகுதிகளும் அரச நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மூன்று மாவட்டங்களிலும் வாழ்ந்த மக்கள் அகதிகளாக்கப்பட்டு அநாதரவான நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்கள் அவரவர் சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்படும் வரை மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்த சகல தனியார் மற்றும் அரச நிலங்களும் அவசரகால சட்டத்தின்கீழ் உடனடியாக அரசுடமையாக்கப்படவுள்ளன என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தத்தினால் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ள மக்களின் நிலங்கள் மற்றும் உடைமைகளை வெளியார் அபகரித்துக் கொள்வதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த தமிழ்மக்கள் அரசின் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தத்தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவது சாத்தியமாகும் எனவும்அவர்களது அநாதரவான நிலையை வெளியார் துஸ்பிரயோகம் செய்வதை முற்றாக தடுக்கும் பொருட்டே இந்நடவடிககை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது”

    நேற்றுதான் பேசினோம் மகிந்த நிலங்களை அரசுடைமையாக்குவார் என. பொலிஸ் பயிற்சி நிலையத்தோடும் இந்த அரசுடைமையாக்கலோடும் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றம் நடைபெறும். அரசு நிவாரண கிராமங்களுக்கு எடுக்கும் அடுக்குகளைப் பார்த்தால் அவையே அகதிகளாயுள்ளவர்களின் நிரந்தர வசிப்பிடமாக் போகின்றது.

    Reply