அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தூதுக்குழுவினர் புதுடில்லி சென்றுள்ளனர். வடக்கு, கிழக்கு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இக்குழுவினர் இந்தியாவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பாதுகாப்புப் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக இந்திய அரசின் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவே இக்குழுவினர் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழக் கிழமை சென்ற இக்குழுவினர் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதேவேளை, இவர்கள் இந்தியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், இ.தொ.கா. உபதலைவர்களான எம்.மணிமுத்து, செந்தில் தொண்டமான் உட்பட பலர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடு திரும்புவார்கள்.
msri
மலையக மக்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும!
மலையக மக்களுக்கும் மகிந்தாவால் பாதுகாப்பபே இல்லை! இதைச் சொல்லவே ஆறுமுகம் தொண்டமான் இந்தியா சென்றுள்ளார்! ஏற்கனவே வட-கிழக்கு தமிழ்மக்களின் பாதகாப்பிற்கு>இந்தியா “குரங்கு அப்பம் பங்கிட்ட வேலையையே” செய்துள்ளது! இதுவே மலையக மக்களுக்கும்! அது சரி ஆறுமுகத்தையும்> ஆயுததாரி கருணா மாதிரி தன்றை கட்சியிலை சேரச் சொல்லிப்(மகிந்தா) போட்டாரோ!?..