கவிஞர் ராஜமார்த்தாண்டன் 06.06.2009 அன்று அகால மரணமடைந்துவிட்டார். ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர்.
1 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்),
2 என் கவிதை (கவிதைகள்),
3 ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு),
4 கொங்குதேர் வாழ்க்கை – 3 (தொகுப்பு, தமிழினி),
5 புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி),
6 புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி).
நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே முன்வைக்கப்படுகிறார். தொடர்ந்து கவிதைகளின் போக்கையும், கவிஞர்களையும் அவர் உள்வாங்கிக்கொண்டிருந்ததால், இது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. தொடரந்து கவிதைகளை வாசிக்கும் எவரும் ஒருவித தொடர்ச்சியையோ தொடர்ச்சியின்மையையோ காலப்போக்கில் கண்டுகொண்டுவிடமுடியும். மனமாச்சரியங்களுக்கு ஆட்படாமல் தம் கருத்துகளைச் சொல்லும் திறனாய்வாளர்கள் அருகி வரும் நிலையில் ராஜமார்த்தாண்டனின் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழினி வாயிலாக கொங்குதேர் வாழ்க்கை என்னும் தமிழின் மரபு-புதுக்கவிதைகளின் தொகுப்பு வந்தபோது, புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணியை ராஜமார்த்தாண்டன் செய்தார். கிட்டத்தட்ட 93 கவிஞர்களின் 893 கவிதைகளை அவர் தொகுத்திருந்தார்.
தகவல் :இளைய அப்துல்லா
Constantine
I am happy to note that Annas (Illaya Abdullah) is still concentrating in poems/literature. Working in ‘Deepam TV ‘ for long may end up in brain failure.
ஜீவகன், கனடா
மறைந்த கவிதை ஆர்வலர், விமர்சகர் மற்றும் கவிஞர் அமரர் ராஜமார்த்தாண்டனுக்கு அஞ்சலிகள்!
எப்போதும் முடிவில் இன்பம்
“சாவில்தானே முடிவு
காத்திருப்பானேன்
விரைவாகத் தேடிக்கொள்வோம்
எவ்வகையிலேனும்
ஏனெனில்
உடலுடன் நம்
பலவீனங்களும் புதைக்கப்பட்டுவிடும்
கோமாளித்தனங்கள்
மேதமையின் விசித்திரங்களென
ஒளிபரப்பப்படும்
கட்டியிருந்த கந்தல் கோவணத்திற்கும்
மரியாதை கிடைக்கும்
எனவே தான் சொல்கிறேன்
விரைவாய் தேடிக்கொள்வோம்
எவ்வகையிலேனும்”
– ராஜமார்த்தாண்டன் ( “ராஜமார்த்தாண்டன் கவிதைகள்” தொகுப்பில் ..)