வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் முசலி பிராந்தியத்திற்கான இரண்டாம் கட்ட மீள் குடியேற்ற நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு அபிவிருத்தி செயலணித் தலைவர் பஸில் ராஜபக்ஷ்வின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அரிப்பு,சிலாபத்துறை பகுதிகளைச் சேர்ந்த 2216 பேர் உள்ளடங்கிய 515 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.இந்நிகழ்விற்கு மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.அதேவேளை அரச திணைக்களங்களின் தலைவர்கள், இராணுவ, பொலிஸ், கடற்படை உயரதிகாரிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.