பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடையல்ல – 53ஆவது படையணி தளபதி

07-srilanka-army.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல. அதை நாமே அணிவித்தோம் என இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மே 19 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே பிரபாகரன் சண்டையில் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.  53 ஆவது படையணியே பிரபாகரனின் சடலத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிங்கள வார இதழான லங்காதீபவுக்கு வழங்கி செவ்வியிலேயே மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:  (19 ஆம் திகதி) 9.30 மணியளவில் ஆரம்பமான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. காட்டிற்குள் சென்ற எமது சிப்பாய் ஒருவர் என்னுடன் பேசினார். “சேர், பிரபாகரனின் உடல் இருக்கிறது’ என அவர் கூறினார். அவர் அப்படிக் கூறும்போது அதை நம்புவதா இல்லையா என்று தெரியவில்லை. அப்போது சண்டை நடந்துகொண்டிருந்தது.  நான் அந்த உடலைக் காட்டிற்கு வெளியே கொண்டு வருமாறு கூறினேன். எனது பொடியன்கள் (சிப்பாய்கள்) அந்த உடலை எனது காலடியில் கொண்டுவந்து போட்டனர். முழு இலங்கையும் பார்க்க ஆவலாக இருந்த உடலை நான் பார்க்கும் வரை உறக்கமின்றி இருந்தேன். அந்த உடலை தண்ணீரில் இழுத்துக்கொண்டு வரும்போது சுமார் 3000 சிப்பாய்கள் அங்கு கூடிவிட்டனர்.

19ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோதுதான் பிரபாகரன் சண்டையில் கொல்லப்பட்டார். பிரபாகரன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு 2 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுவதெல்லாம் பொய்யானது.

பிரபாகரனை கொன்றது எனது படைப்பிரிவின் சிப்பாய்களே. பிரபாகரன் பற்றி கூறப்பட்ட பல கதைகளில் ஒரு கதை உண்மையானது. அதாவது, பிரபாரகனின் சடலத்திலிருந்த சீருடை பிரபாகரன் மரணடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல. அது பிரபாகரன் மரணமடைந்த பின்னர் எம்மால் அணிவிக்கப்பட்ட ஆடையே. அந்தச் சீருடையை பிரபாகரனின் சடலத்திற்கு அணிவித்தவர்கள் எமது சிப்பாய்களே. அந்த சடலத்தைப் பார்த்த முதல் டிவிசன் தளபதி நானே. என்னால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.

நான் இராணுவத் தளபதிக்கு அழைப்பு மேற்கொண்டு பேசினேன். பிரபாரகனின் சடலம் இருப்பதாக கூறியதும் இராணுவத் தளபதி “ஆர் யூ ஷவர்?’ என்று கேட்டார். “ஷவர் சேர்’ எந்த சந்தேகமுமில்லை. பிரபாகரனின் சடலத்தை நாம் இனங்கண்டுள்ளோம் என நான் பதிலளித்தேன். பின்னர் எனது சகோதரர்கள் போல் பழகிய ஏனைய படைத்தளபதிகளுக்கும் தகவல் தெரிவித்தேன்.

Show More
Leave a Reply to palli. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • palli.
    palli.

    எங்கேயோ இடிக்குதே; இருப்பினும் இன்னும் சிறிது பொறுத்து இதுக்கு ஒரு விவாதம் தொடங்குவோம்:

    Reply
  • vanni
    vanni

    பிரபாகரனை கொன்றது எனது படைப்பிரிவின் சிப்பாய்களே.பிரபாரகனின் சடலத்திலிருந்த சீருடை பிரபாகரன் மரணடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல. அது பிரபாகரன் மரணமடைந்த பின்னர் எம்மால் அணிவிக்கப்பட்ட ஆடையே. அந்தச் சீருடையை பிரபாகரனின் சடலத்திற்கு அணிவித்தவர்கள் எமது சிப்பாய்களே. அந்த சடலத்தைப் பார்த்த முதல் டிவிசன் தளபதி நானே.
    truth.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பிரபாகரனுக்கு மாற்யுடை அணியப்பட்டது ஒருதுளி உண்மையே! பிரபாகரனும் எஞ்சியுள்ள தளபதிகளின் ஆயுதங்கள் நச்சுக்குப்பிகள் கழயப்பட்டு “சர்கஸ்மிருகமாக” இராணுவத்தின் காலடியில் பலமணத்தியாலங்கள் இருந்திருக்கிறார்கள். வித்தியாசமான நேரங்களில் பலர் கொல்லப்பட்டாலும் பிரபாகரன் சூசை இன்னும் சில தளபதிகளும் பலவிதமான நடவடிக்கைகளுக்குப் பிறகு இலங்கை நேரத்தின்படி பத்தொன்பதாம் திகதி மதியத்திற்கு முன்பாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். அநேகமாக காலை எட்டுமணியிலிருந்து பதிரொரு மணிக்கு உட்பட்ட காலங்கலாக இருக்கலாம்.
    பொட்டம்மான்?இன்னும் இராணுவத்திற்கு தேவையாக இருக்கிறது. இவருக்கு மறுபிறவி கிடையாது ஏனெனில் இந்தப்பிறவியிலேயே எல்லாவற்றையும் அனுபவித்து விடுவார். இன்னும் இதுபற்றிய ரகசியங்கள் வெளிவரலாம். அவசர-வைத்தியவாகனத்தில் தப்பிஓடும் போது பிரபாகரன் சூசை பொட்டம்மான் கொல்லப்பட்டசெய்தி அப்பட்டமான பொய். அந்தநேரம் அவர்கள் உயிருடன் இருந்திதிருக்கிறார்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ” தப்பிஓடும் போது பிரபாகரன் சூசை பொட்டம்மான் கொல்லப்பட்டசெய்தி அப்பட்டமான பொய்..”

    இதென்ன்ன புதுக்கதை. எப்ப தொடக்கம் ஸ்ரீலங்கா ஆமி ‘அப்பட்டமான’ பொய் சொல்ல வெளிக்கிட்டிருக்கு?

    Reply