மலை யகத்தில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இடிமின்னலுடன் கடும் மழை பெய்து வருவதோடு பலத்த காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் மின்சார உபரகணங்கள், தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பெட்டிகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது மின்சார உபகரணங்கள் மற்றும் தொலைபேசி முதலானவற்றைப் பயன்படுத்துவதில் கவனம் எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடை மழைபெய்து வருவதால் வரட்சியின் போது வற்றியிருந்த மவுசாக்கலை, காசல் ரீ ,கெனியன், நோட்டன் பிரிட்ஜ், விமல சுரேந்திர நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் விறுவிறுவென உயர்ந்து வருகின்றது. அத்தோடு புதுவெள்ளம் பாய்ந்து வருவதால் நீர்த்தேக்கங்களின் கரையோரத்தில் மீன் பிடிப்பவர்களின் தொகையும் அதிகரித்து வருகின்றது.