அமெரிக் காவுக்கும், உலகெங்கும் உள்ள முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு புதிய ஆரம்பம் வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் அதிபர் ஒபாமாவின் உரைக்கு பெருத்த கரகோஷத்துடனான வரவேற்பு கிடைத்தது.
கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய இந்த உரையில், அமெரிக்காவும், இஸ்லாமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, நீதி, முன்னேற்றம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் பொது அடிப்படைகளை அவை பகிர்ந்துகொள்பவை என்று ஒபாமா கூறியிருக்கிறார்.
முஸ்லிம்கள் பற்றிய மோசமான விம்பத்துக்கு எதிராக தான் போராடுவேன் என்று உறுதி கூறிய ஒபாமா அவர்கள், அதேவிடயத்தை அமெரிக்கா பற்றிய கருதுகோள் குறித்து முஸ்லிம்களும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஒரு நாட்டின் மீது மற்றுமொரு நாட்டினால், எந்த வகையான அரசாங்க முறைமையும் திணிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், ஆனால், அரசாங்கங்கள் அந்த நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
msri
புதிய உறவு ஆரம்பிக்க வேண்டுமானால்> முதலில் பாலன்தீன மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்! இசுரவேல் உங்கள்சொல் கேட்குமா?
palli
நாட்டுகோட்டை செட்டியார் நயினாதீவுக்கு நாக்கு வழிக்க நடந்தே போனாராம்; அப்படிதான் இந்த பின்னோடமும்;
msri
பல்லி! தண்ணியிக்காலை நடக்க வெளிக்கிட்ட செட்டியாரைப் போல>உமக்கும் சிந்தனைத்திறன் மட்டு மட்டுததான்!