இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையில் நடந்த யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களிலிருந்து செயற்பட்ட இலங்கை அரசு மருத்துவர்கள் மூன்று அல்லது நான்கு பேர், தற்போது அரசாங்கத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்ற சந்தேகம் காரணமாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பார்கள் என்றும், அதன் பின்னர் அவர்கள் மீது வழக்கு நடக்கும் என்றும், ஆனாலும் இடைப்பட்ட காலத்தில் மாதம் ஒருமுறை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுவருவார்கள் என்றும் இலங்கை அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Thirumalai Vasan
தெளிவாகச் சொல்லியிருக்கிறார். சமூகத்தில் சேவையாற்ற முனையும் ஒரு ஊழியனை குற்றவாளியாக்கிச் சாகடிப்பதும் சிறையில் அடைப்பதும் எவ்வளவு கொடுமை? புலிகளுடன் சேர்ந்து பணியாற்றினார்கள் என்பது குற்றச்சாட்டு. தமிழ் சமூகத்தின் ஒர பிராந்தியத்தின் சிவில் நிர்வாகத்தைத் தமது கைக்குள் வைத்திருந்த ஒரு அமைப்புடன் தொடர்புபடாது செயல்பட்ட ஒரு அரச ஊழியரையாவது நாம் காண முடியாது. இது யதார்த்தம். அரசுக்கும் இது தெரியாததல்ல. இவர்களைக் குற்றவாளியாக்கிய அரசாங்கம் கூட தேர்தல் காலத்தில் புலிகளுடன் கதைத்தவர்கள் தானே? இந்த அப்பாவி வைத்தியர்களை வதைப்பதில் என்ன நியாயம் உள்ளது? ஒருவருடம் அவர்களை உள்ளே வைத்து மூளைச் சலவைசெய்து உண்டு இல்லை என்றாக்கி அவர்களது வைராக்கியத்தைச் சிதைத்து சர்வதேச அரங்கில் சாட்சிகளை அழிப்பதே இலங்கை அரசின் நோக்கம். இதைச் செய்தியாகப் போடுவதற்கும் மேலாக இந்த வைத்தியர்களின் பணியின் நியாயத்தன்மைக்கு ஆதரவாக தேசம்நெற் குரல்கொடுக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது.
palli
இந்த ஒரு செயலோ அல்லது இவரது வாக்கு மூலமே போதும் இலங்கை அரசை சர்வதேச கோட்டில் விசாரிக்க; இப்படி கண்ணுக்கு தெரியாமல் பல உண்டு; அவையும் விரைவில் வெளிவரும்;
rohan
இம் மருத்துவர்கள் வெளியில் வர முன்னரே அவர்களுக்கு உயர் சமூக சேவை விருதுகள் பரிந்துரை செய்யப்பட்ட போது “அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் சென்று இவ்விருதுகளைப் பெற வேண்டியிருக்கும்” என்று நான் எழுதினேன்.
அப்போது,நான் ஏதொ இவரகள் இறக்க வேண்டும் என்று நான் விரும்புவதாக ஒரு வாசகர் குற்றம் சுமத்தினார். இவர்கள் இராணுவத்திடம் சரண் அடைந்து விட்டதாகவும் ஏதோ இராணுவம் அவர்களை மலர்ப் பல்லக்கில் சுமந்து வந்து வெளியே விடும் என்ற பாங்கில் என்னை கடிந்தார் இன்னொரு கருத்தாளர்.
இவர்கள புலியுடன் கொண்டிருந்த தொடர்புகள் என்ன என்று அறியும் வரை வெளியில் விடக் கூடாது என்றும் யாரோ எழுதியதாக நினைவு.
ஒரு வருடம் சிறையில் வாட இம் மருத்துவர்கள் செய்த குற்றம் என்ன?
பார்த்திபன்
இவ் வைத்தியர்களில் சண்முகராசா ஏற்கனவே படிக்கும் போதிலிருந்தே விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அவரது செயற்பாடுகளும் வைத்தியர் என்பதை விட தன்னை ஒரு விடுதலைப்புலியாகக் காட்டுவதிலேயே அதிகமாக இருந்தது. அதே போலவே இவர்கள் மூவரும் வைத்தியர்களாக செய்த சேவையை விட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அரசுக்கு எதிரான செய்திகளைப் பரப்புவதிலும் முன்னின்று உழைத்தனர். பிரேதப் பரிசோதனைகள் நடத்தாமலேயே ஒருவர் இவ்வாறு தான் இறந்தார் என்று புரளி கிளப்பியதை பிபிசியே பலமுறை அம்பலப்படுத்தியது. தாம் பிரேதப்பரிசோதனைகள் நடத்தாமல் ஊகத்தின் அடிப்படையிலேயே அப்படிச் சொன்னதாகவும் இவர்களும் ஒப்புக் கொண்டிருந்தனர். எனவே அரசு அவர்களை விசாரணை செய்வதில் தவறு இல்லை. ஆனால் விசாரணைகளை வேகமாக நடாத்தி அவர்களில் தவறிருந்தால், அவற்றைப் பகிரங்கப்படுத்தி அவர்களை நீதிமன்ற விசாரணைகளுக்குட்படுத்த ஆவன செய்ய வேண்டும்.