பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய இரு நகரங்களிலுமுள்ள 25 பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அநுராதபுரம் பொலிஸாரும் பொசன் ஏற்பாட்டுக் குழுவினரும் விடுத்த வேண்டுகோளையடுத்தே மாகாண கல்வி அமைச்சு இத்தீர்மானத்தை மேற்கொண்டது.
பொசன் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள சுமார் 7000 பொலிஸாரையும் சிவில் பாதுகாப்புப் படையினரையும் தங்க வைப்பதற்கு இப்பாடசாலைகளைப் பயன்படுத்தும் நோக்கிலேயே விடுமுறை வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.