நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதும் எமது நாட்டுக்கே உரியதுமான ஒரு அரசியல் தீர்வை மிக விரைவில் முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 11வது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் ஏனைய பகுதி மக்கள் அநுபவிக்கும் உரிமைகளை வடபகுதி மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே, அவர்களுக்கான அரசியல் தீர்வை உலகில் எந்த நாடும், அரசாங்கமும் கொண்டுவராத வேகத்தில் முன்வைக்க வேண்டும். ஆனால் அது வேறு ஒரு நாட்டின் மூலம் பெற்றுக்கொண்டதாக இருக்காது. வேறு நாடுகளின் தீர்வு யோசனைகளை ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு எமக்கு நேரமில்லை.
எனவே, எமது நாட்டுக்கே உரிய ஒரு தீர்வையே நாம் காணவேண்டும். அது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தத் தீர்வுக்காக நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம்; மாறாக இடையூறுகளை அல்ல, உலகம் வெற்றிகொள்ள முடியாத சவால்களை நாம் வெற்றிகொண்டிருக்கும் வேளையில், தீர்வொன்றைக் காண்பதற்கு எமக்கு முடியாது என சர்வதேச சமூகம் சந்தேகிக்கின்றதா? இல்லை. எமக்கு இதைச் செய்ய முடியும்’ என்றும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
msri
எமது நாட்டுக்கே உரிய அரசியல் தீர்வென்றால்> அது நடைமுயறயில் உள்ள > பெளத்த+சிங்களப்- பேரினவாத அரசியல் தீர்வுதானோ?
பார்த்திபன்
//நாட்டின் ஏனைய பகுதி மக்கள் அநுபவிக்கும் உரிமைகளை வடபகுதி மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே அவர்களுக்கான அரசியல் தீர்வை உலகில் எந்த நாடும், அரசாங்கமும் கொண்டுவராத வேகத்தில் முன்வைக்க வேண்டும். ஆனால் அது வேறு ஒரு நாட்டின் மூலம் பெற்றுக்கொண்டதாக இருக்காது. வேறு நாடுகளின் தீர்வு யோசனைகளை ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு எமக்கு நேரமில்லை.//
அரசு விரைவாக ஒரு அரசியல் தீர்வை முன் வைத்தால், எந்த மற்றைய நாடும் தலையிட வேண்டிய அவசியம் ஏற்படாது. சகல இன மக்களும் ஏற்றத் தாழ்வுகள் இன்றி தாமும் இந்நாட்டுப் பிரசைகள் என்பதை, உளப்பூர்வமாக உணரும் நிலையை மகிந்தவின் அரசு ஏற்படுத்த வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அதனை அவர் செய்தால் மகிந்தவின் பெயர் சரித்திரத்தில் மட்டுமல்ல தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீங்காதிருக்கும்.