இலங்கையின் முக்கிய பங்காளி இந்தியா – அமைச்சர் போகொல்லாகம

rohitabogallaagama.jpgஅரசிய லமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலாக புதிய தீர்வுத்திட்ட யோசனையானது இப்போது “தீர்மானிக்கப்படும் கட்டத்தில்’ இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்திருப்பதுடன், இதன் மூலம் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகள் அதிகளவில் “உறுதிப்படுத்தப்பட்டவை’யாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.  சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் போகொல்லாகம “இந்து’ பத்திரிகைக்கு இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் “இந்தியாவை முக்கியமான பங்காளியாக’ இலங்கை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இதனைக் கூறியுள்ள அமைச்சர் போகொல்லாகம; “”உள்நாட்டில் உருவாக்கப்படும் (அரசியல்) நடவடிக்கைகளில் இந்தியா எப்போதும் அங்கமாக உள்ளது’ என்று குறிப்பிட்டார். ஆனால் விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான முன்முயற்சிகளை இலங்கை உருவாக்குவது தொடர்பாகவோ அல்லது துரிதமாக முன்னகர்த்துவது குறித்தோ இந்தியா எந்தவிதமான பங்களிப்பை வழங்கமுடியும் என்பது பற்றி அவர் விசேடப்படுத்திக் குறிப்பிட்டிருக்கவில்லை.

புதுடில்லியானது யோசனைகள் உள்நாட்டு மட்டத்திலிருந்து உருவாக்கப்படுவதற்கு மதிப்பளித்துள்ளது. இலங்கை இந்திய உடன்படிக்கையிலிருந்தே அதிகாரப்பகிர்வு தொடர்பான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலமான விளைவையே சட்டமூலம் ஏற்படுத்தியுள்ளது.

புதிய சூத்திரமான “13 ஆவது திருத்தத்திலும் கூடுதலானது’ இப்போது தீர்மானிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறது. இது அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை அதிகளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டதாக கொண்டதாக அமையும் என்றும் போகொல்லாகம கூறியுள்ளார்.

தற்போதைய நடவடிக்கையானது மத்தியில் பிராந்திய மட்டப் பிரதிநிதித்துவத்தை விரிவானதாக்குவதற்கும் வழி வகுக்கக்கூடும். அதாவது இரு சபைகள் என்ற அணுகுமுறை மூலம் பிராந்திய மட்ட பிரதிநிதித்துவத்தை மத்தியில் விரிவுபடுத்துவதற்கு வழிசமைக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக ஜனாதிபதியின் விசேட உரிமையின் பரிமாணம் குறித்து அவர் வெளிப்படுத்தவில்லை. பொருளாதார ரீதியில் இப்போது அபிவிருத்தி நிகழ்ச்சிநிரல் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது இந்தியாவுடன் இருக்கும் வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் சீனா, பாகிஸ்தானின் ஏதாவது அரசியல், அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்களில் சம்பந்தப்பட்ட பங்களிப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர்; வர்த்தகத் துறைமுகத்திற்காக கடனடிப்படையில் சீன அரசு உதவியுள்ளதாகவும் இது சீன ஒப்பந்தக் காரர்களால் நிர்மாணிக்கப்படுவதாகவும் அதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார். பொதுவாகக் கூறினால் எமது பாதுகாப்புத் தொடர்பான தேவைகள், நாம் பெற்றுக்கொள்பவை பற்றி இந்தியாவுக்கு நன்கு தெரியும். ஆதலால், எமது பாதுகாப்பு தேவைகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது தொடர்பாக பகிரங்கமாக ஒலிபரப்புவதற்கான தேவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • msri
    msri

    புலிகளை தோற்கடிக்க> எவ்வளவு தமிழ்மக்களை வேண்டுமானாலும் கொல்லலாம் என ஆலோசனை தந்து> பெரும் கைங்கரியத்தையே செய்தவர்கள்> பங்காளிகள் அல்ல! உங்கள் குடும்ப வர்க்க உறவினர்களே!

    Reply
  • palli
    palli

    இதே போல் புலிகளை காப்பாற்ற எத்தனை அப்பாவி தமிழரையும் பலி கொடுக்க புலிகளுக்கு ஆலோசனை துப்பியது புலம் பெயர் புலிகளா?
    அல்லது புலிவியாபாரிகளா எனவும் கேட்டு சொல்லுங்கோ பிள்ளைகள்;

    Reply
  • நண்பன்
    நண்பன்

    துவக்குக்கு முன்னால சனங்களை விட்டு பின்னால நின்று, உலகம் பார்க்குதா என்று தரவையில நின்று வானத்தை பார்த்தது புலிகள்தானே?

    Reply
  • msri
    msri

    பல்லி நீங்களே ஓர் பெரிய அரசியல் சாத்திரி! புலிகளைக் காப்பாற்ற……..பலிகளுக்கு ஆலோசனை துப்பியது யார் என> போயும் போயும் பிள்ளைகளிடம் கேட்கின்றீர்கள? இனிப் பிள்ளைகள் கேட்கும் சரியான விடைக்கு என் பரிசென்று! அது சரி புலிகளைக் காப்பாற்ற புலம்பெயர்வில்>மாபெரும் மனிதப் பேரவலம் நடந்த மாதிரியெல்லோ சொல்ல வாறியள்!

    Reply
  • thevi
    thevi

    உலகமே சனங்களை வெளியே விடு என புலியை பார்த்து கத்திக் கொண்டிருந்தது. உலகத்திற்கு தெரியும் அது நடவாது ஆனால் தங்களில் யாரும் பிழை சொல்லாமல் இருக்க முன் நடவடிக்கையாக இருக்கட்டும் என எண்ணியது. ஆனால் புலன் பெயர்ந்த புலி பினாமிகளோ பிரித்தானிய பிரதமரையும் கனடா பிரதமரையும் மற்றும அதிகாரிகளையும் வெளியே வா என சண்டித்தனம் விட்டு கொண்டிருந்தது. அதனால் அழிந்து முடிந்தது தமிழ் மக்களே.

    Reply