ஊடக வியலாளரான போத்தல ஜெயந்த மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலை வண்மையாகக் கண்டிப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
நேற்று இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்ட போத்தல ஜெயந்த தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு விடுவிக்கப்பட்டு நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் உழைத்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது மிகவும் கவலையானதாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
thevi
பயங்கரவாதம் ஒழிந்த நாட்டில் சிங்கள புலி அரசியல் ஆரம்பம்!
நண்பன்
பிறந்ததும் பிள்ளை நடக்காது. பொறுங்கோ தேவி
பார்த்திபன்
தெற்கிலுள்ள அரச பயங்கரவாதத்தை , அரசு எப்போது நிறுத்தப் போகின்றது??
நண்பன்
30 வருட தமிழர் பயங்கரவாம் இப்பதானே நிண்டது. பொறுங்கோ….முதல் அடி பாதாளத்துக்கு….அடுத்த அடி மற்றவங்களுக்கு. இது கொழும்பு தகவல்.
இனி அரச படைகள் மட்டுமே ஆயுதம் வைத்திருக்குமாம்.
KUNALAN
//தெற்கிலுள்ள அரச பயங்கரவாதத்தை, அரசு எப்போது நிறுத்தப் போகின்றது??//
பார்த்திபன்! அரசு இப்போதான் புதுக்கணைக்கை தெற்கில் ஆரம்பிக்கின்றது. அது தொடர் கதையாகும் விரைவில்.
எங்கள் குரல் யாரின் காதிலாவது சென்று சேருகிறதோ இல்லையோ../ ஆனாலும் இந்தச் செயலினைக் கண்டித்து தேசத்தின் வாயிலாக நமது கடும் கண்டனத்தை பதிவிடுவோம். நமது குரல்கள் எப்போது ஒன்று சேர்ந்து ஓங்கியொருமித்து எழுப்பப் படுகின்றதோ அன்றுதான் நமது குரல்கள் வலிமையடையும் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் உணர முற்படுவோம்.
குணாளன்.
msri
அந்த இனம் தெரியாதவர்கள்> என்போர் உங்களால் தயாரிக்கப்பட்டவர்களே! பிறகு அதற்கொரு கண்டனம்! பொலிசு நடவடிக்கை! விசாரணை!