தமிழரின் சார்பில் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திரு ஜோன்மெரி யுலியா (பிரான்ஸ்) ஜனனி ஜனநாயகம் (பிருத்தானியா) ஆகியோருக்கு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
பிரான்ஸில் தமிழர் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு. ஜோன் மெரி யூலியா அவர்கள் வெற்றிபெற தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்ஸ் தனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறது.
கடந்த பலவருடங்களாக தமிழர்களின் விடுதலையில் தன்னை இணைத்து கொண்டு உழைத்து வரும் திரு. யூலியா அவர்கள் இன்று தோன்றியுள்ள இறுக்கமான நிலையில் தமிழர்களின் நீதியான போராட்டத்தை உலக அரங்கில் வலுவான நிலையில் உரைக்கும் முகமாக ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இவர் வரலாற்றுத்துறை ஆசிரியராக பணிபுரிந்துகொண்டு இருக்கும்போதே எமது நாட்டின் போராட்ட வரலாற்றை பிற சமூகத்திடம் கொண்டு செல்வதற்கு தனது மொழி அறிவையும், வரலாற்று அறிவையும் அர்பணித்துக் கொண்டவர். 83ல் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பை பிரஞ்சு மக்கள் அறியும் வகையில் பிரஞ்சு மொழியில் “ஜெனசிட் தமிழ்” என்னும் நூலை வெளிக்கொணர்ந்தார்.
அதேபோல் இங்கு பல அரசியல் பிரமுகர்களின் சந்திப்பில் எம்மினத்தின் விடிவிற்கான போராட்டத்தை ஆணித்தரமாக முன்வைத்து அவர்களின் ஆதரவையும், கவனத்தையும் எம் பக்கம் திருப்பியவர்.
இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் எமது நிலைப்பாட்டை தெரிவிக்க முன்வந்துள்ளார்கள். தமிழர்களாகிய நாம் அதற்கான ஆதரவை தெரிவித்து வெற்றிபெற செய்தல்வேண்டும்.
இன்று இலங்கையில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக இயங்கமுடியாத நிலையில். புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அவ்விடங்களில் தேர்தல் நடத்த சிங்கள அரசு திட்டமிட்டு வரும்நிலையில்,
எமக்கான அரசியல் பிரதிநிதிகளை எம்மால் தெரிவுசெய்ய முடியாத நிலையில் எமக்கான பிரதிநிதியை ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு புலம்பெயர்ந்த நாங்கள் தெரிவுசெய்து அனுப்பும் சந்தர்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதனை புலம்பெயர்ந்து வாழும் நாம் சரியாக உபயோகித்துக் கொள்வதினூடாக எமது சுதந்திரத்தை உறுதிசெய்ய முடியும்.
எம்மில் பலர் எத்தனையோ தேசிய கட்சிகளிற்கு ஆதரவாய் இருந்தாலும் எமது பொதுப் பிரச்சனையை முன்வைத்து ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு.யூலியா அவர்களை கட்சி பேதமின்றி ஆதரித்து எமது மக்களின் விடுதலையை முனைப்பு பெறவைக்க வேண்டும்.
இவரின் வெற்றிக்காக அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொள்வதுடன் பிறநாட்டு நண்பர்களின்; ஆதரவையும் திரட்ட உழைக்கவேண்டுமென தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இதே வேளையில் லண்டனில் போட்டியிடும் இளம்தலைமுறை செல்வி. ஜனனி ஜனநாயகத்தின் வெற்றிக்கும் எமது வாழ்த்துடன் கூடிய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு – பிரான்ஸ்
பார்த்திபன்
அப்ப பிரான்ஸிலும் ஒரு கூத்தமைப்பு இருக்குதோ?? அப்ப கட்டாயம் வெற்றி தான். இவர்கள் இருவரும் வெற்றியீட்டி பின் தாம்பாளத்தில் எமக்கு தமிழீழத்தை எடுத்துத் தருவார்கள். அதனை யார் பெற்றுக் கொள்வது என்பது பற்றி எமது அடுத்த கட்ட நடவடிக்கையில் தீர்மானிப்போம்….
thurai
தமிழரென்றால் புலி புலிகளென்றால் தமிழர். ஈழத்தமிழரின் விடுதலை, விடிவு என்பன புலத்துத் தமிழரை மயக்கும் வார்த்தைகள். தமிழரைக் காக்கபுறப்பட்டு சிங்களவரிடம் பலி கொடுத்தது போதும். இனியாவது தமிழரின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவதை புலத்தில் முதலில் நிறுத்தவேண்டும். சொந்தப் பெயரையும் ஊரையும் சொல்லி புகழ்பாடுங்கள்.
துரை
Mohamed
I’m sorry for the dissapointing message. Our Jane can’t win. Simple but more accurate prediction is that.
Point 1. 57 MEPs have been allocated to UK. And Grater London area will elect only 8 MEPs. UKIP and Lib.Dem. are going to get more seats than what they got last election. It doesn’t mean the Labour and Conservative do not get any. Therefore any independent candidate will win 0 seat.
Point 2. Only the Lib.Dem has been behind our disapora for what ever reasons in the very recent past. If Tamils do cast their vote for Lib.Dem they may get one or more seats and it may make them work closely with Tamils. If considerable amount of votes go to Jane and Lib.Dem come to know that they may feel bit odd. So Tamils votes are in vai.
Advice to Jane: No party in the UK has made the Tamils question as one of their party policies like Palstine issue of the Respect party. Why can’t you Jane join Lib.Dem and make Tamils question to be their party policy in the annual meeting and in return you may make the Tamils to vote for them. Why can’t you plan for longer term rather than short one.
If you withdraw you can atleast save £5000 deposit and send it to IDPs in Sri Lanka. I heard that you are approached by …. and financed by them. Don’t make grave mistakes at the outset of your political career.
I heard your interview on a Tamil radio and you told the listerners that you had no policy other than the Tamil issue, but all of a sudden your political manifesto says so many things, which you have no idea at all.
The next general election in the UK will be crucial. No Labuor or Conservative will get overall majority. Therefore a hung parliament is eminent. The Lib.Dem won’t support Conservative. Therefore the Labour Lim.Dem coalition will be the answer. Why don’t you think about it.
you can’t make the EU policy upside down. European Parliament only debate the issue, but the EU policies are draffted at European Commission.
Why Jane? Think twice. Two more days to go. Withdraw your candidacy and plan you political career wisely. We are behind you, but not at this time.