காணாமல் போன ஏர் பிரான்ஸ் விமானத்தை தேடும் பணியில் பிரேசில் நாட்டு விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் தலைநகருக்கு வடகிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஃபெர்ணாண்டோ டெ நொரானோ எனும் தீவிலிருந்து பிரேசிலின் வான்படை விமானங்கள் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்த விமானம் அட்லாண்டிக் பெருங்கடலை பெருமளவில் கடந்த நிலையில் காணாமல் போயுள்ளதால், இந்தத் தேடுதல் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும் என்று பிரேசிலிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். காணாமல் போன விமானத்ததை தேடும் நடவடிக்கையில் செனிகல் நாட்டிலிருந்து பிரெஞ்சு இராணுவத்தின் வேவு பார்க்கும் விமானம் ஒன்று ஈடுபட்டுள்ளது.