சானியா மிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம்

27-saniamirza.jpgடென்னிஸ் உலகின் இளம் புயல் சானியாமிர்சா. தனது மின்னல் வேக ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ் சிலாம் வென்று சாதனை படைத்தார்.
 
டென்னிஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சானியாமிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது. அவர் சிறு வயது முதலே தன்னுடன் படித்த சோரப்மிர்சா என்பவரை மணக்கிறார். இருவரும் நெருங்கிய உறவினர்கள்.  சோரப்மிர்சா ஐதராபாத்தில் பேக்கரி, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது தந்தை கம்ரான் மிர்சா ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
 
சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சாவும், கம்ரான் மிர்சாவும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சானியா மிர்சா  சோரப் மிர்சா திருமண நிச்சயதார்த்தத்தை ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது.
 
நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று சோரப் மிர்சாவின் உறவினர்கள் தெரிவித்தனர். சானியா மிர்சாவின் திருமணம் பற்றி அறிந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறும்போது, சானியா மிர்சா திருமணத்திற்கு பிறகும் டென்னிஸ் ஆடவேண்டும் என்றனர்.

Show More
Leave a Reply to Ranjan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Ranjan
    Ranjan

    வாழ்த்துக்கள் சானியா.
    கொஞசக் காலத்துக்கு முன்னாலை ஒரு வதந்த்தி வந்தது. எங்க சுப்பர் ஸ்ரார் ரஜனி சானியாவைத் தன்னோடை ஒரு படம் நடிக்கக் கேட்டதாயும் சானியா, வேணுமெண்டால் அவர் என்னோடை ரென்னிஸ் விளையாட வரட்டும் எண்டு சொன்னதாயும். உணமையோ தெரியாது.

    Reply