தமிழினி கைது

thamilini_.jpgவிடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சிவதாய் எனப்படும் தமிழினியும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக  முகாமிலிருந்த போது படையினரால் முன்தினம் மாலை விஷேட பொலிஸ் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்படும் போது அவரது தாயாரான கௌரி விஜயராஜா மற்றும் சகோதரியான சுப்ரமணியம் மகேஸ்வரி ஆகியோரும் கூடவே இருந்துள்ளனர்.

புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி வந்த பொதுமக்களுடனேயே இவர்கள் மூவரும் வந்துள்ளனர் என்று அவர்களிடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு வருகை தரும் போது தன்னிடமிருந்த சயினைட் குப்பி மற்றும் துப்பாக்கி போன்றவற்றை கடலில் எறிந்துவிட்டு வந்ததாகவும் விசாரணைகளில் அவர் கூறியுள்ளார் இவர்களை முகாமிலிருந்த பொதுமக்கள் அடையாளம் காணவில்லை என்பதாலேயே இத்தனை காலம் அங்கு தங்கியிருந்துள்ளனர்.

தனது மற்றுமொரு சகோதரியான சாந்திலன் என்பவர் பரந்தன் பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டுள்ளதாகவும் தமிழினி கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட தமிழினியிடம் பாதுகாப்புத் தரப்பினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • chandran.raja
    chandran.raja

    இன்றைக்கு சரியாக பதின்நான்கு மாதங்கள் கழிந்துவிட்டது. தமிழ்மக்களிடையே பரவலாக பேசப்பட்ட பெண்மணி. இவரை யாரோ தவறுதலாக வழிநடத்த இவர் மற்றவர்களை தவறுதலாக வழிநடத்தி வந்திருகிறார். இதையாரும் மறுக்கமுடியாது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தலைக்மேல் மீறிப்போக உயிர்குடிக்கும் அடயாளமான சயினட் துப்பாக்கிகளை தூரஎறிந்து விட்டு உயிர்காக்க அரசின் கட்டுபட்டுக்குள் வந்து பாதுகாப்பு தேடியிருக்கிறார்.

    மனிதகுல வரலாறு சமயங்களும் வேதங்களும் மன்னிப்பதற்கு தான் முதலிடம் கொடுத்திருக்கிறது. மனித உயிரை பட்டினி போடுவதாலோ கொல்லுவதாலோ எதையும் சாதித்துவிட முடியாது. இதற்கு அரசும் விதிவிலக்கல்ல. மாறாக அபகீர்த்தியே ஏற்படும். மகிந்த ராஜபக்சாவாக இருக்கட்டும் தமிழினியாக இருக்கட்டும் தமது சூழ்நிலைகேற்ப வளர்ந்து வந்தவர்களே! இருவரும் இலங்கைதீவின் புத்திரன் புத்திரிகளே!.

    யாருக்கும் மரணதண்டனை கொடுப்பது எந்த தர்மத்திலும் நியாயப்படித்தி விட முடியாது. இன்பத்தையும் துன்பத்தையும் சாதுவதப்படுத்தி சலனமில்லாத முகத்தோடு இருக்கிற புத்தனின் முகத்தைப்போலவே இலங்கை தேசமும் இருக்கவேண்டுமென்று கனவு காண்கிறோம்.
    தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல. ஒரு சூழலில் ஏற்பட்ட கைதிகளே. மகிந்தாவிற்கு ஏற்பட்ட சூழல் ஜானதிபதி ஆக்கிற்று. தமிழினிகேற்பட்ட சூழல் பயங்கரவாதி ஆக்கிற்று.

    இதை உணருவதால் மட்டுமே நாம் புத்தன் முகத்தைப் போல சிறந்த ஒருஇலங்கையை நாம் உருவாக்கமுடியும். இலங்கையில் உள்ள அறிவாளிகள் அரசியல்வாதிகள் கேள்விக்கு-விசாரணைக்கு இடமல்லாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கிற தமிழினி போன்ற கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இது நடக்கும் பட்சத்தில் தமிழனில் இருந்து கூட ஒரு புத்தன் உருவாவதை இலங்கைமக்கள் தரிசிக்கமுடியும். இந்த தரிசனம் சிவனொளிபாத மலையைவிட கூடியஒளிவீச்சை இதிலிருந்து காணமுடியும்.

    Reply
  • BC
    BC

    நீங்கள் கூறுவது சரி. இந்த பெண்மணியை தவறாக வழிநடத்திய தலைமை அழிய போகுது என்ற நிலை வந்தபடியால் தான் சயினட்டையும் துப்பாக்கியையும் எறிந்தார். புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்களின் தலைமையை காப்பாற்றும் முயற்ச்சி நிறைவேறியிருந்தால் இவர் தொடர்ந்தும் பலவந்தமாக பிடிக்கப்படும் பிள்ளைகளை தவறுதலாக அழிவுக்கு வழிநடத்தி கொண்டிருப்பார்.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    (தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல. ஒரு சூழலில் ஏற்பட்ட கைதிகளே. மகிந்தாவிற்கு ஏற்பட்ட சூழல் ஜானதிபதி ஆக்கிற்று. தமிழினிகேற்பட்ட சூழல் பயங்கரவாதி ஆக்கிற்று.)
    is the same applies for pirabhakaran?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    தமிழினி சென்ற 2009 ஆண்டு ஜூன் மாதமே கைதானதாக செய்தி வந்திருந்தது??!!.
    “தலை”, “எஸ்கேப்” ஆகி, சிறிது மனநிலை பாதிப்புடன், “பில்லியன் டாலர் கேள்வி” சொத்து விவகாரங்களில், நேரடியாக காய்களை நகர்த்தி வருவதாக, வதந்தியிலிருந்து விலகி உண்மையான செய்தியாக மாறுவதாக நம்புவது, உறுதியாகி வருகிறது!.

    Reply
  • Mohan
    Mohan

    நண்பர்களே, இன்னுமா புரியவில்லை. தமிழினி கைதுசெய்யப்பட்டது பல மாதங்களுக்கு முன்னர். அதுகுறித்த செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தன. அவர் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து பணியாற்றுவதாகவும் செய்திகள் வந்தன.
    இப்போது புதிய செய்தி…. கேபியுடன் அரசியலில் களமிறக்கப்படவிருக்கிறார். அதற்காகத்தான் இப்போதுதான் கைதானதுபோல நாடகம். ராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஒருவர் தேர்தலில் குதித்தால் மக்கள் நிராகரிக்கலாம் என்பதால் இப்படியொரு ஏற்பாடு.

    Reply
  • Silambu
    Silambu

    தொடர்ந்து சகலதையும் மன்னிப்பதனால் மன்னிக்கப்படுவோம் என்பதனால் தவறுகளைத் துணிந்து செய்யும் நிலை உருவாகும் என்பதை யாரும் மறக்கக் கூடாது. மன்னிப்பு மட்டுமே மனித் கொள்ளை எனக் கொண்டால் கோடு எதற்குக் கச்சேரி எதற்கு. கடவுள் தண்டிப்பால் எப்பதால் தானே பயத்தில் பக்தியே வருகிறது. தமிழினியை பற்றி நன்கு அறிந்தவர்கள் இவர் சகபோராளிகளை நடத்தியவிதம் மனித வர்க்கமே ஏற்காது. அதிகாரவெறி ஆணவம் மற்றவர்களை மதிக்காத தன்மை கொண்ட இவரை மன்னிக்கவேண்டும் என்று கூறுகிறீர்களே இவரால் கண்மூடித்தனமாகத் தண்டிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா? போராடவரும் ஒரு பெண்போராளி தனக்காக வரவில்லை அதற்காக எவரும் நினைத்தமாதிரி நடத்தக் கூடாது. இவருக்கு மட்டுமல்ல கே.பி போன்றவர்களுக்கும் சரியான தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். தமது பிழைகளை மற்றவர்களின் தலையில் அல்லது கடவுளின் தலையில் போட்டுவிட்டு தாம் தப்பிக் கொள்ளும் சமூகம் எமக்கு வேண்டாம். தமது காரியங்களுக்கு தாமே பொறுப்பேற்கும் சமூகம் மட்டுவே எமக்குத் தேவையானது. பிரபாரனை மட்டும் சாட்டிவிட்டு யாரையும் தப்பவிடுவது முட்டாள்தனமானது. அவர் தலைமை தாங்கினார் என்பதற்காக கே.பி> தமிழனி போன்றவர்களை விட இயலாது. இவர்களும் பொறுப்புவாய்ந்த பதவிகளில் இருந்தவர்களே.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    பிள்ளைகாள் இந்த செய்தி வெளியானது மே 29 2009ம் ஆண்டில். ஒரு வருடம் கழித்து பின்னூட்டம் விட்டு விளாசித் தள்ளுறீங்கள்.

    இது மோகனின் பின்னூட்டம்
    //கேபியுடன் அரசியலில் களமிறக்கப்படவிருக்கிறார். அதற்காகத்தான் இப்போதுதான் கைதானதுபோல நாடகம். ராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஒருவர் தேர்தலில் குதித்தால் மக்கள் நிராகரிக்கலாம் என்பதால் இப்படியொரு ஏற்பாடு//
    இப்போதுதான் கைதானதுபோல நாடகம்?? தொடருங்கள்…..

    சிலம்பு உங்களுக்கு ஒரு வருடம் எடுத்திருக்கு தமிழினி பற்றி விமர்சிக்க. பிரபாவை விமர்சிக்க எவ்வளவு காலம் எடுக்கும் உங்களுக்கு??
    கேபி தமிழினி பொறுப்பான பதவிகளில் இருந்ததவர்கள்; தண்டனை பெறத்தான் வேண்டும் என்றால் பிரபாவுக்குக் கிடைத்த தண்டனை சரியானதொரு முடிவு எனவும் எடுத்துக் கொள்ளலாம்தானே?

    Reply