இந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்.. எங்கள் கனவு.. எங்கள் உழைப்பு.. எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்று அத்தனையையுமே இழந்துவிட்டோம்..இனியென்ன எல்லாம் முடிந்து விட்டது.. இனி பத்திரிகைகளில் மட்டுமல்ல இணையத்தளங்களிலும் எழுதுவதில்லை அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் மக்களிற்கு ஏதாவது செய்தாலே போதும் என்று முடிவெடுத்து மூடிக்கொண்டு இருந்துவிட்டேன்..
ஆனாலும் முடியவில்லை..காரணம்.. இப்பொழுது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று சர்ச்சையில் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இரண்டாக பிரிந்து ஒரு சண்டை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்.. ஒருவர் மற்றவரை சாதாரணமாய் நலம் விசாரிப்பது போலவே அவர்களிற்குள் துரோகிகள் என்று கூறிவிட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்.. புலிகளின் வெளிநாட்டு விவகாரங்களிற்கான பேச்சாளர் பத்மநாதன்.. 24ந்திகதி பிரபாகரனும்.. அவரது பிள்ளைகளும் யுத்தத்தில் இறந்து விட்டார்கள் என்கிற அறிவிப்பே..இத்தனைக்கும் காரணம்..அவரின் அறிவிப்பு வெளியான உடனேயே வெளிநாடுகளில் உள்ள ஒரு குழுவினர்..பத்மநாதன் விலைபோய்விட்டார் துரோகி என்றுவிட்டு அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே அவசரமாக நெடுமாறன் அவர்களுடனும் வைகோடனும் தொடர்பு கொண்டு பிரபகரன் இறக்கவில்லை உயிரோடதான் இருக்கிறார் என்று ஒரு அறிவிப்பை விடவைக்கின்றனர்.
வழைமை போலவே அதிகமாய் உணர்ச்சி வசப்படும் வை.கோ அவர்கள் இந்த விடயத்திலும் உணர்ச்சி வசப்பட்டு பத்மநாதனின் இந்த அறிவிப்பு துரோகத்தனமானது என்று ஒரு வசனத்தையும் சேர்த்தே சொல்லி விட்டார்.. இவர்கள் இருவரும் புலிகளின் ஆதரவாளர்களே தவிர புலிகளின் பேச்சாளர்களோ உறுப்பினர்களோ அல்ல..இவற்றுக்கிடையில்.. யாரென்று இதுவரையில் கேள்விப்பட்டே இருக்காத பெயர்களிலும்.. இல்லாத படையணியின் பெயரிலும் கூட பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற அறிவிப்புக்கள் வெளியாகிக் கொண்டிருந்தபோது புலிகளின் அரசியல் பிரிவில் எஞ்சியிருக்கும் மட்டு..அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவின் பொறுப்பாளர் தயாமோகனும் பிரபாகரன் இல்லை என்பதனை ..பி.பி.சி. தமிழ் ஓசையூடாக உறுதி செய்தபொழுது தயாமோகனும் துரோகியாக்கப்பட்டார்..
பிரபாகரனிற்காக அஞ்சலிநிகழ்வு செய்த ஜி.ரி.வி. என்கிற தொலைக்காட்சி சேவையின் ஊழியர்கள் மிரட்டப்பட்டார்கள். (அவர்கள் மிரட்டப்படுவது இது முதல்தடைவையல்ல) ஜி. ரி்வியும்..எதற்கு வம்பு என்று .. பிரபாரனிற்கான அஞ்சலி நிகழ்வினை இடைநிறுத்தியது..சரி இனி இவர்களிற்கு யார்தான் வந்து உறுதிப்படுத்தவேண்டும்.. இறந்து போன பிரபாகரனே திரும்பவந்து நான் இறந்துவிட்டேன் நம்புங்கடா.. என்று சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா??அப்படி நடந்தாலும் பிரபாகரனும் துரோகியாக்கப்படுவார்.. 34 ஆண்டுகள் ஒரு ஆயுத விடுதலைப்போராட்டத்தினைநடத்தி.. கொண்ட கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு வீரனிற்கு ஒரு பூவினைப்போட்டு மனதார அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் மக்களை குழப்பியடித்து முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மாற்றுக்கருத்தாளர்களோ..இலங்கையரசோ அதன் கூலிகளோ அல்ல..
புலிகளின் வெளிநாட்டு பணியகங்களின் பொறுப்பாளர்களே இத்தனை அசிங்கங்களையும் நிறைவேற்றுகின்றனர். காரணம் இறுதியாக அவசரகால நிதியென்று புலம்பெயர் தமிழர்களிடம் இவர்கள் சேகரித்த பல மில்லியன் யுரோக்கள் அந்தந்த நாட்டுப் பொறுப்பாளர்களிடமே முடங்கிப்போயுள்ளது. எதிர்பாராதவிதமாக புலிகளின் தலைமையில் அத்தனைபேருமே அழிக்கப்பட்டு விட்டதால்..இனி யாரிற்கும் கணக்கு காட்டத் தேவையில்லையென்று நினைத்து புலம்பெயர்தேசங்களில் உள்ள மக்களிற்கும் கடவுள் ஒருநாள் வருவார் என்பதைப்போல பிரபாகரன் இருக்கிறார்.. ஒருநாள் வருவார்..என்று கதைவிட்டுக்கொண்டே காலத்தை ஓட்டிவிடலாமென்று நினைத்தவர்களிற்கு. பத்மநாதன் மற்றும் தயாமோகனின் அறிக்கைகள் இடியாய் இறங்கியிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை..புலிகள் இனி அரசியல் ரீதியான ஒரு போராட்டத்தினை முன்னெடுப்தற்கு வெளிநாடுகளில் அரசியல் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் முயற்சிசியில் இறங்கிருக்கிறார்கள் என்கிற செய்தியாலும் இவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள் அப்படி ஒரு கட்டமைப்பு உருவானால் அவர்களிடம் தங்கள் கணக்குகள் சொத்துக்கள் பற்றிய விபரங்களையும் கையளிக்கவேண்டிவிடும் என்பதே இவர்களது பயம்..
சரி ஒரு வாதத்திற்கு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றுவைத்தாலும்..புலிகளின் தளபதிகள் தங்கள் இறுதிக்கணம் வரையும் சட்டிலைற் தொலைபேசி வசதியுடன் உலகில்அத்தனை பகுதிகளிற்கும் தொடர்பு கொண்டபடியேதான் இருந்தனர்..இது அனைவரிற்கும் தெரிந்த விடயம்…பத்மநாதன் மற்றும் தயா மோகனது அறிக்கைகளால் உலகத்தமிழர்களது நிலை குழப்பமடைந்து அது ஈழத்தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளிற்கு தடையாக அமைந்து அவர்கள் சோர்வடைந்து விடுவார்கள் என்றுகூட சிந்திக்கத்தெரியாமல் 34 ஆண்டுகால போராட்டத்தினை நடத்தியவரல்ல பிரபாகரன்…அவர் எங்கு மறைந்திருந்தாலும் சில நிமிட உரையையாவது பதிவு செய்து சட்டிலைற் தொ.பே மூலம் உலகத்தமிழர்களிற்கு தெரியப்படுத்தி தமது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று நிச்சயம் அறியத் தந்திருப்பார்..
ஏனென்றால். 88ம் ஆண்டு இந்தியப்படை ஆக்கிரமிப்புக்காலத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று இந்திய ஊடகங்கள் எழுதியதில் அது பொதுமக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியபொழுது அன்று இந்தளவு தொழில் நுட்பவளங்கள் இல்லாதபொழுதும் பிரபாகரனின் 3 நிமிடங்கள் அடங்கிய பேச்சை பதிவுசெய்து போராளிகளால் மக்கள் கூடும் இடங்களில் சிறிய ரேப்றிக்காடர்களில் ஒலிக்கவிடப்பட்டு அவரது இருப்பு உறுதிசெய்யப்பட்டது..சரி் அவர் பத்மநாதனின் அறிக்கையை வெளியான பின்னர் பிரபாகரன் உயிருடன் இருந்தும் பதில் அறிக்கைகள் விடாமல் இருக்கிறார் என்றால் அவரும் பத்மநாதனின் அறிக்கையை ஏதோ காரணங்களிற்காக ஏற்றுக்கொள்கிறார் என்பதுதானே அர்த்தம்..
ஆனால் வெளிநாடுகளின் பொறுப்பாளர்கள் மட்டும் ஏற்கமறுப்பதற்கு அவர்கள் சொல்லும் சப்பைக்காரணம் வெளிநாடுகளில் உள்ள தமிழ்மக்கள் மனமுடைந்து விடுவார்களாம். வெளிநாட்டு தமிழர்கள் மனமுடைந்து போனால் அதனை ஒட்டவைக்க ஆயிரம் வழிகளுண்டு இரண்டு நாள் அழுது விட்டு மூன்றாவது நாள் வழைமைக்கு திரும்பி விடுவார்கள். ஆனால் இறந்து போன பிரபாகரனை இன்னமும் வாழ வைப்பதன் மூலம் மேலும் சட்டச்சிக்கல்களை உருவாக்கி வவுனியாவில் முட்கம்பிகளிற்கு பின்னால் நாளை என்ன நடக்குமென்றே தெரியாமல் எதிர் காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிர்காலம் என்ன??? சிந்திப்பீர்களா??
இதற்குமேல் என்னால் வாழைப்பழத்தை உரித்து அவர்கள் வாயில்வைத்து. ஒரு தடியால் வயிற்றிலும் தள்ளிவிட முடியாது. எம்தலைவனிற்கு அஞசலி செய்யத்தடையாய் நிற்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டு துரோகமும் வஞ்சகமும். புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் பணியக பொறுப்பாளர்களினால் நடத்தைகளினாலும் அவர்களால் அள்ளிவீசப்பட்ட வாக்குறிதிகளினாலும். புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் பணியக பொறுப்பாளர்களினால் நடத்தைகளினாலும் அவர்களால் அள்ளிவீசப்பட்ட வாக்குறிதிகளினாலும். உலகநாடுகளின் ஏமாற்று உறுதி மொழிகளினாலும் அழிக்கப்பட்ட ஈழப்போராட்டத்தின் இறுதிநாட்கள் பற்றிய விரிவான அடுத்த பதிவொன்றுடன் சந்திக்கிறேன் நன்றி.
நன்றி : சாஸ்திரி புளொக்ஸ்பொட்.
arasaratnam
நன்றி தேசம்நெற் இன்னுமொரு சரியான அஞ்சலி நிகழ்வை இந்த தலைவருக்கு செய்ததிற்கு. நன்றி சாத்திரி அவர்களே உண்மை நிலையை உணரத்தி அடுத்து என்ன என்பதையும் சரியாக எடுத்து வைத்துள்ளீர்கள் – உங்களுடன் சேர்ந்து தலைவருக்கு நானும் அஞ்சலி செலுத்துகிறேன்
/இறந்து போன பிரபாகரனை இன்னமும் வாழ வைப்பதன் மூலம் மேலும் சட்டச்சிக்கல்களை உருவாக்கி வவுனியாவில் முட்கம்பிகளிற்கு பின்னால் நாளை என்ன நடக்குமென்றே தெரியாமல் எதிர் காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிகாலம் என்ன???சிந்திப்பீர்களா??//
கோடி பெறும் உங்கள் கருத்து இது இருக்கும் தமிழர்களை காப்பாற்ற நாம் செயலாற்ற வேண்டும். சாத்திரி அவர்கள் முன்வைத்த மிக முக்கியமான கருத்து இது. சரியான நேரத்தில் சரியாக கருத்தை வெளிப்படத்தி மக்களை காப்பாற்றியுள்ளார். நன்றி.
thevi
” எங்கள் கனவு.. எங்கள் உழைப்பு.. எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..”
உங்களை நினைக்க பரிதாபமாய் இருக்கிறது. பொய்யான கற்பனைகள், கணிப்பீடுகள்………
இதுவரை நீங்கள் நடத்தியது விடுதலைப் போராட்டமல்ல.
“இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் ”
எப்படி இவ்வளவு நடந்தும் உங்களால் பொய் சொல்ல முடிகிறது?
santhanam
படு முட்டாள்களிற்கு முடவனின் வலி எங்கே விளங்கபோகிறது.
பார்த்திபன்
யாழ் இணையத்திலும், ஒரு பேப்பரிலும் ஒரு புலிப்பினாமியாக அட்டகாசம் செய்தவர் இந்த சாத்திரி என்ற சிவானந்தம். அன்று உண்மை நிலைகளை யாழ் இணையத்தில் எழுத முற்பட்டவர்களையெல்லாம் துரோகிப்பட்டம் கட்டி சந்தோசப்பட்டவர், இன்று தலைவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிச்சை கேட்பது வேடிக்கையிலும் வேடிக்கை. இன்று இக்கட்டுரையை யாழ் இணையத்திலோ, ஒரு பேப்பரிலோ விட முடியாது தனது புளக்கில் மட்டுமே விட வேண்டிய நிலையை ஏற்படுத்தியதில், இவரின் செயற்பாடும் நிறையவே உண்டு. விதைத்த வினையை தற்போது அறுவடை செய்கின்றார்.
BC
இவர்கள் தான் தங்கள் ஆதரவு ஊடகங்கள் முலம் புலம் பெயர்ந்த தமிழர்களை படு முட்டாள் ஆக்கியவர்கள். அவர்களுடை இந்த முயற்ச்சி மிகவும் வெற்றி. ஆனால் தங்கள் தலைவரை பற்றிய செய்தியே இப்படியாகி போனபோது கவலைப்படுகிறார்கள்.
BC
//உண்மை நிலையை உணரத்தி அடுத்து என்ன என்பதையும் சரியாக எடுத்து வைத்துள்ளீர்கள்//
எவ்வளவு ஊடகங்கள் வைத்திருந்தும் இன்னும் உண்மை நிலையை உங்களால் உணரவைகக முடியாமல் உள்ளது.இவ்வளவு காலமும் புலம் பெயர்ந்த மக்களை பொய் கூறி உசுப்பேத்தி கனவு உலகத்தில் வைத்திருந்தீர்கள்.
ப்ரியா...கனடா
பிரபாகரன் இருக்கிறாரா?? இல்லையா?? என்று புலம் பெயர்ந்தவர்களுக்குச் சரியான விடை தெரியாதுதான்.. இருந்தாலும் அவர்களினது நம்பிக்கைக்கு வேட்டு வைப்பதற்கு நீங்கள் யார்??? அவருடன் நின்று கடைசி நிமிடம் வரை களமாடிய போராளிகளா?? அவர் உயிருடன் இருந்தால் மக்களுக்கு ஒரு சிறு அறிக்கையை வெளிப்படுத்தி அவரின் இருப்பை உறுதிசெய்திருக்கலாம்.. அது சரியாண கூற்றாக இருந்தாலும் ஏதேனும் காரணத்துக்காக அவர் அதை செய்யாமலும் இருந்திருக்கலாம் இல்லையா?? 88 ஆம் ஆண்டும் 2009 ஆம் ஆண்டும் ஒன்றல்லவே!! அன்று செய்ததை இன்று செய்யலாம் என்று நியாயப் படுத்தாதீர்கள் !
அடுத்ததாக அவர் இறப்பை உறுதிசெய்ய உங்களிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருப்பின் நீங்கள் அவருடைய இறப்பை முழுமைப்படுத்தலாம்..அல்லாவிடின் தயவு செய்து புலம் பெயர் மக்களை முட்டாள்களாகவும் நீங்கள் பெரும் புத்திசாலியாகவும் விபரித்து உங்களை நீங்களே ஏமாற்றாதீர்கள் !
அனோஜன்
இந்த சாத்திரி முன்னை நாள் புளொட்காரர். பின்னை நாளில் புலிகளின் பீரங்கி. ஆனால் புளொட்டை தெரியாதவர் போல் புலியாகி அனைவரையும் யாழில் துரோகியாக்கி எழுதியவர். புலிகளுக்கு உதவிய ஒரு கம்யூனிச நண்பருக்காக ஒரு கனடா வாழ் இலங்கை பெண்ணை விபச்சாரியாக்கி எழுதியவர்.
இவரது தொலைபேசி மணி அடித்ததாம். இவர் சட்லைட் போனில் அங்கு விழும் மரணங்களின் சத்தமாக இருந்ததாம். தலைவர் போனதும் இவருக்கு தெரிவிக்கப்பட்டதாமோ? அடப்பாவி நீயெல்லாம் மனுசனா? உண்ட வீட்டுக்கே துரோகம் செய்யிறிர்? இல்லை, கேபீயோடு சேர்ந்து ஜனநாயகம் பேச முயல்கிறிர். எனவே உம்மை கணக்கெடுக்காத புலத்து புலித் தலைமைகளை பழிவாங்க இறங்கிவிட்டிர்.
நல்ல காலம் ஐநாவுக்கும் , அமெரிக்காவுக்கும் , இந்தியாவுக்கும் பேசிக் கொண்டிருக்கும் போது தலைவரை போட்டுட்டாங்கள். என் ஓடர் சற்று தாமதமாகிவிட்டது என்று எழுதாமல் விட்டிர்? அடுத்த இதழில் அதையும் சேர்த்து எழுதும். புளுகு மூட்டை.
உம்மை மாதிரி …….. தலைவர் உயிர் போனது……………..
பார்த்திபன்
ப்ரியா,
பொதுவாகவே பிரித்தானியா மற்றும் கனடாவில் “புலன்” பெயர்ந்த தமிழர்கள் அதிகம் என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு. ஒருவர் இல்லை என்று வாதாடுவதற்கு ஆதாரம் காட்டுவதை விட இருக்கின்றார் என்பதற்கு நிறைய ஆதாரம் காட்டலாம். அந்த வகையில் தாங்கள் பிரபாகரன் இருக்கின்றாரென்பதற்கு எந்த ஆதாரம் வைத்திருக்கின்றீர்கள். இல்லையேல் நீங்கள் எழுதிய “தயவு செய்து புலம் பெயர் மக்களை முட்டாள்களாகவும் நீங்கள் பெரும் புத்திசாலியாகவும் விபரித்து உங்களை நீங்களே ஏமாற்றாதீர்கள்” என்பது உங்களுக்கும் நிறையவே பொருந்தும்.
accu
ப்ரியா கனடா, பிரபாகரனின் இறந்த உடலை நீட்டி நிமிர்த்தி வளத்திக்கிடக்கு இனியும் என்ன ஆதாரம் தேடுகிறீர்கள். இதில் புலம் பெயர் மக்கள் முட்டாள்கள் இல்லையென்று விலாசம் வேற தேவையா?
KUNALAN
சாத்திரி! தாங்களும் புதுமாத்தளனில் களத்தில் நின்று வீர காவியமானதாக அல்லவோ ஒருபேப்பர் வாசகர் வட்டாரத்தில் கதை உலாவியது… பின் எப்படி…? என்னால் நம்ப முடியவில்லை. சாத்திரி உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் உண்மைதானா என்பதை ஒரு பேப்பர் வாசகர்களுக்கு தேசம்நெற் நிரூபித்தாக வேண்டும். வீரகாவியமான சாத்திரிக்கு என்போன்றோர் எப்போதோ அஞ்சலி செலுத்தியுமாகி விட்டது. எம்மால் அஞ்சலி செலுத்தப்பட்ட ஒருவர் தேசத்தில் எழுதுகிறார் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இருந்திருந்தால் இப்படியெல்லாம் தேசத்தில் எழுத மாட்டார். ஏனென்றால் அவரது எழுத்து எப்படியான கத்திக் கூர்மையானது என்பதை நாம் ஒரு பேப்பரில் படித்து வந்திருக்கிறோம். முடிந்தால் நக்கீரன் போன்ற பத்திரிகை ஒன்றில் சாத்திரியின் இன்றைய புகைப்படம் ஒன்றை முன் அட்டையில் பிரசுரியுங்கள் நம்புகிறோம். அல்லது சாத்திரியும் ஜெயபாலனும் கட்டிப்பிடித்தபடி ஒரு படமெடுத்து தேசத்தில் போடுங்கள் நம்ப முயற்சிக்கிறோம். இருந்தாலும் ஒரு விசயத்தைப் பார்த்தால் கொஞ்சம் சந்தேகமாகவுந்தான் கிடக்கு…
“போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..” என்று எழுதுவதைப் பார்த்தால் இது சாத்திரி சொல்வது போன்ற சாயலில் உள்ள பொய்யும் புளுகும்தான். அப்படியானால்…. இன்னுஞ் சாகேல்லையே…?
குணாளன்
Kulan
எனது கட்டுரையைத் தொடர்ந்து இப்படி ஒரு கட்டுரை வெளிவந்தது மிக நல்லது. புலிகளே புலிகளை விமர்சிக்கத் தொடங்கியது ஆரோக்கியமானதே. புலிகள் என்றும் விமர்சனங்களையோ சுயவிமர்சனங்களையோ ஏற்பதில்லை. அதனாலேயே செய்த அதே பிழைகளை தொடர்ந்தும் செய்து கொண்டிருந்தனர். உண்மைகளை அவர்களின் நன்மைக்காகவும் எம் சமூக நலனுக்காக நாம் கூறினாலும் துரோகி என்று உடன் நாக்கூசாது கூறுவார்கள். புலம் பெயர்ந்து புலிப்புண்ணாக்குகளுக்கு துரோகி என்றால் என்ன? அதன வரவு இலக்கணம்தான் என்ன என்று பாடம் நடத்தவேண்டி இருக்கிறது. எதிரியை தன்னினத்துக்கே உலைவைப்பவர்களைக் காட்டிக் கொடுப்பது துரோகமல்ல. எதிரிகள் என்றும் எதிரில் எம்பார்வையில் இருப்பார்கள். இவர்கள் நடவடிக்கைகள் அவதானிக்கவும் கவனிக்கவும் படலாம். துரோகிகள் எம்முடனும் எமக்கருகிலும் அவதானிக்க முடியாதவாறு இருப்பார்கள் என்பது தான் உண்மை. பலவருடங்களுக்கு முன் இதை நான் ஒரு கவிதையாக வடித்திருந்தேன். இன்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் புலிகளின் துரோகிகள் யார்? புலிகளா? விமர்சகர்களா?
Kulan
தலைவன் போனபின் எங்கோ சிலர் சிந்திக்க முயற்சிக்கிறார்களே என்பது மகிழ்ச்சிதானே. மனம் திருந்துவர்களை ஏற்று இணைத்து நாமும் போகாவிட்டால் எமக்கும் புலிகளுக்கும் என்ன வித்தியாசம். இக்கட்டுரையை பிரசுரித்தது மட்டுமல்ல கட்டுரையாளரை ஏற்றுக் கொண்டமைக்காக நான் தேசம் நெற்றுக்கும் பின்நோட்டம் விடும் முன்நோக்குடைய அன்பர்களுக்கும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். இன்றும் புலி; புளொட்; ரெலே; ஈபிஆர்எல்எவ் என்று சகல இயக்கங்களையும் எச்சங்களையும் களைந்து விட்டு அங்குள்ள மக்களின் நலனுக்காகவும் பொது எதிரிக் கெதிராகவும் இணைந்து செயற்படுவதே சாலச்சிறந்தது. முக்கிய கவனத்திற்கு பொது எதிரி இன்று குறிவைப்பது புலம்பெயர் தமிழர்களில் என்பதை அறிக.
DEMOCRACY
சரி் அவர் பத்மநாதனின் அறிக்கையை வெளியான பின்னர் பிரபாகரனுயிருடனிருந்தும் பதில் அறிக்கைகள் விடாமல் இருக்கிறார் என்றால் அவரும் பத்மநாதனின் அறிக்கையை ஏதோ காரணங்களிற்காக ஏற்றுக்கொள்கிறார் என்பதுதானே அர்த்தம்../—,வெள்ளாலர் என்பது ஜாதியை குறித்து குறிகிய நோக்கத்தில் எழுதவில்லை. புலம் பெயர்ந்தவர்களில் பலர் இதை ஒரு சமூக அந்தஸ்தாக (தோல்வியடையும்)பயன் படுத்துவது, அனைவருமறிந்ததே.
இலங்கைத் தமிழரில், வெள்ளாலரல்லாத புலம்பெயர்ந்தவர்களும்தான் அவலப்படும் மக்கள் மீது அக்கறையில்லாமல், “ஜாதிய அமைப்பை” மேற்குலக திரிபுகளுக்கு உட்படுத்தி, தற்போது பஞ்சாப்- சீக்கியர்கள் போல், தமிழகத்தின் திராவிட?- சமூகநீதியின் பக்கம் நிற்கிறார்கள். இந்த “சோஷியல் சிஸ்டத்தில்” அடிப்பட்டு நிற்பது, “மனிதத் தன்மைதான்”. ராஜபக்ஃஷே கூறுவது போல, “ஹேம் ஃபார்ன் சொலூஷன்” என்பது ஒரு வகையில் நியாயமாகப் படுகிறது. காங்கிரஸ் “தேரா அமைப்புகளை” தூண்டுவது என்பது காலனிய இரத்தம் தொடர்ந்து ஓடுவதை பிரதி பலிக்கிறது. ஜாதிப் பிரச்சனை துணைக் கண்டத்தின் “பிரத்தியேகமானது”, முள்ளின் மீது போட்ட சேலைப் போன்றது. தற்போது, இலங்கையைப் பொறுத்தவரையில், மனிதத்தன்மையுடன் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து தெருவில் இறங்க வேண்டும். “வீழ்ந்த (வியாபாரிகளால்) வே.பிரபாகரன்” மீது “கருணாவுக்கு(வினாயக மூர்த்தி முரளிதரன்)” உள்ள மதிப்பையும், இலங்கையர் (தமிழர்)மீது “மகிந்த ராஜபக்ஃஷே” வுக்கு உள்ள அக்கறையையும், இந்தியர்கள் மதிக்க வேண்டு என்பதுதான் யதார்த்தம். அவர்கள்(தமிழர்) போராடினால் ஆதரவு தரவேண்டும். பார்க்க:http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=66367&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=
மாயா
அடடா, இந்த சாத்திரி யாழில் போட்ட குத்தலாட்டம். இறந்து போன புஸ்பராஜனின் புத்தகத்தை தவறு என்றும் அதையே திருத்தி புலிகளுக்கு சார்பாக எழுதியவர். புஸ்பராஜன் இறந்த போது அவரை கீழ்த்தரமாக விமர்சித்தவர். பாவம், செத்த மனிதன் எழுந்து வந்து பதில் சொல்ல முடியாது.
//எதிரிகள் என்றும் எதிரில் எம்பார்வையில் இருப்பார்கள். இவர்கள் நடவடிக்கைகள் அவதானிக்கவும் கவனிக்கவும் படலாம். துரோகிகள் எம்முடனும் எமக்கருகிலும் அவதானிக்க முடியாதவாறு இருப்பார்கள் என்பது தான் உண்மை.- குலன் // சொல்வது போல எதிரிகளை ஏற்றுக் கொள்ளலாம். இப்படியான துரோகிகளை ஏற்றுக் கொள்வது கத்திமேல் கழுத்தை வைப்பதற்கு சமன். இவர்கள் தன் சுயநலத்துக்காக மீண்டும் மாறுவார்கள். இன்னொருவர் கழுத்தறுப்பார். இவர்களை மக்கள் ஒதுக்க வேண்டும். இவர்களை இணைத்துக் கொண்டு ஒரு விமோசனமும் ஆகாது. சாத்திரியும் , சாந்தி வவுனியனும் யாழில் அடித்த லூட்டி தாங்க முடியாது. அதில் நாடகம் வேறு போட்டார்கள். தங்களைத் தவிர அடுத்தவர்களை படுத்திய ஏளனம். பிரபாகரனை மாவீரனாக ஏற்றுக் கொள்ள என்னால் முடியும். இறுதிவரை தன் கொள்கையோடு இருந்து போராடியவர். இவரல்லாம் பச்சோந்திகள். சமூகம் இவர்களை பெரியவர்களாக்கக் கூடாது. இவரது உண்மையான முகத்தை காட்டுவதற்கு இக் கட்டுரையை இணைத்த தேசத்துக்கு நன்றி.
பார்த்திபன்
//தலைவன் போனபின் எங்கோ சிலர் சிந்திக்க முயற்சிக்கிறார்களே என்பது மகிழ்ச்சிதானே. மனம் திருந்துவர்களை ஏற்று இணைத்து நாமும் போகாவிட்டால் எமக்கும் புலிகளுக்கும் என்ன வித்தியாசம்.- kulan //
தங்கள் கணிப்பு மிகவும் தவறானது. சாத்திரியின் வருத்தம் தலைக்கு பகிரங்கமாக அஞ்சலி செலுத்த முடியவில்லையே என்பதே. மற்றும்படி சாத்திரியாவது திருந்துவதாவது. என்றும் மக்களை முட்டாள்களாக்கி வைத்திருப்பதே இவரின் தலையாய கடமையாகச் செய்பவர்.
KUNALAN
குலன் என்னதான் சொல்ல வருகிறீர்கள்…? புலி காலாவதியாகி விட்டது அதனால் ஏனைய இயக்கங்களையும் இழுத்து மூடச் சொல்லுகிறீர்களா? அதெப்படி? தேசம் மக்கள் போராட்டம் விடுதலை அர்ப்பணிப்பு என்றுதான் எல்லா இயக்கங்களும் புறப்பட்டன. எல்லாத் தலைமைகளையும் போராளிகளையும் அழித்தொழித்துவிட்டு பிரபாகரன் தான் மட்டும் தமிழரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரேயொரு ஏகப் பிரதிநிதியாகிக் கொண்டான். எஞ்சிய போராளிகள் தங்கள் தங்கள் இயக்கத்துடன் ஈழமண்ணில் நிலைகொள்ள முடியாத நிலையையும் பிரபாகரனும் அவனது புலிகளும் ஏற்படுத்தின. எண்பதுகளில் எதிரிக்கு எதிராகப் போராடியபோது இயக்கங்களுக்கு தரித்து நிற்க ஒரு தாயக நிலப்பரப்பு பிடிமானமாயிருந்தது. ஆனால் இயக்கங்கள் எல்லாவற்றையும் அந்த மண்ணிலிருந்து புலிகள் தடை செய்த பின் அவர்களால் தெற்கிற்கு மட்டுமே போக முடிந்தது. உயிரோடு இருப்பதற்கான குறைந்த பட்ச உத்தரவாதம் இருந்தது. ஆனால் எதிரியிடம் கிடைத்த குறைந்தபட்ச உயிருத்தரவாதம்கூட புலிகளிடமிருந்து கிடைக்கவில்லை. ஆனால் இங்கிருக்கும் நாம் எல்லோரும் இவர்களை அரசாங்கத்தின் எடுபிடிகள் என்றும் ஒட்டுப்படை என்றும் வசைபாடுவதில் எந்தக் குறையும் விட்டு வைக்கவில்லை. இப்போ அவர்கள் தமிழ்ப் பிரதேசங்களில் அரசியல் நடத்துவதற்கான வாய்ப்பாகக் கருதுகிறார்கள். நடத்தட்டும். நன்றாகவே அரசியல் நடத்தட்டும். இவர்களில் யார் தேவை என்பதையோ அல்லது யாருமே தேவையில்லை என்பதையோ அங்கு வாழும் மக்கள் தீர்மானிக்கட்டும். எல்லா இயக்கங்களையும் இழுத்து மூடும்படி சொல்வது எனக்கு உடன்பாடாகப் படவில்லை.
இத்தனை காலமும் புலியின் கொடுமைகளுக்குள் மக்கள் துன்பப் படும்போது எங்காவது புலிகளை நோக்கி ஒரு வரி எழுதியிருப்பீர்களா “மக்களின் நலனுக்காக செயற்படுங்கள் இல்லையேல் புலி இயக்கத்தை மூடுங்கள்” என்று. உங்களால் முடியாது. ஏனென்றால் புலியின் கொலைக்கரம் புலம்பெயர்ந்தும் நீழும் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் அடக்கி வாசித்தீர்கள். இப்போ இளகின இரும்பைக் கண்டது போல மற்றைய இயக்கங்களுக்குக் கட்டளை போடுகிறீர்கள். புலியும் புலித் தலைவனும்தான் தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் என்று ஏற்றுக் கொண்ட கூட்டத்ததில் குலனும் சேர்ந்து விட்டிருந்தால்த்தான் இப்படி ஒரு கருத்தை அவரால் முன் வைக்க முடியும்.
சாத்திரி மனம் திருந்தி வருவதை (அவர் மனம் திருந்தவில்லை என்பதும் மீண்டும் பொய்யும் புரளியும்தான் எழுதுகிறார் என்பதும் சாத்திரியின் இந்தக் கட்டுரையிலேயே நிறையத் தெளிவாகின்றது) இருகரம் நீட்டி வரவேற்கும் குலன் ஏன் ஏனைய அமைப்புக்கள் மக்களுக்காக உழைப்பதற்கு மனம் மாறி வருவார்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. புலி அழிந்துவிட்டது எனவே மற்றவர்களும் இருக்கக்கூடாது என்ற பரந்த எண்ணமா குலனுக்கு?
குணாளன்
thevi
“முக்கிய கவனத்திற்கு பொது எதிரி இன்று குறிவைப்பது புலம்பெயர் தமிழர்களில் என்பதை அறிக”/kulan
புலம் பெயர்ந்தவர்கள் இலங்கையில் வெட்டிக்கிழிக்க ஒன்றுமில்லை. தாயகம் தேசியம், சுயநிர்ணயம் என்பதையோ வர்க்கப் புரடசி, புதிய ஜனநாயகம், முதலாளித்துவ ஜனநாயகம், மனிதஉரிமை என்பன போன்ற வார்த்தை ஜாலங்களை செவிமடுக்கும் நிலை அங்கில்லை. புலம் பெயர்ந்தவர்கள் வெற்று வேட்டுக்கள். அவர்களை தள்ளி விட்டு இலங்கை சமூகம் தனது பாதையை தேர்வு செய்து கொள்ளும். புலன்பெயர்ந்தவர்களை பப்பாசி மரத்தில், முருங்கை மரத்தில் ஏற்ற வேண்டாம்.
KUNALAN
//புலிகளே புலிகளை விமர்சிக்கத் தொடங்கியது ஆரோக்கியமானதே.//குலன்.
என்ன குலன்! இது உங்களுக்கு அப்படியா படுகின்றது. உங்கள் எழுத்துக்களைப் படித்து உங்கள்மீது எனக்கொரு மதிப்பு உண்டு. சாத்திரி போன்றவர்களின் இந்த எழுத்துக்களையெல்லாம் பார்த்து நீங்கள் எப்படித்தான் இப்படியொரு அபத்தமான முடிவுக்கு வந்தீர்கள். இந்தச் சாத்திரியானவர் இத்தனைகாலம் செய்துகொண்டிருந்த எழுத்துவிபச்சாரம் உங்களுக்குத் தெரியாதென்று நினைக்கிறேன். எத்தனையெத்தனை சமூக அக்கறையுள்ள மனிதர்களையும் இலக்கியவாதிகளையும் முன்னைநாள் போராளிகளையும் மிகக் கேவலமாகவும் தரக்குறைவாகவும் எழுத்து விஷம் கக்கி உளவியல்ரீதியாக சாகடித்தான் தெரியுமா?
“தப்பி ஓடிய சிங்கத்தைக் கட்டி இழுத்து வந்தது”போல் இந்த சாத்திரி எப்பயடா அம்பிடுவான் லெவ்ற் அன்ட் றைற் என வாங்கலாம் என்று பலர் காத்திருந்தனர். அந்த வகையில் இந்த சாத்திரிச் சிங்கத்தை வாலில் கட்டிவந்து தேசம்நெற் மக்கள் முன் நிறுத்தியுள்ளது. தேசம்நெற் வாசகர்களே! இதோ! இதுதான் மக்கள் மன்றமாய் நினைத்து சாத்திரியாருக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து அனுப்புங்கள்.
குணாளன்
Kulan
பாத்திபன்:மாயா! சாத்திரி பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி. எனக்கு சாத்திரி பற்றி தெரிந்திருக்க வில்லை என்பது உண்மை. அனுபவங்கள் தானே எதிர்காலத்தின் திறவுகோல். பின்நோட்டங்களில் இருந்து பலவிடயங்களை அறியக்கூடியதாக இருக்கிறது. மேலும் புலிகளே பிரபாகரனுக்கு செய்யாத அஞ்சலியை தேசம் சில கட்டுரைகள் மூலம் செய்திருந்தது நன்றிக்குரியதே. நான் இப்ப சிந்திப்பது என்னவென்றால் இறந்தகாலம்தான் எதிர்காலத்துத்தில் திறவுகோல். அதாவது அனுபவம்தானே வாழ்க்கை. எமது சமூக அமைப்பில் தானாக அனுபவங்களைப் பெற்று வாழ்க்கையை நெறிப்படுத்து விடமாட்டார்கள். பெற்றோர் உறவினர் என்று தமது அனுபவங்களை எமக்குள் திணித்து எம்மை வழிநடத்த முயற்சிப்பார்கள். நாம் வாழும் புலம்பெயர்ந்த நாடுகளிலோ தொழிலகங்களில் மட்டுமல்ல பலதிலும் அனுபவம் கேட்பார்கள். புலிகளின் அழிவில் எம்சமூகம் என்தைக் கற்றுக்கொண்டது என்பதை அலசி ஆராய்து கொண்டு அந்த நல்ல கெட்ட அனுவங்கள் எம்மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உதவாதா என்பதே எனது நப்பாசை
lio
குணாளன் இதுமட்டுமல்ல. வேறு பலரும் இப்படி கொண்டுவரப்பட வேண்டியவர்கள். கொலைக்களத்திற்கு அல்ல விமர்சனக்களத்திற்கு இன்னும் சில ஊடகங்களும் குறிப்பாக ஜபிசி நேற்று இரவு 8மணி செய்தியில்……..இவர்களையும் ஒருநாள் விமர்சிப்போம்.
Palan
Thesamnet may increase his hits by republishing these kinds of one sided adulation/adoration pieces.
We can easyly say nobody is perfect. But I would say Rajapakshe is close to near perfect and Prabhakaran is anti thesis for perfect. A Psychopathic megalomaniac- that is what Prabhakaran.
palli
உன்மையில் இப்போது பரிதாபத்துக்கு உரியவர்கள் புலிபோல் தெரியவில்லை; ஏதாவது மக்கள் பற்றி ஒரு கட்டுரை வந்தால் அதுக்கு இரண்டோ அல்லது மூன்றோ தான் பின்னோட்டம் விடுவார்கள்; ஆனால் பிரபாவை பற்றியோ அல்லது புலி பற்றியோ கட்டுரை வந்தால் ஜம்பதை தாண்டும் பின்னோட்டம்; இதில் பல்லியும்தான்; புலியை அழிக்க தமிழர் கொடுத்த விலை மிக பெரியது(மக்களின் உயிர்; விபரம் அறியாத போராளிகள் ; ராணுவத்தின் உயிர்; உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏன் புலி தளபதிகளின் உயிரும்தான்) அதன் பின்னும் அது பற்றி வெறுவாய் சப்புவதில் பலன் இல்லை; புலியை விட நாம்தான் தற்ப்போது புலி விசுவாசிகளாக புலி மந்திரம் பாடுகிறோம்; இதில் எழுதும் பலர் வேறு அமைப்பை சார்ந்தவர்கள்தான்;
கழகம் செயல் இழந்த போது எந்தனையோ முதல் கட்ட தளபதிகள் உலகம் பூரா அகதியாக வாழ்வை தொடங்கினார்கள், ரேலோ; ரெலா, ஈரோஸ்; ஈபிஆர்எல்எவ்; ஈஎன்டிஎல்எவ்; ஏன் றயாகரன் அமைப்பு உட்பட இது தானே நடந்தது, இதனால் அந்த அமைப்புகள் அழிந்து விட்டனவா?? அதேபோல் புலியும் ஏதாவது ஒரு நாட்டில் அகதியாக நாம்பட்ட துன்பம் அவஸ்த்தை, அவமானம் அவர்களும் படட்டுமே, சாத்திரியை போன்றோரின் கருத்து வரவேற்க்கபட வேண்டும்; அதுக்குரிய பதிலை நாம் நிதானமாக கொடுக்கலாம்,அதை விட்டு அவர் துரோகி அவர் எப்படி எழுதலாம் எனகேப்பது புலியின் அடக்கு முறைக்கு நிகரானதே; அத்துடன் யாருடைய எழுத்தையும் தடுக்கும் உரிமை தேச நிர்வாகத்துக்கே இல்லை; அவர்கள் தணிக்கை மட்டுமே செய்யலாம்; அப்படி யாரின் எழுத்தையும் தேசம் மறுக்குமாயின் தேசத்துக்கு எதிரான முதல் விமர்சனம் பல்லிதான் எழுதும்;
சாத்திரி எமக்கு எப்படி புலி பிரச்சனை தெரியுமோ அப்படிதான் உங்களுக்கும் தெரியும், உங்கள் கருத்து உன்மையானால் கூட அதுவும் ஊகம்தான், ஆகவே இந்த பரபரப்பு பாணியில் தேசத்தை மாற்றாமல் இதுவரை வேப்பிலை அடித்து அடக்கி வைத்திருந்த புலி பேய் பிடித்தவர்களை உங்கள் சுயவிமர்சனம் மூலம் மாற்ற முயற்ச்சி செய்யவும்; தாங்கள் வருமுன்பே ‘(‘தேசத்தில்) தேசநண்பர்கள் புலிக்காய் பணம் புடுங்கிய பலரை அறிமுகம் செய்து விட்டோம் அவர்களை பல சான்றிதழ்களுடன் விமர்சிப்போம்; அதில் தாங்களும் அடங்கலாம்; அதே போல் அந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைத்தால் இந்த புண்ணாக்குகளை அம்பல படுத்துங்கள்;
ஒரு சின்ன விடயம் பல்லி சொல்லுகிறேன் ஆரம்ப காலத்தில் புலியை விட கழகத்தினர்தான் நிதி சேகரிப்பு பலமாக செய்தனர்; நிதியும் தாராளமாக சேர்ந்தது; ஆனால் கழகம் காலை வாரியவுடன் பல நாடுகளில் பணம் சேர்த்த பலர் திடீர் பணகாரர் ஆகி விட்டனர்; இதில் வேடிக்கை என்ன என்றால் இவர்கள் தம்மிடம் இருந்த தட்டுமுட்டு பொருட்களையும் சில்லறை காசையும்(உண்டியல்) புலியிடம் கொடுத்து பின்பு புலியாகி தமக்கு ஒரு பாதுகாப்பை எடுத்து கொண்டனர்; இது உன்மையா இல்லையா என தாங்கள் இருக்கும் நாடுகளில் பளய கழகத்தினரை பாருங்கள் கேளுங்கள்; அதேபோல் புலி பினாமிகளும் தம்மையும் பணத்தையும் அபகரிக்க சில தமிழ் வல்லரசுகளுடன் இனைய வாய்பிருக்குதல்லவா???
Kulan
குணாளன்! எனக்கு சாத்திரி பற்றி தெரியாதுதான். ஆனால் அன்று புலிகள் செய்த அஜாரகங்களை நான் எழுதத் தவறவில்லை. என்னைக் கண்டதும் புலம்பெயர் புலிப்பினாமிகன் விலகிப்போவதும் உண்டு. என்முதுகில் எந்தமுத்திரை குத்துவது என்று தெரியாமல் ஏறக்குறைய எல்லா முத்திரையையுமே குத்தி என்முதுகு இரணமாகத்தான் இன்றும் இருக்கிறது. புலியெதிர்பாளர்கள் மாற்றுக்கருத்தாளர்கள் என்று பட்டும் படாமலும் வாசித்தவர்கள் கடசியாலங்களில் புலிகளுக்கு முதுகு தடவினார்கள். நான் வாழும் நாட்டில் என்போன்ற ஒரு சிலர்மட்டும் தான் தனித்து எதிர்த்து நிற்கிறார்கள். சிலர் தானுண்டு தன்குடும்பம் உண்டு என்று இருந்து விட்டார்கள். நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர் நாட்டிலும் என் பேனாவில் இருந்து இரத்தம் என்மக்களுக்காக இன்றுவரை கசிந்து கொண்டுதான் இருக்கிறது.
புலிகள் அழிக்கப்படவேண்டிய இயக்கம் தான் என்பதில் மாற்றுக்கருந்து இல்லை. இறந்தவர்கள் என்னினத்தைச் சேர்ந்தவர்களாகவும் மனிதர்களாகவும் அல்லவா இருக்கிறார்கள். மற்ற இயக்கங்கள் அனைத்தும் இன்றைய இக்கட்டான நிலைக்கு வந்தது புலிகளால்தான். புலிகள் அழிந்தபின்னாவது நாம் ஒன்றாக இணைந்து எம்மக்களுக்காக பாடுபடலாமே என்ற அற்ப ஆசைதான். நாம் பலவாகச் சிதறிப்போய் இருப்பது எந்தவிதத்தில் எம்மக்களுக்கு சரியானது நன்மையானது என்று தெரியவில்லை. ஆக்கிரமிப்பாளன் இருக்கும் போதே அடிபட்டவர்கள் சேர்ந்து இணைந்து எதிர்த்திருக்க வேண்டும். சரி ஆக்கிரமிப்பாளன் முடிந்தபின்னாவது மக்களுக்காக இணைந்து நன்மை செய்யலாமே. எம்மக்களுக்கு தெரிவுசெய்யும் உரிமை என்றும் யாராலும் கொடுக்கப்பட்டதில்லை. ஏன் எம்கலாச்சாரத்திலும் அது இல்லை. நான் அவருடன்தான் சேர்ந்து வாழவேண்டும் என்ற உரிமையை என்று எம்மினம் முழுமையாக ஆதரித்தது? இதற்குள் பல சாதிப்பிரிவுகள். பிரிந்துதான் வாழவேண்டும் என்றால் நன்றாக வாழுங்கள். எதிரி பலமானவன். பிரித்தாள்வதே ஏகாதிபத்திகளின் பலமான ஆயுதம். எடுபடுவதா மறுதலிப்பதா என்பதையும் மக்களிடமே விட்டுவிடுவோம்.
KUNALAN
கொலைக்களம் வேண்டாம் லியோ. அதோடு நாம் உடன்பாடுமற்றவர்கள். பல்லுக்குப் பல்/ இரத்தத்திற்கு இரத்தம்/ பழிக்குப் பழி என்ற எந்த மனநோயும் நமக்கு வேண்டாம். ஆனால் தங்களிடமிருந்த எழுத்தாயுதத்தை வைத்து இவர்கள் எப்படியான சமூக வன்முறைகள் செய்தார்களென்பது மொத்த மனித சமூகத்திற்குமான வலியுடன் கூடிய வரலாறு. இவர்களைப் போன்றவர்களை கருத்து ரீதியாகவே மக்கள்முன் நிறுத்துவோம். இன்று சாத்திரி. நாளை…? இன்னும் இருக்கிறது. எல்லா மக்கள் விரோதிகளும் அம்பலப்பட்டு பரி நிர்வாணமாகும் காலம் வந்து விட்டது. “திண்ட கோப்பைக்குள்ளேயே பேண்டு விட்டானடா” என்று இந்த சாத்திரியையிட்டு மறைந்த புஸ்பராசா சொல்லி வேதனைப் பட்டதைத்தான் இந்த வேளையில் என்னால் நினைத்துப் பார்க்க முடிகின்றது. இப்படி எத்தனை பேரை இந்த சாத்திரி எழுத்து வன்முறைக்கு ஆளாக்கினான் என்பது ஒன்றும் மறைபொருளல்ல. வெட்ட வெளிச்சம்.
குணாளன்.
KUNALAN
குலன்! உங்கள் வேதனையும் ஆதங்கமும் நிறைந்த வரிகளையிட்டு எப்படியான வலியோடும் வேதனையோடும் இருக்கிறீர்கள் என்பது புரிகிறது. ஏனெனில் அதே அனுபவமுடையவர்கள்தான் நாமும். சில விடையங்களை நீங்கள் மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் ஆழமாகச் சிந்தித்து எழுதுங்கள் என்பதே எனது ஆதங்கம். (அதிலும் சாத்திரி போன்றவர்கள் தொடர்பான கருத்தை எழுதுவதில் கவனமாயிருங்கள்.) உங்களது சில எழுத்துக்களில் அவசரம் தெரிகிறது. நான் எழுதியவை ஏதாவது தங்களை துன்புறுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். தங்களது அடுத்த கட்டுரையை தேசத்தில் விரைவாகத் தாருங்கள்.
குணாளன்
chandran.raja
கடந்த மூன்று சகாப்தற்கு மேலாக விடுதலை என்ற பெயரில் கண்களுக்கு ஒப்பாத காட்சிகளை எல்லாம் கண்டுகழித்தாகி விட்டது. மூத்த அரசியல்வாதிகள் அறிஞர்கள் பேராசிரியர்கள் மாற்றுஇயக்ககாரர் இவர்களின் சித்திரைவதைகள் கொலைகள் முறைகள்கள் எல்லாம் நாம் அறிந்ததே! சிங்கள இராணுவத்தால் இவையெல்லாம் நடை பெற்றிருந்தால் தமிழ்மக்களின் போராட்டத்திற்கு எங்கோ உரம் சேர்த்திருக்கும். …நடந்தது போராட்டத்திற்கானசக்தி பெரும் பகுதி ஈழவிடுதலைக்காக புலம்பெயர்தமிழரிடையே திரட்டப்பட்டது தான் ஈழவாழ்மக்களுடைய துர்பாக்கியமாகும். அது தமது சுயமான போராட்டத்திற்கு முழுமையான தடையாக இருந்தது.
ஐஸ்கிறீம்வியாபாரி தளபாடவியாபாரி மாம்பழவியாபாரி புடவைவியாபாரி கடலை வியாபாரி ஐயர் மாற்றுக்கருத்தாளர் கம்ளயூனிஸ்டுக்கள் சர்வதேசியவாதிகள் போன்றவர்ககுக்கு என்னஆயுதத்தை தீட்டிவைத்தார்களோ அதைவிட கேவலமான முறையில் கோடாலிக்கொத்துடன் முடிவடைகிறது. சாத்திரி இனிமேல் காலங்களில் மக்களின் தேவைகளில்லிருந்து சிந்திப்பாரா?
Kulan
நன்றி குணாளன். சாத்திரின் கட்டுரையை மட்டும் பார்த்தேனே தவிர பின்புலத்தைக் கவனிக்கவில்லை.
மக்கள் பாதுகாப்பு நிதி; கடசிப்போர் என்று புலிகள் புலம்பெயர் தமிழ்மக்களிடம் பிடுங்கிய பணம் ஒரு சிலபுலிப்பக்தர்களிடம் தொடர்ந்து இருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய் சேரக்கூடியவாறு செய்ய ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா? அங்குள்ள மக்களைக் காட்டி வாங்கிய பணம்தானே அது. ஆகவே அப்பணம் சேரவேண்டியவர்களைச் சேர்வதுதானே நியாயம். வெளிநாடுகளில் யார் யார் வந்து பணம் சேர்த்தார்களோ அவர்களிடம் தம்பணத்தைத் தருமாறு அழுத்துவதன் மூலமும் பலர்சேர்ந்து அவர்களை நீதியின் முன் நிறுத்தமுயலும் போது அப்பணங்களில் சிலபோனவழிகளையும்; இருப்பதை அங்குள்ள மக்களுக்குக் கொடுக்குமாறும் செய்யலாம் அல்லவா? இலங்கை அரசாங்கம் அடுத்துக் கண்வைப்பது வெளிநாட்டுப் புலிப்பினாமிகளில்தான். இப்பணம் அரசின் பக்கம் போகாமல் எம்மக்களைச் சேருமாறு எப்படிச் செய்யலாம். மேலும் புலம்பெயர் தமிழர்களின் வியர்வை தான் இப்பணம். இவற்றை கண்டவன் நிண்டவன் எல்லாம் எடுத்து விளையாட அனுமதிக்க இயலாது.
பார்த்திபன்
சாத்திரியும், சாந்தி வவுனியனும் சேர்ந்து போட்ட கும்மாளம் அருவருப்பானது. புலிகளை விமர்சிப்பவர்கள் பெண்களாக இருந்தால் விபச்சாரிகள் என்றும் ஆண்களாக இருந்தால் கூட்டிக் கொடுப்பவர்கள் என்றும் அவர்களின் பயோடேட்டா என்றும் எவ்வளவு கேவலமாக ஒருவரைப் பற்றி எழுத முடியுமோ அவ்வளவு கேவலமாக யாழ் இணையத்தில் தம் கைவரிசையைக் காட்டியவர்கள் இந்த இருவரும். அத்துடன் யாழ் இணையத்தில் இன்னொரு பெயரில் மட்டுறுத்தினராகவும் இருந்து கொண்டு தனக்கு வேண்டாதவர்களின் கருத்துகளையெல்லாம் நீக்கியும், தானும் ஒரு பெண் என்பதை யோசிக்காமல் மற்றப் பெண்களை மிகவும் கேவலமாக விமர்சித்தும் சந்தோசப்பட்டவர் சாந்தி வவுனியன். இவர்களை இவர்கள் பாணியிலேயே கேவலப்படுத்தி எம்மையும் சிறுமைப்படுத்தத் தேவையில்லை. ஆனால் இவர்களின் முகத்திரையை கிளித்து இவர்களின் உண்மையான அடையாளங்களை சமூகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையே. இல்லாவிட்டால் இவர்கள் இந்த சமுதாயத்தை சீரழிப்பதையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.
palli
தேசத்தில் கட்டுரை எழுதிய பல புத்திஜீவிகளே தேசத்துக்கு எதிராக செயல்பட இல்லையா??
சேதுவை பற்றி தேசம்ஒரு குற்றசாட்டை வைத்தபோது சேது நேரில் (பின்னோட்டம்) வந்து விளக்கம் அளிக்கவில்லையா??
ரிபிசி க்காக விவாதம் செய்ய போன தேசம் சில இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது; ரிபிசியும் சேர்ந்து இது தேசத்துக்கு ஆகாத வேலை என தள்ளி விழுத்தவில்லையா??
மிக பெரிய கருத்தாளரென தம்மை தாமே சொல்லும் பலர் சேர்ந்து தேசத்துக்கு மூடுவிழா செய்ய முற்படவில்லையா?? இப்படி அடிக்கி கொண்டே போகலாம்; ஆனால் யார் எதை செயதாலும் நாம் எமது பாதையில் தெளிவாய் இருந்தால் எம்மை எவராலும் ஒன்னுமே செய்யமுடியாது, அதே போல் சாத்திரியின் எழுத்து எம்மை தூற்றினாலும் எமக்கு பாதிப்பில்லை, ஆனால் சாத்திரியை போன்றோர் புரிந்துகொண்டு சுய விமர்சனம் செய்யும் போது என்னும் பல சாத்திரிகள் எமக்கு தெரியவரும்; முப்பதாயிரம் ராணுவத்துக்கு மேல் சாகடித்த அமைப்பின் முக்கிய தளபதிக்கே மகிந்தா அமைச்சர் பதவி கொடுத்து பொன்னாடை போர்க்கும் போது; நாம் எம்மின நபர்கள் மீதே வக்கிரம் காட்டுவது அழகல்ல;
பல்லி கூட பட்டிணி கூட்டத்துக்கு போய் அவமானபட்டு வந்தேன்; அது அவர்களது அறியாமை; ஆனால் அவர்கள் இன்று இருக்கும் நிலையில் அவர்கள் மீது எதிர்ப்பை மட்டுமே காட்டுவது பல்லியை பொறுத்த மட்டில் மனிதநேயமுள்ள செயலல்ல; (இது பல்லியின் தனிபட்ட கருத்து)
Kulan
நன்றி மிக்க நன்றி பல்லி. நாம் திறந்தமனத்துடன் இருந்து கொள்வது மிக முக்கியம். அதற்காக நாம் இழிச்சவாயன் என்று எண்ணிவிடக்கூடாது. எனக்கு சாத்திரிபற்றி உண்மையில் அதிகம் தெரியாது. கட்டுரையை வாசித்தேன் புலி ஒன்று தம்மைத்தாமே விமர்சிப்பது போன்று இருந்தது. கட்டுரை எழுத்தாண்ட விதம் நல்லாகவே இருந்தது. சாத்திரியின் பின்புலம் கொஞ்சம் கூட நான் அறியேன். என்னவோ என்சிற்றறிவக்குப்பட்டதை வாழ்த்தினேன் அவ்வளவுதான்.
nerudal
திருவாளர் சாத்திரி கீழ் உள்ள எனது தனிப்பட்ட விமர்சனத்தை 15.2.2009 இல் புதினத்தில் ஆராய்ச்சி செய்யும் வழுதி, மற்றும் வேல்ஸ் அருஸ், இதயச்சந்திரன் ஆகியோருக்கு அனுப்பியதை இப்போது தேவை கருதி மின்னஞ்சலில் தேடி எடுத்து தேசத்தில் பதிவிடுகிறேன். இதேபோல் இந்த கருத்துக்கள் சாத்திரிக்கும் பொருந்தும். இதில் அவரது கட்டுரைக்கும் என்னிடம் மிக தெளிவான பதில் உள்ளது. எதிர்பாருங்கள்.
எஞ்சிய விடுதலைப் புலிகளையும், சரணடைந்த புலிகளின் நிர்க்கதிக்கும் ஒரு இனத்தின் தலைவிதியை தலைகீழாக்கி தமிழரை இனப்படுகொலையல்ல இனத்தற்கொலைக்கு இட்டு சென்ற பிரபாகரனிடம் உயிருடன் வந்தால் கேள்வி கேட்க 1000 கேள்விகள் உள்ளது. பிரபாகரனின் எதன்னிச்சையான எதேச்சாதிகார முடிவுகள் ஒத்த முடிவுகளை யாரது அபிப்பிராயத்தினையும் கேட்காது கேபி எடுத்திருப்பது சாத்திரிக்கு தெரியாதது. சாத்திரிக்கு தெரிந்ததெல்லாம் 1983 இலிருந்து 1987 முற்பகுதிக்குமான வலிகாமத்திலும் மானிப்பாயிலும் கட்டுவனிலும்நடந்த சமபவங்களை வைத்து குதிரையோட்டிக்கொண்டு இருப்பவர்….யாரென்று இதுவரையில் கேள்விப்பட்டே இருக்காத பெயர்களிலும்.. இல்லாத படையணியின் பெயரிலும் கூட பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற அறிவிப்புக்கள் வெளியாகிக் கொண்டிருந்தபோது புலிகளின் அரசியல் பிரிவில் எஞ்சியிருக்கும் மட்டு..அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவின் பொறுப்பாளர் தயாமோகனும் பிரபாகரன் இல்லை என்பதனை ..பி.பி.சி. தமிழ் ஓசையூடாக உறுதி செய்தபொழுது தயாமோகனும் துரோகியாக்கப்பட்டார்…..இங்கு கேபியால் திணீக்கப்பட்ட அறிகையை தயாமோகன் பிபிசியில் சொன்னார். அதேபொல் அம்பாறையில் ராமிடமும் நகுலனிடமும் இது உடனும் பலிக்கவில்லை.
திருகோணமலையில் பொறுப்பாகவிருந்த தேவனிடம் தலைவரும் பொட்டுவும் முடிஞ்சுது என்ற கேபியின் தொலைபேசி உரையாடலை அடுத்து தேவன் ராணுவத்திடம் சரண்டைந்து திருமலையில் எஞ்சியிருந்தவர்களை இரானுவத்துடன் சேர்ந்து வேட்டையாடத்தொடங்கிவிட்டார். இது சாத்திரிக்கு தெரியுமோ….தேவன் யாரென தெரியுமோ சாத்திரிக்கு…. ஒன்றும் தெரியாவர்களுக்கு சாத்திரி தலையில் அரைக்க முற்படுவது ஏலவே பலசந்தர்ப்பங்களில் தெரிந்தது தான். இங்கு சாத்திரிக்கோ கேபிக்கோ புலம்பெயர்பணியகங்களூக்கோ பிரபாகரனின் இறுதிநிலைமைகள் எதுவும் தெரியவே தெரியாது. எல்லாம் சிறிலங்காஅரசின் செய்திகளைதான் இறுதியாக நம்பவேண்டிய சூழலில் நாட்டில் தப்பியுள்ள புலிகளின் கால அவகாசத்தை உதாசீனம் செய்த இந்த அறிவிப்பைதான் எவரும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. அதனால் புலித்தலைமையின் மரணத்தை அவமதிப்பதாக அர்த்தமில்லை. அதேவேளை பிரபா தொடர்பான 30வருட இராணுவ மயைகளும் கிழிந்துவிட்டதை இனியாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த இராணுவ வெற்றிகளுக்கு புலிகள் அமைப்பில் பிரபா மட்டும் காரணமில்லை. வெற்றிகளூக்கும் தோல்விகளூக்கும் சாத்திரி உட்பட எல்லொரும் கூட்டுப்பொறுப்புடையவர்கள் என்ற மனப்பக்குவம் ஏற்படாதவரை வவுனியாவிலுள்ள மக்களூக்கு ஏதோ செய்யப்போவதாக சொன்னதெல்லாம் வெறும் புலுடா…..
Sun, Feb 15, 2009 at 12:38 PM subject current situation read mailed-by gmail.com hide details Feb 15
Reply Follow up message
ஈழப்போர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் சமர் -வேல்சிலிருந்து அருஸ்-
ஆய்வாளர் அவர்களே, தங்களின் எந்தவொரு பத்தியும் நான் ஒருபோதும் படித்ததில்லை. ஏனெனில் களயதார்த்தம் தெரியாமல் கூகிளில் தேடி எடுத்து பத்தியெழுதும் பரபரப்புக்களை குப்பைகளை இனியாவது நிறுத்தவும். உங்கள் போன்ற ஆய்வாளர் நாமம் பூசியவர்களின் மிதமிஞ்சிய மிகைப்படுத்தலில் மதிமயங்கிய புலம் பெயர்தமிழர்களினை இன்னமும் மதிகெட வைக்கவேண்டாம்.
போராட்டத்துக்கே நாமம் பூசிவிட்டீர்கள். போராட்டமும் தலைமையும் எந்த நேரத்திலும் அழியும் தறுவாயில் உள்ளது. போராடுவதற்கே ஆட்கள் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். நீர் புதிர் விட்டுக்கொண்டிருக்கிறீர். உமக்கு தெரியுமா, இந்த 30மாத காலத்தில் எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள் புலிகளில் என்று? 5000க்கும் அதிகமானவர்கள் போராட வலுவில்லாமல் ஊனம் வடிந்தபடியும், புழு வெளிக்கிளம்பும் நிலையில் சாவின் பிடியில் தற்கொலை மனப்பான்மையில் என்ன நடக்க போகிறது என தெரியாமல் வன்னியில் உள்ள மிஞ்சிய போராளிகள் வாயில் குப்பியை வைத்திருக்க நீர் புது புராணம் எழுதிக்கொண்டிருக்கிறீர்.
இந்த விகடகவித்தனமான ஆய்வுகளை நிறுத்தி சண்டையை கற்பனையில் பிடிக்காமல் மாற்றுவழியில் இனி போராடுவது பற்றி எழுதவும். அதுவும் கற்பனையில் அல்ல. யதார்த்தமாக நடக்ககூடியதை எழுதும்.இல்லையேல் எழுதுவதை நிறுத்தும். தமிழ் தேசிய ஊடகங்களில் தமிழில் எழுதிக்கொண்டு, மறுதலையாக சிறிலங்கா காடியன் என்ற ஜெயதேவனுக்கும் புராணம் பாடுவதை எவரும் கண்டுகொள்வதில்லை. புலுடா ஆய்வுகளை இத்துடன் நிறுத்தவும். ஆய்வாளர்களும், ஊடகவியலாளரும், பத்தி எழுத்தாளர்களும் இப்போது அதிகரித்து தன் இஸ்டத்துக்கு மக்களை ஏமாற்றிவருகிறீர்கள். அதுக்கு புதிது புதிதாக இணையதளங்களும் வேறு…. சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்க சொல்லும் எவரும், சிறிலங்காவுக்கு ஆயுத சப்ளை செய்யும் நாடுகளில் உள்ள இணையதளங்களுக்கு சேவர் கொடுக்கும் அந்த ஏகாதிபத்திய சந்தையை புறகணித்து எல்லோரும் கொடுக்கும் காசை இனி வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கும், அனாதைகளுக்குமுரிய கட்டுமானம் என்ன என்பது பற்றி சிந்தியுங்கள்?
இன்று ஒவ்வொரு நாளும் திருமணமான போராளி இறந்துகொண்டு விதவைகளையும் அப்பன்கள் இல்லாத சிறார்களயும், ஏன் தாய் தந்தை இல்லாத சிறார்களும் கூட உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எதிர்காலம் என்ன? இதை விட்டு போருக்கு ஒத்தூதிக்கொண்டு அங்கு நிலவும் எந்த அவலம் பற்றிய அக்கறையும் இல்லாது தேசியத்தை உற்சாகப்படுத்துவதாக சாக்குபோக்கு கூறி இப்ப உள்ள காலத்தையும் வீணாக்கி புலம் பெயர்ந்த தமிழர்களையும் அக்கறை கடமையில்லாத இனமாக்க வேண்டாம். போர் எங்கும் தீர்வில்லை. போரை ஒருபக்கம் நடாத்திகொண்டு இன்னொரு பக்கம் அரசியலை மக்கள் மயப்படுத்தாமல் சேடம் இழுக்கும் போது அரசியல் போராட்டங்கள் செய்வதால் ஒரு பிரயோசனம் வரப்போவதில்லை. இந்த முழு தவறுக்கும் தேசிய தலைமையே பொறுப்பு. இதை எவரும் கேள்விக்குட்படுத்தாத வரை தவறுகள் வரலாற்று துரோகங்களாக மாறுவதும் தவிர்க்க முடியாது. அதை இந்த கட்டத்திலும் செய்யாமல் ஜால்ரா போடும் ஆய்வாளர்களும் துரோகத்தில் பங்குண்டு.
இந்த போராட்டம் ஒரு அரசியல் இலக்கு அதனை அரசியல் மயப்படுத்தாமல் சுயாதீனமான போராட்டங்களை கூட மக்கள் முன் எடுக்காதபடி நந்தி மாதிரி குறுக்கே நின்று குத்தகை எடுத்த தேசிய பினாமிகளுக்கும் துரோகத்தில் பங்குண்டு. வெறும் காசே தான் கடவுளடா என சேகரித்த பணத்தை இப்போது பொருட்களாக சிறிலங்காவுக்கு தாரை வார்த்து கொடுக்கும் போது காசு கொடுத்தவனுக்கும் இந்த போராட்டம் தோற்கும் போது விரக்தி வரும். இந்த ஒரு உதாரணம் போதும் அங்குள்ள கள யதார்த்தம். இதை பற்றிப்பிடிக்காமல் அவர் சொன்னார் , இவர் சொன்னார் என வீம்பு பத்திகளை எழுதுவதை நிறுத்தவும். நான் சொல்லும் இவ்வளவும் நடக்கபோகிறது. மனதை திடப்படுத்திக்கொண்டு மாற்று வழி பற்றி சிந்திக்கவும்.
கீதா
தேசத்தில் தலைவருக்கு அஞ்சலி கட்டுரையை எழுதிய சாத்திரியையும் குலனையும் நான் மதிக்கின்றேன் உங்களை கட்டுரைகளை கொச்சைப்படத்தும் கல் மனம் எனக்கில்லை.
உயிரிழந்த அனைவரக்கும் எனது அஞ்சலிகள்
குலன் உங்கள் பின்னுட்டங்கள் பார்த்துள்ளேன். நான் சகோதரப் படுகொலையில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினன் என்றும் புகைந்து கொண்டிருக்கும் எமது மனக் குமுறலுக்கு வடிகால் இல்லாமல் தவிக்கிறேன் நான் எனது சகோதரனை இழந்தேன். ஆனால் பிரபாகரன் தானும் தன்குடும்பமுமாக உயிர் இழந்ததைப் பார்த்து நான் சந்தோசப்படவில்லை. அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் என்றும் புலிகள் தாம் செய்த சகோதரப் படுகொலைக்கு தம் கடைசிக்காலத்தில் கூட மன்னிப்பு கேட்காமலேயே போய்விட்டார்கள். தம் தலைக்கு மேல் வெள்ளம் போனதை உணர்ந்து உதறித்தள்ளின ஒப்பந்தங்களை புதுப்பிக்க குரல் கொடுத்தவர்கள் – ஒவ்வொரு ஒப்பந்தமாக அதைஏற்கிறேன் இதை ஏற்கிறேன் என்று இறங்கி இறங்கி வந்தவர்கள் இன்னும் ஒருபடி கீழ்இறங்கி தாம் செய்த சகோதரப்படுகொலைக்கு, அதன் மூலம் ஏற்ப்பட்ட இரத்தக் கறையை கழுவிக் கொள்ளாமலே போய்விட்டார்கள்.
பல்லி சொல்லலாம் நாமும் அதே தவறை விடலாமா என்று இன்று ராஜபக்ச செய்த கொலைகளும் பிரபாகரனும் போராளிகளும் கொலையுண்ட விதமும் இன்றுதொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த காரணத்தினால் உடனுக்குடன் அறிகின்றோம் பார்க்கின்றோம் சர்வதேச நீதிமன்றில் வழக்கு போட துடிக்கின்றோம், ஜநாவில் யுத்த மரபு மீறல் பற்றி குரல் கொடுக்கின்றோம் (நான் எதையும் பிழை என்று சொல்லவில்லை)ஆனால் 86ல் நடந்த சகோதர அழிப்பு இதே போன்று வெளிவராததால் அன்று நடந்ததெல்லாம் இச் சட்டதிட்ங்களுக்கும் உரிமை மீறல்களுக்கும் அப்பால்ப்பட்டுப் போய்விட்டதா?
குலன், நெஞ்சு கனக்கின்றது எனக்கும். இதயத்தில் வலி உள்ளது ஆனாலும் அங்கு ஈரம் உண்டு. நீங்கள் எழுத்தில் நறையவே விடயங்களை முன்வைத்தேன் என்று கூறியுள்ளீர்கள். அன்று நானும் என்போன்றவர்களும் பட்ட காயங்களுக்காக நீங்கள் வரைந்த மடல்களை என்பார்வைக்கு தருவீர்களா? பிழைபிடிப்பதற்காக அல்ல எனதும் என்போன்றவர்களினதும் மன ஆறுதலுக்காக.
பழையதை மறந்துவிட்டு அல்லத ஒரு புறம் வைத்துவிட்டு தமிழ்மக்களின் எதிர்காலம் பற்றி கதைப்போம் என்று பலர் இங்கு கட்டுரை எழுதினார்கள் -பின்னுட்டம் எழுதினார்கள் அவர்களிடம் ஒரு கேள்வி. இன்றய புலி அழிப்பும் அது போலவே பழைய என்ற உடப்பில் போடப்பட்டுவிட்டு தமிழ் மக்கள் எதிர்காலம் பற்றி காயை நகர்த்துவீர்களா?
நான்- கீதா- யாரையும் காயப்படுத்த இதை எழுதவில்லை. இதே என்பெயரில் முன்பும் எனது கருத்துக்களை பதிந்துள்ளேன்.
KUNALAN
கீதா!
மனித நாகரீகமே வெட்கித் தலை குனியும்படியாக புலிகள் மேற்கொண்ட அரக்கத்தனமான கொலைகள் பற்றி குலனுக்கோ அல்லது பல்லிக்கோ புரியவில்லை என்றே நினைக்கிறேன்.
நீங்கள் செவிடன் காதில் சங்கு ஊதுகிறீர்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது. நேசத்துக்குரிய பல உயிர்களை இந்தப் புலி அரக்கர்களுக்குப் பலி கொடுத்தவன் நான். இப்படி என்னைப்போல் பல ஆயிரக் கணக்கான குடும்பங்கள் உள்ளன. இந்த இழப்புக்களின் வேதனையும் வலியும் சும்மாயிருந்து தத்துவம் பேசுவோரால் புரிந்து கொள்ள முடியாது.
படுபாதகமான முறையில் மனிதத்தை கொடுமையான ஆக்கினைகள் செய்து கொன்றது மட்டுமல்லாமல் அந்தக் கொலைகளைச் செய்யும்போது ரசித்து ருசித்து ஆனந்தப் பட்டவர்கள்தான் இந்த அரக்கப் புலிகள். ஆனாலும் இந்தப் புலிகளோ அல்லது புலித் தலைவனோ மண்டை கிழிந்து மூளை சிதறி அனாதையிலும் கேவலமாய் செத்துக் கிடப்பதை நாம் சகித்துக் கொள்ளவுமில்லை ஏற்கவுமில்லை. காரணம் எம்மிடம் இன்னமும் செத்துப்போகாத மனித நேயம் குறைந்த பட்சம் உயிர் வாழ்கின்றது. எமது நேசத்துக்குரிய உறவுகளை இந்தப் புலிகளின் கோரப் பசிக்குப் பலி கொடுத்துவிட்டு இன்னமும் மனிதாபிமானத்தை இழக்காமல் தர்ம நியாயம் பேசிக்கொண்டிருக்கிறோம் நாம். ஆனால் பல்லியோ குலனோ எமது உள்ளுணர்வு என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் சும்மா மேம்போக்காக கதையளந்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ இவர்கள்தான் தர்ம நியாயத்தைக் காப்பாற்ற நீதி தேவதையால் பூலோகத்துக்கு அனுப்பப்பட்ட புதல்வர்ளைப்போல நியாயம் பேசுகிறார்கள். துடிக்கத் துடிக்க உயிரோடு டயர் போட்டுக் கொழுத்தப்பட்ட போராளிகளின் உயிர்கள் இவர்களை வந்து கேள்வி கேட்காது என்ற துணிச்சல் இவர்களுக்கு. அதற்காக அடுத்த பின்னூட்டத்தில் பல்லியும் குலனும் வந்து “இந்தப் படுகொலைகளை அங்கீகரிக்கிறீர்களா?” என்று குருட்டுத் தனமான கேள்வியைக் கேட்க முயற்சிக்காதீர்கள். நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அடி பட்டவனுக்குத்தான் அந்த வேதனையும் வலியும் புரியும். பிரபாகரன் செத்துப் போய்விட்டான் என்பதற்காக அவன் செய்த கொடுமைகளையெல்லாம் நாம் மறக்க வேண்டும் என்று கோருவது என்ன நியாயம். கிட்லர் இருந்தான் செத்தான். ஆனாலும் அவனது அநியாயங்களின் சுவடுகள் இன்னமும் இருக்கின்றது. வலிக்கின்றது. அதேபோல்த்தான் பிரபாகரன் இருந்தான் செத்தான். ஆனாலும் அவன் செய்த அநியாயங்கள் இன்னமும் மண்ணில் வடுவாய் பதிந்துள்ளது. பல தலைமுறைக்கு இது இருக்கும்.
நீங்கள் தத்துவங்களை மெத்தப் படித்தவர்கள்தான். ஆனால் மனிதநேயம்/ மனித உறவுகள்/ மனித நாகரீகம்/ மனித வாழ்வுக்கான சுதந்திரம்/ இதற்குள்த்தான் நான் பேச முனைகின்றேன். இவற்றைப் புரிந்து கொள்ள முடிந்தால் முயற்சி செய்யுங்கள். தமிழர்களுக்கே உரித்தான அந்த “சென்ரிமென்ற்” புலுடா விட வேண்டாம்.
குணாளன்.
sekaran
…………. வன்னி முகாம்களுக்குள் இருக்கும் உயிர்களைப் பற்றி கவலைப்படாமல் அதற்கு நடவடிக்கைகள் எடுக்காமல் ஒருவர் இன்னும் இருக்கிறாரா இல்லையா என்று பட்டிமன்றம் நடத்துவது கேலிக்குரியது.
KUNALAN
இன்று 12.10 மணிக்கு பல்லி இட்ட பின்னூட்டத்தைக் கவனியுங்கள் கீதா. யாரையோ ஊடறுத்துத் தாக்குவதிலும்/ அடிப்பதிலும் குறியாக இருக்கிறாரே தவிர மேற்படி கட்டுரையை தேசம் ஏன் வெளியிட்டது என்றோ அல்லது அதற்காக வரும் கருத்துரைகள் என்ன என்பதைக் கணக்கிலெடுத்து தர்க்க ரீதியாக தனது கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்ற கரிசனையோ இல்லாமல் தேசத்தாரைக் குளிர வைப்பதற்கான சில வார்த்தைச் சிலம்பத்தை அள்ளி விட்டிருக்கிறார். இப்படியென்றால் விவாதத்திற்கான விரிந்த தளம் எங்கேதான் கிடைக்கும். சும்மா எல்லாம் பம்மாத்து.
santhanam
சாஷ்திரி கடைசிவரை வன்னியுடன் தொர்பை வைத்திருந்தார் என்பதை ஒத்துகொண்டுள்ளர் ஆகவே அவரிற்கு நடந்த கடைசிவரையான தகவல் ஒரளவேனும் தெரிச்திருக்கும் ஆனால் புலத்தில் பெரியபிளவு ஒன்று ஏற்பட்டுள்ளது என்பதையும் ஒத்துகொள்கிறார் “உயிரா மரணமா” ஆனால் இதானால் ஏற்பட இருக்கும் விளைவு படு பயங்கரமாகவிருக்கும் என்பதை தேசத்தின் ஊடாக பல்லிக்கும் சாஷ்திரிக்கும் சொல்லி கொள்ளவிரும்புகிறேன் மக்கள் எதையும் கடைசிவரை மறக்கமாட்டார்கள். எனது நண்பன் ஒருவரிடம் கதைக்கும் போது தனது அண்ணா இந்திய இராணுவகாலத்தில் சயணைட் உட்கொண்டு. இறந்ததாக இவர்கள் இப்ப இப்படி சரண்னடைந்தவிடயம் கேள்விபட்டவுடன் மிகவும் வேதனையாக சொன்னார் எனது அண்ணா பிடிபட்டிருந்தால் இப்ப உயிர்வாழ்ந்திருப்பார் எப்படி இருக்கு ஒவ்வொரு தமிழ்மகனின் வேதனையும்??
Kulan
குணாளன்! கீதா!நான் சாத்திரியின் பின்புலம் தெரியாமல் கட்டுரையை மட்டும் வாசித்து விட்டு பின்னோட்டம் விட்டது உண்மைதான். ஒரு நல்ல கட்டுரையை எதிரி கூட எழுதலாம். எனக்கு எப்படி சாத்திரியைத் தெரியாதோ அதேபோல்தான் தாங்களும் என்னைப்பற்றி அறியாமல் பின்னோட்டம் விட்டடிருக்கிறீர்கள். நான் என்றாவது எங்காவது புலிகளைக் செய்த கொலைகளை மட்டுமல்ல படுகொலைகளையும் நியாயப்படுத்தியது உண்டா? பல பின்னோட்டங்களில் நான் எழுதியிருந்தேன் இலங்கை அரசின்காலத்தில்தான் இயக்கங்கள் வளர்ந்தது காரணம் எழுச்சி உதயமானது புலிகளின் காலத்தில்தான் எல்லாமே அழிந்தது சிதைந்தது என்று. உங்கள் கருத்தைப் பார்க்ப்போனால் புலிகளைத் திட்டித்தீர்ப்பது மட்டும்தான் விடுதலைப் போராட்டமும் எம்மக்களின் எதிர்காலமும் போல் இருக்கிறது. அன்று ரெலோரை புலிகள் படுகொலை செய்தபோது கைகலப்புகளில் கூட கலந்து கொண்டவன் மட்டுமல்ல பல இடங்களிலும் எழுதினேன் ” மற்றைய இயக்கங்களை புலிகள் கொல்லும் போது வாய்மூடி மெனனியாய் இருந்த மக்கள் அன்று குறைந்தபட்சம் கொடிபிடித்தோ அன்றிக் கோசம் போட்டோ இருந்திருந்தால் புலிகள் திருந்துவற்கோ சிந்திப்பதற்கோ சாத்தியம் இருந்திருக்கலாம். இதற்காக நான் ரெலோ என்று முத்திரை குத்தி விடாதீர்கள். என்க்கு அப்போ ஒரு ரெலோ வீரனைக் கூடத் தெரியாது.
“சுற்றிச் சுழலும் தமிழ்துப்பாக்கிகள்
முற்றிய ஈழமே முடிவெனக்கொண்ட
மற்ற தோழர்களையும் அல்லவா
மாய்த்து விடுகிறது”
எனும் கவிதைவரிகளால் 1997 அளவில் இன்குல்லாப் போன்ற பெருங்கவிஞ்ஞர்களால் எழுத்துக்களுடாகத் தண்டிக்கப்பட்டேன். இன்னும் இன்னும் …. இன்னும்.. அன்று சிறீ; கண்ணன்; சந்ததி: இறைகுமாரன்; உமைபாலன்; … இப்படிப்பலரின் கொலைகளை மட்டுமல்ல புலிகளின் எல்லாப்படு கொலைகளையும் கண்டித்தது மட்டுமல்ல அஞ்சலியும் செலுத்தினோம். இதற்காக மற்றை எல்லா இயக்கமும் சரியாத்தான் நடந்தார்கள் என்கொலையையும் செய்யவில்லை என்று அர்த்தமாகாது. ஒரு சராசரி மனிதனாய் என்மொழியை பேசிய இன்னினத்தவனுக்கு நாம் செய்யும் மரியாதையும் கடசி வழியனுப்பலுமே. இது குணாளனாக இருந்தாலும் செய்திருப்பேன். ஒரு காகம் செத்துக்கிடந்தால் எல்லாக்காகங்களும் கூடியிருந்து கத்தும் இந்த உரிமை கூட எனக்கு இல்லை என்றா சொல்கிறீர்கள். இப்பவும் சொல்கிறேன் பிரபாகரன் எனும் தமிழ்பேசிய தமிழனுடன் உயிர்நீர்த்த என்னினத்து மக்களை அனைவருக்கும் என்சிரம்தாழ்ந்த வணக்கங்கள்: நீங்கள் கூறும் எல்லாப் படுகொலைக்கு முன் என்தோழர்களான சுந்தரம் உமைபாலன் இறைகுமாரன் போன்றோருடன் மிக மிக நெருங்கிய தொடர்பு மட்டுமல்ல என்னுடன் கதைத்து சிலமணி நேரங்களிலே கொல்லப்பட்டார்கள் என்ற வேதனையும் விரத்தியும் வெறுப்பும் என்மனதில் மிக ஆளமாக உள்ளது என்பதை அடக்கமாகக் கூறிவைக்க விரும்புகிறேன். அன்று போராட வெளிக்கிட்டவர்களில் அரிதாக எஞ்சி மிஞ்சி இருப்பவர்களில் நானும் ஒருவன். என்னை நான் வெளிக்காட்ட நான் விருப்பவில்லை. அது முக்கியமும் இல்லை.
பார்த்திபன்
//சாஷ்திரி கடைசிவரை வன்னியுடன் தொர்பை வைத்திருந்தார் என்பதை ஒத்துகொண்டுள்ளர் – santhanam //
சாத்திரியின் வழமையான பீலாக்களில் இதுவும் ஒன்றென்பது சாத்திரியை என் போல் முழுதாக அறிந்தவர் அனைவருக்கும் தெரியும். பிரித்தானியர் வருகையிலிருந்து இன்றைய போராட்ட காலம் வரை, தனக்குத் தான் எல்லாம் அத்துப்படி என்பது போல் தனது கட்டுரைகளில் பிளந்து கட்டி அலாதி இன்பம் பெறுபவர் இவர். இன்று பிரபாகரன் இறுதிவரை தன்னுடன் தொடர்பிலிருந்தார் என்று இவர் பீலாவிட்டால் இல்லையென்று கூற பிரபாகரன் வரமாட்டாரென்பது சாத்திரிக்கு தெரியாதா என்ன ??
Kulan
கீதா! நான் எழுதிய படைப்புக்களை உங்களுக்குத் தருவதினூடாக நான் யார்என்பதை அம்பலப்படுத்த விரும்பவில்லை. 80 களில் நான் எழுதிய கவிதை ஒன்றை இங்கே தருகிறேன்.
கவிஞன் கை பேனா
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழருக்காய்
பலர் கையில் நான் அழுதேன்.
என் கண்ணீரின் கருத்துக்களை
காளையர் கணக்கெடுத்தனர்.
மூத்தவர்களை மூலையில் முடக்கி
துப்பாக்கிகளைத் தோழில் தூக்கி
போர் எனப் புறப்பட்டனர்.
சிரித்தேன்
ஆனந்தக்கண்ணீரில் அழுதேன்
பலகாகிதத்தாள்கள் நனைந்தன.
மீண்டும் அழுதேன்
தூக்கிய துப்பாக்கிகளே
தமிழர்களை நோக்கித் திரும்பிய போதும்
நெற்றியில் பொட்டுவைத்து
கம்பங்களில் தூக்கிய பின்
என்னை எடுத்து அழடா என்றார்கள்
துரோகி என ஒப்பாரி வைத்து அழுதேன்
என் வினை என்னைச் சுட்டது.
இன்றும் அழுகிறேன்
மொட்டாகிய தமிழ் குடும்பங்கள் கட்டவிழ்ந்து
கெட்டுக் குடியிழந்து அகதிகளாய் அலைவதால்;
தமிழ் குழந்தைகளை பிறமொழி தத்தெடுத்து
கத்துவதுபோல் என்காதுகளில் கேட்பதால்;
என்தேசத்துத் தமிழ்மரங்கள் அடியறுந்து
அவனியெங்கும் அகதிகளாய்
விழுதுகளில் வாழத்துடிப்பதால்.
ஈழத்திலோ!
எலும்புக்குத் தோல் போர்த்து எம்மவர்கள்…
இராணுவப் பலாற்காரத்தில் எம் பாவையர்கள்..
அங்கங்கள் அறுபடும் அகோரங்கள்…
எம்மினத்தின் உதிரத்தில் தாகம் தீர்க்கம் நாய் நரிகள்…
காகம் கழுகுகள் பேரம் பேசும் பிணக்குவியல்கள்
குண்டுடன் கூடிப்பிறக்கும் குமருகள்..
காடை இராணுவத்தின் பின் பாலியல் பலாற்காரத்தின் பின்
டைனமைட் முளைத்து வெடிக்கும் பெண்குறிகள்…
இரத்த சகதியில் காலூன்றி எடுக்கமுடியாது தவிக்கும் எம்மினம்.
ஐயகோ!!!
இனியென்னால் அழக்கூட முடியாது
துப்பாக்கிகள் என்னைப்பார்த்து சிரித்து விடும்.
20வருடங்களுக்கு முன் எழுதப்பட்டு சஞ்சிகைளில் வந்த பின் 97ல் தொகுப்பாக்கப்பட்டது. கீதா! ஏதாவது என்வேதனை புரிகிறதா இங்கே. நான் பாதிக்கப்பட்டவன் என்பதை விட நேசித்தவன் என்பதே தகும்
Kulan
கீதா! உங்களது வேதனை எனக்கு நன்கு புரிகிறது. இழப்பில்லாத ஈழத்தமிழன் உலகில் எந்தமூலையிலும் இருக்க இயலாது. புலிகள் மன்னிப்புக் கேட்பதால் மட்டும் நாம் இழந்தவை திரும்பி வராது. பிரபா இறந்த விதத்தைப் பார்த்தால் இதைவிடப்பெரிய தண்டனை யாருக்கும் கிடைக்கவில்லை.எதிரிக்குக் கூட இப்படியொரு சா வரக்கூடாது. உங்களுக்காக நான் 20வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு கவிதை ஒன்றை உங்கள் மனச்சாந்திக்காக அனுப்பியுள்ளேன் இப்படி ஒருபேனா உங்களுக்காகவும் அழுதது கீதா.
Saambanaar Sugumugam
பிரபாகரனினதும் இதர போராளிகளினதும் மரணம் ஒரு வீர மரணம்!
இதை சொல்ல ஒருவர் புலி ஆதரவாளராக இருக்கத் தேவை இல்லய்.
அவர்கள் செய்ததெல்லாம் சரியும் இல்லை. ஈராணுவ மூலமான தீர்வு இனி சரியான பாதயும் அல்ல.
ஆனால் தமிழர்களின் நிலையை உலகுக்கு உணர்தினர். தமிழர்கள் பெருமையாக தலைநிமிர வைத்தவர்கள்.
ஓரு கட்சியால் ஒரு தலைவனால் சுதந்திரம் பெற முடியாது.
அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் நினைவில் கொண்டு மக்களே நாளையை கட்ட வேண்டும்
palli
குனாளன் ஏன் இந்த கோபம்; பல்லி புலி அழிவு தொடங்கியா பின்போ அல்லது அழிந்த பின்போ பின்னோட்டம் விடுபவனல்ல; புலி புழியாக முன்பே மிகநிதானமாகவும் அதேநேரம் படு மோசமாக புலியை விமர்சித்தேன்; ஆனால் இன்று பிணத்தின் மேல்நின்று அவர்கள சிலம்பாட்டத்தை சுட்டிகாட்ட தேவையில்லை என்பதால் ஒரு படி மேல் ஏறி எம்மக்கள் பற்றி சிந்திக்கிறேன்; அதை தயங்காது எழுதுகிறேன்; பல்லிக்கு தேசத்தை குளிர வைக்க வேண்டிய அவசியம் எப்போதும் இல்லை; அதுக்கு பல்லி தேசத்தை விமர்சனம் செய்ததை நேரம் இருக்கும் போது படியுங்கள்; நீங்கள் மழை காலத்தில் ஜஸ்கிரீம் விற்க்க துடிக்கிறியள்; பல்லி கோடை காலத்தில் தண்ணீரை இலவசமாக கொடுக்க முற்படுகிறேன்; புலியை பற்றி விமர்சிப்பதில் தாங்கள் காட்டும் அக்கறையில் ஒரு வீதமாவது பல்லி மக்கள் மீது காட்ட படாதா; திரும்பவும் சொல்லுகிறேன். இது எமது விவாத போட்டிநடத்தும் காலம் அல்ல; அதனால் தற்ப்போது மக்களை பற்றி சிந்திப்போம்; பின்பு ஆறுதலாக இலக்கிய நயத்துடன் விவாதிப்போம்;
கீதா குலனை பார்த்து ஏதோ கேட்டீர்கள் முன்பு ஏதாவது கிளித்தீர்களா இப்போது கிளிப்பவர்களென; உன்மைதான் அப்போது நாம் எதுவும் கிளிக்கவில்லை அது எம் கையாலாகதனம்; ஆனால் அந்த வலியும் அனுபவமும் தான் இன்று எமது எழுத்துக்களாய் தேசத்தில் வருகிறது; புலி மக்களை பற்றி சிந்திக்கவில்லை அதை விரும்பவும் இல்லை; அதேபோல் நாமும் புலியை விரட்டுவதிலேயே முழு கவனத்தியும் செலுத்தியதால் புலி புழியான பின்னும் கரைக்க தெரியாமல் கலைக்க முயல்கிறோம்; தொடரும் பல்லி;
BC
புலி ஆதரவாளர்கள் பெரும்பான்மையினால் பிரபாகரன் இறந்ததாகவே இன்னும் ஒப்புக் கொள்ளபடவில்லை.அது என்ன வீர மரணம்? புலிகளால் மற்ற இயக்கத்தவர்கள் கொல்லப்பட்ட போது துரோகிகள் மரணமா? புலிகள் தமிழர்கள் பெருமையாக தலைநிமிர வைத்தவர்கள் என்று புலி ஆதரவாளர்களால் தமிழர்களின் காதில் பூ சுற்றப்பட்டது.
கீதா
குலன், மிக்கநன்றி கவிதையில் குரல் தந்தமைக்கு நன்றி. குலன் நான் உங்கள் உணர்வை காயப்படுத்தவோ அன்றி எடைபோடவோ வரவில்லை.
பல்லி தான் எழுதிய பதிலை முதலிலும் பின் நான் எழுதியதையும் பார்த்தால் நன்று.
மனிதநேயம்/ மனித உறவுகள்/ மனித நாகரீகம்/ மனித வாழ்வுக்கான சுதந்திரம்/ இதற்குள்த்தான் நான் பேச முனைகின்றேன்.– என்ற குணாளன் வரிகளை மீண்டும் பதிகிறேன். ரெலோவினதும் புலிகளினதும் கொலைகளை நான் நிறுத்துப் பார்த்து நியாயம் கேட்கவில்லை. பிரபாகரன் மன்னிப்புக் கேட்பதால் இழந்த உயிர்கள் புத்துயிர் பெறாது என்பது அனைவர்க்கும் தெரியும். ஆனால் எல்லாப் பிரச்சினைகளும், ஆய்வுகளுக்கும்- விமர்சனங்களுக்கும் உட்படுத்தப்படுவது தற்போது வாழ்பவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கே. அதுகிடைக்கப்பெறாததன் காரணமாகவே நானும் என்போன்றவர்களும் நியாயத்தினை வேண்டி நிற்கிறோம். அதற்காக நாம் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்க தவறுகின்றோம் என்று பொருள்படாது பல்லி.– என் கருத்திற்கு களம்தந்த தேசத்திற்கு நன்றி.
palli
கீதா; பல்லிக்கு உங்களளவுக்கு விபரம் கிடையாது; ஆனால் நீங்கள் சொல்லிய புலியால் பாதிக்கபட்ட குடும்பம் என பல்லியை சொல்ல முடியாவிட்டாலும் புலி தலமையால் நேரடியாகவே பல இன்னல்களை பல்லி குடும்பம் சந்தித்துள்ளேன்; ஆனால் அதே புலி குடும்பத்தால் பாதிக்கபட்ட எத்த்னை பேர் மாற்று அமைப்பை ஆதரித்தீர்கள்; எத்தனை பேர் புலியின் கருத்துக்கோ அல்லது புலியின் செயல்பாட்டுக்கோ எதிராக எழுதினீர்கள்;
பல்லி எழுதியுள்ளேன். புலி பல்லி ஒரு மனித பிறவியே அல்ல தமிழின துரோகி என புகழும் அளவுக்கு எழுதியுளேன்; புலிகள் தமிழ் சமுதாயத்தை விட்டு அகற்றபட வேண்டும் என எழுதியுள்ளேன்; அதேபோல் கழகத்தின் கடந்த காலம்; டெலோவின் உள்புடுங்கு பாடு; டக்கிளஸின் மகிந்த விசுவாசம், சங்கரியின் இப்படிக்கு சங்கரி; பிரபாவின் கடந்தகால கோழைதனங்கள் இப்படி பலதையும் விவாதித்துள்ளேன்; புலி எப்படி புகழ்ந்ததோ அதவிட ஒருபடி மேல் மாற்று கருத்து கனவாங்கள் பல்லிக்கு பல சான்றிதழ்கள் வழங்கியுள்ளனர்(தங்களைபோல்).
பல்லியை பொறுத்த மட்டில் புலிக்கு கிடைத்த தண்டனை யாரும் எதிபாராதது, நாம் மட்டுமல்ல புலிகள் கூட இதை எதிர்பாத்திருக்க மாட்டார்கள்; இந்தநிலை புலிக்கு வரும் என கிட்டர் சர்வதேசத்தை சுத்த வந்தபொழுது மிக நிதானமாக அவரிடமே நேரடியாக சொன்னார்கள் (மாற்று கருத்தாளர் கூட) அவரும் தமது அமைப்பு விடும் தவறுகள் புரிந்தவர் போல்தான் பேசினார்; ஆனால் அவருக்கும் அதுக்குரிய பலனை புலிகள் உடனேயே கொடுத்து விட்டனர்; ஆகவே அவர்கள் அழிவை இதுபோல அனைத்தையும் தாங்களே அழித்து கொண்டனர், மிகுதியும் அமைப்பா?அல்லது வியாபாரமா என்னும் போக்கில் அழிந்து காட்டு புலி கூட இல்லாமல் போய் விடும்; ஆனால் அதேநேரம் வேறு புலிகளோ அல்லது நரிகளோ உருவாகாமல் பார்க்க வேண்டாமா? அதனால் தான் இறப்பை விட்டு பிறப்பை பற்றி சிந்திக்கிறோம்; மனிதநேயம் பற்றி குனாளன் மிக கவலைபட்டார்; அது பல்லிக்கு இருக்குதெனதான் நினைக்கிறேன், இல்லாவிட்டால் அதை உருவாக்க முயற்ச்சி செய்கிறேன்; பல்லி புலி விசுவாசியல்ல; ஆனால் தமிழர்கள் நலன் விரும்பி என்பதால் உங்கள் கருத்துக்கள் யாவையும் எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டு; தொடரும் பல்லி;
palli
ஏதாவது ஒரு அமைப்பு புலியால் மட்டுமே அழிந்து போனது அல்லது செயல் இழந்தது என குணாளன் வந்து சொன்னால் அதுக்கு தகுந்த பின்னோட்டம் விட பல்லி காத்திருக்கிறேன்; புலி அமைப்பு மட்டுமே புலியாலேயே அழிந்தது; மற்றவை அனைத்தும் அழிவதுக்கு புலியும் ஒரு காரனம்; அதனால் புலி செய்த எந்த கொலையையும் எந்த இடத்திலும் பல்லி நியாயபடுத்த மாட்டேன்; மற்றவர்கள் செய்ய செய்து கொண்டு இருக்கும் திருகு தாளங்களும் வெளிவரட்டுமே; பல்லி இந்த தேசத்தில் எழுத தொடங்கிய பின் வேண்டிய பட்டங்கள் பல; அதுவே என் எழுத்தின் கிறுக்கு தனம்;
ப்ரியா...கனடா
Hello accu….& பார்த்திபன்
எல்லாம் அவர் அவர் நம்பிக்கை…உங்களது உறவுகள் இறந்து விட்டதாக சில படங்களை Graphic Design மூலம் செய்து அனுப்பினால் நம்புவீங்களா? படங்களின் ஆதாரம் மட்டும் போதுமானதா?? மனதை தொட்டுச் சொல்லுங்கள்…மற்றது ஒரு மனிதன் சாகவில்லை என்று பலரும் நம்பும் போது இல்லை அவர் இறந்துதான் விட்டார் என்று ஆதாரம் இல்லாத சாட்சியங்களோடு நெஞ்சை நிமிர்தி… அவர்களின் வேதனையைத் தூண்டி விட்டு என்ன தான் இன்பம் காணுகிறீர்களோ???
thevi
பிரியா போன்றவர்கள் முப்பது வருடங்களாக மூழ்கியிருந்த மயக்கங்களினின்று சடுதியாக வெளியேற முடியாது. இவரைப் போன்றவர்களுக்கு சற்று கால அவகாசம் கொடுங்கள்.
பார்த்திபன்
ப்ரியா,
அரசாங்கம் காட்டியது படம் அல்ல ஒளிப்பதிவு. தாயகத்தில் மிஞ்சி தற்போது மறைந்து வாழும் புலிகளே பிரபாகரனின் இறப்பை உறுதிப்படுத்தியுமுள்ளனர். பிரபாகரனினால் சர்வதேசப் பொறுப்பாளர் என அறிவிக்கப்பட்ட பத்மநாதனும் இறப்பை உறுதிப்படுத்தியுள்ளார். பத்மநாதனின் அறிக்கையின் பின் முன்பு திடீரென முளைத்த அனைத்துலக புலனாய்வுப்பொறுப்பாளர் அறிவழகனும் மெளனமாகிவிட்டார். இவ்வளவு நடந்த பின்னும் நீங்கள் யாரை ஏமாற்ற கதை விடுகின்றீர்கள். நீங்கள் ஏமாந்தது போல் மற்றவர்களையும் ஏமாற்றவா??
santhanam
பல்லிக்கு நான் சவால் விடுகிறேன் புலியால் தான் அனைத்து இயக்கங்களின் இராணுவகட்டமைப்பு அழிக்கபட்டது முதலாவது புளட்டின் ஆயுதங்கள் காட்டிகொடுக்கபட்டன இந்தியாவிற்கு ஆதாரம் சுதந்திரவேட்கையில் பால உறுதிபடுத்தியுள்ளார் தளத்தில் அனைத்து மாற்று இயக்கங்களும் துரோகிகளாக்கபட்டு சிங்களத்தின்காலில் சரனாதிகளாக்கபட்டது புலியும் இந்தியாவின் உளவுநிறுவனத்தால் கையாளப்பட்டது அதற்குரிய காலம் வரும் போது எழுதுகிறேன் பல்லி பீலாவிடதையும் நாங்களும் தவண்டு கொண்டுதான் இப்பவும் இருக்கிறோம்
accu
பிரியா கனடா, உங்கள் சந்தோசத்தை கெடுக்கும் எண்ணம் எனக்கில்லை.பிரபாகரன் இறக்கவில்லை என்ற எண்ணம் உங்களை போன்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் என்றால் அப்படியே இருக்கட்டும். சுபாஷ் சந்திரபோஸ்,எல்விஸ் பிரெஸ்லி போன்றோர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னுடன் வேலை செய்யும் உங்களைபோல் எண்ணமுள்ள ஒருவர் கூறினார் தலைவர் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தமுறை மாவீரர் உரை நடத்தமாட்டார் அடுத்தமுறைதான் என்று. இன்னும் ஒரு வருடத்துக்கு தனது மனதை தேற்றிக்கொள்வதற்க்கு தன்னை தானே ஏமாற்றிக்கொள்கிறார். பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்? நன்றி.
palli
சந்தானம் சவால் யார் வேண்டுமானாலும் விடலாம் அது பணம் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல; ஆனால் விபரம் என்பது பணம் கொடுத்தும் வாங்க முடியாது என்பது தங்கள் பின்னோட்டத்தில் மிக தெளிவாக தெரிகிற்தும்; ரெலோவில் தாஸ் என ஒருவர் வடமராட்ச்சியில் மிக பெரிய வீரனாக புலிக்கு வயித்தை கலக்கும் ஒருவராக இருந்தார்; ஆனால் அவரை டெலோ அமைப்பின் தலமையை கொண்டே வையித்திய சாலையில் வைத்து புலியின் நரிதனம் போட்டு தள்ளியது; இதுக்குரிய பேச்சு வார்த்தை பொட்டனுக்கும் சிறியருக்கும் இந்தியாவில் எந்த இடத்தில் நடந்ததென தாஸின் தோழர்களை கேட்டு அதன் பின் உங்கள் சவாலோ அல்லது சமாளியோ விடுங்கள்; டக்கிளஸ் பிரியாவிட்டால் பத்மநாபாவை புலி அனுக முடியுமா என தோழர் வாக்கு மூலமே வரட்டும் அதன் பின் உங்கள் சவாலை பல்லி பார்க்கிறேன்; கழகம் சொல்லவே வேண்டாம் ;அது புலி போல் அன்று தன் தலையிலே தானே முடி வெட்டியது; ரெலா தேவைய்யா இது; அடுத்து ஈரோஸ் அது பாலகுமாரின் சொந்த வாழ்க்கைகாய் பலி போனது அதாவது புலி சங்கரின் தங்கைதான் பாலகுமாரின் வீட்டுகாரி; சந்தானம் இந்த தகவல் போதுமா இல்லை உங்கள் சவாலுக்கு இன்னும் சிறிது அமைப்புக்குள் சென்று விபரிக்கவா. பல்லி பரதேசியல்ல, பக்குவபட்ட தமிழன்; இதில் தொடர விருப்பம் இல்லை; ஆனால் ;;;;;; தொடரும் பல்லி;
palli
கழக ஆயுதம் அதுதான் உங்கள் ஆதாரமா; சந்தானம் சேகர் என ஒருவர் கழகத்தின் செயற்பாட்டு குழுவில் இருந்தார்; அவர் வேறுயாருமல்ல றோவின் மிக பெரிய அதிகாரி மட்டுமல்ல இந்திய நீர்மூழ்கி படையின் மூன்றாவது தளபதி என்பது தங்களை போல் சிலருக்கு தெரிய வாய்பில்லைதான்; ஆனால் அதே சேகர் இன்றும் இந்திய இலங்கை விடயத்தில் மிக முக்கிய பங்கு ஆற்றி வருகிறார் என்பது சந்தானத்துக்கு தெரியாவிட்டால் பரந்தன் ராஜனிடம் கேட்டு தெரிந்து கொள்வதே இந்த விவாதத்துக்கு உங்களை பலபடுத்தும்;
thollar sri
அனைவருக்கும் வணக்கம். நான் உங்களின் பின்னூட்டங்களை மட்டும்தான் வாசிப்பன். எழுதுவது கிடையாது. இப்போ எழுதவேணும்போல் இருக்கு எழுதிறன்.என்னவென்றால்……..பிரபாகரனைப்பற்றி எவ்வளவு காலத்துக்கு விமர்சிப்பீர்கள்.?? அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அதேநேரம் அங்கு தவிக்கும் எம்மக்களின் நிலைபற்றி யாராவது சிந்திக்கிறீர்களா??? எமது கடமை இனி அந்த மக்களுக்கு நல்ல சுபீட்சமான வாழ்க்கை அடைத்துக் கொடுப்பதே…..கதைத்து என்ன பலன் இன்று தமிழர்களின் இந்த அவலத்துக்குக் காரணமானவன் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன…??
santhanam
பல்லி அவர்களே பொட்டனை காப்கபற்றிய மாணிக்கதாசனை பொட்டர் எப்படி கொலை செய்தார் நன்றி கெட்டவர்கள் இப்படிதான் அழிந்தார்கள் சேர்ந்திருந்து கழுத்தறுப்பவர்கள் சேகர் வாத்தி கழகத்திற்குள் உள்வரும்போது தான் ஒரு நக்சலைட் என்றுதான் உள்நுளைந்தவர் பரந்தன்ராயன் பதவி வெறியில் வெளியேறி யாழ் வந்து 1985 காலபகுதியில் பேச்சுவார்த்தை நடத்தி தோத்து திரும்பி இந்தியறோவிடம் வேலைசெய்ய தெடங்கி இற்றவரை செய்கிறார் ஆனால் எழுதிய பின்னோட்டம் வேறு நீங்கள் தந்தகருத்து வேறு ஆனால் புலிகளால் மாற்று இயக்கங்கள் உடைவுக்கு காரணம் என்பதை ஒத்து கொண்டுள்ளீர். புலிகளின் முத்த உறுப்பினர் அனைவரும் கோளைகள் என்பது சரணாகதிக்கு பின்தான் மக்கள் புரிகிறார்கள் இதை நான் ஏற்கனவே பல இடங்களில் சொல்லியுள்ளேன்.
nerudal
The Sri Lankan military is probing the possibility that the Tamil Tiger’s spy chief may still be alive, despite testimony that he was killed with the rest of the rebel leadership.
“The military is still investigating Tiger intelligence wing leader Pottu Amman’s death as they could not find his body among the top level Tiger leaders,” the state-run Sunday Observer said.
rohan
சந்தானம்: டிஷ்யூம்
பல்லி: டிஷ்யூயூம் டிஷ்யூம்ம்ம்
சரியான போட்டி!!
பல்லியின் வரிகளில் நிதானமும் நெறியும் இருப்பதை நான் பார்க்கிறேன்.
skay
//ஆனால் அவரை டெலோ அமைப்பின் தலமையை கொண்டே வையித்திய சாலையில் வைத்து புலியின் நரிதனம் போட்டு தள்ளியது; இதுக்குரிய பேச்சு வார்த்தை பொட்டனுக்கும் சிறியருக்கும் இந்தியாவில் எந்த இடத்தில் நடந்ததென தாஸின் தோழர்களை// Palli, Please let us know when and where SriSabaratnam & Pootu met? I don’t think SriSaba’s was thinking to kill Thas while in India.
nerudal
பல்லி தாஸ் கொலைக்கு பொட்டர் சிறி சந்திப்பு என்று ……….//. இந்தநேரத்தில் பொட்டர் மட்டக்களப்பில் நின்றிருந்தாரென்பது குழந்தைக்கும் தெரியும்.
thollar sri
அன்பாகக் கேட்கிறேன்….. தோழர்களே தயவுசெய்து இந்த நேரத்தில் முடிந்து போனவற்றை திரும்பவும் கிளறி இருக்கும் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் தாயகத்தில் அல்லல்படும் நம் உறவுகளின் எதிர்கால வாழ்வுக்காகக் குரல் கொடுப்போம்…. ஆயுதம் ஏந்தியவர்கள் அழிந்தார்கள்….அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் தோழர்களே…
danu
தாஸ் உயிருடன் இருக்கும்வரை ரெலோவை அழிப்பது கடினமென்பதால் திட்டமிட்ட முறையில் தாஸ் ஒழிக்கப்பட்டார். இதில் புலிகளின் பங்களிப்பு இல்லாமலில்லை. ஆனால் பொட்டர் சிறீ சந்திப்பு என்பது பொய்க்கதை. பொபி தாஸ் பிரச்சினையில் சிறீசபா சரியானமுறையில் கையாள தவறிவிட்டார். அதுவே ரெலோ அழிவுக்கு வித்திட்டு அவர் உயிரையும் குடித்தது. அதேபோன்று புலிகளின் அழிவும் நடந்தேறியது. கிட்டு மாத்தையா கருனாபிளவு தமிழ்ச்செல்வன் இளந்திரையன் என்ற இழப்புகளே பிரபா அழிவினை இலகுவாக்கியது. இதில் கேபி பங்கு ஒரு பகுதியே..
palli
தோழர் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விடயத்தை தற்காலிகமாக பல்லி ஒத்தி வைக்கிறேன்; ஆனால் நேரம் வரும்போது கண்டிப்பாக தொடர்வேன்; இருப்பினும் சில விடயத்தை இந்த பின்னோடத்தின் எழுதி விடுகிறேன்; எனது பின்னோட்டம் தமிழர் அழிவுக்கோ அல்லது மாற்று அமைப்புகள் அழிவுக்கோ புலிகள் மட்டும் காரணம் அல்ல; ஆனால் அவர்களும் ஒரு காரணம் என சொன்னேன்; அதுக்கு சந்தானம் சவால் விட கேட்டார்; குணாளன் ஏதோ பல்லி பரசவபட்டு பதில் பின்னோட்டம் எழுதுவதாக எழுதினார்; ஆகவே மாற்று அமைப்புகள் அழிந்து போனதுக்கு யார் காரணம் எப்படி காரணம் என்பதை விளக்க முற்படேன்; அதில் சில தரவுகளும் தந்தேன்; ஆனால் சந்தானத்தின் சவாலே சமாளிக்கு பதிலான பின்னோட்டம் விட சில ஆதரங்களை கொண்டுவர முற்பட்டேன்; ஆனால் நமக்குள் விவாதம் செய்ய இதுவாநேரம் என தோழரின் பின்னோட்டம் சரியென பட்டதால் சந்தர்ப்பம் வரும்போது இதே தேசத்தில் அதை தொடர்வோம்;
நண்பர்கள் கேள்வி தாஸ் கொலை இதில் பொட்டரும் சிறியரும் சந்திப்பு சாதகமில்லை; இதில் சம்பந்தபட்ட சிறியர் தற்ப்போது உயிருடன் இல்லை; பொட்டர் எங்கு என்பது தெரியாது, ஆனால் இது தெரிந்த சில ரெலோ தோழர்கள் கனடாவில் உள்ளனர்; எங்கு நடந்தது? சாலி கிராமத்தில். எப்போது நடந்தது?. பிரபாகரனும் என்னும் நாலு தலைவர்களும் தோழில் கை போட்டு படம் எடுதார்களே (இனைவு அல்லது கூட்டு) அது முடிந்த சில நாட்களில்; ஏன் இந்த சந்திப்பு? தாஸ் எப்போதுமே பயம் அறியா வீரன் என்பது வடமராட்ச்சி வாழ் அனைவர்க்கும் தெரியும்; அதேபோல் அந்த கால கட்டத்தில் ரெலோவில் மட்டுமல்ல அனைத்து அமைப்புகளும் தாஸ்சை ஒருநாயகனாகவே பார்த்தன அதுக்கு உன்மையனான காரணம் தாஸ் மட்டுமல்ல அவரது குழு உறுப்பினர் அனைவரும் மிகநல்ல உடல் வாகும் துணிவும் கொண்டவர்கள் என்பதுதான்;
இதில் பொபி என்பவருக்கு (யாழ் மாவட்ட பொறுப்பாளர்தானே) சற்று வருத்தம் அதனால் தாஸ்சும் பொபியும் சற்று விலகியே செயல்பட்டனர்; இதனால் தாஸ் வடமறாட்ச்சி பகுதியை மிகவும் பலமான(ரெலோ) இடமாக செயல் பட்டார் இந்த காலத்தில் சாவகசேரி புலிக்கும் ரெலோவுக்கும் சில தகராறுகள் தொடங்க கேடி தலமையில் அங்கு டெலோ உறுப்பினர் தாக்கபட்டனர்; இதை கேள்விபட்ட தாஸ் தனது சிலநண்பர்களுடன் வந்து சவகசேரி கொடிகாம பகுதியில் உள்ள அனைத்து புலிகளுக்கும் (கண்ணில் பட்டவர்களுக்கு) வாழை தண்டால் ஓட ஓட அடித்து கலைத்தார்; அப்போது தாஸ்சுடன் செயல்பட்ட ஒருவரைதான் சாவகசேரி சுடலையில் உயிருடன் ரயர் போட்டு புலிகள் எரித்தார்கள்; இந்த சாவகசேரி தாஸ் சம்பவம் தலமையின் கட்டுபாட்டை மீறிவிட்டதாக பொபி தாஸ் மீது குற்றம் சாட்ட சிறியரோ தனது நம்பிக்கை நட்செத்திரமான தாஸ்மீது எந்த நடெவெடிக்கையும் எடுக்கவில்லை; இதுக்கு காரனம் தாஸ்
palli
தொடர்ச்சி…
(தாஸ் ஒரு வீரன் மட்டுமல்ல மிகநல்ல ஒரு மனிதன் நியாயவாதி என்பதுதான்;) இந்த காலகட்டத்தில் தான் பொட்டனின் மூளை வேகமாக
செயல்பட்டது தங்களது உறவுபாலத்துக்கு தாஸ் தடையாக இருப்பதாக (தங்களது ஏலாதனத்தை நரிதனமாக மாற்றினார்) திரும்ப திரும்ப இதை பொட்டர் வற்புறுத்த பொபியும் அடிக்கடி தாஸ் மீது குற்றங்களை அடுக்க சிறியரின் அறிவு தடுமாறியது; அதுவே தாஸ் என்னும் வீரனை பொபி என்னும் கோழை ஆஸ்பத்திரியில் வைத்து அழித்தனர்; இது பலரும் அறிந்ததுதான்; இதில் எப்படி பொட்டரும் சிறியரும் கலந்து கொண்டனர் என்பது சில தோழர்களே வந்து பின்னோட்டம் விடகூடும்; அந்த காலத்திலும் பிரபா தலைமறைவு வாழ்க்கைதான்; ராகவன் தம்பியை விட்டு பிரிந்த பின் பொட்டர்தான் புலியில் இருந்து இந்தியாவில் தறுதலை வேலைகளை செய்தவர்; இதில் சந்தானம் சொல்லிய சம்பவமும் உன்மைதான் மாணிக்கதாஸனும் சென்னையில் ஒரு முறை பொட்டரை காப்பாற்றியதாக பல கழக நண்பர்கள் சொல்ல கேள்விபட்டுள்ளேன்; ஆகவேதான் அனைவர்க்கும் இந்த அழிவுகளில் பங்கு உண்டு; ஆனால் புலிக்கு பல மடங்கு பங்கு உண்டு என்பதில் பல்லிக்கு எந்த கருத்து முரன்பாடும் இல்லை; ஆகவே அனைவரும் நட்புடனும் சமூக அக்கறையுடனும் எம்மால் முடிந்த்ததை எம்மின மக்களுக்காக செய்வோம்; இதுவே பல்லியின் ஆதங்கம்;
santhanam
பல்லிக்கு நன்றி தாஷ்சின் சம்பவங்கள் உண்மை ஆனால்பொட்டர் சம்பந்தபட்டது நீங்கள் சொல்லிதான் தெரியும் இந்த போரட்டத்தில் நடந்த சம்மவங்கள் அனைத்தும் சுயவிமர்சனத்துக்குட்படுத்தபடவேண்டும் ஆனால் நான் நினைக்கிறேன் இப்பதான் அந்த சந்தர்ப்பம் எனியும் தமிழினம் ஏமாற்றபட இடம் கொடுக்கவேண்டாம்.
சந்தனம்
நேற்று முளைத்தகாழங்கள் எல்லாம் புலம்பெயர்ந்ததேசத்தில் புலிகள் ஆகி வன்னியிலிருந்து தலைமைபீடத்திற்கு கம்பிநீட்டிவிட்டு வந்தவர்கள் எல்லாம் சர்வதேச புலனாய்வுபொறுப்பாளர் என்று புலத்தில் ஏமாற்றிகொண்டு தேசத்தில்வந்து மனிதநேயம் மிக்கவர்களாக எங்களிற்கு றீல் ஒட்டுகிறார்கள் பல்லி இதற்கு உங்கள்பதில்??
palli
எந்த அமைப்பவது அமைப்பு கட்ட இடிக்க என சொல்லி வந்தால் அவர்களிடம் இந்த அமைப்பு எதுக்கு என கேக்கவும்; மக்களுக்காக என சொன்னால் அதை நாமே செய்கிறோம் என சொல்லுங்கள்; இல்லை வியாபாரத்துக்கு என சொன்னால் (அதுதான் இப்போதுநம்ம K P சொல்லுவது போல் சொன்னால்)……………. தப்பில்லை; சிறு உதவி செய்தாலும் மக்களுக்கு செய்யுங்கள்; ஆனால் தயவு செய்து என்னொரு புலியோ பூனையோ உருவாகாமல் பாத்து கொள்ளுங்கள்; எதையும் மனம் விட்டு விவாதிப்போம்; மனதோடு செய்வோம்; இதுவே இன்று தேவை