கே.பி.யைக் கைது செய்ய நடவடிக்கை – சர்வதேச பொலிஸார் தீவிரம்

Selvarasa_Pathmanathan_LTTEகே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்ய சர்வதேச பொலிஸார் வலை விரித்துள்ளனர்;.

இவரது மறைவிடங்கள் என்று கருதப்படும்  தாய்லாந்து. மலேஷியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் இவர் தொடர்பான புலன் விசாரணைகளை சர்வதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இலங்கை அரசும் இந்திய அரசும் விடுத்து கோரிக்கையையடுத்தே கே.பி.யைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • ஜேம்ஸ் பாண்ட் 000
    ஜேம்ஸ் பாண்ட் 000

    ஐயோ இதை செய்ங்கப்பா முதலில், இவர் தொல்லை தாங்கமுடியவில்லை. வெளிச்சத்தில் இருப்பவர்களையே நம்பமுடியவில்லை, இவர் வேறு “முத்து காமிக்ஸில்” வரும் “இரும்புக் கை மாயாவி போல”. என் உள்ளுணர்வு கூறுகிறது, இவர் ஏற்கனவே தாய்லாந்தில் ஒரு “உளவு நிறுவனத்தினால்” பிடிக்கப்பட்டு, அதன் “பொராக்ஸியாக”, எஞ்சியிருக்கும் சராசரியாக சிந்திக்கும் தமிழனையும் குழப்புவதற்காக பயன்படுத்தப் படுகிறார் என்று.

    Reply
  • Vannikumaran
    Vannikumaran

    முதலில் தமிழ் சமூகம் செய்ய வேண்டியது இந்த ஆயுதக் கடத்தல் கேடி கே பி ஐ வெளியே கொண்டுவரவேண்டும் அல்லது தமிழ் மக்கள் விடயங்களில் தலையிடுவது தவிர்க்கப்படவேண்டும்.
    காரணம் 1977ல் தமிழர் தம் தலைவிதி நிர்ணயத்தை பகல் கொள்ளை கூட்ட கூட்டணியிட்ட விட்டது. கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் தங்கள் குடும்பங்களை வாழவைத்து தாமும் வாழ்ந்துவிட்டு தமிழர்களை அரசியல் அனாதைகள் ஆக்கினர். அந்த கொடுமையில் இருந்து தமிழரைக் காக்கவென வந்த ஆயுதப் போராட்டக் குழுக்கள் த வி புலிகள் உட்பட குட்டிமணி> தங்கத்துரை போன்ற கடத்தல்காரர்களின் தயவில் தங்கள் விடுதலைப் பயணத்தை விருத்தி செய்து வினையாய் விதைத்து இன்று அறுத்த விளைவுகளைப் பார்த்தோம். தமிழர்களில் தீர்க்கதரிசன தலைவன் என்ற பிரபாகரனே இன்று சேர்ந்த திசை தெரியாது இருக்கின்கின்றோம். ஆதலினால் தமிழர்க்கும் இந்த கடத்தல்காரர்களுக்கும் பத்தில வியாழன் வேண்டாம் இந்த விசப்பரீட்சை மீண்டும். கே பி எதையாவது செய்துவிட்டு போகட்டும் அது அவரது தனிப்பட்ட பிரச்சனை ஆனால் தமிழர் பிரச்சனையில் பிரபாகரனின் பிரதி நிதி என்று சொல்லி பித்தலாட்டம் காட்டி தமிழரை சர்வதேச ரீதியில் அடகு வைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தாயகத்தில் தடுத்துவைக்கப்பட்ட 9000புலிகளில் ஒருவர் புலிகளின் பிரதி நிதியாகட்டும். அல்லது முகத்தை காட்டும் தமிழர் மீது அக்கறை கொண்ட ஒருவர் பிரதி நிதியாகட்டும்.இவையில்லாமல் தன் பிரச்சனையே தீர்க்கமுடியாமல் இருக்கும் ஒருவரின் கையில் தமிழரின் பொறுப்பைக் கொடுப்பது பசித்த குரங்கு பூனைகளுக்கு அப்பம் பிரித்த கதையாகத்தான் முடியும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நினைத்தவுடன் கே.பியுடன் தொலைபேசியில் பலராலும் தொடர்பு கொள்ள முடியுமென்றால், சர்வதேச பொலிஸாரால் அவரைக் கைது செய்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?? முன்பு கே.பி என்ற ஆயுதவியாபாரி பல நாடுகளுக்கும் தேவை. இப்போ அந்தத் தேவையில்லை. எனியும் சர்வதேசம் கே.பியின் கைதில் நாடகமாடுமா என்பது விரைவில் தெரியவரும்.

    Reply
  • thurai
    thurai

    கே.பியுடன் தொடர்பு வைத்து செயற்பட்ட அனைத்து தமிழர்களையும் கைதுசெய்து தண்டணை கொடுக்கப்பட வேண்டும்.

    துரை

    Reply