இடம்பெயர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள் மீண்டும் அதே பதவியில் – அமைச்சர் ரிஷார்ட் நடவடிக்கை

rizad_baduradeen1.jpgபாதுகாப்பு வலயத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள கிராம சேவை உத்தியோகத்தர்களை மீண்டும் அதே பதவியில் நியமிப்பதற்கு அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹாலிடீன் தெரிவித்தார்.

இவ்வாறு நியமனம் பெறும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு குடி நீர் மற்றும் அத்தியவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

இறப்பு பிறப்பு தொடர்பான விடயங்களைப் பதிவு செய்வதற்கு உதவும் அதேவேளை நலன்புரி நிலையங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக முகாமைத்துவத்துக்கு அறிவிக்க வேண்டுமெனவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • tax
    tax

    இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணத்துக்கு பணமில்லையென கைவிரிக்கும் அரசாங்கம் எப்படி அவசர அவசரமாக வடக்கு மற்றும் வன்னியில் தேர்தல் வைக்க பணம் வந்தது…. சென்ற ஆகஸ்டில் நடந்த தேர்தலுக்கு 290மில்லியன் அரசாங்கம் செலவளித்துள்ளது. ஆக அதிகாரத்தை தக்க வைக்க தமிழ் மக்களை ஒட்டாண்டியாக்கி சீரழித்த அரசாங்கம் தமிழ் மக்களூக்கு எந்தநிவாரணமுமில்லை…தேர்தல் திருவிழாவுக்கு பணம் எப்படி கிடைத்தது….

    Reply