பயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டமைக்காக ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் நன்றி கூறிக்கொள்வதுடன் அவ்விருவருக்கும் எதிராக சர்வதேசத்தினால் மேற்கொள்ளவிருக்கின்ற போர்க் குற்ற விசாரணைகளுக்கு எதிராக அரசுடன் கைகோர்த்துச் செயற்பட ஐ.தே.க. தயார் என்று அக்கட்சியின் குருணாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாழ்க்கை தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.