பாதுகாப்பு வலயத்தில் இருந்துகொண்டு மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான பொய்யான தகவல்களை வெளியிட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மருத்துவர் போன்றோர் தொடர்பான உண்மையான தகவல்கள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்.
இவர்களை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனரென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இவர்கள் பொய்யான செய்திகளை பரப்பி வந்தனர்.
இவர்களில் சிலர் இறந்து விட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு வாரங்களில் இவர்கள் தொடர்பான தகவல்கள் அம்பலப்படுத்தப்படும். அவர்களாகவே உண்மையை வெளிப்படுத்துவார்கள்.
கடந்த காலங்களில் 9100 புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். இவர்களில் 1600 பேர் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். 14 தற்கொலை குண்டுதாரிகள் வெளியில் உள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சரணடைந்தவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழே விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தச் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட மாட்டாது. சமாதானம் நிலைநாட்டப்பட்டால் இந்த சட்டங்கள் தேவைப்படாது.
பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துள்ள போதும், பயங்கரவாதம் முற்றுப் பெறவில்லை. சர்வதேச ரீதியில் புலி முக்கியஸ்தர்கள் பலர் செயற்பட்டு வருகின்றனர். இவர்களை கைதுசெய்ய சர்வதேச பொலிஸின் (இன்டர்போல்) ஒத்துழைப்பை கோரியுள்ளோம். இதேவேளை, புலி ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களையும் இலங்கை பிரஜைகளையும் தாக்கி வருகின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு சர்வதேச நாடுகளை கோரியுள்ளோம்.
rohan
லைற்ஸ்
கமெரா
அக்க்ஷன்
அப்போ அந்தப் பயங்கரவாதம்
இப்போ இந்தப் பயங்கரவாதம்
அவர்களாகவே உண்மையை வெளிப்படுத்துவார்கள் என்றால் ஏன் இவ்வளவு தாமதம்?
tax
பாதுகாப்பு வலயத்தில் இருந்துகொண்டு மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான பொய்யான தகவல்களை வெளியிட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மருத்துவர் போன்றோர் தொடர்பான உண்மையான தகவல்கள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்.//
அரசாங்கம் இப்போது கைதான மருத்துவர்கள்,மற்றும் தமிழரசு கட்சி கனகரத்தினம் ஆகியோருடன் மிக முக்கியமான பயமுறுத்தலான பேரம்நடைபெற்றுவருவதாக அறியப்படுகிறது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயல்பாட்டுக்கும் ஆப்படிக்கும் மிக அந்தரங்கமான பேரம் அரசினதும் மகிந்த சகோதரர்களினதும் மட்டத்தில் நடந்து வருகிறது.
அண்மையில் கொழும்பில் கைதான புலி உறுப்பினர் கொடுத்த மிக இரகசிய தகவல்களையடுத்து கொழும்பில் புலிகளின் இறுதியான எல்லா கட்டமைப்புகளும் பிடிக்கப்பட்டுள்ளன.// 14 தற்கொலை குண்டுதாரிகள் வெளியில் உள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.//
இதில் கைதானவர் கனகரத்தினம் எம்பியின் மகன் எனநம்பகமாக தெரிகிறது. இதுதான் இரு கிழமையில் வரவுள்ள உண்மை.
ramesh
பாவம் இவர்கள். மத்தாளத்திற்கு இரண்டு பக்கமும் அடி- என்பார்களே அதுதான் இன்று இவர்கள் நிலை. அன்று அங்கு அவர்களால். இன்று இங்கு இவர்களால். இதைவிட வன்னியில் இறந்திருக்கலாம்.