![]()
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதாபிமான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடையும் தறுவாயில் சிவிலியன்களை காரணம் காட்டி குறிப்பிட்ட சில மேற்கு நாடுகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்குமாறு எம்மை தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தமை பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் காப்பாற்றுவதற்காகவே என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கை, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் தீவிரவாத பிரச்சினைகள் என்றும் முடிவுக்கு வரக்கூடாதென்ற நீண்டகால நோக்கிலேயே சில நாடுகளில் இவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கடந்த திங்கட்கிழமை (25) துலாவ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெனரல் பொன்சேகா வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சியில் செயற்பட்டு வந்த குறிப்பிட்ட சில அரசசார்பற்ற நிறுவனங்கள் சிவிலியன்களுக்காக ஒரு குளியலறையைக் கூட கட்டிக்கொடுக்கவில்லை. மாறாக எல்.ரி.ரி.ஈ யினருக்கு பணமும் இராணுவ ஆலோசனைகளையுமே வழங்கி வந்துள்ளனர்.
புலிகளால் பயன்படுத்தப்பட்ட சில படகுகள், யுத்தக் கப்பல்கள் அவற்றுக்கான இயந்திரங்கள் என்பன தொண்டர் நிறுவனங்களின் நிபுணத்துவம் பெற்றவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இயந்திரங்களின் இறக்குமதிக்கும் இவர்கள் உதவியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
ஊடக சுதந்திரம் கோரி லிப்டன் சுற்றவட்டத்தில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த குறித்த சில பாதுகாப்புத் தொடர்பான ஆராய்ச்சியாளர்களும் திறமை வாய்ந்த ஊடகவியலாளர்களும் புலிகளுக்குச் சார்பானவர்களென்ற உண்மை எல்.ரி.ரி.ஈ. இயக்கம் முழுவதுமாக அழிக்கப்பட்டதன் பின்னரே தெரியவந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக புலிகள் இவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை வழங்கியுள்ளனர் எனவும் ஜெனரல் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
இத்தகையவர்களே படை வீரர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான கட்டுரைகளை எழுதி வந்தனர். எல்.ரி.ரி.ஈ இயக்கம் அழிக்கப்பட்டதும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் படைவீரர்களுக்கு கிடைத்ததும் தான் தாமதம் மேற்படி செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் நாட்டை விட்டே ஓடிவிட்டனர். நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமாயின் இத்தகைய குற்றவாளிகள் தேசத்துரோகிகளாக கணிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டுனெவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்கள் கடத்தியவரும் தற்போது அந்த இயக்கத்தின் தலைவராக முயலுபவருமான கே. பியை இன்டர்போல் தேடிவருகின்றது. இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலையுடன் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இலங்கை இராணுவம் 10 ஆயிரம் பேரைக் கொண்டிருக்கையிலேயே பிரபாகரன் இந்தியாவின் ஒத்துழைப்புடன் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை கட்டியெழுப்பினார்.
இப்போது எமது இராணுவத்தில் 2 இலட்சம் பேர் உள்ளனர். கூடிய விரைவில் இந்த எண்ணிக்கை 3 இலட்சம் ஆகப்போகிறது. இந்நிலையில் இலங்கையில் மீண்டும் ஒரு எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை கே. பி. யினால் கட்டியெழுப்புவது எவ்வகையிலும் சாத்தியமாகாது என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு விட்டனர். எமது உள்நாட்டில் வகுக்கப்பட்ட வியூகங்களைக் கொண்டே படையினர் இந்த வெற்றியை நிலைநாட்டினார். இந்நிலையில் கே. பி. இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ எல். ரீ.ரீ.ஈ. இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப திட்டம் தீட்டினால் அதனை தோற்கடிப்பதும் எமக்கு பெரிய வேலையாகாதென்பதை நினைவுபடுத்திக் கூறவிரும்புவதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார்.
மோதல்களின்போது 195 இராணுவ அதிகாரிகளும் 5 ஆயிரத்து 224 படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரம் படை வீரர்கள் ஊனமுற்றுள்ளனர் எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, படைவீரர்களால் 22 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 9 ஆயிரம் புலிகள் சரணடைந்திருப்பதாகவும் முதற்கட்டத்தின்போது ஒரு இலட்சத்து 15 ஆயிரம் சிவிலியன்களும் இரண்டாம் கட்டத்தில் 80 ஆயிரம் சிவிலியன்களும் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Vannikumaran
தமிழ் மக்களுக்கு ஓர் அபாய அறிவுப்பு
கே பி ஒரு கேடி இதுவரைக்கும் தலைவர் அவரை உத்தியோக பூர்வமாக நியமிக்கவில்லை. ஆனால் தலைவர் இறக்கவில்லை பின் இறந்து விட்டார் என்ற சோகமான செய்தியை தமிழர்களுக்கு மறைந்திருந்து அறிவித்தவரும் இந்த கே பி தான். இதில் குளப்பமும் இருக்கிறது. முகந்தெரியாத ஒருவரை தலைவராக இனிதமிழினம் அனுமதிக்க கூடாது. தவிர றோ கே பி க்கு ஆதரவு அழித்து பிரபாகரனை பத்மநாதனின் மூலம் சூழ்ச்சியாக இறுதிநேரத்தில் இந்தியாவுக்குள் வரவழைத்து கொன்றிருக்கலாம் அல்லது அவரை வீட்டுக்காவலில் வைத்திருக்கலாம். அதன் மூலம் கே பி தன்மீது இருக்கும் குற்றங்களில் இருந்து தப்பி வாழ உதவுவதாக றோ உறுதி வழங்கியிருக்கலாம். இந்த றோவின் டைரக்சனில் உருவாகிய நாடகத்தில் கே பி கதாநாயகனாக நடிக்க வாய்ப்புண்டு.தவிர 12 நிமிடத்தில் 50 கிமீ வேகத்தில் செல்லும் அதி வேக படகில் கிழக்கு நோக்கி 3 மணிநேரம் பயணம் செய்து தலைவர் தப்பினார் என்று கே பி முதலில் உத்தியோக பூர்வமாக அறிவித்த செய்தி சந்தேகத்தை கிளப்புகிறது.முல்லைத்தீவில் இருந்து கிழக்கல் 1100 கி மீ தொலைவில் இருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்லவே 4 மணித்தியாலங்களுக்கு மேல் தேவை . ஆனால் அவை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள். அங்கு போக வாய்ப்பிருக்குமானால் அது கேபி யும் றோவும் நடத்திய நாடகத்தின் கிளைமாக்ஸ் ஆகத்தானிருக்கும்.
தவிர வங்காளவிரிகுடாவின் வாய்ப்பகுதியை குறுக்கறுத்து மணிக்கு 250 கிமீ வேகத்தில் தொடர்ந்து அதிவிசைப் படகில் சர்வதேச கடல்பரப்பில் இந்தியாவின் 320 கிமீ கடல் எல்லையைத் தாண்டி பயணம் செய்ய ஒரு மணித்தியாலத்துக்கு மேல் தேவை. இந்தியாவே பிரபாகரனைப் பிடிக்க அல்லது இலங்கை அழிக்க இலங்கை அரசுக்கு உதவி செய்து விட்டு பிரபாகரன் தப்பி ஓடும் போது இந்திய கடல் படைகளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று உத்தரவாம்.இது உண்மையாக இருக்க முடியாது அப்படி உண்மையாக இருந்தால் பிரபாகரன் றோவுடன் சேர்ந்து கேபி விரித்த வலையில் விழுந்து அவர்களின் பிடியில் இருக்கவேண்டும்.
இல்லது 1400 கிமீ தொலைவில் உள்ள ரங்கூனுக்கோ அல்லது1200கிமீ தொலைவான இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளைக் அடைந்திருக்க வேண்டும். ஆனால் இவ்வளவு தொலைவை சர்வதேச கடல் எல்லையில் சர்வதேசமே கண்காணித்துக் கொண்டிருந்த கடல் பரப்பில் இந்த அதிவேக சீரான வேகத்தில் பயணம் செய்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நீர் மூழ்கி கப்பல்களையோ அன்றி சர்வதேச கடலில் பயணம் செய்த எதாவது ஒரு கப்பலில் சேர்ந்து பயணம் செய்திருக்க வாய்ப்புண்டு. அல்லது இந்திய எல்லையைக்கடந்ததும் தெற்கு நோக்கிப் பயணித்து அங்கு தரித்து நின்ற ஏதாவது ஒரு கப்பலில் ஆபிரிக்கா நோக்கிப் பயணம் செய்திருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும் முகந்தெரியாத பத்மநாதனை தமிழர் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதை தடுத்து இலங்கையில் இருக்கும் புலிகளுக்கு பொதுமன்னிப்பளித்து அவர்களில் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுப்பவரை புலிகளின் பிரதிநிதியாக்கி அவர்களையும் அரசியல் நீரோட்டத்தில் கலக்கவைத்து புலிகளும் இணைந்ததான ஒரு அரசியல் தீர்வை கண்டால் மட்டுமே அமைதியான இலங்கை தேசத்தை கற்பனை பண்ணமுடியும்.இல்லையென்றால் பத்மநாதனின் தொடர்ச்சியான ஆயுத வியாபாரத்தை பெருக்கி இலங்கை தமிழரும் சிங்களவரும் தொடர்ந்து அழிவதைதவிர வேறு வழியில்லை.1972 தொடக்கம் 18.05.2009 வரையான தலைவரின் ஆயுதப் போராட்ட வடிவம் தோல்வி கண்டுள்ளது என்பதை தலைவரே ஒப்புக்கொண்டுள்ளதால் தான் அவர் காக்கவெனப் புறப்பட்மக்களின் பேரளிவின் பின் எந்த செய்தியையும் மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை. அப்படி அவர் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர் உண்மையில் இறந்திருப்பார். இந்த இரண்டும் இல்லாமல் ஆயுதப்போராட்த் தோல்வியையும் ஒப்புக் கொள்ளாமல் மக்களுக்கும் எந்த செய்தியையும் சொல்லாமல் இருப்பாரேயானால் தமிழ் மக்களுக்கு இவரைவிட துரோகம் செய்தவர்கள் வேறுயாரும் இருக்க முடியாது.
இறுதியாக எனது கணிப்பில் வீரம் நிறைந்த தலைவர் இன்னும் அவர் தாய்நாட்டிலேயே வாழுகிறார். அவரது நிலை உறுதியாகும் வரை பத்மநாதன் போன்ற வியாபாரிகளிடம் தமிழினம் தம்மை அடகுவைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் வழிக்கு திரும்ப விரும்பும் புலிகளைத் தலைவர்கள் ஆக்குங்கள். அது அமைதிக்கு வழிசமைக்கும். அதை விடுத்து தான் இருக்கும் இடத்தைக் கூட தமிழருக்கு சொல்ல முடியாதவர் அதாவது தன் ஒருவரது பிரச்சனையையே தீர்க்கமுடியாத ஒருவர் தமிழனத்தின் பிரச்சனையை தான் தப்ப ஏன் ஆனந்த சங்கரி> போன்று கையாளமாட்டார்.
எம் தலைவிதி மீண்டும் கள்ளக்கடத்தல்காரர்களால் தீர்மானிக்கப்படவேண்டுமா? மீண்டும் மீண்டும் நாம் செய்யும் தவறுக்கு துன்பம் வரும் போது மற்றவர்களைக் குறை கூறுவதில் பயனில்லை இப்படியே போனால் எம்மை ஆண்டவன் படைத்திருப்பானேயானால் அவனால் கூட எம்மைக் காப்பாத்த முடியாது.
அன்புடன் வன்னிக் குமரன்
பார்த்திபன்
வன்னிக்குமரன்
கே.பியை விடுங்கள் நேற்று கிழக்கில் ஒளிந்திருக்கும் தயாமோகன் என்ற விடுதலைப்புலியே பிரபாகரனின் மரணத்தை ஒத்தக் கொண்டுள்ளார். கே.பி கூட இலங்கை அரசு பிரபாகரனின் உடலத்தை தொலைக்காட்சியில் காட்டும் வரை தான் கதையளந்தார். அதன் பின் திங்கட்கிழமை தான் மீண்டும் பிரபாகரனின் இறப்பை உறுதிப்படுத்த வாய் திறந்தார். அதற்காக நீங்களும் உங்கள் பங்கிற்கு கதை விடுகின்றீர்கள். உந்த கதைகளினால் அடுத்தவர்களையும் ஏமாற்ற நீங்களும் முயலாமல், உருப்படியாக அங்கு வன்னியில் அகதிகளாகி அவதிக்குள்ளாகியிருக்கும் அந்த மக்களுக்கு ஏதாவது செய்யலாமா என்று சிந்தியுங்கள். அது தான் இன்றைய முக்கிய தேவை.
velu pillai
இது வரை தலைவர் உயிருடன் இருக்கிறார், என்டெல்லாம் கதை விட்டவர்கள் ஒன்றை நினைப்பதில்லை. அவர்களின் கதைகள் ஒன்றுக்கு ஒன்று பாரிய வேறுபாடுகளை கொன்டிருப்பதை. ரஜீவை இந்தியாவெ கொன்றிருக்கலாம், அல்லது அவரே தற்கொலை செய்திருக்கலாம், அமரிக்க பின்னணி அல்லது ஆபிரிக்க முன்னணி இருக்கும் என்றெல்லாம் கட்டுரைகள் வாசிக்கும் போது சிரிப்பு பொத்து கொன்டு வருது. அதுதான் உங்கட வல்வெட்டி தலை வெட்டியான் கிளினொச்சியில அத்தனை ஊடகத்துக்கும் சொல்லி போட்டாரே, அது ஒரு துன்பியல் சம்பவம் என்டு. ஏன் அதை அப்படி பகிரங்கமா மறுக்க இல்லை? அப்ப என்ட சொன்னது தலைவர் இல்லையா? அதுக்கும் ஒரு கதை யோசிச்சு சொல்லுங்க.