தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.
மே 18 ஆம் நாள் அன்று, பிரபாபரகன் உயிருடன் இருக்கிறார் என்று, ‘சேனல் 4’ என்ற இலண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்புப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து, ‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோகச் செயல் ஆகும்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மிக அண்மையில்தான், அவர் இந்தப் பொறுப்புக்கே நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களோடும், துரோகம் செய்து வெளியேறியவர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாதன் சிக்கி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன.
தமிழ் ஈழத்தில் துன்பமும், துயரமும் சூழ்ந்து, ஈழத்தமிழ் மக்கள், மனித குலம் சந்தித்து இராத அவலத்துக்கும் அழிவுக்கும் ஆளாகி இருக்கின்றனர். கொடுந்துயரில் ஈழத் தமிழ் இனம் சிக்கி வதைபடும் நேரத்தில், செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழ் மக்களும், தாய்த்தமிழகத்திலும், தரணி எங்கும் உள்ள தன்மான உணர்வு கொண்ட தமிழர்களும், இதை நம்ப வேண்டாம்; தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அனைத்து உலகப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர், அறிவழகன்,தனது அறிக்கையில், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளதையும் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.
தலைவர் பிரபாகரன் அவர்கள் வென்றெடுக்கக் களம் அமைத்த இலட்சியங்களை வெல்லவும், ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும் உறுதிகொண்டு நம் கடமைகளைத் தொடர்வோம்
msri
போற போக்கைப் பார்த்தால்> நெடுமாறன் வை.கோ.போன்றவர்கள் புலிகளின் தலைமைப் பதவியை ஏற்பார்கள் போலுள்ளது!
பார்த்திபன்
யார் துரோகி?? தம்பி தம்பி என்று வாயொழுக பிரபாகரனை அழைத்த வைகோ இன்று தன் அரசியல் பிழைப்பிற்காகவும், தான் பினாமியாகி வைத்திருக்கும் புலிகளின் சொத்துகளை அபகரிக்கவும் சூழ்ச்சி செய்து கொண்டு பிதற்றுவது துரோகமா?? அல்லது உண்மைகளை மறைக்க முடியாது என்று உணர்ந்து அதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்ட பத்மநாதன் துரோகியா??
மாயா
சிறீலங்கா இராணுவ தளபதி சரத் பொண்சேகா இவர்களை ” அரசியல் கோமாளிகள்” என்று சொன்னதை யாராவது இல்லை என்பீர்களா?
இவங்களெல்லாம் தலைவர்கள்? கொடுமை.
vanthiyadevan
அரசியல் கோமாளிகள்
Kulan
வைக்கோ! நீங்கள் என்றும் பகிடிதான் விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களின் சொந்தநாட்டிலுள்ள மக்களின் மனங்களையும் அரசியல் நிலைமைகளையும் புரிந்து கொள்ள முடியாத நீங்கள் சும்மா எங்களை ஏனனையா பொட்டு புரட்டி எடுக்கிறியள். சரி தம்பி பிரபா வந்துதான் என்ன செய்தார் செய்யப்போகிறார். இன்னும் எங்கள் உயிர்கள் போனது பத்தாதா?