ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். அவருடன் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்காவின் மனைவி, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் மனைவி, விமானப் படை தளபதியின் மனைவி, பொலிஸ் மா அதிபரின் மனைவி, மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்த லியனகே மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்றிருந்தனர்.
வவுனியா அரசஅதிபர் திருமதி சார்ள்ஸ், ஜனாதிபதியின் பாரியார் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார். நேற்றுக் காலை 10.30 மணியளவில் ஹெலிக்கொப்டரில் சென்ற இவர்கள் வவுனியா மணிக் பாம் நிவாரணக் கிராமத்தில் 4 ஆவது வலயப் பகுதிக்குச் சென்றனர்.
ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் “சிறிலிய சவிய” வேலைத் திட்டத்தின் கீழ் நிவாரணக் கிராமங்களிலுள்ள குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள், உடைகள், பெண்களுக்கான உடைகள், வீட்டுப் பாவனை பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றையும் வழங்கினார்.
அவர்களுடன் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ், பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியூகே, நிவாரணக் கிராமங்களுக்குப் பொறுப்பான இராணுவ பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மாயா
தமது கணவன்மாரது கொலைகளுக்கு மனைவிமார் பிரயச்சித்தம் செய்யப் போனார்களா? இருப்பவர்களுக்கு வாழ்வழிக்க ஏதாவது சொல்லிச் செய்யுங்கள். எம்மால் அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை.
rohan
தாய்க்குலம் பிக்னிக் போய் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. ரனிலுக்கு ஹெலிகொப்ரர் இல்லை என்று சொன்னவர்களல்லவா இவர்கள்? நம்மவர்கள் கடைசியில் அரசியல்வாதிகளின் குடும்பத்தினருக்குக் காட்சிப் பொருள் ஆகியிருக்கிறார்கள்.
palli.
சோனியாவின் அறிவுரையாக இருக்கும். இப்படி குடுப்ப தலவியாய் இருப்பதை விட்டு நாட்டுநடப்புகளையும் தெரிந்து கொள். அப்போதுதான் எதாவது எடக்கு மிடக்காய் நடந்தால் அவசர ஜனாதிபதியாக வரலாம். என்னை போல் இலகு பார்த்த கிளியாக இருந்து விடாதே என சொல்லியிருப்பார். அவர்கள்தான் இப்போது ஒன்னுக்கை ஒன்னாய் போனார்களே.
BC
ஈழத் தாய் ஜெயலலிதா வந்தால் தான் உங்களுக்கு திருப்தியாக இருக்கும் போல் தெரிகிறது.