ஒரு தனி மனிதனுக்காக நாங்கள் எத்தனை உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்து விட்டோம்? – அமைச்சர் முரளீதரன்

karuna-daya.jpg“பிரபாகரன் உடலைச் சென்று பார்வையிட்ட போது அது அவரின் உடலாகவே இருந்தது. இதனையடுத்து அங்கு ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கேட்டார், “அந்த உடலை நீங்கள் முதல் முதலாகப் பார்த்த போது எவ்வாறு இருந்தது என்று?” அத்தருணத்தில் நான் சிந்தித்துப் பார்த்தேன். அந்த ஒரு தனி மனிதனுக்காக நாங்கள் எத்தனை உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்து விட்டோமென”. அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

நாட்டை மீட்டெடுத்த படை வீரர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றத் திடலில் நடைபெறுகிறது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் சிங்களத்தில் உரையாற்றிய அமைச்சர் தொடர்ந்து தமிழில் உரையாற்றினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரபாகரன் கொல்லப்பட்டதன் பிற்பாடு பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்தன. அது அவருடைய உடல் தானா என்கின்ற ஒரு கேள்வி எழுந்திருந்தது. எனவே மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவரது உடலைச் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தும் படி கேட்டிருந்தார்.

அங்கு நாம் சென்று பார்த்த போது அது அவரின் உடலாகவே இருந்தது. இதனையடுத்து அங்கு ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கேட்டார், “அந்த உடலை நீங்கள் முதல் முதலாகப் பார்த்த போது எவ்வாறு இருந்தது என்று?” அத்தருணத்தில் நான் சிந்தித்துப் பார்த்தேன். அந்த ஒரு தனி மனிதனுக்காக நாங்கள் எத்தனை உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்து விட்டோமென. அவர் கொல்லப்பட்ட தினத்துடன் பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டு மக்கள் அனைவரும் இன்று பயம் , பீதி இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களிடையே சில சந்தேகங்கள் இருக்கின்றது. இதன் பிற்பாடு நம்மவரின் நிலை என்னவாக இருக்கும் என வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அவர்களிடம் நான் கூறினேன்,

” நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ இல்லையோ எமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டுமென்று. ஏனென்றால் அனைத்து மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும் அறிந்து செயற்படுகின்ற ஒரு மாபெரும் தலைவனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்ந்து வருகின்றார்.

அது மாத்திரமன்றி ஒரு துணிச்சல் மிக்க, சிறப்புமிக்க, சர்வதேச நாடுகள் போற்றுகின்ற ஒரு தலைவராக ஜனாதிபதி திகழ்ந்து வருகின்றார். அவருடைய இந்த உறுதியான , திடமான முடிவின் காரணமாகத்தான் இன்று பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்கின்றார்கள். ஆகவே அந்த உத்தம தலைவருக்கு நாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.

பிரபாகரனின் கொடுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மக்களின் மனநிலை குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் . அம்மக்களிடமிருந்து பிரிக்கப்பட்ட பல சிறார்கள் பிரபாகரனால் களமுனைகளில் பலிக்கடாவாக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று அவர்கள் வேதனையுடன் வாழ்கிறார்கள். அம்மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

மீள் குடியேற்றங்களின் பின்னர் அங்கு தேர்தல் இடம்பெற்று அம்மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். கடந்த 30 வருட போராட்டங்களின் போது பிரபாகரனால் பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டாலும், இறுதியாக நாங்கள் பெற்றுக் கொண்டது ஒன்றுமே இல்லை.

ஆகவே இந்தக் காலப்பகுதியில் நாங்கள் நாடாளுமன்ற பலத்தைக் கூட்டினோமாகில் அதுவும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்பட்டிருந்தோமானால் தமிழர்களின் பிரதேசங்கள் பாரிய வளர்ச்சியடைந்திருக்கும். கடந்த காலங்களை மறந்து, அவற்றை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, எமது நாடாளுமன்ற பலத்தை கூட்டி வெற்றியடைவோம்” எனக்கூறி விடைபெற்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • rohan
    rohan

    //அந்த ஒரு தனி மனிதனுக்காக நாங்கள் எத்தனை உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்து விட்டோமென”. அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.//

    நடந்தது அந்த நாள் – முடிந்ததா நாடகம். நாளைய நாடகம் – யார் அதன் காரணம்?

    Reply
  • thevi
    thevi

    மீள் குடியேற்றங்களின் பின்னர் அங்கு தேர்தல் இடம்பெற்று அம்மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்”

    தமிழருக்கான அரசியல் ரீதியான தீர்வு இதுதானா? தமிழ் மக்களின் உரிமைகள் அரசியல் சாசனத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படாதா? பிரபாகரனின் உடல் மீது எம்க்கொன்றும் சந்தேகமில்லை. உங்கள் மகிந்த மீது தான்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    கருணாவை வழி மொழிகிறேன். இதற்கு பிரபாகரன் மட்டும் காரணமல்ல. அந்த அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் தொடங்கி பல முக்கிய தமிழ் தலைவர்கள் காரணம்.

    எல்லாம் இனியாவது நல்லதாக அமைய வேண்டும். அதையே வேண்டுகிறேன்.

    Reply
  • Thaksan
    Thaksan

    “செத்த பின்னும் காட்டிக் கொடுத்தான் கருணா” என பலர் என் காது பட பேசிக் கொண்டனர். கருணாவைத் தவிர வேறு யாருமில்லை இல்லை இன்று இது பிரபாவின் உடலம் தான் என நிரூபிப்பதற்கு. மெய்ப் பாதுகாவலனாக> மாகாணத்தின் பொறுப்பாளனாக> படைத்தளபதியாக> பக்கத்திலிருந்து 20வருடங்களாக பழகிய கருணாவை விட(பிரபாவின் மனைவி உட்பட) பிரபாவை அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது என்பது மெய். பிரபாவின் உடலத்தை பார்க்க தமிழனென்று கருணாவாவது இருந்தாரென்பது ஆறுதல். பழகிய நட்பிற்காவது கருணா உடலத்தின் முன் ஒரு செக்கனாவது தன் மனதுள் அஞ்சலித்திருப்பார் தானே. பாவம் பிரபா! தன் உடலத்திற்கு முன் கண்ணீர்விட்டு கலங்க யாருமற்ற நிலையில் எரியூட்டப்பட்டுவிட்டார். என்ன செய்வது? செய்த பழியும் பாவமும் யாரைத்தான் விட்டு வைத்துள்ளது……தர்மத்தின் வாழ்வுதனை சூது கெளவும்… தர்மம் மறுபடியும் வெல்லும் என்பது சமகாலத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. விடுதலையின் பெயரால் விதவைகளாக்கப்பட்டோர் எத்தனை…. தந்தையை இழந்த தனயர்கள் எத்தனை…. ஏதிலிகள் ஆக்கப்பபட்டோர் எத்தனை….இன்னுயிர் ஈந்தோர் எத்தனை…. மீண்டும் வருமா இவர்களிடம் மிடுக்கு?????

    Reply
  • palli.
    palli.

    பலமாக திட்ட ஆசை ஆனால் தேச நிர்வாகம் அனுமதிக்காது. அதனால் அதை தற்ப்போது தவிர்க்கிறேன். காட்டுமிராண்டி அமைப்புக்கு தலமை தாங்கிய பிரபாகரனுக்கே இந்த கெதியானால். அத்தனை செயல்களுக்கும் கதாநாயகனாக செயல்பட்ட உங்களுக்கு(கருனா) எப்படி என எண்ணும்போது மனது வலிக்கவில்லை.

    Reply
  • மாயா
    மாயா

    Thaksan
    கருணா துரோகியல்ல, காரணம் இறந்த பின்னாவது கருணாவுக்கு அந்த முகத்தை பார்க்க கிடைத்தது. இவர் என் தலைவர்தான் அவரோடு 23 வருடங்கள் இருந்தேன் எனக்குத் தெரியாதா? என்று சொல்ல முடிந்தது. ஒரு நிமிடம் மெளனம் கொள்ள முடிந்தது.

    தலைவர் வாழ்க கோஸம் போடும் மாக்கள் துரோகிகள். காரணம் செத்த மனிதனுக்கு ஒரு மெழுகுவர்த்தி கொழுத்தி அஞ்சலி கூட செலுத்தாத புண்ணாக்குகள். அங்கு எல்லாம் முடிந்தது தெரிந்தும், இன்னும் வீதியில் our president Prabhakaran….

    Reply
  • rohan
    rohan

    இங்குநான் பிரசங்கம் செய்து ஏதும் ஆகப் போவதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும் ஒரு கேள்வி. புலிகளுக்கு முன்னால, செல்வநாயகத்துக்கு முன்னால் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக்நடாத்தப் பட்டது உண்மையா இல்லையா? தமிழ்ப் பகுதிகளிலே வலிந்த சிங்களக் குடியேற்றங்கள் நடாத்தப் பட்டது உண்மையா இல்லையா? சிங்கள்ம் மட்டும் சட்டம் கொண்டு வரப் படும் என்று சொன்ன ஒரு வாக்குறுதிக்காக சிங்கள மக்கள் அமோக வாக்குகளுடன் பண்டாரநாயக்கவை அரசுக்கு அனுப்பியது உணமையா இல்லையா? கிரமமாக, தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அரச – பொலிசார் ஆதரவுடன் நடந்தது உண்மையா இல்லையா? வெள்ளைகாரன் காலத்துப் பாடசாலைகள் தவிர தமிழர் பகுதிகளில் பாடசாலைகள் கட்டபபடவில்லை என்பது உண்மையா இல்லையா? பாடசாலை அபிவிருத்தி – விளையாட்டு வசதிகள் எல்லாமே அரச உதவி இல்லாது பழைய மாணவர்கள் பங்களிப்புகளாலேயே நடாத்தப்பட்டதைநாம் அறியோமா? ஆனையிறவு சோதனைகள் எப்போது ஆரம்பித்தன என்று நினைத்துப் பார்த்திருக்கிறோமா? பொன்னம்பலம் காலத்துக்குப் பின்னால் (பிறிமா தவிர) ஆலைகள் ஏதும் தமிழர் பகுதிகளில் எழவில்லை என்பது உண்மையா இல்லையா? அடோ பற தெமிழ என்று தானே நாம் அன்புடன் அழைக்கப்பட்டோம். தோசை – வடை -நல்லெண்ணெய் – என்று தமிழர் ஆண்டாண்டு காலமாக் அவதூறு செய்யப்பட்டது உணமை இல்லையா? இப்போது கூட, பிரபாகரன் சாப்பிடும் தோசையும் வடையும் தங்கல் உபயம் தான் என்று ஒரு அமைசச்சர் சொன்னார் – இடியப்பமும் புட்டும் அல்ல! தரப்படுத்தல் திட்டம் சரி என்றா சொல்ல வருகிறோம்? சரி தான் என்றால், அந்த நிலைமையை மாற்ற அரசு என்ன செயதது?

    சுந்தரலிங்கம் சரி – நவரத்தினம் சரி – தமிழர் உணமை ஆதரவு பெற்றரவர்கள்
    அல்ல. வவுனியாவில் வென்ற அடஙகாத் தமிழன் சொந்த ஊரிலே மண் கவ்வினார். நவரத்தினம் நிலைமை சற்றுப் பரவாயில்லை.

    இப்போது பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு, புள்ளிவிபரத்துக்கே தகுதி இல்லாது அழிக்கப்பட்ட போதும் எங்களால் சுந்தரலிங்கம் போன்றோரைக் குற்றம் சுமத்தத் தான் முடிகிறது. புலிக்கு எதிராக குரல் தராதது முதல் குற்றம் – அதை,”பயத்தில் விட்டோம்” என்று மன்னித்து விடலாம். ஆனால், இப்போது வாயை மூடிக் கொண்டு இருப்பது வரலாற்றுக் குற்றம். புலி ஊடகங்கள் தம்முடன் “இருந்த” மக்கள் தொகை பற்றிச் சொன்னது மிகைப்பாடு அல்ல அன்று கண்டோம். இறந்தோர் தொகையும் சரியாகத் தான் இருக்கலாம். ஒரு யூதச் சிறுவனுக்கு அடித்தார் என்று ஒரு 80 வயது நாக்சி அண்மையில் நீதிமன்று ஏற்றப்பட்டார். தொகை தொகையாய் வதைக்கப் பட்ட தமிழருக்கு என்ன நீதி?

    அடோ பற தெமிழ என்று தானே நாம் அன்புடன் அழைக்கப்பட்டோம்.

    Reply
  • msri
    msri

    அன்று அந்தப் பாசிசத்தின் சேவகன் ஆனாய்> இன்று இந்தப் பாசிசத்தின் சேவகனும் நீயே!> ஒரு தனிமனிதனுக்காய் எத்தனை உயிர்கள் உடமைகள் பறிகொடுத்தோம் என்கின்றாய்> பறித்தெடுத்தது>இன்றைய உம் மகிந்தக் கொலைஞனே! சமகால ஆசியாவின் மிக்பபெரும் கொலைக் (சாட்சியில்லா) கலைஞன்> என உலகம் போற்றுகின்றதே! இதில் உமக்கு எவ்வளவு பெருமை!

    Reply
  • palli.
    palli.

    //தொகையாய் வதைக்கப்பட்ட தமிழருக்கு என்ன நீதி?//
    அமைச்சர் பதவியும். கட்டிபிடித்து (மகிதா குடும்பத்தை) புகைபடம் எடுக்கும் தகுதியும் கொடுக்கபடும் அதுவும் போதவில்லை என்றால் ஏதாவது
    ஒரு உலகநாட்டிடம் சொல்லி ஏதாவது ஒரு விருதும் பண முடிச்சும் கிடைக்கும். இந்த நீதி போதாதா?? நிறையதான் ஆசை தங்களுக்கு.

    Reply