உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன்றைக்கு புலிகளாக மாறியிருக்கிறார்கள் – பா.ம.க. ராமதாஸ்

ramados1.jpgஇலங்கையில் தமிழனும், சிங்களவனும் சேர்ந்து வாழ முடியாது என்றும், இலங்கை பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தவிர வேறு தீர்வு இல்லை எ‌ன்று‌ம் பா.ம.க. நிறுவன‌ர் ராமதாஸ் கூ‌றினா‌ர்.
 
ஈழத் தமிழர்களை பாதுகாக்க ஐ.நா மன்றம் நேரடியாக தலையிட்டு பொறுப்பேற்க வேண்டும். முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்ச, சிங்கள இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வற்புறுத்தும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நே‌ற்று மாலை எழுச்சி பேரணி நடைபெற்றது.

சென்னையில் நட‌ந்த எழு‌ச்‌சி பேர‌ணி‌ முடி‌வி‌ல் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் பேசுகை‌யி‌ல், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவரை யாரும் கொல்ல முடியாது. தமீழம் மலரும் வரையல்ல, அதனுடைய வளர்ச்சியை பார்த்து விட்டே அவர் இயற்கையான மரணத்தை தழுவுவார்.

இப்போது நம்முடைய கோரிக்கையெல்லாம் இந்திய அரசு இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்பதல்ல. இனி, என்றுமே நாம் அதை கேட்கப்போவதில்லை. அதனால் எந்த நன்மையும் இல்லை என்று நமக்கு தெரியும். இனி சர்வதேச சமுதாயம், சர்வதேச நாடுகள், ஐ.நா மன்றம் இவைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தாய்த் தமிழகத்திற்கான நம்முடைய வேண்டுகோள் இருக்க வேண்டும். உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன்றைக்கு புலிகளாக மாறியிருக்கிறார்கள். ஆக, இந்த போரின் மூலமாக நமக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி, உலகத்தமிழர்கள் எல்லாம் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்கள். அதே நேரத்திலே இங்கே தமிழீழத்தை தவிர, வேறு தீர்வு இல்லை என்பதை உலக மக்களுக்கு, உலக நாடுகளுக்கு சொல்லியாக வேண்டும். சிங்களவனும், தமிழனும் எந்த காலத்திலும் சேர்ந்து வாழ முடியாது என்பதற்கான காரணத்தை நாங்கள் சொல்கிறோம். தமிழீழத்தை நோக்கித்தான் நம்முடைய பரப்புரை இருக்க வேண்டும். தமிமீழத்தை அடைவதற்கான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்” எ‌ன்று ராமதாஸ் பேசினார்.

Show More
Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • msri
    msri

    இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேயாய் தெரியும்! டாக்டருக்கு இப்போ பார்த்ததெல்லாம் புலியாய் தெரியுதோ? மருந்து தேவையில்லை: தானாக சுகம் வரும்!

    Reply
  • மாயா
    மாயா

    உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் புலிகளல்ல.

    Reply
  • சுதா
    சுதா

    ஜயா ராமதாஸ், உங்கள் கபட நாடகம் தான் வெட்ட வெளிச்சமாகி விட்டதே. உங்கள் கட்சிக்கு தமிழ் மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் நல்ல பாடம் புகட்டி விட்டனரே. கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். தமிழர்களை வாழ விடுங்கள் ஜயா. போதும்..நம் இனம் அழிந்தது. இனியும் அழிய வேண்டாம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இந்தியாவிலும் தமிழ்மக்கள் வாழ்கிறார்கள். இலங்கையிலும் தமிழ்மக்கள் வாழ்கிறார்கள். இந்தியாவையோ இலங்கையோ முன்னேற வேண்டுமென அரசியல் நடத்தியிந்தால் தமிழ்மக்களுக்கு குறிப்பாக இலங்கை மக்களுக்கு இந்த நீண்டகால அவலம் நடந்து முடிந்திருக்காது.
    ஈழத்தமிழ் மக்களின் சமஉரிமையை பெறவிடாமல் தவறான பாதைக்கு இட்டுசென்றதில் தமிழகத்து பிழைப்புவாத அரசியல் தலைவர்களுக்கும் நிறையப் பங்குயுண்டு. அது நீண்ட பட்டியல் அது கருணாநிதியில்லிருந்து தொடங்குவதா? தா.பாண்டியனில்லிருந்து தொடங்குவதா? என்பதே கேள்வி.
    எம்மை தினமும் ஒரு கேள்வி தான் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்ழினத்திற்கு “புதுவாழ்வு” “புதுஅரசியல்” பலவித கதாகாலஷ்சபவங்களை தமிழ்மக்களிடையே நடத்தி இந்தியாவையும் இலங்கையும் அன்னிய தீயசக்கிகளு விற்றுவிடுவார்கள் என்பதே! தமது அரசியல் ஆதாயத்திற்காக எதையும் செய்ய தயங்காதவர்கள் என்பதே இவர்கள் அரசியல் காட்டும் அனுபவம்.

    Reply
  • palli.
    palli.

    மருத்துவர் தமிழின துரோகி என்பதால் அவர் சொலவதை நிகாகரிக்க முடியாது. அது நடப்பதும் செயலற்று போவதும் வரும் காலங்களில் அரசு தமிழர் மீது செலுத்தும் செயல்.திட்டங்கள். அவமதிப்பை பொறுத்தே இருக்கு.

    Reply