இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் 180 நாட்களில் மீள்குடியமர்த்தப்படுவர்: இலங்கை – இந்தியா கூட்டறிக்கை

indo-lanka.jpg வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 280,000 பேரில் பெரும்பாலானவர்கள் ஆறு மாதங்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கையும்,  இந்தியாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பின் பின்னரே இந்த கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 25 வருடங்களாகத் தொடர்ந்துவந்த தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி அவர்களிடம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும், இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் மீள்குடியேற்றம் பற்றிக் கலந்துரையாடினர்.

கூடிய விரைவில் நலன்புரி நிலையங்களை இல்லாமல் செய்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 180 நாள் வேலைத்திட்டத்திற்கமைய இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலான மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கையும், இந்தியாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள், பொதுமக்களுக்கான உட்கட்டுமானங்கள், வீடுகள் நிர்மானம் போன்றவற்றுக்குத் தமது உதவிகளை வழங்கும் என இந்தியா உறுதியளித்துள்ளது.

தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்படும்வரை மக்களை முகாம்களுக்குள் தடுத்துவைக்கவேண்டிய தேவை இருந்ததாகவும்,  இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் சர்வதேச தரம் பேணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் இலங்கை அரசாங்கம்,  இந்தியத் தூதுவர்களிடம் கூறியுள்ளது.

அதேநேரம்,  22 வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு அமைய அதிகாரப்பகிர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள தமிழ் தரப்பினர் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயாரென்பதை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதிச் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த இணை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • X and Y
    X and Y

    Dear Cementers,
    It is very important to discus about our future course. Please comment your political wish, in which you can feel as a Sri Lankan citizen? Thank You

    Reply
  • msri
    msri

    கூட்டாகவே எல்லாம்> யுத்தம்+மனிதப்படுகொலை+இனச்சுத்திகரிப்பு-அகதியாக்குவது+அவர்கள துன்பத்தில் இன்பம் காண்பது+மீளக் குடியேற்றம் பற்றி யோசிப்பது +கைவிடுவது எல்லாம்கூட்டாகவே! ஏனெனில் இலங்கை இந்தியாவின் “உத்தியோகப்பற்றற்ற” மாநிலம்அல்லவா?

    Reply
  • rohan
    rohan

    அப்படி நினைக்கிறீர்களா, எம்சிறி?

    எந்த நிமிடம் இந்தியா டிமாணட் பண்ணுகிறதோ அந்த நிமிடம் இலங்கை இந்தியாவுக்கு கதவைக் காட்டும்!

    எமக்கு நல்ல நண்பர்கள் உள்ளார்கள் என்று சொல்லி பாகிஸ்தான், சீனா, ரஷ்யா என்று தேடும். உலகின் சனத்தொகை, பொருளாதாரம் போன்ற பல விடயங்களில் முன்னணியில் நிற்பதாகச் சொல்லிக் கொள்ளும் சிங்கராசா இந்தியா எலிக் குஞ்சு போல கூனிக் குறுகி இலங்கை முன்நிற்கும். ஒரு பாதுகாப்பும் தராது சில்லறை போல நடாத்தினாலும் கூழைக் கும்பிடு போட்டு சேவகம் செய்யும்.

    எதை எதையெல்லாம் காட்டி இலங்கை இந்தியாவின் மேட்டுக் குடியை மயக்கி வைத்திருக்கிறது என்று ஒரு பிஎச்டி ஆராய்ச்சியே செய்யலாம்.

    Reply
  • Jaffna Boy
    Jaffna Boy

    Same India and Sri Lanka said in February that 70, 000 people were in Mullaitheevu. Now we know 300, 000 there and these mofos wanted to starve them.
    We we have people like you …….. will keep repeating similar statements.

    Reply
  • msri
    msri

    றோகன்! மகிந்தா> இலங்கையை ஓர் “அரசியல் விபச்சார விடுதியாக்கியுள்ளார்” இதனாலேயே நீர் சொல்கின்ற நாடுகள் உதவி தருகின்றோம் ஏன வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன! இந்தியா ஏற்கனவே பலமுதலீடுகளைச் செயதுள்ளது! இதை தக்கவைக்கவும்> ஏனையவர்கள் கால் ஊன்றுவதை தவிர்க்வும் தன்னால் ஆனதை செய்யும்!

    Reply