பிரபாகரனின் மரண சான்றிதழை வழங்குவதற்கு இலங்கை உறுதி:இந்திய பாதுகாப்பு ஆலோசகர்

narayanana.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் உத்தியோகபூர்வமான மரணச் சான்றிதழை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஞாயிறு நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பிரபாகரனின் அடையாளம் தொடர்பாக பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கிளப்பப்படுகின்றன. இது தொடர்பில் இந்திய அரசாங்கம் மரபணுச் சோதனைக்கு அன்றேல் அதிலும் தெளிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதா? என இந்திய பெண் ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், “இலங்கை அரசாங்கமானது பகிரங்கமான உறுதிமொழியை வழங்குகின்ற நிலையில் நாம் அதனை ஏற்போம். இருந்தும் நாம் இலங்கை அரசாங்கத்தின் மரணச் சான்றிதழுக்காக காத்திருப்போம். அதன் மூலமாக ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மூடிவிட முடியும். இதற்கு மேலாக எம்மால் எதையும் செய்யமுடியாது. இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளுடனான பேச்சுகளின் போதும் நாம் வினவியிருந்தோம். இலங்கை ஜனாதிபதியின் பிரசன்னத்தின் முன்பாக கூட நாம் இதனைக் குறித்து கேள்வியெழுப்பி இருந்தோம். இதன்போது பிரபாகரன் தொடர்பான உத்தியோகபூர்வமான மரணச் சான்றிதழை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்” என்றார்.

Show More
Leave a Reply to palli. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • rohan
    rohan

    இந்தியா தப்பித்தது! அமைதிப் படை காலத்தில் பிரபாகரன் “இறந்த போது” இலங்கை மரண சான்றிதழ் கேட்கவில்லை. கேட்டிருந்தால் இந்தியா கொடுத்துமிருக்கும்.

    Reply
  • palli.
    palli.

    எட பண்பட்ட கூட்டமே
    இதுக்குதானா இத்தனை அழிவுகள்.
    இதை பல்லியிடம் கேட்டாலே மேசைக்கு
    கீழால் பல்லி வேண்டி தந்திருக்குமே.
    நாராயன நாராயணா.

    Reply