ஈழ விடுதலை போரை அழிக்கமுடியாது என்றும் இருந்தாலும் மறைந்தாலும் பிரபாகரன் விடுதலை போரை வழிநடத்துவார் என்றும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 6 மாத காலமாக தமிழக மக்களும் புலம் பெயர்ந்து வாழும் உலகத் தமிழர்களும் எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் கடுமையாகப் போராடியும் இந்தியாவோ, சர்வதேச சமூகமோ எமது ஈழத் தமிழ் சொந்தங்களை காப்பாற்ற முன்வரவில்லை என்பது எக்காலத்திலும் ஆற்றுப்படுத்த முடியாத வேதனையை அளிக்கிறது.
உச்சக்கட்டமாக எமது மக்களின் ஒரே பாதுகாவலர்களாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். உலகத் தமிழினத்தை தலை நிமிரச் செய்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்துவிட்டதாக சிங்கள இனவெறிக்கும்பல் கொழும்பு நகரில் கும்மாளமடித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பிரபாகரன் படுகொலையானாரா? அல்லது பாதுகாப்பாக உள்ளாரா? என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருந்தாலும் ஈழத்தில் எமது மக்கள் கடந்த 2 நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேல் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஈவிரக்கமற்ற இத்தகைய இனப்படுகொலையை உலகின் பார்வையிலிருந்து மூடி மறைப்பதற்காகவும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கடைசிகாலத் தடுப்பு முயற்சிகளை முறியடிக்கவும் சிங்கள இனவெறியன் ராஜபக்சே பல்வேறு நாடகங்களை நடத்துவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இந்தியாவும், சர்வதேச சமூகமும் மனிதாபிமான அடிப்படையில்கூட இந்த கொடூரமான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முன்வரவில்லையே என்பதுதான் சகித்துக்கொள்ளவே முடியாத வேதனையாக உள்ளது.
ஆயுதங்களை கீழே போடவும் தயார் என்றும், எத்தகைய தீர்வுக்கும் தயார் என்றும் புலிகளின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரும், ஆயுதமில்லாத நிலையில் வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சிங்களப்படை அதிகாரிகளைச் சந்திக்க முன்வந்த புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் போன்றவர்களை மிகக் கேவலமான முறையில் சிங்கள இனவெறியர்கள் படுகொலை செய்திருப்பது வரலாற்றில் இல்லாத மனித நாகரிகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
இந்த நிலையில் மாவீரர்களாய் களப்பலியான எமது விடுதலைப்போராளிகளுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம். புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டாலும், ஈழ விடுதலைப்போரை அழிக்க முடியாது.
இருந்தாலும், மறைந்தாலும் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அந்த விடுதலைப்போரை மேலும் வழி நடத்துவார். சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் காட்டுமிராண்டித்தனமான கொலை வெறித்தனத்தை விடுதலை சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதோடு அவனை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்குரிய அடுத்தக்கட்டப் பணிகளை மேற்கொள்வது விடுதலை சிறுத்தைகளின் கடமையாகும் என்று கருதுகிறோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சோர்வடையாமல் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும்.
thurai
30 வருட விடுதலைப்போரில் வன்னியை அழித்தது மட்டுமல்ல விடுதலை என்ற சொல்லையும் அகராதியில் இருந்து எடுத்துக் கொண்டு இற்ந்தாரா, அல்லது ஓடினாரா என் முதலில் தெளிவாகக் கூறவும்.
துரை
xavier
i think prabha realy has died sl goverment delebretely let these rumuer and suceeded no 1 now talk about those people they killed we all talking about prabha what we need to do now urge ic to investigate what realy happen
palli.
துரை மன்னிக்கவும். விடுதலை என்னும் சொல் பிரபாகரனால் உருவாக்கபடவில்லை. அவரும் அதில் இனைந்தார் அவர் சத்தம் மேலோங்கியதால். மற்றவர்கள் சத்தம் கேக்கவில்லை அம்முட்டுதான். தயவு செய்து தங்களை போன்ற விடுதலை விரும்பிகளும் புலிக்காய் எமது மக்களின் விடுதலையை சிங்கள அரசிடம் அடைவு வைத்து விட துணை போக கூடாது. எமது நோக்கம் நிலை புலிகளின் அராசக போக்கு.தான் தோன்றிதனம். நாட்டாண்மை. இவைக்கு எதிரானதொழிய எம்மின சுய விடுதலைக்கு எதிரானதல்ல. ஆகவே புலிகளின் பல்லு புடுங்கபட்ட நிலையில் எமது செயல்பாடு தமிழர்க்கு ஆதரவாக இருக்க வேண்டாமா????
msri
திருமாவளவன் பிரபாகரனின் மறைவை நம்புகின்றார்! இது நிற்க இந்தியாவே இலங்கையில் யுத்த்ததை நடாத்தியது> பெரும மனிதப்படுகொலையையே செய்தது> என்ற என்ற உண்மைகள் சாதாரண தமிழக மக்கள மத்தியில் எடுத்துச் செல்லப்படவில்லை! இதை நடந்து முடிந்த தேரதலின் தமிழக முடிவுகள் காட்டுகின்றன!
நண்பன்
“புலி குறித்து இனி பேசினாலே பிரபாகரனுக்கு நடந்ததுதான் நடக்கும்” – பிரியதர்சன யாப்பா சொன்னது. யாழ்பாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் புலி இயக்கத்தில் இருந்தவர்களை அரசு சரணடையச் சொல்லியிருக்கிறது. வெள்ளைக் கொடியோடு போனவங்களுக்கே வெடி விழுந்திருக்கு. உங்கள் அரசியலுக்கு எம்மை அவியலாக்க வேண்டாம்.
திருமா, மிஞ்சி இருக்கிறவங்களையாவது நிம்மதியா இருக்க விடும்
accu
இன்றைய தமிழ் மக்களின் அழிவுநிலைக்கு புலிகள் எவ்வளவு காரணமோ அதே பங்கு இந்தக் கேவலங்கெட்ட தமிழக அரசியல்வாதிகளுக்கும் புலம்பெயர் புண்ணாக்குகளுக்கும் உண்டு.
BC
இலங்கையில் அழிவு நடந்தால் தானே இவர்களுக்கு பிழப்பு.
பார்த்திபன்
திருமாவளவன், வை.கோ, நெடுமாறன், இராமதாஸ் போன்றவர்கள் தமிழக அரசியலில் மக்களின் தேவைகளை நினைத்ததை விட, புலிகளை வைத்து தமது அரசியல் பிழைப்பு நடாத்தியதே அதிகம். அதையே தொடர்ந்து செய்ய யோசிக்கின்றார்கள் போல.