மே 25 இல் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம்

images.jpgஇலங்கை விவகாரம் தொடர்பாக ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் ஆதரவு கிடைத்திருப்பதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஆகியோர் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தை ஆராயும் விடயத்தில் முன்னின்று செயற்பட்டதாக கூறப்படுகிறது.

Show More
Leave a Reply to kokku Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • kokku
    kokku

    ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் ஆராயப்படும் போது, ராஜபக்ஷ ஆட்சியில் மட்டுமல்ல அதற்கு முன்புள்ள ஆட்சிகளில் நடந்த மீறல்களும் ஆராயப்படுவது மிக முக்கியம். இல்லாவிட்டால் எல்லாம் புஸ்வாளணமாகிவிடும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் ஆதரவு கிடைத்திருப்பதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.//

    அப்போ மூன்றில் இரண்டு பெருண்பான்மை ஆதரவிலல்லை என்று தானே அர்த்தம். இதனால் இந்த விவகாரம் இத்தோடு காணாமல் போய், அகதிகள் விடயமே ஆராயப்பட்டு அதற்கான முழு ஒத்துழைப்பையும் இலங்கை அரசிற்கு வழங்க ஐ.நா தீர்மானித்திருப்பதாக முடித்து வைப்பார்கள்.

    Reply